அத்தியாயம்: 8
'கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும தலய விரிச்சி போட்டுட்டு டன்டனக்கா டன்டனக்கான்னு ஆடுச்சாம். அட ச்சீ... ' கௌதமின் மைண்ட் வாய்ஸ். அவனுக்கு இந்த நேரத்தில் அவனின் ப்யூட்டி சொன்ன செலவடை நியாபகம் வந்தது.
"என்ன ஹெல்ப் எங்களால பண்ண முடியும்னு நம்புற." ஹரிணி
"அது வேற ஒன்னுமில்ல. நா விசாரிக்கிற கேஸ்ல போலிஸ்ஸா சில விசயங்கள விசாரிக்க முடியல. அதுனால இந்த ஊர சேராத வெளி ஆளோட உதவி எனக்குத் தேவப் படுது. சோ, எனக்கு நீங்கப் பண்ணுங்க. உங்களுக்கு நா உதவி பண்றேன். பண்டமாற்று முறை மாறி இது உதவி மாற்று முறை. ஒரு உதவி செஞ்சி இன்னொரு உதவிய வாங்கிக்கலாம். என்ன சொல்றீங்க.?" என விக்னேஷ் கேக்க, ஹரிணி சிரித்தாள் சத்தமாக.
"ஹஹ்ஹஹ்ஹா... போலிஸ் காரனுக்கு உதவி தேவையா! ஹஹ்ஹா... சென்னைல பல வர்ஷமா நடந்த கொலைக கண்டு பிடிச்ச, ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுக்கு, சாதாரண எங்க ரெண்டு பேரோட உதவி வேணுமாம். ஹஹ்ஹா... எனக்குக் கொஞ்சம் லேட் தா. ஆனாலும் மூணு வயசுல காது குத்திட்டாங்க." என விக்னேஷை கேலி செய்து நம்பாத பார்வை பார்த்தனர் இருவரும்.
"ஹஹ்ஹஹ்ஹா... நீங்கப் பேசுனத வச்சி பாத்தா ஏழு நாள் குள்ள எந்த க்ளூவும் கிடைக்கலன்னா உங்க முயற்சிய கைவிட்டுடுட்டு திரும்பிப் போய்டுறதா இருக்கிங்க. அப்ப... ஒன் வீக் தா டயம். உங்களுக்கும் மட்டுமில்ல. எனக்குத் தா டயமில்ல. சோ நாம சேந்து வேல பாத்தாத்தா நம்ம கேஸ்ல அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியும்னு நா நம்புறேன். அதுனால தா சொல்றேன். ஹெல்ப் பண்ணா ஹெல்ப் கிடைக்கும்." என்றான் விக்னேஷ். சிரிப்புடன் ஆரம்பித்த அவனின் பேச்சு மிரட்டலாக முடிந்தது.
"உன்ன எப்படி நாங்க நம்புறது?. அந்தாள் குடுத்த காசுக்காக எதையாவது பொய்யா கத கட்டி விட்டிருக்கலாம். அத வச்சி நீயும் உன்னோட கேஸ்காக எங்கள யூஸ் பண்ண பாக்குற மாறி ஃபீல் ஆகுதே." கௌதம்.
" சந்தேகம்!. அது இருக்க வேண்டிய ஒன்னு தா. வெய்ட், அந்த வீடியோ இருக்கா இல்லையான்னு தான சந்தேகம். அப்படி ஒன்னு இருந்தா அது உங்க கைக்கி கிடைக்கும் அதுக்கு நா கேரண்டி. இப்பவே வீடியோ இருக்கா இல்லையான்னு க்ளியர் பண்ணிடலாம்." என விக்னேஷ் கண்ட்ரோல் ரூமிற்கு ஃபோன் செய்து பார்கவி கொலை வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டரின் நம்பர் வாங்கி அவரிடம் பேசினான். என்ன சில மணிநேரம் கழித்து தான் கிடைத்தது.
வெங்கட்ராமனிடம் சில கட்டுகள் கொடுத்து வாங்கிய அதே தகவலை விக்னேஷ் பைசா செலவு இல்லாமல் ஒரே ஒரு ஃபோன் காலில் ஒரு மணி நேரத்தில் செய்து விட்டான்.
'ஒரு கோடிப்பு ஒரு கோடி. எல்லாம் வேஸ்ட்' என்ற கதையாகிப் போனது.
ஃபோனில் பேசிய அவரிடம் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பற்றி நினைவு படுத்துவதே சவாலாக இருந்தது. எனினும் அவருமே அப்படி வீடியோ அந்தத் தலைமை காவல் நிலையத்தில் இருப்பதாகச் சொல்ல, நண்பர்கள் இருவருக்கும் விக்னேஷை நம்புவதை தவிர வேற வழி இல்லை என்றானது.
" க்ஷநாங்க என்ன பண்ணனும்னு சொல்ற." ஹரிணி.
"அத என்னால இங்க சொல்ல முடியாது. இது என்னோட நம்பர். அப்றம் இந்த அட்ரஸ்ல தா நான் தங்கிருக்கேன். நாளைக்கி காலை எட்டு மணிக்கி வந்து பாருங்க. பப்ளிக்ல வச்சி என்னால எதுவும் சொல்ல முடியாது." எனத் தன் மொபைல் நம்பரை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தான்.
"ஒரு வேல நாங்க வரலன்னா." என ஹரிணி கேட்க,
" கண்டிப்பா வருவிங்க. ஹாங்... கிளம்பும்போது கால் பண்ணீட்டு வாங்க. அப்பத் தா நீங்க வீட்டுக்கு வர்ற நேரம் நானும் எங்கருந்தாலும் வந்திடுவேன். கௌதம் உன்னோட ஃபோன் நம்பர் சொல்லு. நீயும் தா." என இருவரின் ஃபோன் நம்பரையும் குறித்து வைத்துக் கொண்டு சென்றான் விக்னேஷ். அவன் அக்மார்க் காவலன் தான். எந்தச் சூழ்நிலையிலும் தன் வேலையில் கண்ணாய் இருக்கும் போலிஸ்காரென்.
"டார்லிங். நீ என்ன சொல்ற?. இந்தப் பனியன் போட்ட பாடி பில்ட்டர பத்தி." என்றவன் பார்வை விக்னேஷ் சென்ற பாதையில் இருந்தது. புள்ளியாய் அவன் மறையும் வரை பார்வையை விளக்கவில்லை கௌதம்.
"ஒரு போலிஸ்காரென் பிஸ்னஸ் மேன் மாறி நம்மகிட்ட வந்து பிஸ்னஸீ பேசிட்டு போயிருக்கான். ஆச்சர்யமா இருக்குள்ள. இப்ப அவனுக்கும் லாபம் வேணும் நமக்கும் லாபம் கிடைக்கனும். அப்பத்தா இது நல்ல டீலா இருக்க முடியும்."
"ஒருவேல அவெ நம்மல ஏமாத்திட்டா."
"அப்ப நாமலும் ஏமாத்துவோம்."
"எப்படி?."
"முதல்ல அவனுக்கு என்ன உதவி வேணும்னு கண்டுபிடிப்போம். நம்ம கைக்கு வீடியோ முழுசா வர்ற வர. நாம எச்சரிக்கையா இருக்குனும்."
"அப்பப் புதருக்குள்ள கையா விட்டு என்ன பாம்பு இருக்குன்னு பிடிச்சி பாத்திடலாம்னு சொல்ற."
"எஸ்... இப்ப அவன நம்புறத தவிர வேற வழி இல்ல. அதே நேரம்."
"நாம கவனமா இருக்கனும். ஏன்னா அவெ ஒரு போலிஸ்காரென். அவனுங்க எல்லாரும் சந்தர்ப்பவாதிகள். பச்சோந்தி மாறி இடத்துக்கு இடம் நிறத்த மாத்திக்கிட்டே இருப்பானுங்க."
"ஏ! கௌதம் இவனுக்கு இந்தக் கேஸ்ல உதவி செஞ்சா நம்ம பேரும் பத்திரிக்கைல வரும்ல. ம்... இவனுக்குச் செஞ்ச உதவிக்காக அடுத்த வீரதீர அர்ஜுனா அவார்ட் நமக்குக் கிடைக்கும்ல." எனச் சந்தேகம் கேட்டவளின் தலையில் தட்டி.
"அவெ அவெ உசுர பணயமா வச்சி சாகச வேல செஞ்சி அவார்ட் வாங்குனா. உக்காந்த இடத்த விட்டு எந்திரிக்காத உனக்குக் குடுப்பானுங்க. அவார்டு... எழுந்து வா... பசிக்கிதுன்னு சொன்னேல்ல."
"அப்ப அவார்டு கிடைக்காத." என்றவளை கௌதம் முறைக்க,
"இட் ஓகே... நமக்குச் சோறு தா முக்கியம். அதே நேரம் நாம வந்து வேலையையும் மறந்துட கூடாது. அப்பப் போலாமா." எனக் கைக்கால்களை உதறி ஹரிணி எழுந்தாள்.
"கிளம்பிட வேண்டியது தா." என விக்னேஷ் சொன்ன டீலுக்கு சம்மதித்தனர்.
________
பின்னால் கீ போர்டின் ஒலி, மெல்லியதாய் இசைக்க, சுற்றி மங்கிய வெளிச்சத்தில் தன் முன் இருக்கும் மங்கை விக்னேஷின் கண்களுக்குத் தேவலோகத்து பதுமை போல் தெரிந்தாள்.
தன் மனைவிக்காகக் கேண்டில் நைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான் அவன். விரும்பிய உணவு முழுவதும் மேஜையில் பரப்பப்பட்டு இருக்க, ஹாலில் வீசிய ஜாஸ்மின் ஃப்ளேவர் ரூம் ஸ்ப்ரே யின் மணம் இதமாய் நாசியை நிறைத்தன. இது அவர்கள் இருவருக்கு மட்டுமான தனி டேபில். அப்படித்தான் புக் செய்திருந்தான்.
வயிறுடன் சேர்ந்து மனமும் நிறைந்திருந்தது அவனுக்கு. தன் கையில் இருந்த ஜூஸ்ஸுடன், கரும்பச்சை நிறத்தில் சில்வர் பார்டரும் பூக்களும் போட்ட முழு நீளச் சுடிதாரில் அமர்ந்திருந்த தன் மனைவியையும் சேர்த்து பருகினான்.
சாந்தமான வட்ட வடிவ முகம். பிறை போல் அகன்ற நெற்றி. அதில் சின்னதாய் ஒரு பொட்டு. உச்சி எடுக்காது தன் முன் பக்க முடியை எடுத்துக் கிளிப் கொண்டு அதை அடைத்து, மீதியை பின்னாது தளர்வாக விரித்து விட்டிருந்தாள் பவதா. அது அவளின் தோளில் படர்ந்திருந்தன. நெற்றி வகிட்டில் சின்னதாய் சிறு கோடுபோல் குங்குமத்தை அவள் வைத்திருந்த விதம் விக்னேஷை கவர்ந்தது.
ஆளை விழுங்கும் ஆழி போல் அகன்ற கண்கள், சீரான மூக்கு, குண்டு குண்டென இருக்கும் கன்னம், கழுத்தில் வேறு நகைகள் ஏதுமில்லாது தான் அணிவித்த தாலிச் சங்கிலி. அது அவளின் மார்போடு உரசி கதை பேசியது. காற்றில் கவி பாடும் நீளத் தொங்கட்டான்கள் என அவளை அணு அணுவாக ரசிக்க, அது காதல் கொண்ட அவனுள் தாபத்தை தூண்டியது. எழுந்து சென்று இப்போதே அவளைத் தன்னுள் புதைக்கும் வேகம் எழுந்தாலும், அவன் தீண்டினால் திகைத்து நோக்கும் பவதாவின் விழி அவனின் தாபத்தை தண்ணீர் ஊற்றி அணைத்து விடும். எனவே எட்ட நின்று ரசிக்கிறான்.
'நிலாவை எல்லாம் தூர நின்னு ரசிக்க மட்டும் தா முடியும். அது பக்கத்துல போக முடியாது. அதுமாறின்னு நினச்சிட்டு அமைதியாகிட வேண்டியது தா. வேற வழி' என ரசிக்க மட்டும் செய்தான்.
'ச்ச... சொந்த பொண்டாட்டியவே சைட் அடிக்க வச்சிட்டானுங்களே!. ' விக்னேஷின் மைண்ட் வாய்ஸ்.
பொதுவாக அவள் பேசுவாள். இவன் அமைதியாகக் கேட்பான். இப்போது இருவரும் பேசாது பின் ட்ராப் சைலன்ஸ்ஸாக சப்பாட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.
" ம்... பவதா இந்தா உனக்குப் பிடிக்கும்னு ஆர்டர் பண்ணேன். டேக் இட்." என இரு கின்னங்களில் குலோப் ஜாமுன்களை அவளை நோக்கித் தள்ள, புன்னகையுடன் அவள் எடுக்கும் முன்னே இரு கின்னங்களும் எடுக்கப்பட்டது.
வேற யாரும் இல்லை. நம்ம ஹரிணியும் கௌதமும் தான்.
"ஹாய் ACP சார். எப்படி இருக்கிங்கோ?." என இருவரும் கோரஸ்ஸாக கேட்டுக் கொண்டே அமர்ந்தனர். விக்னேஷின் அருகில் ஹரிணியும், பவதாவின் அருகில் கௌதமும்.
பவதாவை நெருங்காது சற்று விலக்கிக் தான் அமர்ந்தான் கௌதம். அது பவதாவின் மனதில் கௌதமிற்கு நன்மதிப்பை தந்தது.
ஆனால் ஹரிணி அப்படி இல்லை. விக்னேஷின் தோளை உரசிக் கொண்டு அமர, அவள் எதிர்பார்த்தது போல் பவதாவின் விழிகள் கோபத்தை கக்கியன.
" ஏய்!. யார் நீ?. எதுக்கு இங்க வந்து உக்காருற?. மொத தள்ளி உக்காரு டி." என விக்னேஷ் வாயைத் திறக்கும் முன் கத்தினாள் பவதா.
விக்னேஷின் மீது உள்ள உரிமையுணர்வால் அவள் கத்தவில்லை. அவளுக்குத் தன் கணவனின் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் ஹரிணி எப்படி உக்காரலாம். அதுவும் எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு டேபில் புக் செய்து, ஹஸ்பெண்ட் அண்டு வைஃபா ஹப்பியா இருக்கும் போதும். அது தான் பவதாவின் காண்டிற்கு காரணம்.
" ஓ!. உனக்கு நாங்க யாருன்னு தெரியாத!." எனக் கேட்டபடி விலகி அமர்ந்தாள் ஹரிணி.
" என்ன ACP சார்.! உங்க வைஃப் கிட்ட நீங்க எதுவும் சொல்லலையா!. இன்னைக்கி மதியானத்து அப்றம் இருந்தே நாமல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு டீக்குள்ள பன்னுன்னு." எனக் கௌதம் பேசிக் கொண்டே கின்னத்தை காலி பண்ண பவதா வெறியானாள்.
"இது என்னோடது. குடு..." எனக் கௌதமின் கையில் இருந்ததை பிடுங்க பார்க்க,
" நா சாப்பிட ஆரம்பிச்சிட்டேனே. அப்ப இது என்னோடதுதா. இவ்ளோ நேரம் சும்மாத்தான உக்காந்திருந்தம்மா. இப்பையும் அப்படியே உக்காந்திரு." என்றான் கௌதம்.
ஏனெனில் ஆர்டர் செய்யப்பட்ட பாதி உணவுகள் அப்படியே இருந்தன. நான் என்று சொல்லப்படும் சப்பாத்தி, ஒன்றை உண்ணவே பவதாவிற்கு ஒரு மணி நேரம் ஆனது. அவளின் முகத்தை வைத்தே சொல்லி விடலாம் அவள் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருக்கிறாள் என்று. தன் நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறாள்.
" நா சாப்பிடலன்னு எப்படி தெரியும் உங்களுக்கு?." பவதா.
"எங்கள ஃபாலோ பண்றீங்களா.! எதுக்கு?. எப்பருந்து பின்னாடி வர்றீங்க?." விக்னேஷ். பாவம் அவன் இவர்கள் இருவரையும் குறைத்து எடை போட்டு விட்டான். அதான் அதிர்ச்சி.
"சரியா சிக்ஸ் ஃபாட்டி எய்ட்டுக்கு நீ கார்ல ஏறி உக்காந்த." என்றாள் ஹரிணி பவதாவை சுட்டிக்காட்டி.
"ஃபிட்டிக்கு கார நீ ஸ்டார்ட் பண்ண. ப்ளீஸ் எதாவது நல்ல டிரைவிங் ஸ்கூல்ல சேந்து கார் ஓட்டக் கத்துக்க. ஏன்னா நீ கரெக்டாத்த ஓட்டுற. ஆனா தார் ரோடு மேல ஓட்டச் சொன்னா, ரோட்ட விட்டு நாலு சென்டிமீட்டர் தள்ளி ஓட்டுற. உன்னால நடந்து போறவங்களுக்கு ஆபத்து. அதுக்கு தா சொல்றேன். அப்றம் உன்ன விட வயசுல கொஞ்சம் மூத்தவெ இல்லையா. அதா அனுபவம் பேசுது." கௌதம். கிண்டலாக.
'யாருகிட்ட... மீச இல்லங்கிறதுக்காக என்ன பால்வாடி பையன்னு நினச்சியா!. உன்ன விடப் பெரியவன்டா நா!.' என்பது போல் பார்த்தான் விக்னேஷை. அவன் மாலையில் கௌதமை அவன் இவன் என்று பேசியதை சுட்டிக் காட்டினான்.
விக்னேஷ் ஹரிணியை சென்னையில் ஒரு முறை பார்த்திருக்கிறான். அவனின் அன்னை வழக்கமாகச் செல்லும் அநாதை ஆஸ்ரமத்தில் பை நிறைய துணிகளை அள்ளிக் கொண்டு வந்திருந்தாள் அவள். குழந்தைகளுக்குப் புதிய உடையைத் தந்து அவர்களின் தீபாவளியை மறக்க முடியாதபடி மாற்றியவள். அப்போது அங்கிருந்தவர் சொன்னதை வைத்துத் தன்னைவிட சிறியவள். எனவே ஹரிணியின் கூடவே சுற்றுவதால் கௌதமும் ஹரிணியும் ஒரே வயதினர் என்று நினைத்து விட்டான். அவ்வளவே.
"எனக்கு ஒரு சந்தேகம். நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பென்ட் அண்ட் வைஃதானா. இல்ல." என ஹரிணி இழுக்க, விக்னேஷ் ஹரிணியை முறைத்தான் என்றால் பவதா.
"ஏய் நீ யாரு?. எதுக்கு தேவையில்லாம வந்து வம்பிலுக்குற. நாங்க எப்படி இருந்தா என்ன?. உனக்கு என்ன வந்தது!." என எகிற.
"ஐய்யோ சிஸ்டர். பொங்காதிங்க. நாங்களும் உங்கள ரொம்ப நேரமா பாக்குறோம். உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி, ரொமான்ஸ், இப்படி எந்த ஒரு வேதியியல் மாற்றமும் இல்லையா. அதா போலிஸ்காரென் கடத்தீட்டு கிடத்தீட்டு வந்துட்டானோன்னு நினைச்சோம். அவ்வளவு தா. உங்கள காப்பத்தலாம்னு நல்ல எண்ணத்துல தா. வேற எதுவும் தப்பா இல்ல." கௌதம்.
"ம்ம்... ஆமா ஆமா. அதே தா நானும் கேக்க வந்தேன். ஆனா நீ என்ன பேசவே விடாம கத்துற. டிரெயின் இன்ஜீன் மாறி. ப்பூ...ம். ப்பூ... ம்." எனத் தன் வாயில் ரயில் ஓட்ட, கடுப்பானது பவதாவிற்கு.
" ஆ... விக்னேஷ் உனக்கு இதுகல முன்னாடியே தெரியுமா?."
"தெரியும்...மா...வா. தெரியாமல வீட்டு அட்ரஸ்லாம் குடுப்பாங்க." கௌதம்.
"விக்கி, சொல்லிதா நாங்க ரெண்டு பேரும் இங்க வந்தோம்." என்றவளை விக்னேஷ் முறைத்தான்.
"இங்கன்னா இங்க இல்ல. வீட்டுக்கு வந்தோம். நீங்க எங்கையோ கிளம்பீட்டு இருந்திங்க. சரி நாமலும் துணைக்கி போலாம்னு பின்னாடியே வந்தோம்." கௌதம்
" டக்ஸில." ஹரிணி.
"இதுகளுக்கு எதுக்கு நம்ம வீட்டு அட்ரஸ் குடுத்த?. இதுக கூட உனக்கு எப்படி பழக்கம் வந்தது?." எனக் கணவனைப் பார்த்துக் கேட்டாள் .
" வாவ்?. நல்ல மரியாத தெரிஞ்ச பொண்ணுமா நீ. ஆடு மாடு மாறி எங்கள அதுக இதுகங்கிற. சூப்பர் விருந்தோம்பல்." கௌதம்.
" ரெண்டு பேரும் எங்க விருந்தாளி கிடையாது. மரியாத குடுத்து உக்கார வைக்க." பவதா முறைப்புடன்.
"நாம உயர்திணைல இருந்து அஃறிணைக்கி டீ-ப்ரமோட் ஆகிட்டோம். அதுனால நமக்கு எந்த வரமுறையும் இல்ல. என்ன வேணுனாலும் பண்ணலாம். எத வேண்ணாலும் தூக்கிப் போட்டு உடைக்கலாம். ஆடு மாடெல்லாம் இப்படி தா இருக்கும். " என ஹரிணி தட்டில் இருந்த உணவைக் கௌதமிற்கு தூக்கி போட்டு வாயில் கேட்ச் பிடிக்கச் சொல்லி அலுச்சாட்டியம் செய்ய,
" ஸ்டாப் இட்... ஸ்டாப்... உங்கள்ட்ட நா என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணீட்டு இருக்கிங்க." என விக்னேஷ் சற்று காட்டமாகக் கேட்டான்.
"நீங்கத் தான ACP சார் சொன்னிங்க. உதவி மாற்று முறை. அதப்பத்தி பேசனும்... வான்னு." கௌதம்
"அதா என்ன ஹெல்ப்புன்னு கேக்க வந்தோம்." ஹரிணி
"இப்ப தொரத்துறீங்க. என்ன ஸார் நியாயம் இது." கௌதம்.
"அப்ப ஹெல்ப்பு கேண்ஸல்லா!." ஹரிணி.
"நா உங்கள காலைல வரச்சொன்னேன்." விக்னேஷ்
"ஓ!. அப்ப விடியலையா!. நாங்க கூட ஊட்டிக் குளிர்ல காலைல எட்டு மணி இப்படித்தா இருட்டாக இருக்கும்னு நினைச்சிட்டேன். ஸாரி எங்க மிஸ்டேக்." ஹரிணி நக்கலாகச் சொல்ல,
"இன்னும் நைட்டே முடியல. அதுக்குள்ள வந்து உயிர வாங்குதுக. ச்ச... எதுக்கு விக்னேஷ் இவங்கள வீட்டுக்கு வரச் சொன்ன." பவதா.
"அது எங்களுக்கு ஒரு ஹெல்ப் வேணும். அதுக்கு பதில் அவரு ஹெல்ப் பண்ண போறாரு. பதிலுக்கு நாங்க ஒரு ஹெல்ப் பண்ண போறோம். எந்த ஹெல்ப்பு எப்ப பண்ணனும்னு. பேச வந்திருக்கோம்." கௌதம்.
"என்ன பேசப் போறாங்க." பவதா. கணவனை விடாது கேள்வியால் துவைக்க,
"அது எங்களுக்கும் விக்கிக்கும் இருக்குற சீக்ரெட்ஸ். உனக்குச் சொன்னா புரியாது." எனக் கண் சிமிட்டினாள் ஹரிணி.
" போதும், எதுவா இருந்தாலும் நாம காலைல பேசிக்கலாம். இப்ப கிளம்புறீங்க ப்ளீஸ்." எனத் தள்ளாத குறையாக இடத்தைக் காலி செய்ய வைத்தான் விக்னேஷ்.
ஆனால் காலையில் வருபவர்களை எப்படி சமாளிக்க போகிறானோ!.
விக்னேஷ் அந்த ஆஸ்ரமத்தில் நடப்பதை அறிய ஹரிணி கௌதமை இரையாக்கி ஒரு வலை விரிக்க நினைத்தான். ஆனால், பாவம் நண்பர்கள் இருவருக்கும் அவனே இரையாகப் போகிறான்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி
விழி 7
கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..