அத்தியாயம்: 7
நீலகிரி மாவட்ட காவல் நிலையம்.
காலை நிதானமாக எழுந்து, குளித்து முடித்து, உணவு உண்ட பின் பதினொரு மணிபோல் வந்து விட்டனர் இருவரும். ஆனால் மணி ஒன்றை தாண்டி விட்டது. ஆனாலும் அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை. காவல் நிலையத்தை யாரேனும் தூக்கிச் சென்று விடுவார்களோ என்று உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். வைத்த கண் வாங்காமல் காவல் நிலையத்திற்குள் செல்லும் மனிதர்களை வேடிக்கை பார்க்க, வாய் மட்டும் அசை போட்டுக் கொண்டே இருந்து, கையில் சிக்கியதை எல்லாம் வாயிக்குள்ள தள்ளியதால்.
ரெண்டு பேரும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இல்லை. ஹரிணி மட்டும் தான் சிசீடீவி கேமரா போல் தலையை இங்கும் அங்கும் அசைத்துக் கொண்டு தன் கண்களால் அனைத்தையும் ஸ்கேன் செய்துகொண்டிருந்தாள். ஆனால் கௌதமோ.
' நாம யாரு வம்புக்கும் போறதில்ல தும்புக்கும் போறதில்ல. இருக்குற இடம் தெரியாம இருந்துப்போம். ' என நினைத்து மடியில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான். அவ்வபோது வீடியோ கால்மூலம் தன் ஊழியர்களுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்தான்.
" ம்ச்... கௌதம் வட தீந்துடுச்சி. போய் வேற எதாவது வாங்கிட்டு வா. நல்லா சூடா இருக்குனும்." என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் மடிக்கணினிக்குள்ள முகம் புதைத்தான்.
" டேய்!. போய் எனக்கு எதாவது வாங்கிட்டு வா. பசிக்கிது." என்க,
" அப்ப நாம ஹோட்டலுக்கு போய்ச் சாப்பிடுவோம். அப்பறம் நீ நல்லா தூங்கு. எனக்கு வேல இருக்கு." என்றான் தலை தூக்காமல்.
"ம்ச்... எனக்கு மட்டும் வேற வேல வெட்டி இல்லன்னு நினச்சியா. ஐ ஆம் எ பிஸி ஃபேஷன் டிசைனர். உன்னோட கூகுள் கிட்ட கேளு. இந்தியால டாப் டிசைனர்ஸ் யாருன்னு. அது சொல்லும். ம்ச். இப்ப எனக்கு எதாவது வாங்கிட்டு வா கௌதம். பெருங்குடல் சிறுகுடல்ல சாப்பிட ஆரம்பிச்சிடுச்சி. வயித்துக்குள்ள யாரோ டிரம்ஸ் வாச்சிக்கிற சத்தம் கேக்குது. போடா. ப்ளீஸ்டா. "
" இது என்ன வாயா இல்ல கிரைண்டரா!. எனி டயம் அரைச்சிக்கிட்டே இருக்கு. எது எதுவோ ரிப்பேராப் போது. இது ஆக மாட்டேங்கிதேப்பா." எனச் சத்தம் வராமல் முணுமுணுத்தான். பின் அவள் அணத்தவும் எழுந்து சென்று வேகவைத்த கடலையை வாங்கி வந்தவன். காவல் நிலையத்திற்கு முன் இருக்கும் ஒரு டிக்கடையின் பெஞ்சில் தான் அமர்ந்துள்ளனர்.
"டார்லிங், நா அந்தக் கடைக்காரெங்கிட்ட தெளிவா கேட்டுட்டேன். போலிஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் வாட்ச்மேன் கிடையாதாம். அவங்களுக்குள்ளையே சிஃப்ட் வச்சி வாட்ச்மேன் வேல பாத்துப்பாங்கலாம். இதுக்குன்னு தனியா ஆள்லாம் எடுக்கமாட்டாங்கன்னு சொன்னாரு."
"ஹங்... என்னடா உலருற.?"
" பின்ன நீ காவல் நிலயத்த காவல் காக்குற வேலைக்கி தான ட்ரெய் பண்ற. அதா சொன்னேன். அதுவும் ஒரு பொம்பளப்பிள்ளைய வாட்ச் விமென்னா செலக்ட் பண்ற ஐடியால்லாம் கிடையவே கிடையாதாம். அதுனால காத்திருக்குறது வேஸ்ட். வாப்போலாம்."
"ம்ச்... உனக்கு என்னடா பிரச்சன?. எப்ப பாத்தாலும் வாப்போவோம்... வாப்போவோம்னு டார்ச்சல் பண்ணிட்டே இருக்க. நாம இங்க எதுக்கு வந்திருக்கோம். பார்கவி கேஸ்ல எதாவது க்ளூ கிடைக்குதான்னு தெரிஞ்சிக்க தான. ஆனா நீ எதாவது ஒன்ன தெரிஞ்சிக்க விடுறியா."
" நீ அதைத் தெரிஞ்சிக்கவா வந்த?. ஊட்டிய ஓசில சுத்திப்பாக்க வந்துட்டு வாய் பேசாத் தா." என்றவன் அவளின் கையில் இருந்த கடலையில் சிறிதளவை எடுத்துக் கொண்டு அருகில் அமர்ந்தான் காவல் நிலையத்தைப் பார்த்தபடி.
" இப்ப போலிஸ் ஸ்டேஷன் வாசல்ல உக்காந்திருந்தா என்ன தெரிஞ்சிடப் போது. போலிஸ் ஸ்டேஷன் குள்ள போனாக்கூட பரவாயில்ல. வாசலுக்கு வெளியவே நின்னு எலி மாறி எட்டி எட்டி பாத்தா மட்டும் எப்படி தெரிஞ்சிக்க வேண்டியத தெரிஞ்சிப்பா."
"ம்ச்... நமக்கு வேண்டியத செஞ்சி குடுக்க, நமக்காக உதவி பண்ற ஒரு ஆள நா கண்டு படிச்சேன். 12 மணிக்கி வரச் சொன்னான். ஆனா பாரேன். அந்தாளோட வாட்ச்ல மட்டும் மணி பன்னண்டு ஆகல போல."
"யாரச் சொல்ற?. நாளைக்கி ரிட்டயர் ஆகப்போற கிழவனையா!. எனக்கு என்னமோ அவெ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு தோனுது." என்றான் நம்பிக்கையின்றி.
" எல்லாத்தையும் சந்தேகப்படக் கூடாது கௌதம். பாக்க ஒரு மாறி இருந்தாலும் அவரு நல்லவரு தா. "
"ம் பாத்தேனே. அவரோட நெத்தில 'நா ஒரு நல்ல போலிஸ். பிறருக்கு உதவி செய்வதே என் தலையாய கடமை 'ன்னு எழுதி ஒட்டிருந்துச்சே. உங்கிட்ட காச வாங்கிட்டு அந்தாளு கம்பி நீட்டிட்டான். ஆமா உனக்கு எதுக்கு போலிஸ்ஸோட உதவி தேவ?."
" அதுவா! பார்கவி கேஸ்ல சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர் இருக்காருல்ல."
" ஏய்! அவரு இப்ப இன்ஸ்பெக்டர் கிடையாது. ரிட்டயர்டு ஆகிட்டாரு. அவரோட செந்த ஊரான மதுரைக்கி பக்கத்துல ஏதோ ஒரு ஊர்ல இருக்காரு. அவர எப்படி நீ ஊட்டிப் போலிஸ் ஸ்டேஷன்ல பாப்பா. லூசா நீ!."
" ம்ச்... டேய் சொல்றத கேளுடா. நமக்கு அவரு தேவையில்ல. ஆனா அவரு யாரோ ரெண்டு பேர பிடிச்சி விசாரிச்சதா சொன்னேல."
" ம்... ஆனா, அதுல ஒருத்தே அப்பவே செத்துட்டான். இன்னொருத்தே இன்னும் சாகாமயா இருப்பான். எப்பையோ எரும மாட்டுமேல ஏறி எமலோகம் போயிருப்பான். அவிங்க யாருன்னு தெரிஞ்சி நீ என்ன பண்ணப் போற?."
" எனக்கு அவிங்க யாருன்னு தெரியனும். ஏ அவனுங்க ரெண்டு பேர் மட்டும் பிடிச்சி விசாரிச்சாங்கனும் தெரியனும். ஏதாவது காரணம் இருக்கும்ல."
" என்ன காரணம்?." எனப் புரியாமல் கேட்க.
"டேய், போலிஸ் ஒருத்தன விசாரிக்கனும்னா அதுக்கு வேல்யூவான ரீசன் வேணும். சும்மா ரோட்டுல நடந்து போறவன பிடிச்சில்லாம் விசாரிக்க முடியாது. ஒன்னு பார்கவி இறந்த இடத்துல இருந்திருக்கனும். இல்ல யாராது இவனுங்க மேல சந்தேகமா இருக்குன்னு போலிஸ்கு தகவல் சொல்லிருக்கனும். எதுக்கு அத்தன பேர விட்டுட்டு ஏ அந்த ரெண்டு பேர மட்டும் பிடிச்சி வச்சி விசாரிக்கனும்னு தெரிஞ்சாகனும்."
" நீ இலவு காத்த கிளியா ஏமாறப்போற. ஏனா இதெல்லாம் நடந்து இருபது வர்ஷத்துக்கு மேல ஆச்சே. யாரு உனக்கு நியாபகமா வச்சி சொல்லப் போறா.!"
"அந்தக் கேஸ்ஸ விசாரிச்ச இன்ஸ்பெக்டருக்கும், நேத்து நாம பேசுனுமோ, அவரு பேரு!! ஹாங். வெங்கட்ராமன். அவரும் நல்ல பழக்கம் இப்ப வரைக்கும் இருக்கு. அதுனால தா நாம அவருகிட்டு உதவி கேட்டிருக்கோம்."
"நாம ஏ கோர்ட் மூலமா போகக் கூடாது. ஒரு மனு குடுத்தா போதுமே. அதுவும் இல்லன்னா ஏ நாம அந்தப் பழைய இன்ஸ்பெக்டர் பாத்து பேசக் கூடாது. இந்த வெங்கட்ராமன் மாறி இடைத் தரகர் இல்லாம..."
"அதா அந்தாளு ஃபோனையே எடுக்க மாட்டேங்கிறாறே. அவர பாத்து பழச எல்லாம் நியாபகப்படுத்தி. உப்... அதுக்கு பல வர்ஷம் ஆகலாம். அதுக்குள்ள நொந்து நூடுல்ஸ் ஆகிடுவ. அதுமட்டுமில்லாம நா உங்கிட்ட பத்து நாள் தா கேட்டிருக்கேன். நம்மால முடியலன்னா அந்த ஊட்டிலயே உன்னோட எல்லா குற்ற உணர்ச்சியையும் விட்டுட்டு, புது ஆளா எங்கூட ஊர் திரும்புவேன்னு சொல்லிருக்க. மூணு நாள் முடிஞ்சிடுச்சி. சோ நம்ம கிட்ட இன்னும் ஒரு வாரம் தா இருக்கு. அதுக்குள்ள நமக்கு உதவுற மாறி ஒரு ஆளா கண்டு பிடிச்சே ஆகனும்"
" நிச்சயம் அந்தாளு நமக்கு வெல்யூவான க்ளுவ குடுப்பான்னு நம்புறியா?." என்றவனுக்கு ஹரிணியின் மீது சிறு நம்பிக்கை வந்தது. பார்கவி விசயத்தில் எதாவது ஒரு பாதை திறக்கும் என்று.
" ம்... வருவாரு கௌதம்."
" ம்... கண்டிப்பா வருவான். காத்துட்டு இருங்க." என்றது ஒரு கணத்த ஆணின் குரல்.
'எவெ அவெ?.' என்பது போல் இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க, அங்குக் கண்களில் கூலிங் க்ளாஸ்ஸுடன் பார்மல் பேண்ட்டும் ப்ளாக் டீசர்ட்டும் அணிந்த படி நின்றிருந்தான் விக்னேஷ்வரன்.
" நீங்கக் குடுத்த காசு தீந்து போனதுக்கு அப்றம் வருவான். அப்பையும் உங்களுக்கு வேண்டியத தரமாட்டான். மேக்கொண்டு செலவுக்குக் காசு வாங்கிட்டு போக வருவான். அதுவரைக்கும் நீங்கப் பத்து நாள் இங்க உக்கிந்திருந்தாலும் அவன மட்டும் உங்களால பாக்கவே முடியாது." எனக் கூறிய படி இருவரின் முன் வந்தமர்ந்தான் விக்னேஷ்.
" அட கூலிங் கிளாஸ் போட்ட வாணரம். இங்க எப்படி?." எனக் கௌதம் காதில் முணுமுணுத்தாள் ஹரிணி. அவளை அமைதியாக இருக்கும் படி கௌதம் கண் காட்டினான்.
"யாரு ஸார் நீங்க?." கௌதம்.
"உங்க பிரச்சினைக்கி தீர்வு சொல்ல வந்தவெ." விக்னேஷ்
" கூலிங் கிளாஸ் போட்ட கூகுள் சாமியாரா!. என்ன!." ஹரிணி கேலியாக.
" இல்ல, நீங்க யாருக்காகக் காத்துட்டு இருக்கிங்களோ அவன உங்க கண்ணு முன்னாடி இப்பவே என்னால கொண்டு வர முடியும்." விக்னேஷ்.
'யாரு நீயா?.' என்பது போல் நண்பர்கள் இருவரும் பார்க்க, "இவ்வளோ நேரம் நாங்க பேசுனத ஒட்டுக் கேட்டுருக்க... சரியா?. " ஹரிணி.
" ஒட்டு கேக்குற அளவுக்கு நீ ஒன்னும் மெதுவா பேசிடல. சத்தமாத்தா பேசுன. இங்க டீக்குடிக்க வந்த எவெங்காதுல வேண்ணாலும் விழுந்திருக்கும். அதுல ரெண்டு காது என்னோடது." விக்னேஷ்
"காதுல விழுந்தா எடுத்து ஓரமா போட்டுட்டு போகா வேண்டியது தான. எதுக்கு வாலெண்டரியா வந்து பேசனும். ஃபஸ்ட் நீ யாரு?. அத சொல்லு." என ஹரிணி கேட்க, விக்னேஷ் தன் ஐடியை எடுத்துக் காட்டினான்.
அதையும் அவனின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவள், "அந்தப் பக்கம் திரும்பு. இப்ப இந்தப் பக்கம் திரும்பு." என அவனின் முகம் திருப்பச் சொல்ல, விக்னேஷ் முறைத்தான்.
"அது ஒன்னுமில்ல. எந்தப் பக்கத்துல இருந்து பாத்தாலும் நீ சாக்லெட் பாய் மாறி சாஃப்ட்டான ஆள் மாறித் தெரிற. உன்னைய எப்படி போலிஸ்ல சேத்தானுங்க. யாரையும் கரெட்க் பண்ணி டிப்பார்ட்மெண்ட்டுக்குள்ள சேந்துட்டீயோ!." எனச் சந்தோஷமாகக் கேட்க, விக்னேஷ் புன்னகைத்தான்.
"உங்களுக்குச் சந்தேகம் இருந்த செக் பண்ணிக்கங்க. பட் இப்ப இங்க நாந்த போலிஸ்." என்றவனை கௌதம் கூர்மையாகப் பார்த்தான்.
" 'கஷ்டப்பட்டு IPS லாம் படிச்சிருக்கேன் நம்புங்கப்பா.' அப்படீங்கிறியா. ஓகே நம்புறேன். அதா! அன்னைக்கி அந்தச் சவுண்டு விட்டாளா அந்த மங்கி. எம்புருஷெ யாருன்னு தெரியுமான்னு. பை தா வே அன்னைக்கி உங்கூட இருந்த அந்தச் சின்ன வாணரம் எங்க?. பாத்தா அவள நா ரொம்ப மிஸ் பண்ணலன்னு சொல்லிடு." என்க.
" ஹஹ்... ஓகே. உங்க பேரு என்னன்னு நான் தெரிஞ்சாக்கலாமா." விக்னேஷ்.
" ஆமா நீ சென்னை போலிஸ் தான. இங்க என்ன பண்ற." என 'பொண்டாட்டியோட வந்தவனுக்கு போலிஸ் ஸ்டேஷன் ல என்ன வேல'. ன்னு சந்தேகமாகக் கேட்டான் கௌதம்.
" ம்... நீ சென்னைனா உனக்கு எப்படி வெங்கட்ராமன தெரியும்.?" ஹரிணி.
" இங்க ஒரு கேஸ் விசயமா வந்தேன். கோத்தகிரி பக்கத்துல. அங்க தா வெங்கட்ராமன் வேல பாக்குறாரு. நா போலிஸ் தானு நம்புறியா, இல்ல இன்னும் சந்தேகமா த்தா இருக்கா." எனக் கௌதமை பார்த்துக் கேட்டான் விக்னேஷ்.
ஏனெனில் கௌதம் தன் மொபைலில் விக்னேஷை பற்றித் தேடிக் கொண்டு இருந்தான். கண்டு பிடித்து விட்டான் போலும் அதான் கேள்வி கேட்கிறான்.
" இப்ப உங்க பேரு சொல்லாம்ல." விக்னேஷ்.
" இவா ஹரிணி." கௌதம்.
" இவெ பேரு தா ஹரிஹர கௌதமன். சுருக்கமா கௌதம்னு கூப்பிடுவேன். உன்னோட பேரு விக்னேஷ்வரன். உன்னோட ஃபோட்டோவ நா பேப்பர்ல பாத்திருக்கேன். அன்னைக்கி சட்டுன்னு நியாயம் வரல. சாரி, உன்னோட கார் கண்ணாடிய உடச்சதுக்கு."
" கார் என்னோடது இல்ல. ஆனாலும் உன்னோட ஸாரிய நா ஏத்துக்கிறேன். ஏன்னா கண்ணாடி மாத்த செலவு செஞ்சது நாந்தா. அன்னைக்கி எம்மேல தா தப்பு. நீ." என இழுத்தவன். ஹரிணி உதடுகள் மெல்லியதாய் வளையவும்,
" நீ சொன்னதுக்கு அப்றம் தா ஸ்டைக் ஆச்சி. அதுக்குள்ள என்னோட வைஃப் கத்தி. நீயும் கத்தி. ஒரே சண்ட காட்சியா மாறிடுச்சி." என்றான் சிறு சங்கடத்துடன்
" இன்னைக்கி மூஞ்சில சோகத்த காட்டுனாலும். அன்னைக்கி அத நீ நல்லா ரசிச்சி என்ஜாய் பண்ண மாறில்ல இருந்துச்சு." கௌதம்.
" அது வேற ஒரு கத. இப்ப அது வேண்டாம். எதுக்கு வெங்கட்ராமன் கிட்ட காச குடுத்திங்கன்னு சொன்னீங்கன்னா என்னால அந்தாள இங்க வர வைக்க முடியும். உன்ன அன்னைக்கி தேவையில்லாம திட்டுனதுக்கு ஸாரி கேட்ட மாறி இருக்கும்." விக்னேஷ்.
இருவருக்கும் சொல்லவா வேண்டாமா என்ற யோசனை இருந்தது. இருந்தாலும் சொல்லித்தா பாப்போமேயெனப் பார்கவி கேஸ்ஸை பற்றிச் சொல்ல. விக்னேஷிற்கு சிறு கோபம் வந்தது.
" ஏ இத அப்பவே முடிச்சிருக்கலாமே. எதுக்கு வாப்பஸ் வாங்கனும்." என்றான் சிறு காட்டமாக.
" அப்ப முடியல்லனு தா இப்ப டிரெய் பண்றோம். எங்களுக்கு எதாவது ஒரு க்ளூ கிடைச்சாலும் போதும்." என ஹரிணி சொல்ல, கௌதம் சற்று அமைதியாக இருந்தான்.
இருவரையும் ஒரு சேர பார்த்தவன் வெங்கட்ராமனுக்கு ஃபோன் செய்து அவனிருக்கும் இடத்திற்கு வரச் சொன்னான். அதுவும் விக்னேஷ் சில விசயங்களைக் கேட்டானே அதை எடுத்துக் கொண்டு.
" ஸார் நீங்கக் கேட்டது." என ஒரு ஃபைலை எடுத்து வந்த அவர் ஹரிணியையும் கௌதமையும் பார்த்துவிட்டு ஓடப் பார்க்க, விக்னேஷ் அவரைப் பிடித்து இருவரின் முன்னால் அமரவைத்தான்.
" யோவ், ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்கிட்ட என்ன சொன்ன, எனக்கு எல்லாம் தெரியும். நா இல்லாம எதுவும் நடக்காது, நிக்காதுன்னு சொல்லிக் காச வாங்கிட்டு. இப்ப ஓடி ஒழியவா பாக்குற. சொல்லு. நாங்கேட்டது கிடச்சிச்சா. ம்." எனப் பார்கவி டெத் தொடர்பாக இதுவரை போலிஸ் விசாரித்தவற்றை கேட்டாள்.
" மேடம் அது ரொம்ப பழைய கேஸ்ஸு."
" அத எங்கிட்ட இருந்து காச வாங்குறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்." கௌதம்.
" ஸார், விடச் சொல்லிச் சொல்லுங்க ஸார்." விக்னேஷை ஆதரவுக்கு அழைக்க, அவன் முறைத்தான் அவரை.
" மேடம், என்னால முடிஞ்ச வரைக்கும் நா டிரைய் பண்ணேன். ஆனா."
" என்ன ஆனா!." கௌதம்.
" அது எங்க இருக்குன்னு தெளிவா தெரியல மேடம். "
"எது?."
" அதா தம்பி. அந்த வீடியோ." எனச் சொல்ல, இருவருக்கும் புரியவில்லை.
" வெங்கட்ராமன், தெளிவா சொல்லுங்க. எந்த வீடியோ." விக்னேஷ்.
" அது வந்து ஸார். அந்தச் சின்னப் பொண்ணு டெத்ல ரெண்டு பேர் மேல சந்தேகம் வரக் காரணமா இருந்த வீடியோ ஸார்." என்றார் அவர்.
அதாவது போலீஸ்ஸிற்கு அந்த இருவர் மீது சந்தேகம் வரச் சில சீசிடீவி கேமராவில் பதிவான காட்சிகள் தான் காரணம். நவீன தொழில் நுட்ப வளர்ச்சி அடையாத அந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய பள்ளிகள், சர்ச்சுகள், சில செல்வந்தர்கள் வீடுகள் மற்றும் சில எஸ்டேட்களில் விலங்குகளால் நடமாட்டத்தை அறிய எனச் சில இடங்களில் மட்டுமே சீசிடீவி பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஒரு கேமராவில் பார்கவி நடந்து சென்ற சிறிது நேரத்தில் அந்த இருவரும் அதே பாதையில் சென்றுள்ளனர். பின் ஒரு கேமராவில் அவர்கள் இருவரும் ஒரு வாகனத்தை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் தான் போலிஸ் அவர்களை விசாரனை செய்தது.
"ம். நல்ல க்ளூ தா. என்ன பண்ண போறிங்க." விக்னேஷ்
" ஆனா அந்த வீடியோவ பாத்தாத்தான க்ளூ கிடைக்கும். எங்க அந்த வீடியோ." ஹரிணி மிரட்டலாக வெங்கட்ராமனை பார்த்துக் கேட்க,
" அதத்தா ம்மா என்னால எடுக்க முடியல. ஆனா இருக்கு. உள்ள இருக்குன்னு தா அந்தாளு சொன்னாரு. எங்க இருக்குன்னு தா தெரியல." வெங்கட்ராமன் சொல்ல, விக்னேஷ் அவரைச் செல்லுமாறு கூறினான்.
" பேசுன பணத்துல பாதி தா குடுத்திருக்கிங்க. மீதி. "என வெங்கட்ராமன் இழுக்க,
" மரியாதையா போய்டு. இல்லன்னா நடக்குறதே வேற." எனக் கௌதம் விறைத்து எழ, அவர் ஓடி விட்டார்.
"ச்ச... இந்தாள நம்பித்தா உன்ன இங்க வர வச்சேன். ஆனா இப்படி ஏமாத்துவான்னு நினைக்கல. ஸாரி கௌதம்." என்றாள் சோர்வாக.
" Why sad. அதா இருக்குன்னு சொன்னாரே." விக்னேஷ்.
" பட்."
" நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணா. அது உங்க கைக்குக் கிடைக்க நா ஏற்பாடு பண்ணுவேன். I can do anything." என்றான் விக்னேஷ் போலிஸ்ஸாக.
அதான சோனியங்குடுமி சும்மா எப்படி ஆடும். இவனுக்கு ஒன்னு வேணும்கிறதுனால தா ஹரிணி கௌதம் கிட்ட வாலெண்ட்டரியா வந்து பேசிருக்கான்.
இப்ப யாரு யாருக்கு ஹெல்ப் பண்ண போறாங்க.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..