அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 6 "இந்த ஹைவேஸ்ல டார்ச் அடிச்சி லாரிய மடக்கி தொழில் பண்ற கும்பல சேந்தவ தான நீ. இல்ல லிஃப்ட் கேட்டு ஏறுற மாதிரி ஏறி மயக்க மருந்து அடிச்சி கார ஆட்டைய போடுற கும்பலா? பாக்க அப்ரானி மாதிரி காட்டீட்டு ஆளுங்கள கொல பண்ற கூட்டமா! என்ன நீ மட்டும் தனியா இருக்க? எங்க உ கூட்டாளிங்க? " என ராக்கி சுற்று முற்றிலும் பார்த்து கேட்க, "ஸார், நீங்க நினைக்கிற மாதிரில்லாம் கிடையாது. என்னைத் துரத்திட்டு வர்றாங்க ஸார். அவங்க கைல நான் மாட்டுனா என்னாகும்னே தெரியல ஸார். ப்ளிஸ் ஸார். அவெங்கல்லாம் ரவுடி பசங்க ஸார். என்னை ஆள் நடமாட்டம் இருக்கிற, இல்ல மதுர பஸ்ல ஏத்தி விட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் ஸார்.. " எனக் கெஞ்சவும் அவளைத் தேடி வந்த அடியாள்களில் ஒருவன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. "டேய் இங்க இருக்காடா." என அவர்களில் ஒருவன் குரல் கொடுக்க, மற்ற அனைவரும் ஓடி வந்து காரைச் சுற்றிக் கொண்டு நின்றனர். "ம்... வா... " என அழைக்க, அவள் ராக்கியின் பின்னே ஒழிந்து நின்றாள். "ம்ச்... ஒழுங்கா வந்திடு. இல்லன்னா அடிச்சி இழுத்திட்டு போக வேண்டி இருக்கும்....