அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 45 ஒவ்வொரு உறவிற்கும்… எதிர்பார்ப்புகள் உண்டு… ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல்… கிடைக்கும் ஒன்று அன்பு… எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்… நாம் நேசித்த இதயத்தை மட்டும்… மறக்கவோ வெறுக்கவோ… முடியவில்லையெனில் அது… உண்மையான அன்பு… பைரவியிடம் இருப்பது போல். மதுவின் காயத்தைத் தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை. மையிட்ட விழிகள் கலங்கி கண்ணீரைத் தேக்கி வைத்து நின்றன. மதுவிற்கு அழுபவரை பிடிக்காது. ஏமாற்றி காரியம் சாதிக்க சுரக்கும் கானல் நீர், கண்ணீர் என்பான். திருமணம் முடிந்த புதிதில் பைரவிக்கு எதற்கெடுத்தாலும் கண்ணீர் வரும். தான் எதிர்பார்த்தது போல் திருமண வாழ்வு அமையவில்லை என்ற ஏமாற்றத்தில் அழுகை வர, "இதோ பாரு… கண்ணீர் விட்டுட்டே பேசுறதா இருந்தா தயவு செய்து போய்டு. நீ சொல்ற எதையும் நான் கேக்கவோ நம்பவோ மாட்டேன். போ... " எனத் தன் முன் அழும் மனைவியைத் துரத்தி விடுவான். அவளும் அப்போது எதுவும் சொல்லாது சமயலறை புகுந்து தன் அழுகையைத் தொடர்வாள். இப்போது வந்த அந்த நீர் எதற்கானது என உணரும் போது மதுவின் உள்ளம் பைரவியின் அன்பில் கரைய காத்தி...