அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 110 "குற்ற உணர்ச்சி. " என்றவன் கண்களில் வேதனையைக் காண முடிந்தது. ஏனெனில் சுடர் புத்திசாலி பெண். கடலைப் போடும் எண்ணத்துடன் அனுப்பும் குறுந்தகவல்கள் எதற்கும் மதிப்பளித்தது இல்லை. பதிலளித்ததும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏமாந்தது தீஷித் என்ற ஒருவனின் பெயரில். அதுவும் போலியானது என்று அறியாது. அவனின் பெயரைத் தவிர வேற யாராக இருந்தாலும் அவள் பேசியிருக்க மாட்டாள். "என்னோட பேர சொல்லி ஒருத்தெ ஏமாத்திருக்கான். பல மாசங்களா நான்னு நினைச்சி அவளுக்குள்ள பொய்யான காதல வளத்து, கற்பனைல மிதக்க விட்டு நம்பிக்க துரோகம் நடந்திருக்கு. அது தெரிஞ்சும் எப்படிச் சும்மா இருக்கச் சொல்லுற? அவளப் பிடிக்காதவங்க, பழி வாங்க தான் இதப் பண்ணிருந்தாலும், ஏன் என்னோட பேர யூஸ் பண்ணணும். அவளுக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்கையும் காதலும் இருந்திருந்தா, நான்னு நம்பி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட காதல் வளத்திருப்பா. அது பொய்ன்னு தெரியும் போது எவ்ளோ வலிச்சிருக்கும். ஏமாற்றம். நாம நம்புன ஒருத்தர் கிட்ட இருந்து கிடைக்கிற ஏமாற்றம் வலிய தரும். அத நான் அவளோட கண்ணுல பாத்தேன். அவள ஏமாத்துனது நான்னு தான நின...