முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 109

 

அத்தியாயம்: 109



"நீ ஏன் இன்னும் தூங்கல?" என்றது மதுவின் குரல். 


" ஏன்னா வரல. தூங்கல. இந்தக் கேள்வி கேக்கத்தா இந்த நேரத்துல கால் பண்ணிங்களா தீஷ். " என தீஷித்திடம் கேட்க, பாவம் இரவு நேரம் கூட சூரியன் தகித்துக் கொண்டிருந்தது மதுவிற்குள்.


"ஒரு சின்ன கேம். " தீஷித்.


"விளையாடுற நேரமா இது. " 


" விளையாடலன்னா மதுசூதனனுக்குத் தூக்கம் வந்திடுமாம். அப்றம் கார் டெல்லில நிக்காது கொட சாஞ்சி எங்கயாது கவுந்து கடக்கும்னு சொன்னான். " என்றவன் சொன்னதும் சரியே. 


எப்பொழுதும் காரில் ஏறி அமர்ந்து விட்டால் மது பைரவியை உறங்க விட மாட்டான். கன்னம் தட்டி பேசு பேசு என்பவனே. 


"சரி. என்ன கேம்?" 


"ஒரு பத்து கேள்வி. மனசுல தோணுனத பதிலா சொல்லு. " 


"ஓகே தான். ஆனா இதுல எதுவும் உள்குத்து இருக்கா. " என்றவளுக்கு தெரியுமே இருவரும் அடித்துக் கொள்வது. இன்னேரம் சண்டை‌ போட்டுக் கொண்டால் எப்படி டேமேஜ் இல்லாமல் வருவார்கள் என்பதால் சந்தேகமாக கேட்டாள்.


"எந்தக் குத்தும் இல்ல. ஒரு ஃபன்னுக்காக. entertainment. அப்படி தான் மதுசூதனா. " என்க, அவன் முறைத்தான். 


"அவனோட மௌனமே சம்மதத்ததா சொல்லுது. கேக்கவா.‌" 


"சரி கேளுங்க.‌" என்றவன் பிடித்த நிறம் என எழுதி வைத்திருந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்‌.


" மெஜன்டா. " என்றவள் பதில் தர,


"என்ன மெஜன்டாவா. " என அதிர்ந்தது மது தான். ஏனெனில் அவன் நீல நிறத்தைக் குறிப்பிட்டிருந்தான்.  


"ஆமா. எனக்கு அந்த கலர்னா பிடிக்கும். மை ஃபேவரைட். " என்க, தீஷித்திற்கு இந்த முறையும் மதிப்பெண். ஆனால் வெற்றி மதுவிற்கே என்று தான் சொல்ல வேண்டும். எப்படி என்றால்,


"அப்ப நம்ம ரூம்ல கபோர்டு முழுக்க நீல கலர்ல டிரெஸ்ஸா வாங்கி அடுக்கி வச்சிருக்கியே. ஏன். " 


"அது எல்லாமே நான் செல்க்ட் பண்ணதா?" என எதிர் கேள்வி கேட்டாள் பையூ. அவன் தான் மனைவிக்கு அழகாக இருக்கும் என்று அவளின் விரும்பம் கேட்காது வாங்கி வைப்பது. ஆனாலும் அவளின் தேர்வு என்று வரும் போதும் அவள் நீல நிறத்தைத் தவிர்த்து எதையும் தேர்ந்தெடுத்தது இல்லை. அதை ஏன் என்று மது கேட்க,


"அந்த கலர்ல டிரெஸ் போட்டா நீங்க என்னைக் கூட கொஞ்ச நேரம் ரசிப்பிங்க. உங்க கண்ல ஒரு ரசன இருக்கும். லவ் இருக்கும். ஒரு ரொமாண்டிக் மூடு இருக்கும். " என்க, மதுவிற்குள் பெருமை தாங்கவில்லை. 


கர்வம். பைரவி அவன் மேல் வைத்திருக்கும் காதல் தந்த கர்வம். அந்தக் கர்வத்தால் தான் அவன் திமிரோடு திரிகிறான். 


"பட், பாயிண்ட் எனக்கு தான். நாந்தா கரெக்ட் ஆன்ஸ்ஸர் சொன்னேன். " எனத் தீஷித் கட்டையைப் போட்டான். 


'ஏன்டா நான் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதா. ' என்பது போல் அவன் பார்த்தான். 


'இரு உன்ன அடுத்த பால்ல க்ளீன் போல்ட்டாக்குறேன். ' என்பது போல் அடுத்த கேள்வியைக் கேட்டான் தீஷித். 


" பைரவியின் விருப்ப அசைவ உணவு. " 


" Fish." 


"அதுலயும் சங்கரா மீன்னா ரொம்ப பிடிக்கும் சரியா பையூ. " தீஷித்.


"எஸ் தீஷ். அதோட டேஸ்ட்ட அடுச்சுக்கவே முடியாது. " குதுகலித்தாள் பெண்.


" க்ரில்டு சிக்கனும், சிக்கன் பர்கருமா வாங்கி தரச் சொல்லி தின்னுட்டு மீன்னு சொல்ற. " பாவம் இம்முறையும் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை போலும். ஆனால் அவள் சொன்ன பதிலில் மதிப்பெண்கள் எதுவும் தேவையே இல்லை மதுவிற்கு.


" மீன் சாப்டா ப்ரெஸ் பண்ணதுக்கு அப்றமும் ஸ்மெல் வரும். நீங்க பக்கத்துலயே விட மாட்டிங்களே. அதா. " என்ற பதிலில் பேசிக் கொண்டிருப்பது சாதா பைரவி அல்ல மதுசூதனனின் பைரவி என்பது நன்கு புரிந்தது தீஷித்திற்கு. 


பத்திற்கு பத்து எடுத்தும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை அவனால். நந்திதா உரைத்தது சரி டாம்மை மறந்து செல்வது தான் சரியான செயல் என ஒரு மனம் மட்டுமல்ல இரு மனமும் வாதாட, கணவன் மனைவி இருவரின் சண்டைகளை ரசித்தபடி அந்த இரவு உறங்கா இரவாகிப் போனது. 


சூரியன் உச்சி வானிற்கு பவனி வந்து வெயில் ஏறத் தொடங்கி நேரம். காரைப்  புதர் போல் தெரிந்த ஓரிடத்தில் நிறுத்தியவன் கண்ணசைந்தான். 


இரவு பகல் முழுவதும் உறங்கவில்லை. எந்நேரம் எது நடக்குமோ என்ற எச்சரிக்கையிலேயே இருந்தவனின் உடல்  இளைப்பாற வேண்டியது. உறங்கும் முன் தீஷித்திடம். 


" சரியா ரெண்டு மணி நேரத்துல நான் எழலன்னாலும் எழுப்பிடு. " என்றவன்,


" கவனமா இருந்துக்கோ. தேவன்னா இத யூஸ் பண்ணிக்க. " என ஒரு துப்பாக்கியை தீஷித்தின் கரத்தில் தந்தான். அதை வாங்கிய தீஷித் மதுவின் நெற்றியைக் குறி பார்த்து, 


"நான் உன்ன சுட்டுடுட்டா எனக்கு காம்படீட்டர் இருக்காதுல. " 


"கண்டிப்பா உனக்கு எதிரா போட்டியாளர்னு யாருமே கிடையாது தான். முதல்ல துப்பாக்கிய ஒழுங்கா பிடி. அப்றமா சுடு. காம்படீட்டராம் காம்படீட்டர். " என்றவன் அதை இயக்கும் முறையைக் கற்றுக் கொடுத்து விட்டு, பின் இருக்கைக்கு சென்றான். 


"ஹாங். ஒத்த கால வச்சிட்டு உன்னால ஊர் போய் சேரவும் முடியாது. சிராஜ் அனுப்பிருக்குற அடியாளுங்கள தாண்டி உயிர் வாழவும் முடியாது. அதுனால கேஸ் முடிஞ்சி அவன உள்ள தூக்கி போடுற வர உன்னோட விளையாட்ட நிப்பாட்டிக்க. " என்று விட்டு உறங்கிவிட்டான். 


சீராக ஏறி இறங்கிய மூச்சு மதுசூதனன் உறங்கி விட்டான் என்று சொல்லியது. 

தன் லேப்டாப்பையும், மது தந்த துப்பாக்கியை ஆராய்ந்த படி நேரம் செல்ல,


டாஸ் போர்டில் மற்றொரு துப்பாக்கி இருந்ததையும் கண்டான். அதில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தது. அத்தோடு அதற்கு லைசன்ஸ் மதுவின் பேரில் இருந்தது. அதை எடுத்தவன் தன் அடிபட்ட காலின் கட்டிற்குள் ஒளித்து வைத்துக் கொண்டான். பின் சுற்றி முற்றி பார்த்தான். எல்லாம் மரங்கள். காண்பவர்களுக்கு கார் தெரியாதபடி மறைத்திருந்தது அந்தப் புதர். கூடவே இதமான தென்றல் காற்றும் வீச ஏசியை விடுத்து ஜன்னல் கதவை திறந்து ரசிக்கலானான் தீஷித். 


அப்போது ஒரு குரல் தெளிவாக கேட்டது‌. வேறு மொழியில் பேசினால் புரியாது போய்விடுமா என்ன?


' அவனுங்க ரெண்டு பேரும் நம்ம பங்க்க தாண்டல. அப்படியே தாண்டினாலும் அடுத்தது டோல் கேட் தான். டோல் முழுக்க நம்ம ஆளுங்க தான். கார் நம்பர் சொல்லியாச்சி. ஆளயும் ஃபோட்டால காட்டிட்டேன் வேறென்ன. எங்கள தாண்டி அவனுங்க போகவே இல்ல போக விட மாட்டோம். 


அப்றம்‌ பேசுன காச முதல்ல அனுப்பி வைக்கச் சொல்லு. அப்பத்தா பசங்களுக்கு குஷி வந்து முழு மூச்சா உள்ள இறங்குவானுங்க. 'என்க அந்த‌ப் பக்கம் இருந்து என்ன பதில் வந்ததே,


'ஒருத்தன போடுறதாத்தா பேச்சு. காசும் அவனுக்கு மட்டும் தான் குடுத்த. இப்ப ரெண்டு பேர்னா கொஞ்சம் ரிஸ்கு தான். அதுலயும் இன்னொருத்தன நம்பாளுங்க பயில்வான்னு சொன்னானுங்க. அதுனால காசு வராம ஆள நெருங்க முடியாது. ' என்பது தான் சம்பாசனை. 


ஃபோனில் யாருடனோ பேசிய படி‌ ஒதுங்க வந்திருக்க வேண்டும். குரல் சில நிமிடங்கள் மட்டுமே கேட்டது. 


'என்னை போடணும். அது ஓகே. இவன எதுக்கு போடணும். அதுவும் பால் வடியும் பயில்வான். யாரோட வம்புக்கும் போகாத பைரவியோட தயிர்சாதம். இவன எதுக்கு. ' என்பது போல் மதுவின் முகம் பார்க்க, நன்கு உறங்கிக் கொண்டிருந்தான் மது. 


அவன் சொன்ன நேரம் முடிய, எழுப்பி விட தேவையேயில்லாது மது எழுந்து கொண்டான். தீஷித்திடம் தந்த துப்பாக்கியை வாங்கிக் கொண்டவன் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் நிறுத்தச் செல்ல, தீஷித் நடந்ததை சொல்லாது மொட்டையாக வேண்டாம் என்றான். 


"சொன்னா கேளு. அவனுங்க நம்மல ஆலம் கறச்சி வச்சி வரவேற்குறதுக்கு பதிலா கைல கட்டையோட வரவேற்க போறானுங்க. " என்றான். 


"என்ன உலறுற. " என்றவன் தீஷித் கூறியதைக் காதில் வாங்காது காருக்கு எரிபொருள் நிரப்ப, அங்கு சிராஜ் ஏற்பாடு செய்த ஆட்கள் தீஷித் சொன்னது போல் தயாராக இருந்தனர். 


பெட்ரோல் நிரப்பி விட்டு காசுக்காக கார்ட்டை நீட்டியதும். " ஸார் டயர்ல காத்து இறங்கிருக்கு. " என்று மதுவை காரை விட்டு இறங்கி வர வைக்க நினைத்து அழைக்க, மது இறங்கிச் சென்றான். காரை லாக் செய்து விட்டு சென்றதால் யாரும் தீஷித்தை நெருங்கவில்லை. 


பங்க்கில் வேலை செய்த ஆட்கள் அத்தனை பேரையும் சமாளித்து காரிடன் தப்பி வருவது ஒன்னும் சுலபமாக இருக்கவில்லை. 


"நாந்தா அப்பவே சொன்னேனே. கேக்கணும். " எனக் கூலாக தீஷித் சொல்ல திரும்பி பார்த்தான் மது. காண்டாகி விட்டான் போலும்.


"பின்னாடி ஃபாலோ பண்ணலயே. ஏன்?" என மது கேட்க, 


"ஏன்னா அடுத்து வரப்போற டோல் கேட்ல ஆள் போட்டிருக்கானுங்க. " 


"உனக்கு எப்படி தெரியும்?" 


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தே பேசிட்டு இருந்தான். " 


"என்னன்னு. " 


"டோல்லு பங்குன்னு நாம டில்லி போற ரூட்டுல ஆளுங்கள நிப்பாட்டியிருக்குறதா. " என கூலாக சொல்ல, 


"அப்றம் எந்தலைக்கி மட்டுமில்ல உங்தலைக்கும் விலை பேசிருக்கானுங்க. என்னை மட்டுமில்ல உன்ன நீயே காப்பாத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்க. எங்கிட்ட அவனுங்களுக்கு எதிரா எவிடன்ஸ் இருக்கு‌. அதுனால துரத்துறான். உன்ன எதுக்கு துரத்தணும். " 


" முதல்ல உன்ன எதுக்கு அவனுங்க தூரத்துறாங்கங்கிறது முழுசா காரணம் சொல்லு. " 


"அதா ஆல்ரெடி சொல்லியாச்சே. " 


" பொய். 100% பொய்ய விட ரொம்ப பெரிய ஆபத்து எதுன்னு தெரியுமா. 1% மறைக்கப்படுற உண்ம. உண்ம தெரியலன்னா தேவையில்லாத யூகம் உண்டாகும். சந்தேகம் வரும். கற்பனைகள் நிஜத்த சிதச்சிடும். நம்பிக்கையான உறவுங்க கிட்ட மறைக்கிற உண்ம பொய்ய விட மோசமானாது. " என்றவன் சொன்னது மறுக்க முடியாத உண்மை. 


பைரவி மறைத்த சில விசயங்கள் தேவையற்ற கற்பனைகளை உண்டாக்கி அவன் வாழ்வில் இருந்து அவளைப் பிரித்து வைத்துள்ளது. மது எப்பொதும் தன்னுடன் நெருங்கி பழகும் நண்பர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பான். அது கிடைக்காது போனால் நட்பைத் துண்டித்து விடுவான்.


" நான் எதையும் யார்க்கிட்ட இருந்தும் மறைக்கல. " என்ற போது குரலே இல்லை தீஷித்திற்கு. 


" உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.‌ உனக்காக எதையும் பண்ண தயாரா இருக்குற நண்பர்கள். உன்னையே ஆதாரமாக வச்சி வாழ்ற உன்னோட குடும்பம். கொஞ்ச நாள்னாலும் பைரவி ஒரு ஃப்ரெண்டா உன்ன முழுசா நம்புறா. இப்படி உண்மையா பழகுற எல்லார்கிட்டையும் சில விசயத்த நீ மறைக்கிறதுனால  என்ன கிடைச்சிடப் போது. " 


"எனக்கு இந்த டாப்பிக் பிடிக்கல. இப்ப நாம ஹைவேல போறது ரிஸ்க். மாத்து பாதய யோசி.‌. " எனப் பேச்சை திசைமாற்றி விட்டான்‌ தீஷித். ஆனால் மதுவோ,


" சுடருக்கும் உனக்கும் இடைல லவ். " 


" கண்டிப்பா கிடையாது. என்னோட லைஃப்ல கடைசி வர கூட இருக்கணும்னு நான் ஆசப்படுறது ஒரே ஒருத்தி மட்டும் தான். எத்தன பேர் வந்து எம்மனச மாத்த முயற்சி பண்ணாலும் நான் என்னை மாத்திக்க மாட்டேன்." என அழுத்தமாக கூறினான்.


"அப்றம் சுடர் மேல் எந்த ஃபீலிங்கும் இல்ல. " 


"எஸ்.‌"


"அப்றம் ஏன் சிராஜ்ஜிக்கு எதிரா ஒரு கம்பெனி உருவாக்கி அவன முழு மூச்ச எதிர்க்கணும். " 


" …" தீஷித்திடம் பதில் இல்லாது போனது. 


" அவளோட டெத்துக்கு ரிவெஞ்ச் எடுக்கத்தான சோசைட்டில பெருசா வளந்த ஒருத்தன எதிர்க்கிற. சரியா. பிடிக்காத, ஃபீலிங் இல்லாத ஒருத்திக்காக செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஒரு மூனாவது மனுஷிக்காக இந்த கேஸ்ல உயிர குடுக்குற அளவுக்கு இன்வால் ஆகவும் காரணம் என்ன? " மதுவின் கேள்விகள் பிடிக்காது தலை திரும்பிக் கொண்டான் அவன். அவனுக்குப் பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த மதுவிற்கு பதில் வேண்டியிருந்தது.  


"எங்கிட்டயும் சில எவிடன்ஸ் இருக்கு. " என்றவன் விசாகன் வீட்டில் கிடைத்ததையும் அதை வைத்து சிராஜ்ஜை மிரட்டியதையும் சொல்ல,


"தப்பு பண்ணிட்ட. நீ நேரடியா அவனுங்க கிட்ட மோதிருக்க கூடாது. அதுலயும் உங்கிட்ட எவிடன்ஸ் சிராஜ் உமேத்தனு ரெண்டு பேரையும் மட்டுமில்லாம குப்தா குடும்பத்தையே மாட்டி விட்டுடும். " 


" ஐ நோ. நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லிட்டேன். இப்பயாது சொல்லு உனக்கும் சுடருக்கும் இடைல நடந்தது என்ன? உனக்கு செக்யூரிட்டியா இத கேக்கல. ஒரு ஃப்ரெண்டா கேக்குறேன். " 


"அப்ப நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்ல வர்ற. " 


"கண்டிப்பா. பைரவி உன்ன நம்புறா நல்ல ஃப்ரெண்டுன்னு. அத்தோட நமக்குள்ள சில விசயம் சிங்க் ஆகுது. எனக்கு ராக்கிய தவிர க்ளேஸ் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. அவனும் நான் பேசாமலேயே என்னைப் புரிஞ்சுப்பான். கிட்டத்தட்ட உன்ன மாதிரி. அந்த உரிமைல தான் கேக்குறேன். காஃபி ஷாப்ல என்ன நடந்தது?" 


"பெங்களூர்ல. " என ஆரம்பிக்கும் போது,


"சென்னைல. நீயும் சுடரும் மீட் பண்ணது. அதாவது சுடர கடத்தீட்டு போன அன்னைக்கி காஃபி ஷாப்ல நடந்தத கேட்டேன். இனியும் மறைச்சி பிரயோசனம் இல்ல. சுடர கடைசியா பாத்த ஐ விட்னஸ் நீ தான்னு எனக்கு தெரியும். ஆதாரமும் இருக்கு. " என்றவன் அவனின் ஃபோனில் ஒரு சீசிடிவி பதிவைப் போட்டுக் காட்டினான். 


"கடைக்குள்ள நுழையும் போது உற்சாகமா சந்தோஷமா போயிருக்கா. உள்ள என்ன நடந்ததுன்னு தெரியாது. ஏன்னா கடையோட கேமரா அந்த சில நிமிடம் மட்டும் வேல செய்யல. வெளில வரும் போது சுடக்கிட்ட ரெண்டு விசயம் மிஸ்ஸாகி இருந்தது. ஒன்னு முகத்துல இருந்த சந்தோஷம். இன்னொன்னு கைல இருந்த ஒரு சில பைஃல்ஸ். நாலு கலர்ல பைஃல் வச்சிருந்தா அதுல ஒரு கலர் மிஸ்ஸிங். " 


"இதுக்கு எனக்கு சம்மந்தம்னு இருக்குன்னு சொல் வர்ற. " அப்போதும் தீஷித் எதையும் சொல்ல தயாராக இல்லை.


'முழுக்க நனஞ்ச பின்ன எதுக்கு முக்காடு.' என்பது போல் திரும்பி பார்த்தவன்,


"லண்டன்ல இருந்த நீ அன்னைக்கி சென்னை வந்திருக்க. சுடர் போன அதே காஃபி ஷாப் அது நாள் அதே நேரம். அதுக்கும் எங்கிட்ட சீசிடீவி ஃபுட் ஏஜ் இருக்கு. இப்பயும் உண்மைய மறைக்க நினைக்கியா. "


மௌனம். மௌனம். தீஷித் வாய் திறக்க மாட்டேன் என்றமர்ந்திருந்தான். 


"காதல் இல்லாத ஒரு பொண்ணுக்காக ஒரு கம்பெனிய ஸ்டாட் பண்ணி ஒருத்தன கீழ தள்ளி கொல பண்ணறதுக்கு என்னோட துப்பாக்கியவே எடுத்து ஒளிச்சி வக்க வேண்டிய அவசியம் என்ன?" என மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைச் சுட்டிக் காட்டிக் காட்டமாக கேட்க,


"குற்ற உணர்ச்சி. " என்றான் தீஷித்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...