அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 46 தலைவாழை விருந்து என்பார்களே. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. " அண்ணே, நா இந்த மாறி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ஹோட்டல் சுவத்துல ஓட்டி இருக்குற போஸ்டர்ல தா பாத்திருக்கேன். நேர்ல இப்ப தா பாக்குறேன். " பிரகாஷ். பாத்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த உணவு வகைறாக்களை கண்டு மெய் சிலிர்த்தபடி நிற்க. " கண்ணு வைக்காதடா கேணப்பயளெ. இது எல்லாம் அந்தத் தம்பிக்கி மட்டும் இல்ல. உனக்கும் இது தா சோறு. நேரம் வரும்போது வந்து உக்காந்து உள்ள கொட்டிக்க. ஏன்டி அந்த மீன என்ன பண்ண. " மலர். சமயலைறை அவரின் ராஜ்ஜியம் அல்லவா. அவனின் சொல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும். " வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 200 வகையான உணவைச் சமைத்து பரிமாறினார் பாசமிகு மாமியார்னு. டீவிக்குள்ள ஒருத்தேன் கோர்ட்டு சூட்டுலாம் போட்டுட்டு படம் காட்டுவாப்ல. அப்ப நம்பல. ஆனா. இப்ப... " முட்டைக்கண் விரிய பிரகாஷ். " நம்பணும்னு தோனுதாக்கும். " கௌதம். " ம்..." எனத் தலை தானாக அசைந்தது. அதைச் சம்பத் வந்து நிப்பாட்டினான். " கீ குடுத்த பொம்ம மாறி ஏன்டா தலைய ஆட்டுற. நிப்பாட்டு. " என நிறுத...