முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 45

அத்தியாயம்: 45 



அழுதால் உன் பார்வையும்…


அயந்தால் உன் கால்களும்…


அதிகாலையின் கூடலில்…


சோகம் தீா்க்கும் போதுமா…


நிழல் தேடிடும் ஆண்மையும்...


நிஜம் தேடிடும் பெண்மையும்…


ஒரு போர்வையில் வாழும் இன்பம்.


தெய்வம் தந்த சொந்தமா.



இதைக் காதல் என்று சொல்வதா.


நிழல் காய்ந்து கொள்வதா.


தினம் கொள்ளும் இந்தப் பூமியில்.


நீ வரம் தரும் இடம்.


உனக்கென மட்டும் வாழும் இதயம் அடா.


உயிருள்ள வரை நான் உன் அடிமையடா.


இது பாடல் வரிகள் தான். 


இப்போது ஹரிணியின் மனதில் ஒலிக்கும் வரிகளும் கூட. 


ஒவ்வொரு இரவு முழுவதும் தன்னை மார்பில் சாய்ந்து வேறு ஒருவருக்கு உன்னை விட்டு தரமாட்டேன் என்பது போல் இறுக்கமான அணைத்து, அவனின் மூச்சிக் காற்றை தன் கழுத்தில் உணர்ந்து உறங்கி விடிந்து எழுந்து செல்லும்போது, இந்த வரிகளைத் தான் மனம் பாடியது.



பிறை தேடும் இரவிலே உயிரே.


எதைத் தேடி அலைகிறாய்.


கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே.


அன்பே நீ வா.


கணவன் மனைவி என்பது உன்னதமான உறவு. ஒருவருக்காக ஒருவர். ஒருவரை ஒருவர் தாங்கி அணைக்கின்ற அன்பு. இரண்டறக் கலந்த வாழ்வு என்பதெல்லாம் கணவன் மனைவி என்னும் உறவிற்கே உரித்தானவை. எத்தனை பிரச்சினைகள் வாக்குவாதங்கள் வந்தாலும் அது மாயமாய் மறைந்து போக வைக்கும் திறமை இந்த உறவுக்கு உள்ளது.


நாம் அனைவரும் சிறு வயதில் ரூபீஸ்க் க்யூப் (rubik's cube) என்ற ஒரு விளையாட்டுப் பொருளை வீட்டில் வாங்கி வைத்திருப்போம். மஞ்சள். வெள்ளை. சிவப்பு. பச்சை. ஊதா. ஆரஞ்ச் என ஆறு வண்ணங்களைக் கொண்ட ஒரு சதுர பெட்டி அது. இது ஒரு puzzle. அதாவது புதிர். வண்ணங்களைக் கலைத்து அதை மீண்டும் அடுக்க வேண்டும். அனைவரும் இதை வாங்கி ஒரு முறையேனும் முயற்சி செய்திருப்போம், புதிரைப் போக்க. ஆனால் அது அனைவராலும் முடியாது.


பெரியவர்கள் அதைத் தீர்க்க நமக்கு உதவி செய்யலாம். ஆனாலும் பலரால் அதைத் தீர்க்க முடியாது. வாங்கிட்டோம், அது ஒரு ஓரமா கிடைக்கட்டும் என மூளையில் இன்றும் அது கிடைக்கும். பலர் அதைத் தீர்க்கும் பொறுமை இல்லாமல் அதை உடைத்து சரியாக இருப்பது போல் அடுக்கி விடுவார். இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்த தீர்க்கப் படாத புதிர் தான் நமக்குக் கிடைக்கும் லைஃப் பார்ட்னர்.


ஒரு வேளை நிதானமாக அதை solve செய்வது விட்டால். அதாவது நம் இணையை நன்கு புரிந்து கொண்டு உடைக்காமல், இருந்தா இருந்துட்டு போட்டும்னு ஓரம் சேர்க்காமல் வாழ்ந்தால், வாழ்க்கை சொர்க்கம்.


அந்தச் சொர்க்கத்தில் தான் ஹரிணி இருக்கிறாள். ரிஷி தரன் என்ற unsolve puzzle ஐ solve செய்து விட்டாளே. இல்லை ரிஷியால் சால்வ் செய்யப்பட்டுள்ளது. அவளின் மீசை வைத்த பிள்ளையை முழுதாக அறிந்தை போல் உணர்ந்தாள். இன்றும் பல ஆண்களின் மனம் அவர்களின் பெற்றவர்களுக்கும் கட்டியவளுக்கும் மட்டுமே புரியும். பிள்ளைகள் உடன் பிறந்தவர்கள் கூட இரண்டாம் பட்சம் தான். ரிஷியும் அப்படி தான். அவனின் தந்தைக்கு பின் மனம் திறந்து ஹரிணியுடன் பேசி உள்ளான். அது மகிழ்ச்சியான செய்தி அல்லவா.


ரிஷி தன் மேல் கொண்ட காதலை பல மடங்காக அவனுக்குத் திருப்பி தர வேண்டும். எப்படி தருவது என்ற சிந்தனையுடனேயே இந்த ஒரு வாரத்தை ஜிம் ரூமில் கழித்தாள். அவனின் புகைப்படங்களுடன் வாழ்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அவன் ஃபோனை எடுக்காத போதும் கௌதம் மூலம் அறிந்து கொள்வாள், அவன் என்ன செய்கிறான் என்பதை.


இப்போது அவனின் காயம் பட்ட மனதை மருந்திட்டு ஆற்ற வேண்டும். எப்படி,


" ஒரு ஐடியாவும் வர மாட்டேங்கிது. ச்ச... பாவா உன்ன நா கரெக்ட் பண்ண எதாவது ஐடியா குடேன். " என்றவளை முறைத்தபடியே குளியல் அறைக்குள் நுழைந்தான்.


" நல்லா ஐடியா குடுத்தா அதுக்கு சன்மானம் கிடைக்கும். " என்ற போதும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.


சவரை திறந்து பல மணி நேரம் நின்றிருப்பான். நீர் அவனுள்ளே கொதித்துக்கிடந்த மனதை ஆற்றியதோடு மட்டுமல்லாது, பிறரின் உயிரைக் கொன்று உயிர் வாழும் ஒரு அரக்கனின் வதத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியதில் பெருமை கொண்டது.


'நீராடிட்டு இருக்கான். வருவான். வந்ததும் அவன்ட்ட கேட்கணும். ' எனக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள்.


' இவா கொஸ்டீன் பேப்பருக்கு பிறந்தவ போல. எப்ப பாத்தாலும் எதையாது கேக்கணும்னே சுத்துறா. ச்ச… இப்ப உனக்கு என்னம்மா தெரியணும். '


" அது… அந்தப் போஸ் எப்படி இறந்தான்னு. அப்றம் அங்கருக்குற குழந்தைங்க இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியணும். அப்றம் பார்கவியோட இதயம் இப்ப யாருகிட்ட இருக்குன்னு தெரியணும். அப்றம். "


'போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே.' என நாம் புலம்பினாலும் அவளின் காதுகளுக்குக் கேட்காது. நீர் விழும் சத்தம் நின்றதும் வேகமாகச் சென்று கதவின் முன் நின்று கொண்டாள்.


" ஓ... சிட். என்ன ஹரிணி இது. ஏ இங்க வந்து நிக்கிற. " என்றவன் கதவைத் திறந்ததும் அவளின் முகம் பார்த்துப் பயந்து விட்டான் போலும். நெஞ்சை நீவி விட்டபடி அவளை விலக்கித் தன் உடையை எடுக்கச் சென்றவனிடம்,


"பதறாத பாவா. நீ குளிக்கிறத ஒன்னும் நா ஓட்ட வழியா எட்டில்லாம் பாத்திடல. " எனக் கண்சிமிட்டி சொல்ல வந்த புன்னகையை உதட்டிலேயே புதைத்து விட்டுத் தன் ஈர தலையைத் துவட்டினான். தான் துவட்டுவதாகக் கையில் வேறொரு துண்டுடன் வந்தாள் ஹரிணி.


" உக்காரு பாவா. " என்க.


"ஹரிணி என்னதிது. எதுக்கு நீ இப்படி வித்தியாசமா நடந்துக்கிற. "


" நீ குளிச்சிட்டு வர்ற. உனக்கு நா தலை துவட்டி விடுறேன். இதுல என்ன வித்தியாசத்த பாத்துட்ட நீ. வைஃப் ஹஸ்பென்ட்டுக்கு செய்யுறது தான. உக்காரு. " என கரம்பற்றி அமரவைத்ததோடு மட்டுமல்லாது தலையைத் துவட்டி விட்டாள். தலையை மட்டுமல்லாது அவளின் கரம் அவனின் முகத்திற்கு இறங்கி அவனின் சேவ் செய்த கன்னத்தைத் தடவ,


"ஹரிணி தலை இங்க இருக்கு. " என அவளின் கரத்தை எடுத்து விட்டு. " போதும். " என்று எழுந்து சென்று விட்டான்.


"பாவா அடுத்து க்ளின் சேவ் பண்ணாத. நல்லாவே இல்ல.. உன்ன மெழு மெழுன்னு பாக்கவே எனக்குப் பிடிக்கல. நா கை வச்சா உன்னோட தாடி அங்கங்க என்னோட உள்ளங்கைல குத்தணும். அது தா எனக்குப் பிடிக்கும். அதுக்காகத் தாடிலாம் வளக்க கூடாது. கொஞ்சமா மட்டும் முடி இருக்குற மாறிச் சேவ் பண்ணு பாவா. " என ரசித்து அவனின் கன்னம் வருடிச் செல்ல,


அவளைக் கட்டிலில் அமர்த்தியவன். " உன்னோட இஷ்டத்துக்கெல்லாம் என்னால இருக்க முடியாது. " என்றான்.


"ஓ… அப்ப மாட்டியா பாவா நீ. நா சைட் அடிக்கத் தா நீ எனக்கு ஹஸ்பென்டா இருக்க. சோ எனக்குப் பிடிச்ச மாறித் தா நீ இருக்கணும். அப்பதா என்னோட கடைக்கண் பார்வ உனக்குக் கிடைக்கும்.‌" எனக் கண்ணடிக்க, அவளின் விழிகளை உற்று பார்த்தான். அதில் தனக்கான தேடல் தனியாகத் தெரிந்தது. அவளின் மீதிருந்து வந்த இதமான வாசமும், கோலிக்குண்டு என உருலும் கண்களும், தேன் சிந்தும் இதழும், அவனைக் கிறங்கடிக்க, கரத்தில் அவளின் கன்னங்களை ஏந்தினான், புன்னகை பூத்திருக்கும் அதரங்கள் முத்தமிட தூண்டியதால்.


அவள்மேல் கோபம் என்றெல்லாம் இல்லை. அது அவளின் மேல் வரவும் செய்யாது. சிறு வருத்தம் மட்டுமே. அதுவும் இப்போது அவளின் விழியில் கரைந்து செல்வதை உணர்ந்தவன், ' டேய். என்னடா பண்ணப்போற. நீ அவா மேல கோபமா இருக்குறதா அவா நினைச்சிட்டு இருக்கா. அத அப்படியே மெயின்டெய்ன் பண்ணாத்தா உன்ன கவனிப்பா. இல்லனா மறுபடியும் கௌதம் கௌதமுன் அவெ பின்னாடியே சுத்தா ஆரம்பிச்சுடுவா. சோ… நீ கோபமாவே இரு. அப்பத் தா உன்ன சமாதானம் பண்றேன்னு லூசுத்தனமா எதையாது செஞ்சிட்டு உன்னையே சுத்தி சுத்தி வருவா. அவசரப்பட்டுக் கவுந்துட்டேன்னா உன்னோட இமெஜ் என்ன ஆறது. ' என அவனின் மனம் திட்டம் போட்டுக் கொடுக்க, சட்டென விலகிச் சென்றான் வெளியே.


'என்ன!. கிஸ் பண்ற மாறிப் பக்கத்துல வந்தான். திடீர்னு விட்டுடு போறான். ஒரு வேள நா போட்டிருக்குற சென்ட் வாசன அவனுக்குப் பிடிக்கலையோ. ' எனத் தன் சோல்டரை நுகர, நல்ல இதமான ரிஷிக்கி பிடித்த மல்லிகையின் மணம் வந்தது.


அறையை விட்டு வெளியே வந்தவன் உணவு உண்ண அமர, அப்போதும் பரிமாறுகிறேன் என்ற பெயரில் அவனின் தட்டை ஹரிணி நிரப்ப, அவன் ஹரிணி அவாய்ட் செய்து விட்டுச் சென்றான். அதைக் கண்ட கௌதம்,


"என்ன டார்லிங், பொண்டாட்டி நீ பரிமாறுற… அத முழுசா சாப்பிடாம தட்டுல மீதி வச்சிட்டு எந்திரிச்சி போறான்னா என்ன அர்த்தம். ம்... " கௌதம் அவளின் முன் வந்தமர்ந்தான்.


" என்னண்ணே அர்த்தம். " என்றபடி பிரகாஷும் கௌதமின் அருகில் அமர்ந்தான்.


" உங்கண்ணிக்கும் உங்கண்ணுக்கும் சண்டன்னு தான அர்த்தம். " கௌதம் சொல்ல, 


'ஆமாமாம்மா. சண்டதா. சண்டதா. ' எனத் தலையை உருட்டினான் பிரகாஷ்.


"டேய் உங்களுக்கெல்லாம வேற வேலையே கிடையாதா. எவெங்குடும்பத்துக்குள்ள எப்ப குழப்பம் வரும், எப்ப குண்டு வைக்கலாமன்னு பாத்திட்டே திரிவீங்களாடா. போங்க டா அங்கிட்டு. ராணிம்மா என்னம்மா சண்ட உங்களுக்குள்ள. " சம்பத். இதுக்கு அவனுங்களே மேல் என்பது‌போல் ஒரு பார்வை பார்த்தாள் ஹரிணி.


'என்ன வீட்டுல அத்தன பேரு இருக்காணுங்க. இப்ப மூணு பேர் தா‌ன் ஆஜர் ஆகிருக்கானுங்க. மீதி எப்ப வருவானுங்க. நம்மல அவமானப்படுத்தணும்னா குடும்பமே குட்டி யானைல ஏறி வந்திடுமே. இதோ வந்துட்டானுங்க. ' என ஹரிணி நினைத்தது போல் பவித்ரா, விக்னேஷ், வைசு அப்றம் பவதா என இளைய தலைமுறையினர் வந்தனர்.


'போச்சி இன்னைக்கி இவனுங்களுக்கு நாந்தா என்டர்டெயின்மென்ட்டா. என்னடா பொழுது நல்லபடியா விடிஞ்சிருச்சேன்னு பாத்தேன். அதா வந்துட்டானுங்களே. ' என நொந்து கொண்டவள் தலையில் கை வைக்க. 


"டார்லிங் நாங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள தலைல கை வச்சா எப்படி. " கௌதம்.


"கௌதம் நானே டென்ஷனா இருக்கேன். போய்டு. " ஹரிணி.


" டென்ஷனா. அப்பச் சண்ட போட்டிருக்கான். என்ன பிரச்சின. சொல்லு தீத்திடலாம். " 


" எல்லாமே பிரச்சன தா. போதுமா. கிளம்பு சாமி. உன்னோட கூட்டத்த கூட்டீட்டு. "


"நீ பண்றதெல்லாம் பாத்தா இல்லாத பிரச்சனய நாங்களே உண்டாக்குற மாறில்ல இருக்கு. " பிரகாஷ்.


"அப்படில்லாம் இருக்காது டா. ஆல்ரெடி உங்கண்ணே மினிஸ்டர் உதவி இல்லாம பிரச்சனைய கொடியசைச்சி ஓட விட்டுருப்பான். என்ன ஹரிணி நா சொன்னது. " என்றவனை அவள் முறைக்க.


அவளுக்கும் ரிஷிக்கும் இடையை நடந்த எதையுமே அவள் கௌதமிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. சண்டை என்று மட்டுமே சொல்வாள். ஏன் எதற்கென்று விளக்கமாகச் சொன்னது கிடையாது. கௌதமும் அழுத்திக் கேட்டதும் கிடையாது.


"உன்னோட பிரச்சினைய தீக்கணும்னா ஒரே ஒரு கையேழுத்து போடு. வெட்டி விட்டுட்டு அடுத்தால பாக்கலாம். மனோகர் இஸ் வெய்டிங். " என்றவனின் தலையில் தட்டினாள் இந்து கோபமாக விழிகளை உருட்டியபடி.


" உங்களுக்கு இத தவிர வேற எதுவும் பேசத் தெரியாதா. " எனச் சடைத்துக் கொள்ள.


" என்னோட டார்லிங்குக்கு நல்ல எதிர்காலம் அமையணும். அது தா எனக்கு முக்கியம். வேற எதுவுமே கிடையாது. " என அவளின் கரம் பற்றிச் செண்டிமெண்ட்டாக பேச,


" மாப்ள… இதுல லீகல் டாக்குமெண்ட்ஸ் இருக்கு. எதுக்கும் நல்லா யோசிக்க. " என்றபடி ரிஷி வந்தான். வந்தவன் கண்களுக்கு முதலில் பட்டது கௌதம் ஹரிணியின் கரத்தைப் பிடித்திருப்பது தான். அவனின் பார்வையை உணர்ந்தாலும் 'உனக்காக நாங்க எங்கள மாத்திக்க முடியாது.' என்பது போல் இருவருமே அமர்ந்திருந்தனர்.


" இப்பவும் நேரம் இருக்கு. பவி கூட நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவெடு. " என ஒரு ஃபைலை சம்பத்திடம் நீட்டினான் ரிஷி. அவனின் பார்வை இப்போது பவித்ராவிடம் நிலை கொண்டிருந்தது. 


அன்று கை நீட்டி அடித்ததால் அப்பா மகள் என இருவரும் ரிஷியிடம் பேசுவதில்லை. அதனால் அவளின் முகபாவனை வைத்து அவளின் எண்ணங்களைப் படிக்க முயன்றான்.


" ஆல்ரெடி முடிவு பண்ணியாச்சி மச்சான். உம்முன்னாடி தான இருக்கா நீயே கேட்டுக்கோ. " எனத் தன் மனைவியைப் பார்க்க,


" உங்க முடிவு தா என்னோடதும். நா இதுக்கு முழு மனசோட சம்மதிக்கிறேன். " என்றாள் பவி.


"என்னங்கப்பா மொட்டக்கட்டையா பேசுறீங்க. கொஞ்சம் தெளிவாத்தா பேசுங்களே. " பிரகாஷ்


"என்ன விசயம் பவி. " கௌதம்.


" அது ஒன்னுமில்ல கௌதம். ஹரிணி அந்தக் காப்பகத்துல இருந்து தத்தெடுக்க நினைச்சாளே ஒரு பையன். ஹர்ஷா. அவன சம்பத்தும் பவித்ராவும் தத்தெடுத்துக்க முடிவு பண்ணிருக்காங்க. " என்றான் விக்னேஷ்.‌


"நிஜமாவாண்ணா. " என ஹரிணி சம்பத்தின் முகம் பார்க்க, கௌதம் தன் தங்கையின் முகம் பார்த்தான். வேண்டா வெறுப்பாக இதைச் செய்யக் கூடாது அல்லவா. அதான் கவனித்தான். ஆனால் அதில் தெரிந்த தெளிவு சொல்லியது, அவள் முழு மனதுடன் சம்மதித்திருக்கிறாள் என்று.


" ஆமா ராணிம்மா. ஹர்ஷாவ எங்க முதல் குழந்தையா தத்தெடுத்துக்க முடிவு பண்ணிருக்கோம். " என மனைவியை பார்த்துப் புன்னகைத்தான்.


" Congratulations பவி. You made the right decision. " என அணைத்துக் கொண்டாள் ஹரிணி.


இனி தனக்கு குழந்தையே பிறக்காது என்ற எண்ணத்தில் அவள் இதற்குச் சம்மதிக்கவில்லை. தன்னை அம்மா என்று ஒரு ஜீவன் அழைக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் சம்பத்தின் கோரிக்கையை ஏற்றாள்.


கதிரேசனிடம் ஹரிணி அந்த சிறுவனைத் தத்தெடுப்பது பற்றிக் கேட்டதுமே ரிஷிக்குத் தகவல் வந்து விட்டது. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அச்சிறுவனை முதலில் தங்களின் குழந்தையாகத் தத்தெடுக்க சட்ட ரீதியான முயற்சியில் இறங்க, குறுக்க புகுந்தான் சம்பத். பவித்ராவிடம் அச்சிறுவனை பற்றிச் சொல்லி பார்க்க அழைத்துச் சென்றான். பார்த்த நொடியே சம்மதித்து விட்டாள் பவி.


" ஆமா நீ எங்க அவன பாத்த. " என நம் கொஸ்டீன் நாயகி கேட்க.


" அந்தக் காப்பகத்துல இருந்த எல்லா குழந்தையும் சென்னைல இப்ப கவர்மெண்ட்டுக்கு சொந்தமான இடத்துக்கு மாத்தியாச்சி. இனி அவங்கள பாத்துக்க சில சமூக ஆர்வலர்களோட ஒரு காப்பகத்தையும் ஏற்பாடு பண்ணியாச்சி. " விக்னேஷ்.


" நாந்தா பவிய அங்க கூட்டீட்டு போனே ராணிம்மா. ரொம்ப அமைதியான பையன். எங்க ரெண்டு பேருக்குமே ஒரு ஃபீல் வந்தது. அதா முடிவு பண்ணிட்டோம். பெருமாள் மாமாட்டா கூட இத பத்தி பேசிட்டோம். அவருக்கு ரொம்ப சந்தோஷம். " என்றான் சம்பத். அவனின் முகத்தில் தன்னை அப்பா என அழைக்க ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி இருந்தது.


" ரொம்ப சந்தோஷம் பவி. குழந்தங்கிறது என்னைக்குமே நமக்குக் கிடைக்காதான்னு ஏங்க வைக்கிற ஒரு வரம் தா. எப்ப கிடைக்கும்னு சொல்லிட முடியாது. இன்னைக்கும் நிறைய பேருக்கு அந்த வரம் லேட்டா தா கிடைக்கிது. இப்ப உனக்கும் கிடைக்கப் போது. கூடிய சீக்கிரமே உனக்குள்ளையும் கிடைக்கும். " எனப் பவித்ராவின் வயிற்றில் கை வைத்து வைசு சொல்ல, எதோ தெய்வா வாக்கு கேட்டது போல் கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள் பவி.


"ஸாரி வைசுக்கா நா உங்கள கயப்படுத்துற மாறிப் பேசிட்டேன். ஸாரி. " என்க, அங்கு ஒரு பாசப் பரிமாற்றம் நடந்தது.


தனக்காகத் தன் கணவன் ஹர்ஷாவை தத்தெடுக்க முயன்றதில் ஹரிணியின் மனம் சர்க்கரைப்பாகைப் போல் இனித்தது. அதோ பாகை தன் கண்களுக்குக் கொண்டு வந்து தன் கணவனைப் பார்க்க, அவன் அவ்விடம் இல்லை. தன் வேலை முடிந்தது என்பது போல் கவியரசனை அழைத்துக் கொண்டு தன் புல்லெட் பைக்கில் சென்று விட்டான்.


செல்லும் அவனையே வைத்தகண் அசைக்காது பார்க்க,


" டார்லிங். நீ அவெ மேல கோபமா இருக்க. நீயே அத மறந்துட்டு சமாதானக் கொடிய பார்வைல பறக்க விடுற. " கௌதம்.


" நா அந்த வெள்ள கொடிய ஒரு வாரமா பறக்க விட்டுட்டு தா இருக்கேன். ஆனா அவெ அதுமேல கலர் சாயத்த பூசி விட்டுச் சிவப்பா மாத்தி சண்டைக்கி நிக்கிறான்‌. என்ன பண்ண. "


" சண்டைக்கா… அவனா... உங்கிட்டையா… "


"ம்... எங்கிட்ட தா. ஒரு வாரமாச்சி எங்கிட்ட நல்லா பேசி. " என்றவளை ஏற இறங்க பார்த்தாள்.


" அப்ப உங்கிட்ட பேசவே இல்ல. " 


" அப்படின்னு சொல்லிட முடியாது. பேசுவான். அக்கறையா பாத்துப்பான். " 


'அப்றம் என்னம்மா வேணும் உனக்கு. ' என்பது போல் பார்த்தான்.


" ஐய்யோ கௌதம் உனக்குப் புரியல. நா என்ன சொல்ல வர்றேன்னா. அவெ என்ன கிண்டல் பண்ணி சீண்டுற மாறிப் பேசுவான். இப்ப அப்படி என்ன கேலி பண்றதே இல்ல. ஹரிணின்னு கூப்பிடுறான். கிட்ன்னு கூப்பிட மாட்டேங்கிறான்." எனச் சோகமா சொல்ல, சில நொடிகள் அமைதியாக இருந்தவள், பின்


" எம்மேல கோபம் இருக்க போய்த்தான என்ன பேர் சொல்லிக் கூப்பிடுறான். இல்லன்னா கிட் ன்னு தான கூப்பிடுவான். ரொம்ப கோபமா இருக்கான் போல. எம்மேல." என வருந்திச் சொல்ல,


"நம்புற மாறி இல்லையே‌. "


" எது. "


" கோபமா இருக்குறது. அவெ உங்கூட சண்ட போட்டான்னு சொல்லு. ஓகே… ஆனா கோபமா இருக்க மாட்டான். அதுவும் உம்மேல. வரவே வராது. " 


"இல்ல எனக்கு அப்படி தா தெரியுது. என்ன பண்ணி அத குறைக்க. ம்... ஐடியா குடு. "


" அட அவெ உங்கிட்ட நடிக்கிறான் டார்லிங். " என்றவனை முறைத்தாள்.


" சரி நீ நம்ப மாட்ட. அவன கரெக்ட் பண்ணுறதுக்கான வழி யோசிச்சி நீயே செய். "


" என்ன வழி அது. " என்றவளை ஒரு பார்வை பார்த்துபடி சென்றான் கௌதம்.


' இவளுக்கு எல்லாத்தையும் நாமலேவா சொல்லித் தர முடியும். புருஷ கரெக்ட் பண்ண பொண்டாட்டிக்கி தெரியலன்னா எப்படி. இதுக்குன்னு டியூசன்னா போய்க் கத்துக்கிட முடியும்.‌' என்பது தான் அந்தப் பார்வைக்கு அர்த்தம்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 44


விழி 46


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...