அத்தியாயம்: 46
தலைவாழை விருந்து என்பார்களே. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
" அண்ணே, நா இந்த மாறி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ஹோட்டல் சுவத்துல ஓட்டி இருக்குற போஸ்டர்ல தா பாத்திருக்கேன். நேர்ல இப்ப தா பாக்குறேன். " பிரகாஷ். பாத்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த உணவு வகைறாக்களை கண்டு மெய் சிலிர்த்தபடி நிற்க.
" கண்ணு வைக்காதடா கேணப்பயளெ. இது எல்லாம் அந்தத் தம்பிக்கி மட்டும் இல்ல. உனக்கும் இது தா சோறு. நேரம் வரும்போது வந்து உக்காந்து உள்ள கொட்டிக்க. ஏன்டி அந்த மீன என்ன பண்ண. " மலர்.
சமயலைறை அவரின் ராஜ்ஜியம் அல்லவா. அவனின் சொல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும்.
" வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 200 வகையான உணவைச் சமைத்து பரிமாறினார் பாசமிகு மாமியார்னு. டீவிக்குள்ள ஒருத்தேன் கோர்ட்டு சூட்டுலாம் போட்டுட்டு படம் காட்டுவாப்ல. அப்ப நம்பல. ஆனா. இப்ப... " முட்டைக்கண் விரிய பிரகாஷ்.
" நம்பணும்னு தோனுதாக்கும். " கௌதம்.
" ம்..." எனத் தலை தானாக அசைந்தது. அதைச் சம்பத் வந்து நிப்பாட்டினான்.
" கீ குடுத்த பொம்ம மாறி ஏன்டா தலைய ஆட்டுற. நிப்பாட்டு. " என நிறுத்த அதையும் மீறி ஆடியது தலை.
"என்னாச்சி இவனுக்கு. " எனக் கேட்க, கௌதம் வாயைத் திறக்கும் முன்.
"மச்சான் ஸார், வி..ருந்து… " என சிறுவன்போல் இரு கைகளையும் விரித்துச் சாப்பாட்டு மேஜை முன் பவ்யமாகத் தலை குனிந்தான்.
"ஆமா விருந்து. அதா நேத்துல இருந்து நடக்குதே. இப்ப என்ன அதுக்கு. " சம்பத்.
"எல்லாம் நமக்குத் தா மச்சான் ஸார். இன்னைக்கி வரைக்கும் இது தொடருது. ம்… கறி விருந்து. நல்லா சாப்பிடலாம். " என எச்சில் விழுங்க,
"ம்… நல்ல சாப்பாடு தா. நாங்க சாப்பிடுவோம். "
" ஆனா நீ தா சாப்பிட கூடாதே. " கௌதம்.
" நானா. ஏ. "
"நீ விரதம்னு ஜெனி சொன்னாளே. " சம்பத்.
"எது விரதமா!!. "
"ம்… உன்னோட உடன்பிறப்புக்கள் குறிப்பா நானும் என்னோட குடும்பமும் நல்லா இருக்கணும்னு சபரி மலைக்கி சாஷ்டாங்கமாக மால போட்டு நடந்தே போகப்போறதா நீ வேண்டிக்கிட்டியே. மறந்துட்டியா. " கௌதம்.
"இது எப்ப. "
" டேய், நேத்து சாயங்காலம் தான ஜெனி உனக்கு இந்த மாலைய வாங்கிப் போட்டா. அதுவும் கோயில்ல வச்சி. " சம்பத் அவனின் கழுத்தில் இருந்த ஒற்றை கயிற்றைக் காட்ட,
"இந்த மாலைய போட்டுட்டு தா சபரி மலைக்கி போவாங்க. அங்க பாரு மத்தவங்க எல்லாம் கறியும் மீனுமா சமைக்கும்போது. நீ மால போட்டிருக்கங்கிற ஒரே காரணத்துக்காகச் சமக்கட்டு பக்கமே போகாம கொல்லைப்புறத்துல உக்காந்திருக்கா உன்னோட லவ்வபுல் வைஃப்ப. " எனக் குழந்தைகளுடன் விளையாட்டிக் கொண்டிருந்த ஜெனியை காட்ட, பிரகாஷ் அரண்டு விட்டான்.
‘உண்மையிலயே நம்மல கூட்டீட்டு போய்ச் சபரி மலைக்கி போக மால தா போட்டு விட்டுட்டாளோ’ என நினைத்த அவனின் முழியை பார்த்துச் சம்பத் மட்டுமல்லாது அப்போது தான் வீட்டிற்குள் வந்த விக்னேஷும் நந்துவும் சேர்ந்து சிரித்த சிரிப்பே சொல்லியது தன்னை கேலி செய்கிறார்கள் என்று.
"எல்லாம் பொய்யா. ச்ச நாங்கூட நிசமனு நம்பி ஒரு நிமிஷம் பயந்துட்டேன். " பிரகாஷ் நிம்மதி பெருமூச்சு விட,
"என்ன டா சில்வண்டு நீ இவரு கூட வர்ற. என்ன காக்கி சட்டைக்கி பயந்து சரண்டர் ஆகிட்ட போல. " கௌதம் நந்துவை கேட்க,
" சரணனடைய நா ஒன்னும் பயங்கரவாதியும் இல்ல. என்ன மிரட்டுற அளவுக்கு இவரு ஒன்னும் கமெண்டரும் இல்ல. ஜஸ்ட் போலிஸ் காரென்." எனச் சட்டை காலரை தூக்கி விட்டுப் பேச, ‘ நீ சட்டையத்தான தூக்குவ. நா உன்னையே தூக்குவே பாரு’ என்பது போல் நந்துவை விக்னேஷ் தலைக்கு மேல் தூக்க.
"போலிஸ் எங்கள் நண்பன்னு சொல்ல வந்தேங்கையா. அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டுத் தூக்கிட்டிங்கைய்யா. " எனப் பணிவுடன் கேட்ட நந்துவை சிரிப்புடன் விக்னேஷ் இறக்கி விட்டான்.
" கொஞ்சம் உயரம் கம்மிங்கிறதுக்காக என்ன கர்லாக்கட்டையா நினைச்சி தலைக்கிமேல சுத்தி அவரு ஜீம் பாடிய ஏத்த பாக்குறாரு. இதெல்லாம் தப்புன்னு உங்க ஹஸ்பென்ட் கிட்ட சொல்லுங்க. " என ரோசமாய் நடந்து செல்லப் பார்க்க,
"அதென்னா உங்க ஹஸ்பென்ட். நீ தா எல்லாத்தையும் மொற வச்சி கூப்பிடுற ஆளாச்சே. சொல்லு விக்னேஷ எப்படி கூப்பிடணும்." கௌதம்
" சித்தான்னு கூப்பிடு நந்து. அப்பத்தா சரியா இருக்கும். ஏன்னா உங்கம்மா பவதாவ அன்னஃபிஷியலா தத்தெடுத்திருக்கா. உன்னோட மாமனுங்களும் தா. சோ எனக்கு அண்ணா. உனக்கு விக்னேஷ் சித்தப்பா. பவதா சித்தி. எங்க கூப்பிடு கேட்போம்." இந்து,
"யாரு எப்படின்னாலும் கூட்டு போங்க. எனக்கு என்ன வந்துச்சி. ". சோகமாக நடந்து சென்றான்.
‘ஏன்டா…’ என அனைவருமே கேட்டனர்.
"பின்ன என்ன மாமா. ஒரு அழகான பொண்ண சித்தின்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கும் சொல்லுங்க. நம்ம ஜெனி அக்கா மாறி அக்கான்னு கூப்பிடச் சொன்னா கூட நாளைக்கி அவங்களுக்கு பிறக்கப்போற பொண்ணு என்ன மச்சான்னோ இல்ல மாமான்னோ கூப்பிடும். நானும் நமக்கு மொறப் பொண்ணு கிடைக்கும்னு சந்தோஷப் பட முடியும். அது விட்டுட்டு சித்தின்னு கூப்பிட்டா. அது என்ன அண்ணானுல கூப்பிடும். அது கேக்கவே நாராசமா இருக்கும். என்ன சொல்றீங்க கௌதம் மாமா. என்னோட கவல சரி தான. சித்தப்பு சரி யா. " எனச் சம்பத்தை பார்த்துக் கேட்க, அவன் சிரித்தான்.
" உங்கவல எனக்குப் புரியுது டா. ஆனா உனக்கு நாலு மாமானுங்க இருக்காங்களே. " சம்பத்.
" சுத்த வேஸ்ட்டு சித்தப்பா எல்லாரும். இந்தப் பழைய காலத்து ப்ளாக் அண்டு வெய்ட் படத்துல வர்ற மாறிக் கொள்ளி போட ஆம்பளப்பிள்ள வேணும்னு நினைச்சி வரிசையா பசங்களையா பெத்துக்கிறாங்க. இப்ப எனக்கு இருக்கிருக்குற ஒரு நம்பிக்க என்னோட பம்கின் தா. " என்றவனை தலையில் தட்டி,
" மரியாதையா ஹரிணி கண்ணுல மாட்டுறதுக்கு முன்னாடி ஓடீடு. " எனக் கௌதம் துரத்தப் பார்க்க,
"முடியாது. "
" ஏன்டா. " சம்பத்.
"சோறு முக்கியம் சித்தப்பா. சாப்பாட்டு நேரம் இல்லை. " எனச் சமையலறையை எட்டி பார்த்து வாசம் பிடித்தான்.
" தட்டுல வச்சிட்டு கூப்பிடுவோம். அப்ப வா. இப்ப இடத்த காலி பண்ணு. " பிரகாஷ்.
" காலி பண்ண வேண்டியது நா இல்ல நீங்கத் தா. நீங்கப் பிடிச்சிட்டு வந்த ஒத்த கோழிக்கி ரெண்டு கால் தா இருந்ததாம். அதுனால அந்த ரெண்டு காலையும் கலட்டி ஒரு தட்டுல தனியா வச்சி சைட் டிஷ்ஷா பத்து சோத்துப் பருக்கையையும் ஒரு சொட்டு ரசமும் ஊத்தி, என்ஜாய் யூவர் லன்ச்ன்னு தரணும்னு ஜெனி அக்கா எங்கிட்ட சொல்லி விட்டாங்க. " என நந்து சமயலறை சென்றான்.
" இந்தக் கால் முளைக்காத காளான யாருடா சமயக்கட்டு பக்கம் விட்டது. " எனச் சமயலறை நுழைந்த நந்துவை கவியரசன் தூக்கி கொண்டு வந்தார்.
"விடுறதுக்கு நா என்ன பட்டமா தாத்தா. மனுஷெ. எங்க நினைக்கிறேனோ அங்கெல்லாம் போய்ட்டு ரிட்டன் வரக் கூடிய பவர் ஸ்டார்." நந்து.
"டேய் பட்டப் பேர்லாம் அடுத்தவங்க தான்டா தரணும். நமக்கு நாமலே வச்சிக்க கூடாது. அதுமட்டுமல்ல உங்க பவதா சித்தி பக்கத்துல போய்டாத. அது நல்லா சமைக்கும். உன்ன ஒரு டைப் ஆஃப் ஈமூ கோழின்னு நினைச்சி எண்ணைக்குள்ள பொறிச்சி எடுத்துப் போறா. " கௌதம்.
" ஆல்ரெடி பொரிஞ்ச மாறித் தா இருக்கான். இதுல இன்னொருக்க போட்டா தீஞ்சிட மாட்டான். " பிரகாஷ் நந்துவை வார உடன் கௌதமும் என இருவரும் சேர்ந்து ஒரு சிறு பையனை வாட்டி எடுத்தனர்.
' ஏங்க மனசாட்சி இல்லையாங்க உங்களுக்கு. ஏறியுற தீக்குச்சி மாறி உடம்ப வச்சிட்டு அவெ படுத்துற பாடு எங்களுக்குத் தா தெரியும். ச்ச. ' பிரகாஷ் மைண்ட் வாய்ஸ்.
உண்மை தான் கௌதமும் பிரகாஷும் எத்தனை பந்து போட்டாலும் சளைக்காமல் அடித்து ஆடு ஆட்ட நாயகன் நான் என்பது போல் போடும் பந்துகளைத் தூக்கி அடித்தான். அது எந்தப் பக்கம் விழுந்தா எனக்கென்ன என்பது போல்.
ஒரு வழியாக மதிய விருந்து முடிய, விக்னேஷ் ‘போதும் ப்பா எனக்கு. இனி என்னோட வயித்துல இடமே இல்ல. இன்னும் ஒரு நாள் இங்க இருந்தேன்னா எனக்கு இருக்குற சிஸ் பேக் மறைஞ்சி ஒரே பேக்கா மாறித் தொப்பையாகிடும்’ என எழுந்து நின்றான்.
"என்ன அதுக்குள்ள முடிச்சிட்டா எப்படி. இன்னும் ராத்திரி பொழுதுன்னு ஒன்னு இருக்குல்ல. அதுக்கு என்ன வேணும்னு மெனு சொல்லுங்க. " என வெய்ட்ர் போல் கையில் பேப்பரும் கையுமாக வந்து நின்றான் பிரகாஷ்.
" ஐய்யோ போதும் ண்ணா. என்னால இதுக்கு மேல முடியாது. நாங்க நைட் கிளம்புறோம். காலைல இவரு டியூட்டிக்கு போணும். " பவதா.
"அட அதுக்குள்ள கிளம்புனா எப்படிம்மா. இன்னும் ரெண்டு நாளு இருக்கலாம்ல. " என்ற டயலாக்குடன் வீட்டார் வர,
'இத சொல்லிச் சொல்லியே நம்மல கிளம்ப விடாம பண்ணிடுவாங்களோ'ன்னு. பயந்து போன விக்னேஷும் பவதாவும் அவர்களிடம் வாதாட, அங்குப் பாச பட்டிமன்றம் நடந்தது.
" ஆனந்தம், செக்கத்தங்கம், சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், சூரிய வம்சம், நட்புக்காக அப்றம். " எனப் பிரகாஷ் யோசிக்க,
" வானத்த போல, சொல்ல மறந்த கதை, வேல் அப்றம் லேட்டஸ்ட்டா வந்த உடன் பிறப்பு. இன்னும் நிறைய இருக்கு. கூகுள்ள கேட்டதுக்கு இத தா காட்டுச்சி. மேலாப்புல இருக்குற பத்து படத்தோட பேரு இது தா. குடும்ப செண்டிமெண்ட் மூவிஸ். " கௌதம்.
"அது எல்லாத்தையும் ஒரே மிக்ஸில கொர கொரன்னு அரச்சி எடுத்த மாறி இருக்குண்ணே. நம்ம கண்ணு முன்னாடி நடக்குற ஸீனு. " பிரகாஷ்.
பின்ன அவனுங்களும் நேத்துல இருந்து பாக்குறானுங்க. இந்த ஹிட்லர் தா ஓவரா உணர்ச்சிவசப்பட்டு பேசுறாருன்னு நினைச்சா, இங்க குடும்பமே அப்படித்தா பேசிட்டு திரியுது. அதா காண்டு இவனுங்களுக்கு.
"இது எல்லாமே எங்கண்ணனுக்கு கிடைக்க வேண்டிய விருந்தும் மரியாதையும். பட் புதுசா நம்ம ஸ்டேஷனுக்கு வராத ஒரு போலிஸ் காரெ வயித்துக்குள்ள இறங்குதுன்னு நினைக்கும்போது லைட்டா காண்டாகுது. " ப்ரகாஷ். அவன் சொல்வது சரியே இது ரிஷிக்குக் கிடைத்திருக்க வேண்டியது.
"டேய் அடுத்தவங்க வீட்டுல குடுத்தாத்தா தா விருந்து. சொந்த வீட்டுல சமச்சி தந்தா அது சாப்பாடு. அவனுக்குத் தா வீட்டுல எல்லாரும் சப்போட்டா இருக்கிங்களே. இது போதாதா. அத விடு முதல்ல இத பாரு…"
" பாக்க முடியிற மாறி இருந்தா பாக்க மாட்டேனா. விட்டா… ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு. ன்னு கை பிடிச்சிட்டு பாட ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்குள்ள. " பிரகாஷ்.
" நாம எதாவது கல்ல விட்டு எரிஞ்சி கூட்ட கலச்சி விடணும். " கௌதம்.
" யார்ட்ட இருந்து ஆரம்பிக்கலாம். ம். " எனப் பிரகாஷ் சுற்றி சுற்றி தேட, கண்ணில் சிக்கியது சம்பத்.
" அட நம்ம ராசியான ஆளு மச்சான் ஸார் தா. நீ ஆரம்பிக்கிறியாண்ணே. இல்ல நா ஆரம்பிக்கவா. " எனக் கேட்க,
"நல்ல காரியத்தல்லாம் நாந்தா ஸ்டார்ட் பண்ணுவேன். " என்றவன் பவித்ரா மற்றும் சம்பத்தின் அருகில் சென்று,
"சூப்பர் விருந்து மச்சான். இந்தா பவி. " என வெற்றிலை மடித்து பவியின் கையில் தர,
"ம்… எப்பயும் மலரத்த சமப்பாங்க. இன்னைக்கி ஜோதித்தையும் கனகாத்தையும் சேர்ந்து செஞ்சதுனால சூப்பரா இருந்தது சாப்பாடு. " சம்பத்.
" இப்ப என்ன சொல்லவர்றிங்க மச்சான் ஸார். இத்தன நாளா உங்க சொந்த மாமியார் உங்களுக்குச் சோறாக்கி போட்டது இல்லன்னு தான. " என்க, ‘ நா எப்ப அப்படி சொன்னேன்’ என்பது போல் முழித்தான் சம்பத்.
" இப்ப தான சொன்னிங்க. எங்கம்மா சமயல் சூப்பர். உங்க மாமியார் சமயல நா சாப்பிட்டதே இல்லன்னு. " எனப் பிரகாஷ் கத்த, பாவமாய் நின்றிருந்த ஜோதியின் காதில் அது கேட்டது. அப்படி யா எனத் தன் மகளைப் பார்க்க,
" ம்மா, இவெ சும்மா விளையாடுறான். சொல்லுங்கப்பா. " எனச் சம்பதை உளுக்க அவனும் கோயில் மாடுபோல் தலையசைத்தான்
"டேய் அவரு படிச்சது வளர்ந்தது எல்லாமே வடக்க. அதுனால அவருக்கு அந்தச் சைடு சாப்பாடு தா பிடிக்கும் சரியா மச்சான். " கௌதம்.
'ரைட்டு. இவனுங்க நம்மல செய்ய ப்ளான் போட்டுட்டானுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தாலும் காந்தி பொம்ம மாறி உக்காந்துக்க வேண்டியது தா. ' எனச் சம்பத் அசையாது அமர்ந்தான்.
" அப்ப மச்சான் ஸாருக்கு தென்னிந்திய உணவுலாம் பிடிக்காது. இத்தன நாள் எங்கம்மா வீட்டு மாப்பிள்ளைக்கி பிடிக்காததையா சமச்சி போட்டுக் கொடும படுத்திருக்காங்கன்னு சொல்ல வர்றிங்க. வேண்டா வெறுப்பா உள்ள தள்ளிருக்காரா. " எனக் கௌதமுடன் சண்டைக்கி செல்ல,
"அப்படி இல்லடா. எல்லா அம்மாக்களும் நல்லா சமைப்பாங்க. அது நார்த் இன்டியன் ஸ்டெயில்ல இருந்தா என்ன சவுத் இன்டியன் ஸ்டெயில்ல இருந்தா என்ன. அதுவும் இந்தியாக்குள்ள தான் இருக்கு. நாமலும் இந்தியாக்குள்ள தா இருக்கோம். All indian are brothers and sisters. ஸ்கூல்ல ப்ரேயர் அப்பச் சொல்லுவாங்களே. நீ கேட்டது இல்லையா. " கௌதம்.
" நா ப்ரேயர் முடியவும் தா ஸ்கூல் குள்ள போவேன். அதுனால எனக்குத் தெரியாது."
"நீ ஸ்கூலுக்கு போவேன்னு சொன்னதே எனக்கு அதிர்ச்சியா இருக்கு. "
" ம்ச்… இப்ப எந்தச் சாப்பாடு பெஸ்ட்டு நார்த்தா சவுத்தா. எனக்குத் தெரிஞ்சே ஆகணும். வாங்க நீயா நானா போட்டுப் பாத்திடலாம். " பிரகாஷ் அழைத்துத் தன் அணிக்காக ஆட்களைத் தேர்ந்தெடுக்க,
"அதுக்கு நடுவரா கோர்ட்டு போட்ட கோபிநாத் மாறி நிக்க நம்ம காக்கி சட்ட விக்னேஷை அன்புடன் அழைக்கிறோம். " கௌதம்
" என்ன எதுக்கு இதுக்குள்ள இருக்குறீங்க. நீங்க ரெண்டு பேர் மட்டுமே பட்டிமன்றம் நடத்திக்கங்க. என்ன விட்டுடுங்க. " விக்னேஷ் அவசர அவசரமாகத் தடுத்தான்.
" அதெப்படி விட முடியும். நீங்கத் தா மக்கள பாதுக்காக்கும் காவல் படையாச்சே. குற்றவாளியல்லாம் தூக்கி போட்டுப் பந்தாடுற நீங்க எங்க மச்சான் ஸாருக்கு ஏத்த உணவு வடக்கா இல்ல தெற்கான்னு நியாயம் கேட்டுச் சொல்ல மட்டிங்களா. " பிரகாஷ்.
"யாருட்டா கேட்ட சொல்லச் சொல்றிங்க. "
" இதோ வெத்தலைய கூடப் பீடா மாறி மடிச்சி குடுத்தாத்தா சாப்பிடுவேன்னு அடம்பிக்கிற எங்க ராகவ் சம்பத் மச்சான்ட்ட தா. " கௌதம் சொல்ல,
' நியாயம் வேணுமா. ஆனா எதுக்கு. எங்க போய் வாங்கிட்டு வர. யாருகிட்ட இருந்து நியாயம் வாங்கணும். ' என்ற கேள்விகளைக் கண்களில் தாங்கிச் சம்பத்தை பார்க்க, அவன் தா மங்கி பொம்மையா மாறிப் பல மணி நேரம் ஆச்சே. எப்படி பதில் சொல்லுவான்.
அவனின் அசைவற்ற நிலையைக் கண்டு ' நாமலும் இது மாறி உக்காந்துக்கணும். இல்லன்னா பொம்மைய மாறி எனக்கும் கண்ணு காது மூக்குன்னு எதுவும் உண்மையாவே கேக்காத மாறித் தர்மடி வாங்கி குடுத்துடுவாய்ங்க. ' என நினைத்தவன் சம்பத்தின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொள்ள, சம்பத் புன்னகையுடன் வரவேற்று இட ஒதுக்கீடு செய்து கொடுத்தான்.
"ண்ணே நாமளும் இவ்வளோ நேரம் கதறுறோம். ஒரு பயலும் சண்ட போட மாட்டேங்கிறாங்களே. மச்சான் ஸார் கோபத்துல எதாவது சொல்ல, எங்கம்மா கைல கரண்டியோட வர. பவி சப்போட்டுக்கு வர. ரொம்ப நாள் கழிச்சி நடு வீட்டுல ஒரு சண்டன்னு டைட்டில் போடலாம்னு பாத்தா. எல்லாம் வேஸ்ட் ஆகிடுச்சி. இப்ப என்ன பண்ண ண்ணே. "
‘செண்டிமெண்ட் காட்சி பாத்து சலிச்சி போனதுனால சண்ட காட்சி பாக்க ஆசப்பட்டு பத்த வச்சா இவனுங்க ரெண்டு பேரும் டம்பி பட்டாஸ்ஸா மாறிப் புஷ்ஷுன்னு போய்ட்டானுங்க. இப்ப ப்ளான் பீ.’
" ப்ளான் பீ யா. அது எதுண்ணே. "
" பவதாம்மா, உங்க வீட்டுல ACP சாருக்கு எத்தன நாள்மா விருந்து. ஏன்னா எனக்குப் பத்து நாள் மாமியார் வீட்டு விருந்து நடந்தது. சம்பத் மச்சானுக்கும் அப்படி தா. டேய் உனக்கு. " என பெருமையாகப் பேசி பிரகாஷை பார்க்க அவன் முறைத்தான். ஏன்னா அவனுக்குத் தா மாமியார் கிடையாதே. அப்றம் எப்படி அங்க கையால சாப்பிட முடியும்.
" இது... ஒரு பொது அறிவ வளத்துக்காலாம்னு தா கேட்டேன். சொல்லும்மா. பவதா. " எனக் கௌதம் பவதாவிடம் பற்ற வைத்தான். அது சரியாக வெடித்து.
" கல்யாணம் ஆகி இத்தன மாசத்துல ஒருக்க கூட அவரு எங்க வீட்டுல விருந்துன்னு சாப்பிடவே இல்லண்ணா. அவனுக்கு நாங்கல்லாம் கண்ணுக்குத் தெரியவே மாட்டோம். " என விக்னேஷை குறை சொல்ல,
"என்னம்மா சொல்ற. ஒரு நாள் கூட உங்க வீட்டுல சாப்பிட்டது இல்லயா. " என கிழவிபோல் தாடையில் கை வைத்து இருவரும் கேட்க, ஆம் என் தலை அசைத்தாள் பவதா.
" ஏய்... ஏன்டி பொய் பேசுற. " எனத் தான் சிலையாய் அமர்ந்திருக்கிறோம் என்பதை மறந்து சண்டைக்கி வர,
"ஆமா விருந்துன்னா மாமியார் வீட்டுலேயே குறைஞ்சது ஒரு நாள் முழுக்க தங்கி இருக்கணும். நீ எப்ப எங்க வீட்டுல தங்குன. "
"தங்கணுமா. பக்கத்து பக்கத்து ஏரியால இருந்துட்டு எப்படி டி தங்குறது. "
" ஆமால்ல. நீ வீட்டுக்கு வந்து தூங்குறதே பெருசு. பாதி நேரம் ஸ்டேஷன்லை கொசு கூட டுயட் பாடிட்டு தான தூங்குவ. "
" நிஜமா அது கூடவா நீ டூயட் பாடுற. என்ன மாறி டேஸ்ட்டுமா உன்னோட புருஷனுக்கு. ஆமா வீடு வரலன்னா எப்படி. அக்கியூஸ்ட்டுக்கு வாங்கிட்டு வர்ற பிரியாணில பாதிய பிடுங்கி தின்னுடுவானா. " எனக் கௌதம் உற்சாகப்படுத்த,
விக்னேஷ் சரணடைந்து விட்டான். " தெய்வமே நா ரொம்ப சின்னவெ. நீங்கப் பத்த வச்சி குடுக்குற அளவுக்கு வெத் இல்ல. ப்ளீஸ். "
" பட் இப்ப எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி ஃபைட் பாக்கணுமே. "
" அதுக்கு தா அளவெடுத்துச் செஞ்ச மாறி உங்ககிட்ட ஒரு ஜோடி இருக்கே. அதுகள பத்த வைங்க. என்ன விடுடுங்க. மீ பாவம். " என்பதற்கும் பத்த வைக்காமலேயே ஹரிணி நடு வீட்டில் நின்று வெடிப்பதற்கும் சரியா இருந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..