அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 99 இரு கைகளையும் பிசைந்து கொண்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தாள் வாணி.. "கார்த்தி... " எனக் கெஞ்சலாக வந்தத அந்தக் குரல் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்கவில்லை அவன். "கார்த்தி மாமா... " எனக் கொஞ்ச அழைக்க, திரும்பி பார்த்து தன் விழியென்னும் கதிரவனால் அக்கினி சுவாலைகளை அவளை நோக்கி வீசினான். " ம்ச்... ஸாரி கார்த்தி மாமா. நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. ஸாரி மாமா. " என்றாள் கொஞ்சலாக. "அடிங்க... வாய மூடு டி. பண்றதெல்லாம் பண்ணிட்டு மாமா வோமாண்டு. செம்ம கடுப்புல இருக்கேன். பேசமா இரு. இல்ல... " "இல்லன்னா என்ன பண்ணுவ மாமா?. அடிப்பியா! கன்னத்துலயா! கைலயா?. " எனக் கேட்டவளை ஒன்றுமே செய்ய முடியாது. பைக்கை உருட்டிக் கொண்டு நடந்தவனை ‘மாமா… மாமா…’ என வம்பு செய்த படி உடன் நடந்தாள் வாணி. அவனும் கடுப்புடன் திட்டிக் கொண்டே வந்தான். "இப்பல்லாம் என்னை ரொம்ப திட்டுற மாமா நீ. " என்றாற் சிணுங்களாக. "நீ செஞ்ச காரியம் அப்படி. உரசாம தள்ளி நடடி. " என எரிந்து விழுந்தான். அதை அணைக்...