அத்தியாயம்: 99
இரு கைகளையும் பிசைந்து கொண்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தாள் வாணி..
"கார்த்தி... " எனக் கெஞ்சலாக வந்தத அந்தக் குரல் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்கவில்லை அவன்.
"கார்த்தி மாமா... " எனக் கொஞ்ச அழைக்க, திரும்பி பார்த்து தன் விழியென்னும் கதிரவனால் அக்கினி சுவாலைகளை அவளை நோக்கி வீசினான்.
" ம்ச்... ஸாரி கார்த்தி மாமா. நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. ஸாரி மாமா. " என்றாள் கொஞ்சலாக.
"அடிங்க... வாய மூடு டி. பண்றதெல்லாம் பண்ணிட்டு மாமா வோமாண்டு. செம்ம கடுப்புல இருக்கேன். பேசமா இரு. இல்ல... "
"இல்லன்னா என்ன பண்ணுவ மாமா?. அடிப்பியா! கன்னத்துலயா! கைலயா?. " எனக் கேட்டவளை ஒன்றுமே செய்ய முடியாது. பைக்கை உருட்டிக் கொண்டு நடந்தவனை ‘மாமா… மாமா…’ என வம்பு செய்த படி உடன் நடந்தாள் வாணி. அவனும் கடுப்புடன் திட்டிக் கொண்டே வந்தான்.
"இப்பல்லாம் என்னை ரொம்ப திட்டுற மாமா நீ. " என்றாற் சிணுங்களாக.
"நீ செஞ்ச காரியம் அப்படி. உரசாம தள்ளி நடடி. " என எரிந்து விழுந்தான். அதை அணைக்க தெரியாதவளா அவள்.
அப்படி என்ன செய்திருப்பாள்?. ம்…
நான் பைக் ஓட்டுறேன். என்று அவனிடம் இருந்து வாங்கி ஓட்டினால் கூட பரவாயில்லை. இப்படிச் செய்து விட்டாள்
பைக்கை ஸ்டெடியாகத் தூக்கி பிடிக்க முடியாது திணறியவள், ஏறி அமராமலேயே ஆஸ்லெட்டரை திருக, பைக் அவளை விட்டு விட்டு முன் பக்க சக்கரத்தைத் தூக்கி கொண்டு மரத்தில் மோதி சரிந்தது.
"அடிப்பாவி!! அஞ்சி வர்ஷமா யாரையும் தொட விடாம பொத்தி பொத்தி பாதுகாத்த என்னோட பைக் டி அது. இப்படி ஒரே திருவுல தூக்கி புளிய மரத்துல சொருகிட்டியே. " எனத் திட்ட தொடங்கி விட்டான்.
'என்ன இப்படிக் கோபமா திட்டுறான். மூஞ்சிய சோகமா வச்சிக்கிவோம். அப்பத்தான் பாவம் பாத்து விட்டுடுவான். ' என நினைத்து அவளும் பல பல ரியாக்ஷன்களை முகத்தில் கொண்டு வந்து பாவமாய் நிற்க, அவன் திட்டுவதை நிறுத்தவே இல்ல.
பின்னே இவள் செய்த காரியத்துக்கு பாராட்டு பத்திரமா வாசிப்பார்கள்.
" நாளைக்குள்ள நீ காலேஜ்ல இருக்கணும். ஈவ்னிங்கே கொண்டு போய் விட்டிடலாம்னு நினைச்சேன். ச்ச… நீ மட்டும் காலேஜ்ல இல்லங்கிறத முரளி சுப்பாத்தாட்ட சொன்னா அது உன்ன கண்டம் பண்ணிடும். அந்த நினைப்பு இருக்கா உனக்கு. அட்லீஸ்ட் ஆள் ஆரவாரம் இருக்குற இடமா பாத்து கவுத்தினா கூட உதவிக்கி ஆள் கிடைச்சிருப்பாங்க. இப்படி யாருமே இல்லாத காட்டுக்குள்ள வண்டிய கவுத்தி விட்டுட்டியே. அங்க பாரு ஃபோர்ட. இதுல என்ன எழுதியிருக்குன்னு தெரியுமா! வனவிலங்குகள் நடமாடும் பகுதின்னு எழுதிருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டீடும். காட்டுக்குள்ள என்ன பண்ண போறோமோ!." எனப் புலம்பியபடி பைக்கை தள்ளிச் சென்றான்.
"இருட்டீடுமா! இப்ப தான சூரியன் உதிக்கவே ஆரம்பிச்சிச்சு. பாரு சூரியன் சுல்லுனு அடிக்கிது. " எனக் கேலி செய்தவளை முறைக்கவும்,
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா. எல்லாமே நல்லதுக்கு தான். கடவுள் நல்லவங்கள சோதிப்பான் கை விட மாட்டான்." எனச் சினிமா வசனங்களை கட்டவிழ்த்து விட,
" தயவுசெய்து வாய மூடீட்டு வா. இந்தச் சினிமா டயலாக்கா பேசி கழுத்தறுத்த… பாத்துக்க. " எனக் கடுப்புடன் திட்ட,
" போ கார்த்தி மாமா நீ என்னைத் திட்டுற. நான் போறேன். " எனக் கை வீசி நடக்கத் தொடங்கினாள்.
"ஏய் எங்க போற? ஜோ... ஜோ… " எனக் கத்திக் கொண்டே அவனும் பைக்கை விட்டு விட்டு சென்றான். அந்தக் காட்டிற்குள் ஒரு சிறிய அருவி இருந்தது.
"கார்த்தி மாமா இங்க பாரு. " என உற்சாகமாக காட்டினாள் அந்த அருவியை. அது எவ்வித கலங்களும் இல்லாது தெளிந்து, தரை பகுதியைக் காட்டும் அளவுக்குச் சுத்தமாக இருந்தது. உள்ளே ஓடிச் சென்ற மீன்களை கூடக் கண்களால் காண முடிந்தது.
வாணி அதில் இறங்க போக, கார்த்தி பிடித்திழுத்து வந்தான். இங்கிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரித்து அவளையும் பைக்கையும் தள்ளிச் செல்வதற்குள் பாதியாளாக மாறி விட்டான்.
நண்பகல் வரை தள்ளிச் சென்றவனுக்குத் தூரத்தில் ஓர் ஊர் தெரிந்தது.
சற்றி பெரிய ஊர் போல் தான் இருந்தது. அனைத்து வசதிகளும் அதில் இருக்கும் எனக் கார்த்தி நிம்மதியடைய, அங்கிருந்த மெக்கானிக் ஷாப்பில் பைக்கை கொடுத்தான்.
இரவிற்குள் வண்டியைச் சரி செய்து விடலாம். புறப்பட்டு விடலாம் என நினைக்க, நாளை காலை தான் பைக் கிடைக்கும் என்று விட்டார் மெக்கானிக்.
அட்லீஸ்ட் விடிந்ததும் புறப்பட்டு விட வேண்டும் என வேண்டிக் கொள்ளவதைத் தவிர கார்த்திக்கிற்கு வேறு வழி இல்லை.
இரவு இங்கு எங்கு தங்குவது என்ற யோசனையில் இருந்தவனின் முன் கலர் கலர் பாசிகளைக் கழுத்திலும் கையிலும் மாட்டிக் கொண்டு வந்தாள் வாணி.
" கார்த்தி மாமா இது நல்லா இருக்கா?. இன்னைக்கி நைட் இந்த ஊர்ல விசேஷமா!. அங்க நிறைய கடை போட்டிருக்காங்க. நீ பைக்கை குடுத்திட்டேன்னா வாயேன் நாம போய் சாமி கும்பிட்டுட்டு வருவோம். இந்த ஊரு அம்மன் சக்தி வாய்ந்தவங்களாம். வா மாமா. சாமிய வேண்டிக்கிட்டாத்தா பைக் சீக்கிரம் ரெடியாகும். " எனக் கரம் பற்றி இழுக்க.
"ம்ச்… நான் எங்கையும் வரல. "
"ஏன்?."
"ஏன்னா உன் அம்மனால எவ்வண்டிய சரி பண்ணி குடுக்க முடியாது. "
" நீ இங்கையே இருந்தாலும் காலைல தான பைக் கிடைக்கும். வா மாமா. " என இழுத்துச் சென்றாள்.
"நீ இந்த டிரிப்ப ஆன்மீக சுற்றுல்லாவா மாத்திட்ட டி. எப்பப் பாத்தாலும் கோயிலு கோயிலுன்னு பட்டைய போட்டுடு திரியுற. " எனக் குறைபாடிக் கொண்டே அவளுடன் சென்றான் கார்த்திக்.
வண்ண வண்ண மணி பாசி, வேலைப்பாடுடன் இருந்த கலை பொருட்கள், நெத்திச் சுட்டி எனக் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அணிந்து அணிந்து காட்ட, அவளின் மொத்த அழகையும் கார்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தான்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவளைத் தன்னோடு வைத்துக் கொள்ள அவளின் தோளில் கை போட, அவள் ‘ஸ்… ஆ…’ என வலியில் முகம் சுழித்தாள்.
"என்னாச்சி ஜோ? வலிக்கிதா!. அடிப்படிருக்கா!. எப்படி? எங்க?. காட்டு டி. " என அவளின் சுடிதாரை தோள் பட்டையை விட்டு இறக்க,
"கார்த்தி என்ன பண்ற நீ. விடு. " எனத் திமிறி விலகி நின்றவளைத் தனியாக இழுத்து வந்து என்ன எனக் கேட்க, அவள் ஆடை மறைத்த பகுதியில் பச்சை குத்தியிருந்தாள்.
"என்ன ஜோ இது? இப்படியா பண்ணுவ?. " எனக் கன்றிச் சிவந்திருந்த இடத்தை இதமாய் வருட, பெண்ணவளின் மென்மை விழித்துக் கொண்டது. அவனிடம் இருந்து மெதுவாக விலக பார்க்க,
“கொஞ்ச நேரம் அசையாம இருடி.” என வைத படி அவளின் இடையில் கைக் கொடுத்து அவள் நகராது, தன்னோடு இறுக்கி பிடித்து மீண்டும் பச்சை குத்திய இடத்தை இதழ் குவித்து இதமாய் ஊதினாள்.
அவனின் செயலில் மெய் மறந்து நின்றதெல்லாம் சில நொடிகள் தான். குளிர் காற்றால் காயத்திற்கு ஆறுதலாக உதவுகிறேன் என்று குனிந்தவனை பட்டென தள்ளி விட்டாள்.
‘ஏன்?’ என்பது போல் அவளின் முகத்தைப் பார்த்தைக் காண முடியாது தலை குனிந்தாள், வெட்கம் தாளாது. முகச்சிவப்புடன் அவள் நின்ற போது தான் உணர்ந்தான், ராங் டச் என்று.
" ஸாரி..." என்றவனுக்கும் கைகள் குறுகுறுத்தன, அவளின் மென்மையான தேகத்தில். முயன்று தன்னைச் சமாளித்தான்.
" எதுக்கு ஜோ பச்ச குத்திக்கிட்ட?"
"ரொம்ப நாள ஆசை. எங்க ஊரு கிழவிங்க அவங்களோட புருஷெ பேர கைல பச்சையா குத்திக்குங்க. நானும் என்னோட... " எனப் பேச்சை நிறுத்தியவளின் முகம் சொல்லும் சொல்ல வந்ததை.
"ஆனா மத்தவங்களுக்குக் காட்டுற மாதிரி இல்லாம, யாரு கிட்டையும் காட்டாத இடத்துல, உரிம பட்டவன் கிட்ட மட்டும் காட்டுற மாதிரி பச்ச குத்திக்கிட்டேன். இடது பக்கம் தான இதயம் இருக்கு. அது முழுக்க உன்ன தவிர யாருக்கும் இடம் இல்ல கார்த்தி." என நாணமாய்ச் சொன்னவளின் இதழை தன் வசமாக்கியவன்.
பெண்ணவளின் இணையில்லா அன்பில் அவன் கரைந்து தான் போனான். என்ன செய்துவிட்டோம் இவளுக்கு. தன் மீது இத்தனை காதலை பொழிபவளுக்கு ஈடாகுமா என் நேசம் என்ற தயக்கத்தை எல்லாம் அவளிடம் மொத்தமாய் இழந்திருந்தான் கார்த்திக்.
அவளை போலவே தன் வலது கையிலும் பச்சை குத்திக் கொண்டான்.
அந்த மெக்கானிக் சமீர் நல்லவராக இருப்பார் போலும், வீட்டின் ஒரு பகுதியை அவர்களுக்கு இரவில் தங்கிக் கொள்ள அனுமதி தந்திருந்தார்.
மூன்று நாட்களாக தன்னை உரசிய படியும் தொந்தரவு செய்தபடியும் வந்த அவளை இப்போது கண்ணில் பார்ப்பதே சிரமமாக இருந்தது. அங்கிருக்கும் சிறுவர்களுடன் பந்து விளையாடி, அந்தச் சமீரின் மனைவிக்கி உதவி செய்து, பக்கத்து வீட்டில் பானை செய்து கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து பானை என்று எதையோ செய்ய என எதையாவது செய்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுத்தவன் அவர்கள் இருவரையும் சேர்த்து எடுக்கச் சொல்லி மெக்கானிக்கிடம் கேமராவை தந்து அணைத்துக் கொண்டு நின்றனர்.
அன்று இரவு கோயில் பூஜை. கோயிலுக்கு எனச் சேலை அணிந்து தயாராக வந்தவள், வெள்ளை மனம் கொண்ட அந்த பெரியவரிடம் ஆசி வேண்டி காலில் விழுந்தாள். உடன் கார்த்திக்கும் சேர்ந்து கொண்டான். இருவரையும் கணவன் மனைவி என எண்ணியிருந்தனர் சமீரின் வீட்டு பெரியவர்கள். அவர் இருவரையும் வாழ்த்தி கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.
வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, எங்கு திரும்பினாலும் கலர்ஃபுல்லா வண்ணமயமா இருந்தது அந்த ஊரில். பலர் சாமியாடிச் செல்லும் போது கார்த்திக் தான் பயந்து விட்டான். அது பத்தாது எனத் தலையில் பெரிய கரகம் போல் எதையோ கட்டி, உடல் முழுவதும் வண்ணங்களைத் தீட்டி வாயில் பீப்பீ போன்ற எதையோ வைத்து சத்தம் எழுப்பிய படி, அவ்வபோது அவனின் முன் வந்து சிலர் நிற்க, அவனின் பயத்தை ரசித்தபடி சிரித்துக் கொண்டே இருந்தாள் வாணி.
" ஹாஹ்ஹா... ஹாஹ்ஹா... கார்த்தி நீ பேசுன வசனத்தயெல்லாம் கேட்டு நீ பெரிய மாவீரன்னு நினைச்சேன். ஆனா… ஹாஹ்ஹா... " என அறைக்குள் வந்து உடை மாற்றிய பின்னும் சிரிக்க, அவன் முறைத்தபடி தரையில் பாயை விரித்தான்.
"கொஞ்சம் சத்தத்த கொறச்சே சிரி. அப்பறம் கோயில நிக்கிற கும்மல் எல்லாம் உனக்கு பேயோட்ட கிளம்பி வந்திடும். " எனக் கடுப்புடன் கூறினான். அவள் சிரிப்பை நிறுத்தியபாடு இல்லை. அதனால் கடுப்பானவன் படுத்துக் கொண்டான்.
தலையணையில் தலை வைத்தவனுக்குத் தூக்கம் என்பது மட்டும் வரவே இல்ல. ஊருக்கு சென்றால்… பின் என்ன நடக்கும் என்பதே சிந்தனையாக இருந்தது அவனுக்கு.
அவனின் ஜோ என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தால் அவள் நோட் புக்கும் பேனாவுமாக அமர்ந்திருந்தாள்.
" ஹே ஜோ... உன்னோட நோட் புக்ல இருந்த பக்கத்துல பாதியாவாது நிறைவேத்திட்டேனா?. " எனக் கேட்க,
" கிட்டத்தட்ட எல்லாத்தையுமே நாங அடிச்சிட்டேன். ஆனாலும் இன்னும் ரெண்டு இருக்கு. "
" என்னதது? "
" ஒன்னு என்னோட சின்னுவ பாக்க அவெ ஊருக்கு போகணும். அடுத்தது... என்னோட சர்டிபிகேட்ட கருப்பு கலர் கவுன் போட்டு எனக்குப் பதிலா நீ வாங்கி… எங்கிட்ட தரணும். "
"ரொம்ப வினோதமா இருக்கு டி. படிச்சது நீ. படிக்க வச்சது அந்தக் குட்ட வாத்து. ஆனா நான் வாங்கணுமா. " எனக் கேலியாக கேட்க, அவனின் மார்பில் தலை சாய்த்தவள்,
"என்னோட சந்தோஷத்த தன்னோட சந்தோஷமா நினைக்கிறது நீயும் சின்னுவும் மட்டும் தான் கார்த்தி."
" ஜோ நான் உன்னோட நோட்ட படிச்சி பாத்தேன். அதுல உன்னோட எதிர்காலத்த பத்தி ஐ மீன் காதல் கல்யாணம் குடும்பம் குழந்தன்னு எந்த ஆசையையும் அதுல எழுதலயே ஏன்? "
" எனக்கு அது தோனல கார்த்தி." என்றவளின் ஏன் என புருவம் சுருக்கி வினவினான்.
" நான் பொண்ணா பிறந்திட்டேனாம் கார்த்தி. அதுனால எங்கப்பா சந்திச்ச அவமானம் ஜாஸ்தி. எங்கப்பாவ அவரு கூட பிறந்தவங்க கல்யண வீடு மாறியான விஷேச வீட்டுல சபைல வச்சி, பொட்ட புள்ளைய போய்ப் பெத்திட்டியேடான்னு கேலி பண்ணி நான் பல தடவ கேட்டிருக்கேன். அவரோட எல்லா கஷ்டத்துக்கும் நான் பொண்ணா பிறந்தது தான் காரணம்னு சொல்வாங்க. என்னால தான் கடனாளியா மாறுனாருன்னு அடிக்கடி பாட்டி கூட திட்டும்.
அம்மா கூட அப்படி தான் பேசும். அப்பா அப்படி பேசலன்னாலும், பேசுறவங்கள தடுத்தது கிடையாது. அதக் கேட்டு கேட்டு வளந்ததுனால அந்த வயசுல நான் பிறந்ததே சாபம் இதுல கல்யாணம் குழந்தெல்லாம் ஒரு கேடான்னு… கல்யாண கனவு கண்டது இல்ல… "
" இப்ப இருக்கா?. " என்க, அவள் வெட்கத்துடன் நோட்டை பைக்குள் தூக்கி வைத்துவிட்டு அவனின் அருகில் படுத்தாள்.
கார்த்திக், "நீ கால்ல விழயும் அந்தப் பாட்டி என்ன சொன்னாங்கன்னு தெரியுமா. "
"சரியா புரியல. ஆனா என்ன சொல்லிருப்பாங்கன்னு தெரியும். "
"எப்படி?"
"ம்ச்… நம்ம நாட்டுல கால்ல விழுந்து ஆசி வாங்குனா நல்லா இருன்னு தான சொல்லுவாங்க. வேறென்ன சொல்லிடப்போறாங்க."
"இல்ல… குழந்த குட்டியோட சந்தோஷமா இருக்கணும்னு சொன்னாங்க. "
"அது பிறக்கும் போது பாத்துக்கலாம். ஆனா அது உன்ன மாதிரி ஒரு தத்திய கல்யாணம் பண்ணா.. குழந்த… குட்டி… நடக்குமான்னு தெரியலயே. " என்றபடியே அவனை அணைத்துக் கொள்ள, என்ன சொன்னாள் எனப் புரிந்த அவன் அவளை தன் உடலில் இருந்து பிரித்து முகம் பார்க்க,
" நீ என்ன சொல்ல வர்ற ஜோ... உனக்கு… உனக்கு… ஓகேவா. " என கேட்டவனின் இதயம் அதன் துடிப்பை அதிகப்படுத்தியது.
" நீ ரொம்ப நல்லவனா இருக்க முயற்சி செய்யதா கார்த்தி. உனக்கு யாரும் நல்லவன்னு பட்டம் குடுக்க போறது இல்ல. " என்றவள், " மூணு ராத்திய வேஸ்ட் பண்ணிட்டு இப்ப வந்து கேக்குறான் பாரு. ஓகேவான்னு. தத்தி. " என முணுமுணுத்த படி திரும்பி படுத்துக் கொள்ள, அவளைப் பின்னோடு சேர்த்து அணைத்தவனின் முகம் பெண்ணவளின் முதுகில் புதைந்தது.
கரம் இடையில் ஊர்ந்தோடி அணைப்பி இறுக்கி, விடுதலை உணர்வோடு வேகமெடுத்து பயணிக்கத் தொடங்கியது. இருவரும் அடுத்த கட்டத்திற்கு தங்களின் உறவை எடுத்துச் சென்றனர்.
விடிந்த பின்னும் மோகக்கடலில் முத்தெடுத்து பள்ளியறைப் பாடங்களைப் பயின்று கொண்டிருக்கும் அந்த ஜோடிகளுக்கான விடியல் எப்படி இருக்க வேண்டும் என்று ஜோஹிதா முடிவு செய்தாள்…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

அருமை.
பதிலளிநீக்குThank you sis 🥰
நீக்கு