அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 15 "மா… மா. சொல்லு. கார்த்தி மாமா. ரொம்ப ஈஸி தான்டா. எங்க சொல்லு கேப்போம். சொல்லுடா. " என மிரட்டிக் கொண்டு இருந்தான் கார்த்திகேயன். ஆனால் அவனுக்கு எதிரில் இருந்த வாண்டுவோ. ' அந்த மாறில்லாம் கூப்பிட முடியாது ' என்பது போல் பார்த்தான் அந்த ஐந்து வயது சிறுவன். " டேய் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடான்னா மொறச்சி பாத்துட்டே உக்காந்திருக்க. சொல்லுடா குட்ட வாத்து. மா…மா. சொல்லுங்கிறேன்ல." என அந்தச் சிறுவனின் சட்டையைப் பிடித்து உயர்த்தி உலுக்கி மிரட்ட, ' புயலே ஊருக்குள்ள புகுந்து விளையாண்டாலும் நாங்க நகராம நட்டுக்கிட்டு தா நிப்போம். ' என்பது போல் சிறுவன் அசராது நிற்க. "அடிங்க... உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்டவே உ திமிருதனத்த காட்டுவ... உன்ன. " என அடிக்கக் கை ஓங்க, "கார்த்தி என்ன பண்ற. " என்ற பெண்ணின் குரல் தடுத்தது. " ம்ச்… பாத்தா தெரியல இவனோட தோல உரிச்சி வெயில்ல காயப்போட்டு இவன கருவாடாட்டம் எடுக்கப் போறேன். " எனத் தலைக்கு மேலாக அந்த சிறுவனைத் தூக்க, "கார்த்தி. அவன கீழ இறக்கி விடு. " " முடியாது. ...