முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 14

அத்தியாயம்: 14


" ஸார் உங்க ஆர்டர் சொல்றீங்களா ப்ளிஸ்?. " வாசு. அவளின் குரல் கடுப்பாக வந்தது.‌


பின்னே ஒரு‌ மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து எதையும் ஆர்டர் செய்யாது‌ வந்தவர்களையும் போபவர்களையும் கேலி செய்து கொண்டிருந்த அந்த‌ கும்பலிடம் வேறு எப்படி பேசுவது.


"முதல்ல என்னென்ன இருக்குன்னு சொல்லுங்க மேடம். அப்பத் தான ஆர்டர் பண்ண வசதியா இருக்கும். " என அவளை ஏற இறங்க பார்த்தபடி அந்தக் கூட்டத்தில் இருந்தவன் சொல்ல,


" டேய் பாத்தா தெரியல இது அமெரிக்கன் + இன்டியன் ரெஸ்டாரன்ட் டா. இங்க எல்லாமே கிடைக்கும்.‌ கிடைக்கும்ல மேடம். " என்றவனின் குரல் உணவு உண்ண வந்தவன் போல் இல்லை.


அவன் வாசுவை மறைமுகமாக அழைப்பது போல் இருந்தது. அவர்களிடம் வாசு பேசாது வில்லியம் வந்து பேசினான்.‌ ஆனால் அந்தக் கும்பல் அவனைக் கேலி செய்து அங்கிருந்த பொருட்களைத் தூக்கி வீசிக் கலாட்டா செய்து கொண்டிருந்தது.


"அங்க என்னமோ நடக்குது. என்னன்னு உங்கண்ணுக்கு தெரியுதா தேவா. " என க்ரீஷ் கேட்டான். ஏனெனில் கண்ணாடிக்குப் பின் இருந்தனர் இவர்கள்.


எளிதில் வெளியே இருப்பவர்கள் தெரியாத படி ஓவியங்கள் தீட்டி வைக்கப்பட்டிருந்ததால் கிடைக்கும் சிறு இடைவெளியில் என்ன நடக்கிறது அங்கே எனப் பார்க்க முயன்றனர் மூவரும்.


" வில்லியம பாக்க பாவமா இருக்கு. அவனுங்க ஆறு பேர எப்படி தனியா சமாளிப்பான். " தாரிகா.


" அவனுங்க வாசுவ கிண்டல் பண்ற மாறித் தெரியுதே." க்ரிஷ் சொல்வதற்குள் தேவ் எழுந்து சென்றான், அணிந்திருந்த ஜாக்கெட்டை கழட்டியபடி சண்டைக்கி.


"என்ன ஹீரோ புறப்பட்டுட்டாரு. ஆக்ஷன் ப்ளாக்கா. " என க்ரிஷ் கேலி செய்ய,


போனவன் போன வேகத்திலேயே திரும்ப வந்து அமைதியா அமர்ந்து தன் சலெட்டை உண்ணத் தொடங்கினான்.


" என்னடா போனவுடனே வந்துட்ட. அத்தன பேரையும் ஒரே செக்கேண்டுல அடிச்சி தூக்கிப் போட்டுட்டியா என்ன?. "


"இவெ என்ன சூப்பர் மேனா!. பறந்து பறந்து சண்ட போட்டுத் துறத்திவிட. அவனெ பல்பு வாங்கிட்டு வந்த மாறி இருக்கு. நீங்க வேற. " தாரிகா கிண்டல் செய்யத் தேவ் அவளை‌ முறைத்தான்.


வெளியே நடந்த காட்சி அப்படி.


டிஸ்யூ பேப்பர்ஸ். ஸ்பூன்ஸ். மெனு கார்டு என அந்தக் கும்பல் வீசி இறைக்க, வில்லியம் அவர்களை வெளியே செல்லும்படி கூறினான்.


ஆனால் அவர்களே அங்குக் கிடைக்காத உணவு ஒன்றை கூறி அதைக் கொடுத்தால் தான் செல்வோம் எனக் கலாட்ட செய்தனர்.


"மேத்யூ அதெல்லாம் இங்க கிடைக்காது. இது ரெஸ்டாரன்ட். பார் இல்ல. " வில்லியம்.


"அப்றம் எதுக்கு வெளில பெரிய சைஸ்ல ஃபோர்டு வச்சிருக்கிங்க. தூக்கி வீசு. என்ன வாசு நா சொன்னது சரி தான. எதுவுமே கிடைக்கலன்னா அப்பறம் எதுக்கு கட. அப்றம் எதுக்கு ஃபோர்டு." 


"இதுல ‘உங்க ஆர்டர் சொல்லுங்க ஸார்’ன்னு தேன் குரல்ல எதுக்கு பேசணும். " மற்றவன்.


"இது ரெஸ்டாரன்ட் தான. நாங்க கேட்டது கிடைக்குமா கிடைக்காதா.‌"


"எஸ்… ஸார். இங்க எல்லாமே தா கிடைக்கும். இப்ப உங்களுக்கு என்ன தேவன்னு தெளிவா சொன்னா. தேவைக்கு மேலயே திருப்தியா குடுக்க எங்க கைவசம் ஆள் இருக்கு. எப்படி வசதி. " எனக் கார்த்திக்கேயனை கண்களால் காட்டி வாசு பேச.


அப்போது தான் கார்த்திகேயன் ரெஸ்டாரன்ட் உள்ளே வந்துகொண்டிருந்தான். வாசுவையும் எப்போதும் வம்பு பண்ணும் மேத்யூ கும்பலையும் கண்டவன் அணிந்திருந்த சட்டையின் கையை மடித்து விட்டபடி அருகில் நடந்து வர, அடித்துப் பிடித்து ஓடி விட்டனர். ஏனெனில் இதற்கு முன் வாங்கிய அடி அப்படி.


" வாவ்... ஃபைட்டே பண்ணாம ஒரு ஃபைட் சீன். இந்த எடத்துல யாரு ஹீரோன்னு சந்தேகம் வருதில்ல. " எனத் தேவ்வை பார்த்து க்ரிஷ் கேட்டான்.


"அப்படி யாருக்கும் சந்தேகம் வரல. நீ மூடீட்டு போ. " என்றான் தேவ் கடுப்புடன்.‌


" ஹேய் வாசு. இப்ப போறவே திரும்பி உன்ன வெளில எங்கையாது வழி மறிச்சி வம்பு பண்ணா என்ன பண்ணவ. நா வேணும்னா உங்க கூடவே இருக்கவா. " என வாசுவின் கரம் பற்றிக் கேட்ட க்ரிஷை இருவரும் முறைத்தனர்.


" தேவை இல்ல க்ரீஷ். எனக்குக் கராத்தே தெரியும். கும்ஃபூவும் தா. " எனக் கைகளை அசைத்துக் காற்றுடன் கராத்தே சண்டை போட,


"இன்ட்ரெஸ்டிங்.‌" என்றான் தேவ். அவனின் பார்வையில் வாசுவை‌ ரசிக்கும் பாவனை இருந்தது. அது அவனுக்கு மட்டுமில்ல கூடவே சுத்துற செவ்வாழங்கிற மாறி நம்ம க்ரிஷ்க்கும் இருந்தது. அதில் கடுப்பான தாரிகா,


" அப்ப இவனுங்கள மாறியான ஆம்பளைங்க தேவ உனக்கு இல்லன்னு சொல்ல வர்ற. சரியா. " என நக்கலாக க்ரிஷையும் தேவ்வையும் பார்த்துக் கேட்க,


" அதெப்படி பாய் ஹெல்ப் இல்லாம கேர்ள்ஸ்ஸால எதையும் செய்ய முடியாதும்மா. இப்ப கூடக் கார்த்தி அங்கிள் தா வந்து ஹெல்ப் பண்ணாரு. மறந்துடாதீங்க." ரோசமாக க்ரிஷ் தான் அது.


" கரெக்ட், இத நா ஒத்துக்கிறேன். கார்த்திப்பா தா எனக்கு எல்லாமே. ஃப்ரண்டு, குரு, எல்லாமே சொல்லிக் குடுத்தது அவரு தா. அவரு இல்லாம எதுவமே நோ தா. பாய்ஸ் உதவியும் கேர்ள்ஸக்கு தேவதா. சரியா சொன்னிங்க க்ரிஷ். " என்று க்ரிஷிற்கு ஹைஃபை கொடுத்து விட்டுச் சென்றாள் வாசு. இப்போதும் அவனின் பார்வை வாசுவின் மீதே இருக்க,


"உனக்கு என்ன ஆச்சி?. நீ இப்படி கிடையாதே. ஏ‌ அவளையே அப்படி வெறிக்க வெறிக்கப் பாக்குற. க்ரிஷ். க்ரிஷ். " என வாசு அடித்துவிட்டு சென்ற கரத்தை‌ பார்த்தபடி‌ உறைந்து போய் இருந்தவனை உலுக்கினாள் தாரிகா.


"வெய்ட்." என்ற தேவ், அருகில் இருந்த சாஸ் பாட்டிலை எடுத்து அவன் நீட்டிய கரத்தில் மருதாணி போல் வட்ட வட்டமாக வரைய தொடங்கினான். பின் அதை அவன் வாயிலேயே தினித்தான்.


"ஆ… த்தூ… த்தூ. "‌ எனத் தண்ணீரை எடுத்துக் குடிக்கத் தொடங்கினான் க்ரிஷ். ஏனெனில் அது சில்லி சாஸ். அவனின் வாய் மட்டுமல்ல கரமும் எரிந்தது.‌


"ஐய்யோ! ஏன்டா என்னோட கனவ கந்தல் கோலமாக்குற. இப்ப தா வாசு என்ன அடிச்சி பேசுற அளவுக்குப் பழகிருக்கா. இன்னும் கொஞ்ச நாள் விட்டா ஃபேஸ் புக்ல நாங்க ஃப்ரெண்டா மாறுவோம். டிவிட்டர் இன்டால எங்கள நாங்களே ஃபாலோ பண்ணிக்கிவோம். ஃபோன் நம்பர மாத்திக்கிவோம். அப்றம். " என்றவனை தாரிகா அடிக்க,


" நீயும் கடைசில இப்படி தானா. ச்சீ... நா உன்ன நல்லவன்னு நினைச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா!!.‌ நீ... நா உனக்குப் போரடிக்க ஆரம்பிச்சிட்டேன்னு அடுத்தாள தேடுறாயா!!. " என விளையாட்டிற்கெல்லாம் சொல்லவில்லை அழவே ஆரம்பித்து விட்டாள்.


க்ரிஷ் மிகவும் நல்ல ஆண்மகன். கேலி கிண்டல் செய்தாலும். நம்ம தேவ் போல் ஃப்ரீ டைப் கிடையாது. அதனால் தா தாரிகா அவனை திருமணம் செய்து கொண்டது. ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரை க்ரிஷ் இப்படி நடந்து கொண்டது இல்லை. அதனால் தான் அவனின் செயலில் அழுகை வந்தது அவளுக்கு. அவளைக் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து கொண்டிருந்தான் க்ரிஷ்.


" ஐய்யோ ஹனி. உனக்கு நியாபகம் இல்லயா?. "


"என்ன நியாபகம் இருக்கணும்?. "


"நம்ம வாணிக்கா. " என்றபோது தேவ்வின் முகம் இறுகி இருந்தது.


" வா…ணி. தெரியலயே. "


" அடிங்க. உங்கப்பா டில்லில இருந்தபோது உங்க வீட்டுக்கு வேல பாக்க வருவாங்களே!. வாணி. ஒரு தமிழ் ஃபேமிலி. நாம கூட அவங்க கூடச் சேர்ந்து விளையாடுவோமே. நல்லா யோசிச்சிப்பாரு.‌ உனக்கு அப்ப அஞ்சி வயசு இருக்கும். டயம் டிராவல் பண்ணி இருபத்தி ரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி நடந்தத நினைச்சி பாரு. " எனக் காற்றில் விரல்களை அசைத்து யோசிக்க சொல்ல, வாசு அப்போது சமையல் கூடத்தில் இருந்து வந்தாள்.


அவளை‌ பார்க்கும்போது இப்போது தாரிகாவிற்கு வாசுவின் முகத்திற்கு பதில் வாணியின் முகம் தெரிய தொடங்கியது. மிகவும் கலகலப்பாக பேசிக் குழந்தைகளுடன் குழந்தைகளாக விளையாடும் வாணியின் முகம் கண்முன்னே வர.


"ஆமா க்ரிஷ். எனக்கு இப்ப தா தோனுது. ஆனா. " என ஜோஹிதாவை தேடி அவளின் முகம் பார்க்க, வாசுவிற்கும் ஜோஹிதாவிற்கும் எந்த ஒரு உருவ ஒற்றுமையும் தெரியவில்லை அவளுக்கு.


"எப்படி டா.? அம்மா மாறி ஜாட இல்லாம பொண்ணு இருக்கு.‌" எனக் கேட்க.


"அதுமட்டுமில்ல ஜோஹிதா ஆன்டி சென்னை. அத தாண்டி வந்தது நம்ம கலிபோர்னியாக்கு தானா. சோ. இது நம்ம வாணி அக்காவோட மறுபிறவியாத்தா இருக்கும். "


"அப்ப இது லவ் ஸ்டோரி இல்லயா. அமானுஷ்ய கதையா. "


" அமானுஷ்யமா. அப்படின்னா. "


"அதுக்கு உனக்கு நா விளக்கம் சொல்ல விரும்பல. விடு. இந்த உலகத்துல ஒரே ஜாடைல ஏழு பேர் இருப்பாங்களாம். பாட்டி சொன்னாங்க. "


"அப்ப நாம ரெண்டு பேர பாத்துட்டோம். மீதி அஞ்சிப் பேர் எப்ப வருவாங்க. "


"உன்னோட கம்யூட்டர் க்ராஃபிஸ்ல. " என்றான் தேவ்.


'நீ இன்னுமாட உக்காந்திருக்க.' என்பது போல் பார்த்தனர் இருவரும். தேவ்வின் குரல் கேட்டதும் தாரிகா க்ரிஷை விட்டு விலகி அமர்ந்தாள். ஏனெனில் இருவரும் ஒரு சேரில் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருந்தனர். 


‘நல்ல ஃப்லோல போக்கிட்டு இருந்த க்ரிஷ்ஷோட ரொமாண்டிக் மூட, தத்தி மாறிக் கத்தி கலச்சிட்டான் இந்த தேவ்.’


" உனக்கு லவ்வு செட்டாகலன்னு. பண்ற எங்கள ஏன்டா டிஸ்டர்ப் பண்ற. நாங்க கல்யாணம் ஆன கப்பில்ஸ். அப்படி இப்படி தா இருப்போம்‌. நீயா நாகரீகம் கருதி தள்ளி உக்காந்திருக்க வேணாம். ச்ச... சரி அப்படியே போறப்போ எம்மகனையும் தூக்கிட்டு போ. நாங்க கொஞ்சம் நேரம் கழிச்சி. இல்ல நாளைக்கி வந்து கூட்டீட்டு போறோம். " என மனைவியின் மடியில் அமர்ந்து கொண்டு அவளைக் கொஞ்ச தொடங்க.


" Choose any one. " எனத் தேவ் சிறுவனின் முன் சில ஸ்பூன்களை வைத்தான். அது முள் கரண்டி என்று சொல்லப்படும் Fork. மற்றும் கத்தி. சிறிதும் பெரிதுமாய் இருந்தது.


"இது ஓகே தேவ் அங்கிள். " என‌ ஒரு முள் கரண்டியை எடுத்துக் கொடுத்தான் சிறுவன்.


"சொல்லு எங்க குத்தலாம். கை, இல்ல கழுத்து." என அந்த முள் கரண்டியை சொருக இடம் ‌‌கேட்க.


" அங்கிள் நா நேத்து கிரானி கூட மூவி பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு ஆளுக்கு இந்த மாறிப் பெரிய சைஸ்ல இருக்குற Fork க. இந்தப் பக்கம் குத்தி அந்தப் பக்கம் எடுத்தாங்க. அத வேண்டுதல்னு சொன்னாங்க பாட்டி. நாமும் ஏன் வேண்டிக்கிட்டு அப்பாக்கு இத குத்த கூடாது.‌"


" குட் ஐடியா. " எனத் தேவ் முள் கரண்டியை எடுத்தான்.


" எது குத்த போறீங்களா.‌! டேய் அது அழகு குத்துறதுடா அதெல்லாம் சாமிக்கு வேண்டிக்கிட்டு பண்றது. " என்றான் க்ரிஷ் அவசர அவசரமாக. பயந்துவிட்டான் போலும்.


" மாதேஷ் வேண்டிக்கிட்டதுனால உனக்குப் பண்றேன். அவ்வளவுதான். " என க்ரிஷின் கன்னத்தைப் பதம் பார்த்த நெருங்க, க்ரிஷ் எழுந்து ஓடத் தொடங்கினான்.


" கார்த்தி மாமா. கார்த்தி மாமா. என்னைக் காப்பாத்துங்க. கொலகார பாவி. என்ன கொல்ல வரான் என்னைக் காப்பாத்துங்க. கார்த்தி மாமா. " எனக் கத்திக் கொண்டே கார்த்திகேயனின் பின்னால் ஒழிய. தேவ் கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கையில் இருந்ததை கீழே போட்டு விட்டுச் சென்று விட்டான்.


"நீங்க இருந்ததுனால இன்னைக்கு நான் தப்பிச்சேன்‌. ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி மாமா.‌ பை. " என இருவரும் செல்ல, கார்த்திக் மட்டும் அப்படியே நின்றான்.


அவனுக்கு இந்த இருவரும் எதையோ நினைவு படுத்தி சென்றாகத் தோன்றியது.

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


நேசிப்பாயா 13

 

நேசிப்பாயா 15

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...