அத்தியாயம்: 13
போடாப் போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு போடா
போடாப் புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
அது ரிங் டோங்னுக. நம்ம தாரிகா தேவ்விற்காக மட்டுமே தேடி தேடி வைத்த ஸ்பெஷல் ரிங் டோன். பாடலுக்கு முன்னால் வருகிற இசை அருமையாக இருக்கும். காதுகளில் இசை கேட்டதும், கால்கள் தானாக ஆட, கைகள் ஃபோனை எடுக்காது தேவ்வை கண்முன்னே நிறுத்திப் பாடிக் கொண்டு இருந்தது. முழுதாக ரிங் அடித்துக் கடைசி ரிங் என்று வரும்போது அட்டன் செய்தாள் தாரிகா.
'இவனா!. இவெல்லாம் நம்ம கிட்ட பேசமாட்டானே?. ஏ திடீர்னு கூப்பிட்டுக்கான்?. அதுவும் வீடியோ கால்.!' என நினைத்தபடி அட்டன் செய்ய, அந்தத் திரையில் தெரிந்தது அவளின் கணவனின் உருவம்.
" வாசுவ பக்க வந்தேன். அவா கையால பண்ண டிப்பன். ம்... டெலிஷியஸ்." என வாசுவை புகழ்ந்தபடி உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.
"டிப்பன் மட்டும் தானா?. " என்றான் தேவ்.
அதில், ‘அதா தட்டு காலியாகிடுச்சில்ல கிளம்புடா’ என்ற பொருள் இருந்தது.
" நோ... நோ... டிப்பன் தா முடிஞ்சிருக்கு. இப்ப டயம் பத்து தான ஆகுது. இன்னும் டூ ஹவர்ஸ் வெயிட் பண்ணா லன்ச். அப்படியே ஒரு சிக்ஸ் ஹவர்ஸ் வெய்ட் பண்ணா டின்னர். எல்லாத்தையும் வாசு கையாலயே செஞ்சி செஞ்சி தருவா. நா சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். அவள பாத்து ரசிச்சிட்டே. " என்க.
" உனக்குன்னு ஒருத்திய ஹோட்டல் ரூம்ல விட்டுட்டு வந்திருக்க நியாபகம் இருக்கா?. "
"நா மறக்கணும்னு நினைக்கிற விசயத்த ஏன்டா நியாபகப்படுத்திக்கனும். நானே கல்யாண விசயத்துல அவசரப்பட்டுட்டோமோன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்ச பொருத்திருந்தா வாசுவ ஓகே பண்ணிருப்பேன். ச்ச." என்று வருந்திப் பேசிய போது தான் தாரிகாவின் என்ரி.
" இப்ப கூடப் பண்ணலாம். உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ன கல்யாணம் பண்ணது மறக்க வேண்டிய விசயம் சொல்வா!. இடியட். ப்ராட். நா மறக்க வேண்டியவளா." என எந்த இடம் என்று கூடப் பாராது தலைமுடியை பிடித்து உலுக்கி எடுத்து விட்டாள் தாரிகா.
" நா உனக்குப் போர் அடிச்சிட்டேனாடா.! "
"ச்சச்ச. நா அப்படி சொல்ல ஹனி. சும்மா ஒரு விளையாட்டுக்கு. " என்றவனை மீண்டும் உலுக்க,
" இருக்குற நாலு முடிய பிச்சி எடுத்துடாத டா செல்லம் அப்றம் உன்னோட க்ரிஷ்ஷ யாருமே பாக்க மாட்டாங்க. " எனக் கலைந்த தன் சிகையை சரி செய்ய,
"அது தான்டா எனக்கும் வேணும். " எனத் தலையில் கைவைக்க அவன் லாவகமாக அவனை அணைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டான்.
" நீ இப்படி கோபப்படுறா செம்ம ஹாட்டா இருக்கு ஹனி. மை ஸ்வீட் ஆண்டு ஹாட் ஹனி. " எனக் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளுக்கு வந்த கோபம் எங்க சென்றது என்றே தெரியவில்லை. சிறு நாணம் வந்தது ஆடவனின் ஆழ்ந்த குரல் கேட்கையில்.
" வெ…ல் ரொமாண்டிக் ஸீன் ஒட்டிக்காமிக்க இது ஒன்னும் மூவி தியேட்டர் கிடையாது. " என்றபடி வாசு வந்தாள். தாரிகா சிறு வெட்கத்துடன் முகம் சிவக்க விலகி நின்றாள்.
"பட் நல்லா இருந்துச்சி. நா பாத்துட்டேன் ப்பா. " என்று கண்சிமிட்டாள் வாசு.
"பாத்துட்டியா. நல்லா பாத்தியா இல்ல. ஒன்ஸ்மோர் வேணுமா." எனத் தன் மனைவியை இழுக்க, அவனின் தலையில் தட்டினான் ருத்ரா. தாரிகா அவனின் தொடையில் அடிக்க என இரு பக்கமும் அடி விழுந்தது.
"ஹேய்! என்னங்கடா அடிக்கிறீங்க!. அது எம்பொண்ட்டிடா. எங்க வேண்ணாலும் கட்டிப்பிடிப்பேன். கிஸ் அடிப்பேன். அதுக்கு என்ன உங்களுக்கு. ஆமா. நீங்க ரெண்டு பேரும் விரோதிங்க தான. எப்பருந்து ஒன்னு சேந்திங்க. " எனப் பாவமாய் தலையைத் தடவியபடி கேட்க,
"இப்ப தா அரமணி நேரத்துக்கு முன்னாடி. " தாரிகா சந்தோஷமாகக் கூறினாள். ஏனெனில் பல ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கு ஃபோன் செய்திருக்கிறான் ருத்ரா. அந்தச் சந்தோஷம் தான்.
" அதெல்லாம் ஒன்றுமில்ல. " என அவளின் முறுவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தேவ்.
சிறு வயதில் இருந்தே அப்படித்தான். தாரிகாவின் முக்குடைப்பது போல் தேவ் பேசுவதால் தான் அவளுக்கு அவனைக் கண்டாலே ஆக மாட்டேங்கிது. சொல்லபோனால் இருவருக்கும் ஒரே வயது தான். ஒன்றாகவே தான் சுற்றுவர். அத்தை வீட்டிற்கு அதிகம் சென்றது இல்லை என்றாலும் தன்யாவும் தாரிகாவும் சிவ்ராம் வீட்டில் தான் அதிகம் இருப்பர்.
சிறுவர்களாக இருந்தபோது தேவ் செய்யும் வீர தீரச் சாகச வித்தைகளுக்கு அவள் தீவிர விசிறி. சைக்கிள் ரேஸ், பைக் ரேஸ், basketball, soccer எனத் தன் திறமையால் அத்தை மகள்கள் இருவரையும் கவர்ந்து வைத்திருந்தான். இருவரும் அந்த அழகிய அமெரிக்க இளைஞனின் செயல்கள் பிடித்திருந்தது. ஆனால் அந்த ஒரு நாள். தாரிகாவின் மனதின் சிகரத்திலிருந்து சர் எனக் கீழே இறங்கி விட்டான் தேவ் அதுவும் ப்ரேக் பிடிக்காத மண்ணு லாரிபோல் வேகமாக..
அவனின் பதினைந்து வயதில் இருந்தே தனியாக படகை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஏரிக்கு அல்லது கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அவ்வபோது தாரிகா தன்யா புவனா என மூவரும் உடன் செல்வர். க்ரிஷ்ஷும் தான்.
அப்போது அங்குத் தேவ்வின் பெண் தோழியைப் பார்க்க, தேவ் அவளைக் கட்டியணைத்து வரவேற்றான். அது பிரச்சினை இல்ல. ஆனால் செல்லும்போது அந்தப் பெண் தோழியின் இதழில் கவி பாடியது தான் பிரச்சினை.
பாவம் தாரிகா. ஆண்களுடன் நெருக்கம் காட்ட கூடாது. தனிமையில் அவர்களுடன் இருக்க கூடாது. முக்கியமாகத் தொட விடாக் கூடாது. என நம்ம ராசாத்தியின் போதனையில் வளர்ந்த அவளுக்குக் கண்முன்னே தேவ் காட்டிய பாலிவுட் படக் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
' அம்மாடி தாரிகா. வெளிநாட்டுக்கெல்லாம் போற. அங்க பயலுக கண்ட மேனிக்கி பழகுவானுங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். அதுனால உம்மாமெ மகன்களா இருந்தா கூட அவனுங்கள எங்க கைய தவிர வேற எங்கையும் தொட விடாதடி. ஆம்பள பயலுக எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு காத்திட்டு இருப்பானுங்க. கவனமா இருடி யாத்தா. ' அது ஒவ்வொரு முறையும் அவளும் தன்யாவும் சிவ்ராமின் வீட்டிற்கு செல்ல விமானம் ஏறும்போது கூறும் அறிவுரை.
இதுவரை சினிமாக்களில் கூடக் காட்டிடாத காட்சியைத் தேவ் நேரில் காட்ட,
"நீ அவள கிஸ் பண்ணியா?. " என்றாள் விழி விரிய…
" ம்… இப்ப என்ன அதுக்கு?. "
"நீ அவள உதட்டுல கிஸ் பண்ணிருக்க!. " என மீண்டும் கேட்க, அவளை வித்தியாசமாகப் பார்த்தான் அவன்
ஏனெனில் முத்தம் குடுத்தாலே குழந்தை பிறந்து விடும் என்று நம்பும் ஒன்றுமறியா 90's kids அவள். அவள் முன்… ச்ச…
அத்தோடு விடவில்லை தாரிகா. அம்மா, அப்பா, மாமா, அத்தை, ராசாத்தி பாட்டி எனக் கண்ணில் சிக்குபவரிடமெல்லாம்.
"தேவ் ஒரு பெண்ணுக்கு முத்தம் குடுத்தான். அதுவும் உதட்டுல. " எனச் சொல்லித் திரியும் அவளைக் கண்டால் அவனுக்கு பட்டிக்காடாகத் தெரிந்தது. கூடவே இந்த ராசாத்தி பாட்டியும் சேர்ந்து கொண்டு அவனைக் கேலியாக பேச, கோபமானவன் தாரிகாவின் ரெண்டை சடைகளில் ஒன்றை பிடித்து இழுத்து வந்து,
"country brute. இடியட். உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா! நாகரீகம் தெரிஞ்சிருந்தா இப்படி எல்லார்கிட்டையும் போய் இத சொல்லிட்டு இருக்க மாட்ட. ஓட்ட வாயி ஊர் கிழவி. " எனத் திட்ட,
"யாரு நானா ஊர் கிழவி. இருந்துட்டு போறேன். உன்ன மாறி ப்ளே பாயா இருக்குறத விட அதுவே மேல். கட்டிப்பிடிக்கிறதும் முத்தம் குடுக்குறதும் தா நாகரீகம்னா எனக்கு அந்த நாகரீகம் தேவையே இல்ல. " என்றவள் அதன் பின் சிவ்ராமின் வீட்டிற்கு வந்தது அவரின் மருமகளாக மட்டும் தான். அதன் இடையில் வரவே இல்லை.
அமிர்தாவும் எவ்வளவோ அழைத்துப் பார்த்தாள். " என்னோட முடிய பிடிச்சி இழுத்துட்டு வந்த அவன எங்கிட்ட எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேக்க சொல்லுங்க. அப்பத் தா நா உங்க வீட்டுக்கு வருவேன். " எனப் பிடிவாதமாக இருந்தவளை மன்னிப்பு கேட்காமலேயே இழுத்து வந்தது க்ரிஷின் காதல்.
தாரிகாவிற்கு அமெரிக்க கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் தேவ்வை காட்டிலும் க்ரிஷ் மிக மிக நல்லவனாகத் தெரிந்தான். அது தான் க்ரிஷின் மேல் காதல் வர வைத்து. அவனுக்கு அவளின் மீது ஆசை தான். அதனால் தான் தன் கல்லூரி படிப்பைச் சென்னையில் தன் அத்தை வீட்டில் தங்கி படித்தான்.
அவனின் நேசம் தான் அவளின் கல்லூரி முடியும் முன்னே கல்யாணமும் செய்ய வைத்தது. க்ரிஷ் அவனை மேற்கொண்டு படிக்க வைத்து இருவரும் சேர்ந்து தான் அந்த சாஃப்ட் வேர் கம்பெனியை நடத்துகின்றனர்.
"இங்க பாரு க்ரிஷ். நீ அவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா நாளைக்கி உனக்கும் என்னோட நிலம தா. தனியா கூட்டீட்டு போய் என்ன கெடுத்தான்னு சொல்லி ஊர கூட்டி பஞ்சாயத்து வச்சிடப் போறா. மரியாதயா அவள விட்டுடு வேற யாரனாலும் கல்யாணம் பண்ணிக்க அதுதா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது." என க்ரிஷின் காதல் விசயம் தெரிந்ததில் இருந்தே அவனின் மனதை கலைக்க முயன்றான் தேவ்.
"சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணா குழந்த பிறக்குறதுல பிரச்சன ஆகுமாம். இதுவும் கண்டே பிடிக்க முடியாத எல்லா வியாதியும் பிள்ளைக்கி வந்து சேருமாம். நாசா சைன்டிஸ்ட் சொல்றத நீ கேக்கல." எனத் திருமணத்தை நிறுத்த என்னென்னமோ பேசிப் பார்த்தான்.
ஆனால் முடியவில்லை. இதோ கல்யாணம் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டது. கேலியும் கிண்டலுமாக அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இருவரும் க்யூட் கப்பில். எத்தனை வேகமாகப் பற்றிக் கொண்டு சண்டை போடுகின்றனரோ அதைவிட வேகமாகப் பற்றிய நெருப்பு அணைந்து விடும். அந்த அளவுக்குத் தான் இருவரின் ஊடல் இருக்கும்.
'சரி அறியாத வயசுல அப்படி பேசிட்டேன். அதுக்காக இப்ப வரைக்கும் மூஞ்சிய தூக்கிக்கிட்டேவா திரிவாங்க. இப்ப நா அவனுக்கு அண்ணி. அதுக்காகவாது எனக்கு அவெ ரெஸ்பெக்ட் குடுத்து தான் ஆகணும். அது மாட்டேன்னு சொன்னா, என்ன அர்த்தம். ' தாரிகா மைண்ட் வாய்ஸ்.
மாதேஷ் மேஜை மேல் அமர்ந்து கொள்ள, தேவ் அவனுக்குத் தன் கின்னத்தில் இருந்த வெள்ளரிக்காயை எடுத்து ஊட்டிக் கொண்டிருந்தான். வேகமாக வந்து தன் மகனைத் தூக்கிக் கொண்டாள் தாரிகா.
" என்னோட பையன நா வெள்ளக்காரனாட்டம் வளக்க விரும்பல. காரமா சாப்பிட்டு பழகுனாத்தா சூடு செரண இருக்கும். எதிர்ப்புச் சக்தி உண்டாகும். " எனத் தேவ்வை பார்க்காது இதழ் சுழித்து சொல்ல, தேவ்வும் அவளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் தாரிகாவின் இதழ்கள் தான் தேவ்வை திட்டிக் கொண்டே இருந்தன. 'அப்படில்லாம் ஒன்னுமில்லையாம்ல. இருடா. ஒரு நாள் நீயா வந்து எங்கிட்ட கெஞ்சாவ. அப்ப நா யாருன்னு காட்டுறேன். திமிருபிடிச்சவெ.' எனத் திட்டிக்கொண்டே மகனுக்கு ஊட்ட, அப்படியொரு சந்தர்ப்பமே வராது என்பது போல் அமர்ந்திருந்தான் தேவ்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..