அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 20 அமுதா தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். புதுமணத் தம்பதியினர் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆர்த்தியும் அவர்களுடன் சென்றிருக்க, தந்தையும் மகனுமாய் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். கூடத்தில் இருவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற சொந்தங்கள் அவரவர் இல்லம் சென்றிருந்ததால் வீடே நிசப்தமாக இருந்தது. அப்பொழுது அமுதா தர்மாவிடம் ஒரு உறையை நீட்டி, "இதுல வெளிநாட்டுக்குப் போறதுக்கானப் புத்தகம் இருக்கு. வேலை காரணமா வெளிநாடு போறதுன்னா தாராளமா போப்பா. இல்ல சென்னைலயே பார்க்குறதா இருந்தாலும் சரித்தான். இனி யாரும் உன்னோட விருப்பத்தைத் தடுத்து நிறுத்த மாட்டோம். ஆனா நாளைக்கு கிளம்புற நீ இந்த ஊர் பக்கமே வராம இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்." என்று விட்டு சர்வதேச கடவுச்சீட்டைத் தர்மாவின் கையில் கொடுத்தார் அமுதா. அதிர்ந்து போய் நின்றான் தர்மேந்திரன். அவன் மட்டுமல்ல நெல்லையப்பனும் தான். இதற்கு முன் பல முறை வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம், "வேண்டாம் ...