முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

உறவு 20

  அத்தியாயம்: 20   அமுதா தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.   புதுமணத் தம்பதியினர் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆர்த்தியும் அவர்களுடன் சென்றிருக்க, தந்தையும் மகனுமாய் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.   கூடத்தில் இருவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற சொந்தங்கள் அவரவர் இல்லம் சென்றிருந்ததால் வீடே நிசப்தமாக இருந்தது.   அப்பொழுது அமுதா தர்மாவிடம் ஒரு உறையை நீட்டி, "இதுல வெளிநாட்டுக்குப் போறதுக்கானப் புத்தகம் இருக்கு. வேலை காரணமா வெளிநாடு போறதுன்னா தாராளமா போப்பா. இல்ல சென்னைலயே பார்க்குறதா இருந்தாலும் சரித்தான். இனி யாரும் உன்னோட விருப்பத்தைத் தடுத்து நிறுத்த மாட்டோம். ஆனா நாளைக்கு கிளம்புற நீ இந்த ஊர் பக்கமே வராம இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்." என்று விட்டு சர்வதேச கடவுச்சீட்டைத் தர்மாவின் கையில் கொடுத்தார் அமுதா.   அதிர்ந்து போய் நின்றான் தர்மேந்திரன். அவன் மட்டுமல்ல நெல்லையப்பனும் தான்.   இதற்கு முன் பல முறை வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதெல்லாம், "வேண்டாம் ...

உறவு 19

  அத்தியாயம்: 19   மாலை பரிசம் போட்டு, மறுநாள் காலையில் ஊர் கோவிலில் திருமணம். ஏற்பாடுகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தன.   ஊரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நெல்லையப்பனின் சொந்த பந்தங்கள் ஒன்று கூடி நின்றனர். மாவிலைத் தோரணங்கள் கட்டி, பூ அலங்காரத்தில் மணமேடை ஜொலித்தது.   ஒரே தங்கையின் திருமணம். அதிலும் அவள் ஆசைப்பட்டவனுடன் நடக்கும் திருமணம் என்பதால் தங்கையின் மனம் வாடாத படி அனைத்தையும் முன் நின்று செய்தான் தர்மா.   மாலை ஐந்து மணி போல் இசக்கிமுத்துவின் குடும்பமும் உறவுகளும் வந்திறங்கினர். ஏழு மணி போல் நிச்சயதார்த்தம். ஆர்த்தி பட்டுப் புடவையில் தன் அண்ணனுக்கு அருகில், வெண்குழலிக்கானச் சேலையை ஏந்திக் கொண்டு வந்தாள்.   நாதஸ்வரம் இசைக்க, மேள தாளத்துடன் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டை நோக்கி நடந்தனர்.   அங்கு சந்தனம் குங்குமத்துடன், நெல்லையப்பனையும் அமுதாவையும் வரவேற்பில் கண்ட ஆர்த்தியின் கண்கள் தர்மாவைத் தேடி அலைந்தன. ஏனெனில் ஊர் வந்து சேர்ந்த நாளில் இருந்து அவள் போடும் எந்தக் குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை அவனிடம். பார்க்கப்பட்டது, படிக்...

like

Ad