முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 24

  அத்தியாயம்: 24 "அடியே தாமர... தாமர... எந்திரிடி. மணி எத்தனன்னு பாத்தியா. ரா முழுக்க அந்த ஃபோனு கழுதைய தூக்கமில்லாம நோண்ட வேண்டியது. பகல்ல எந்திரிக்க என்னைக் கத்த வைக்கிறது. என்ன பிள்ளையோ நீ. காலேஜ்க்கு நேரமாச்சின்னு கத்துவல்ல அப்ப பாத்துக்கிறேன்." என முதல் சில வார்த்தைகளை மட்டும் சத்தமாக பேசியவர், பின் வந்ததைச் சடைப்பாக முணுமுணுத்தார் தமிழரசி. சுருக்கமாக அரசி. ஊர் மதுரை என்பதாலோ என்னமோ அந்த வீட்டின் மீனாட்சியான அரசியின் ஆட்சி தான் நடைபெறுகிறது. காலையிலேயே வயலுக்குச் சென்று கீரை பறித்து எடுத்து வந்தவர். இன்னும் எழாமல் உறங்கும் மகளை கண்டு கத்திய படியே சமையலறைக்குள் சென்றார்‌.  "எம்மோய் பசிக்கிது. என்ன வச்சிருக்க? " என்றபடி சட்டியில் இருந்த கஞ்சியை எடுத்தான் பாண்டி. அவனின் கையைத் தட்டி விட்டார். "ம்மா…" என அலற, "காலங்காத்தால பல்லக் கூட வெளக்காம, சொத்து சட்டிய தூக்குற. கூறு கெட்ட கழுத. போய் வெளக்கிட்டு வா. " என்ற தாயைக் கண்டு கொள்ளாது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தட்டை எடுத்துக் கொண்டு சோத்து பானையுடன் தரையில் அமர்ந்தான்.  "இருடா. நீச்சத்தண...

பனி 23

  அத்தியாயம்: 23 திருமணம் சொர்க்கத்தில்… நிச்சயிக்க படலாம்… நடப்பது பூமியில் அல்லவா...  பஞ்ச பூதங்கள் சாட்சியாய்... நான்கு வேதங்கள் ஓத... மூன்று முடிச்சிட்டு... இரு மனங்கள் இணைந்தே...  ஒருயிராய்த் திருமணம்…  அதுபோன்ற ஒரு திருமணம் தான் நடக்க உள்ளது. பைரவியால் நம்ப முடியவில்லை, இத்தனை விரைவாக திருமணம் நடக்க உள்ளதை. ஒரு வாரம்… ஏழு நாட்கள்… 168 மணி நேரத்தில் அத்தனையையும் சிறப்பாக ஏற்பாடு செய்ய முடியுமா என்றால், முடியும் என நிறுப்பித்திருந்தான் அவனின் மணாளன். மதுசூதனன் திருமணத்திற்குப் பெண் என்று முதலில் நேரில் பார்த்தது பைரவியைத்தான். மற்றவர்களைப் புகைபடத்தில் பார்த்தே வேண்டாம் எனத் தட்டி விட்டு விடுவான். ஆனால் பைரவியைப் புகைபடத்தில் கூடப் பார்க்காது நேரில் சந்தித்தான். அந்த ரெஸ்டாரன்ட்டில் அவசர அவசரமாக நுழைந்து, விழிகளைச் சுழல விட்டவளின் முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அது அடி மனதில் பூப் பூத்தது போன்றொரு உணர்வைத் தந்தது நிஜம்.  இரண்டாம் முறை பார்த்த போதும் அப்படித்தான். கைப் பிடியைப் பிடித்து கொண்டு தன்னை எட்டி பார்த்த மங்கையின் முகத்தில் தோன்றிய ஒளி தனக்கானத...

like

Ad