முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 67

அத்தியாயம்: 67 நடு வீட்டில் ஒற்றைக்காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி, தலை விரி கோலமாய் ஆங்காரம் கொட்டும் விழிகளால், தன் முன் இருந்த கணவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள் ஷீலா.  "ஷீலு அவெ மாட்டிப்பான்னு நான் எதிர் பாக்கலம்மா. நம்பு." என்றபடி நெருங்கி வர, "நீ எதிர் பாத்திருக்கணும். அந்த அகாடமிக்காரெ எதுலயும் மாட்டாம, நம்மலயும் தேடாம, திமிரா சுத்திட்டு திரியும் போதே நீ உசாராகிருக்கணும். இப்ப வந்து நம்ப சொல்ற! எப்படி நம்புறது நான் உன்ன?"  "ம்ச்‌… நான் அவன மதுசூதனன் பின்னாடி போகச் சொல்லல.‌ அவன ஸார் பாத்துக்கிறதா சொன்னாரு. இப்ப நான் அவன ஊர்வலத்துல கலவரம் பண்ணி, அந்தக் கண்ணாயிரத்த கொல பண்ணத்தான் சொன்னேன். சரியா செய்வியான்னு நினைச்சேன். போதைல மாட்டிப்பான்னு நான் நினைக்கல. "  "அவெ சரியாத்தா இருந்தான். நீ தான் தப்புக்கணக்கு போட்டுட்ட." என ஆங்காரமாக கத்த, "நான் என்ன பண்ணேன்?" என்றவனைப் பேச விடாது, "எனக்கு தெரியாது. விடிஞ்சதும் எந்தம்பி இங்க இருக்கணும். அவனுக்கு ஏதாவது ஒன்று ஆச்சி!! " என விழி உருட்டி மிரட்டிச் சொல்ல, யோசனையுடன் நின்றான் விசாகன்...

பனி 66

  அத்தியாயம்: 66 சுதந்திர இந்தியாவில் தன் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. இங்கு அமைதியான முறையில் போராடி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அடைய முடியும். நம் நாடே இது போன்ற அஹிம்சை வழியில் போராடி தானே விடுதலை பெற்றது.  தேசத் தந்தையின் கொள்கைகளை முன்னிருத்தி அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது அந்த ஊர்வலம். திட்டமிட்ட படி அது மெரினா கடற்கரையில் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை நகர்ந்து செல்ல, மது பிரவீனின் மூலம் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்கினான்.  விருப்பமே இல்லை என்றாலும் தாமரை என்ற ஒரு ஜீவனுக்காக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான் மது. அவனின் கையில் ஒரு பதாகையை கொடுத்து நடக்கச் சொல்ல, அதை விறிசியாக்கி வீசிய படி நடந்து வந்தான்.  அதிக மக்கள் கிடையாது தான். ஆனால் தனி தனியாக புறப்பட்ட அணிகள் வந்து சேர்க்கையிலும், ஆளுநர் மாளிகையிலும் எதாவது நடக்கலாம் என மது கணிக்க, அந்த இடத்தில் ராக்கியை நிறுத்தி. தன் கண் பார்வைக்குள் அனைவரையும் வைத்திருந்தான்‌.  தான் கணித்தது உண்மையாக இருந்தால் இந்த ஊர்வலம் நடக்க கூடாது என்பதற்காக தான் தாமரை கடத்...

like

Ad