அத்தியாயம்: 67
நடு வீட்டில் ஒற்றைக்காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி, தலை விரி கோலமாய் ஆங்காரம் கொட்டும் விழிகளால், தன் முன் இருந்த கணவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள் ஷீலா.
"ஷீலு அவெ மாட்டிப்பான்னு நான் எதிர் பாக்கலம்மா. நம்பு." என்றபடி நெருங்கி வர,
"நீ எதிர் பாத்திருக்கணும். அந்த அகாடமிக்காரெ எதுலயும் மாட்டாம, நம்மலயும் தேடாம, திமிரா சுத்திட்டு திரியும் போதே நீ உசாராகிருக்கணும். இப்ப வந்து நம்ப சொல்ற! எப்படி நம்புறது நான் உன்ன?"
"ம்ச்… நான் அவன மதுசூதனன் பின்னாடி போகச் சொல்லல. அவன ஸார் பாத்துக்கிறதா சொன்னாரு. இப்ப நான் அவன ஊர்வலத்துல கலவரம் பண்ணி, அந்தக் கண்ணாயிரத்த கொல பண்ணத்தான் சொன்னேன். சரியா செய்வியான்னு நினைச்சேன். போதைல மாட்டிப்பான்னு நான் நினைக்கல. "
"அவெ சரியாத்தா இருந்தான். நீ தான் தப்புக்கணக்கு போட்டுட்ட." என ஆங்காரமாக கத்த,
"நான் என்ன பண்ணேன்?" என்றவனைப் பேச விடாது,
"எனக்கு தெரியாது. விடிஞ்சதும் எந்தம்பி இங்க இருக்கணும். அவனுக்கு ஏதாவது ஒன்று ஆச்சி!! " என விழி உருட்டி மிரட்டிச் சொல்ல, யோசனையுடன் நின்றான் விசாகன்.
இப்போது ஷீலாவின் ஆங்காரத்திற்கு காரணம், அவளின் தம்பி செந்தில். செந்தில்நாதன். இப்போது நம் மதுவின் பிடியில் உள்ளான்.
தாடையைத் தடவிய படி சோஃபாவில் யோசனையுடன் அமர்ந்திருந்த விசாகன், "சரவணா. " எனக் கத்த, ஒருவனாக அல்லாது ஐந்தாறு பேர் ஓடி வந்து அவனின் முன் நின்றனர். 'சொல்லுங்க முதலாளி.' என்பது போல்,
" முடிச்சிடுங்க. " என்று சொல்லி கால் மேல் கால் போட்டுக் கொள்ள, அவன் எந்த அர்த்தத்தில் கூறினான் என்பதை அறிந்து,
"பாஸ்…" என அனைத்து குரல் வளைவில் இருந்து ஒரு சேர அதிர்ச்சியுடன் குரல் வந்தது.
"சொன்னது கேக்கலயா! ஒரு நாள் கூட அவெ ஃபோலிஸ் ஸ்டேஷன்ல இருக்க கூடாது. நியூஸ்ல அவெ செத்திட்டாங்கிற செய்தி தான் வந்திருக்கணும். " என உத்தரவிட்டான் அவன்.
சரவணன், "விசா அவெ செத்துட்டா ஷீலாவ எப்படி சமாளிப்ப?".
"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க சொன்னத செய்ங்க." என மற்றவர்களை துரத்திவிட,
"இந்த முடிவ நீ எப்பயோ எடுத்திருக்கலாம்." என்றான் சரவணன். விசாகனின் முதன்மையான நம்பிக்கைக்கு உரிய ஆள்.
விசாகன், "அடி தாங்கி அவனுக்கு பழக்கம் இல்ல. எல்லாத்தையும் அவெ உலறுறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும். இல்லன்னா ஃபோலிஸ்ட்ட வசம்மா மாட்டாப்போம்."
"நாம மட்டுமில்ல. நம்மகூட தொழில் பண்ற எல்லாருமே தான். "
"அதுனால தான் சொல்றேன் முடிச்சிடலாம்னு. இல்லன்னா நம்ம கதை ஒரேயடியா முடிஞ்சிடும்." என்று சொல்லிச் சென்றான்.
விசாகன் தான் அந்தப் போதை கடத்தல் கும்பலின் தலைவன். ஒவ்வொரு மாதமும் கடல் வழியாக, தரை வழியாக, விமானம் வழியாக என அனைத்து பக்கத்தில் இருந்தும் சரக்கை பல ரிஸ்க் எடுத்து ஊருக்குள் கொண்டு வந்து சப்ளை செய்கிறான்.
அவன் பிடிபட்டால் அவன் டீல் வைத்திருக்கும் அனைவரும் மாட்டிக் கொள்வர். அரசியல் பிரமுகர்கள் உட்பட தொழில் ஜாம்பவான்கள் வரை ஊரில் பாதி பேர் இவனின் கஸ்டமர்ஸ் தான்.
இவன் ஆட்கள் பிடிபட்டால் உடனே வெளியே வர உதவுவார்கள் தான். ஆனால் இவனே மாட்டிக் கொண்டால் தங்களின் பெயர் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக என்ன வேண்டுமாலும் செய்வர். அதான் தன்னை மாட்டி விடும் ஆயுமான செந்திலை கொலை செய்யச் சொல்லிவிட்டு சென்றான்.
"இவனா! இவன எங்கருந்து பிடிச்சிங்க?" எனச் சற்று மிரண்டு போய் தான் கேட்டாள் பைரவி.
ராக்கி, "பிடிக்கிறதுக்கு அவெ என்ன கோழியா! ஈரத் துணி போட்டு சத்தமில்லாம பிடிக்க. "
"பாய் இவன எதுக்கு தூக்கிட்டு வந்திருக்கிங்க. காரணம் கேக்குறேன்."
பிரவீன், "கண்ணாயிரம் அங்கில நோக்கி கத்தியோட வரும் போது பிடிச்சோம்."
"எது பிடிச்சோம்மா! என்ன போலிஸ்ஸு, சத்தமில்லாம எங்களுக்கு கிடைக்க இருக்குற பேர தட்டிட்டு போகப்பாக்குறியா! நாந்தா அடிச்சி இழுத்திட்டு வந்தேன். " என்க, அவனை நம்பாதது போல் பார்த்தாள்.
"சரி உண்மையச் சொல்றேன். ஊர்வலம் ஆளுநர் ஆபீஃஸ் பக்கம் வந்ததும் வெள்ளையும் சொல்லையுமா நாலஞ்சி பசங்க, கைல போர்ட வச்சிட்டு, நாங்களும் இந்த ஊர்வலத்துல கலந்துக்கிட வந்திருக்கோம்கிற மாறி ஷீனப் போட்டானுங்க. கரெக்டா மனு குடுத்திட்டு வரும் போது அவனுங்கள்ல ஒருத்தே பிடிச்சிருந்த போர்டுக்குள்ள இருந்து கத்திய எடுத்து, எம்மாமனர பக்கம் கத்தாம சைலென்டா போக, நான் பாக்கல. ஆனா உன் புருஷெ பாத்திட்டான்.
அப்றம் என்ன! நாப்பது பேரு வந்தா கூட ஒன்டியா நின்று சமாளிக்கத் தெரிஞ்ச பிக்ளாக் கேட் செக்யூட்டிக்கு நாலு சின்னப் பயலுகள அடிச்சி தூக்குறதா கஷ்டம். அதா ஏர்லயே பந்தாடி தூக்கி போலிஸ்ட்ட குடுத்தோம். "
"இதுல செந்தில எப்படி மாட்டுனாங்கிறதே வரலயே. "
"ஃப்ளாஷ் பேக் முடியிறதுக்கு முன்னாடி உன்ன யாரு குறுக்க பேசச் சொன்னா!"
"சரி… நான் பேசல. " என இதழுக்கு சிப் போட்டுக் கொள்ள,
"அடிச்சி கொண்டு போய் ஆம்புலன்ஸ்ல ஏத்தி விட்டு, தர்மாஸ்பத்திரில படுக்க வச்சிட்டு, நாங்க தூரம நின்னு வேவு பாத்தோம். அப்ப இந்த கேணப்பயெ, கைல ஆப்பிளோட நலம் விசாரிக்க வராம, பாட்டிலோட வந்து பேச. ஆல்ரெடி நீ காட்டுன ஃபோட்டோலயும், நேத்து நாங்க இவன நேர்லயும், பாத்ததுனால, ஓயின் ஷாப் பக்கத்துல தான் இருக்கு வா ஓசில ஊத்திக்கலாம்னு கூப்பிட்டோம். உடனே பைக்ல ஏறி உக்காந்திட்டான்."
"பைக்ல டிபிள்ஸ்ஸா போனிங்களா!" என விழி விரிய கேட்க,
"நீ டிராபிக் போலிஸ்ஸா?"
"இல்ல."
"அப்றம் என்ன! வாய்க்கு போட்ட சிப்ப கரெக்ட்டா போடு." என்க, முறைத்தபடி நின்றாள் பைரவி. மீதி கதையைச் சொல்லி முடிந்தவன்,
"அவன பத்திரமா இங்க கூட்டீட்டு வந்து தொங்க விட்டு விசாரிச்சிட்டு இருக்கோம். இதுதான் நடந்தது. "
பிரவீன், "கொஞ்ச நாளைக்கி முன்னாடி தான் பையூ ஒரு கும்பல் சிக்கிச்சி. அதா கமிஷ்னர் பொண்ணு, கிரிஸ்டல் மெத் கலந்த டிரிங்க குடிச்சிட்டு சீரியஸ்ஸா இருந்ததே! எப்படி நடந்தது? யாரு சப்ளை பண்ணான்னு நம்மாளுங்க கண்டுபிடிச்சிட்டானுங்க. இதோ இவெந்தா மெயின் கல்ப்ரேட். நேத்து மது எங்கிட்ட ஃபோன் பண்ணி இவன பத்தி விசாரிக்க சொன்னான், இவெ மேல என்னென்ன கேஸ் இருக்குன்னு. அப்பத்தா தெரிஞ்சது டிப்பார்ட்மெண்டு இவனத் தீவிரமா தேடிட்டு இருக்குன்னு."
ராக்கி, "பட், இவெ சைடு டிஷ். மெயின் ஃபீஸ் உன் ஃப்ரெண்டோட அண்ணே தான். அது எங்களுக்கு தெரியும். பட், சட்டத்துக்கு தெரியணும்னா! இவன் மட்டும் வாயத் திறந்து அவெ பேர வாக்குமூலமா சொல்லி அப்ரூவரா மாறணும். அப்றம் எல்லா கேஸ்ஸும் முடிஞ்சிடும். கேஸ் க்ளோஸ். ".
"இன்னும் மூணு கேஸ் இருக்கு. அதுக்குள்ள க்ளோஸ்னு சொல்றிங்க."
ராக்கி, "என்னதது?"
"அது தாமரய யாரு கடத்துனான்னு கண்டு பிடிக்கணும். அப்றம் சுடரக்காவ யாரு கொன்னான்னு கண்டு பிடிக்கணும். நம்ம அகாடமிக்குள்ள வந்து நம்மலயே சிக்க வைக்க பாத்தது யாருன்னு தேட வேண்டாமா!"
ராக்கி, "ம்… தேடணும் தான். ஆனா மூணு கேஸ் இல்ல ஒரே ஒரு கேஸ் மட்டும் போதும். அந்த கேஸ்லயும் இவெ வாயத் திறந்தா நமக்கு லீட் கிடைக்கும். தாமரைய கடத்துனதும், நம்ம அகாடமிய இழுத்து மூட பாத்ததும் விசாகன் தான்.”
"எதுக்காக.?"
பிரவீன், "கண்ணாயிரம் அங்கிள் போட்ட அரசனூர் கேஸ்ல அவர பயங்காட்ட இப்படி பண்ணிருக்கானுங்க. "
"சிராஜ்!!. அவெந்தான?"
ராக்கி, "ம்… அவனே தான். அவெந்தா உம்புருஷனையும் பழி வாங்க இவனுங்கள ஏவி விட்டிருக்கான். "
"ஏன்?" என்றவளிடம் மதுவின் கெஸ்ஸை விளக்கமாக சொல்லி புரிய வைத்தான். சுடர் கொலைக்கும் சிராஜ்ஜிற்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற அவனின் சந்தேகத்தை மட்டும் ராக்கியிடம் சொல்லாததால் அது பைரவியின் காதிற்கு சொல்லவில்லை.
"இத எல்லாம் இவனே இவெ வாயல சொன்னானா! உங்க யூகமா? யூகம்னா அத உறுதிபடுத்தணும். இல்லன்னா யூகத்த நம்பிட்டு உண்மை தேடாம விடடுடுவோம்."
" நம்ம அகாடமிக்கு சந்தேகமே வேண்டாம். தாமரைய கடத்துனதுக்குத் தான் இவன விசாரிச்சிட்டு இருக்கேன்." என்றவன் செந்தில் இருக்கும் இடத்தை விட்டு வெளியே அழைத்து வர,
"இப்ப ஏன் உன்ன நாங்க கூட்டீட்டு வரச் சொன்னோம்னா. இவெ ஒரு ட்ரக் டீலர். சுடர் கேஸ்ல சம்மந்தப்பட்ட போதப் பொருள உள்ளூர்ல சப்ளை பண்றது இவனோட ஆட்கள். விசாகனோட அல்லகை இவனுக்கு தெரிஞ்சிருக்கும். " என்க, சுடரை பற்றி பேசியதும் கண்கள் மின்ன பைரவி ஆவலுடன் ராக்கியை பார்த்தான்.
பிரவீன், "இன்னும் ஒரு மணி நேரம் தான் இவன என்னால இங்க வச்சிருக்க முடியும். பத்து மணிக்கி அவன அந்த கமிஷ்னர் கிட்ட ஹண்ட் ஓவர் பண்றதா சொல்லிருக்கேன்."
"போலிஸ் ஸ்டேஷன்னுக்கு உள்ள போய்ட்டான்னா வை. முழு மனுஷனா வெளில விடமாட்டான். அந்த அளவுக்கு வெறில இருக்கு காவல் துறை. நாங்க விசாரிக்கிறத பாத்தா நீ கொஞ்சம் சந்தோஷப்படுவ. " என்றபடி, ராக்கி பைரவியை வெளியே நிறுத்தி விட்டு பிரவீனுடன் உள்ளே சென்றான்.
உள்ளே நடப்பதை வெளியே இருந்து கண்ணாடி வழியே கவனித்தவளுக்கு, செந்தில் வாங்கிய அடியை பார்க்கும் போது பாவமாக இருந்தது.
"சொல்றா… யார் யார் கூட டீலிங் வச்சிருக்கிங்க." எனப் பிரவீன் கேட்ட அடிக்க, செந்தில் வாயைத் திறக்கவில்லை.
ஏன் தாமரையை கடத்தச் சொன்னது யார்? கலவரம் செய்ய தூண்டியது யார்? தன் மாமனாரைப் போட்டுத்தள்ள சொன்னது யார்? என்று ராக்கி பாய்யும் பிரவீனும் டிசைன் டிசைனாக அடித்தும், பிரியாணி ஊட்டியும் கேட்கின்றனர்.
"பாய் என்னதிது? பிரியாணியா!" என அங்கிருந்த பார்ஸ்சலை பார்த்து கேக்க,
"எஸ்… மொத மொத என் ஒத்த ரோசாவ துரத்தி வந்து எங்கிட்ட சேத்ததே இவனோட அல்லக்கைங்க தான். அதனால க்வாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி குடுத்து, நல்லா கவனிச்சி விசாரிக்கிறேன். ஏன்னா பசில கண்டத பேசக் கூடாதுல. அதுமட்டுமில்லாம போதைல இருந்தாத்தா உண்மையையே பேசுவான். " எனப் செந்திலுக்காக வாங்கியவற்றை காட்ட,
"ஆனா பதில் மட்டும் வரல. ஏன் வரவே இல்ல?"
பிரவீன், "விசாகனுக்கு ஒருத்தெங்கிட்ட மட்டும் டீலிங் கிடையாது. அவனுக்கு ஏகப்பட்ட லிங்க் இருக்கு. எல்லாமே பெரிய பெரிய ஆளுங்க தான். அதுனால அவனும் வெறும் அம்பு தான் சுடர் விசயத்துல. யார் யாருக்கு பல்க்கா வித்தான்னு கண்டு பிடிக்கணும். "
செந்தில், சிராஜ் பெயரையோ அவனின் மச்சான் பெயரையோ சொல்லாது போதையிலும் தெளிவாய் இருக்க. அதனால் கடுப்பாகிப் போன ஆண்கள் இருவரும் அவனை நைய்யப்புடைந்தனர்.
பிரவீன், ‘இது சரிப்பட்டு வராது இவனுக்கு போலிஸ்ஸின் 3rd டிகிரி ட்ரீட்மெண்ட் தான் சரி’ என அவனை இழுத்துச் செல்ல, பைரவி அப்போது தான் தன் கணவனைத் தேடினாள்.
"பாய்!! என்னை அவரு தான் கார்ல கூட்டீட்டு வந்தார். இப்ப காணும். எங்க?" எனத் தேட,
" கூட்டீட்டு வந்தாரு இல்லம்மா. ட்ராப் பண்ணிட்டு போய்டாருன்னு சொல்லணும். உனக்கு கால் டாக்ஸி டிரைவரா இருந்து காசு வாங்காம சேவ செஞ்சிட்டு உடனே போய்ட்டான்."
"அப்ப நான் எப்படி வீட்டுக்கு போறது?"
"ஏன்? நான் உனக்கு டிரைவர் வேல பாக்க மாட்டேனா!"
"இல்லண்ணா நான் ஹாஸ்பிட்டலுக்கு போணும். சாரதாம்மாவ பாக்க."
"இவ்ளோ நேரத்துக்கு அப்றம் வேண்டாம். காலைல போ. "
"இல்லண்ணா. நான் அவங்கள பாக்கணும். எப்படி இருக்காங்கன்னு ஒரே ஒருக்க பாத்திட்டா நிம்மதியா இருப்பேன். மனசு அமைதியாகிடும். " என அடம்பிடிக்க, அவளை ஏற இறங்க பார்த்தான்.
"ஏன் பைரவி உனக்கு இவ்ளோ பிடிவாதம்? அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க உனக்கு? சுடர்ன்னு பேச்ச எடுத்தாலே உம்புருஷெ ஓடுறான். அவ்ளோ கோபம் வருது அவனுக்கு. இப்ப கூட சுடர் கேஸ்க்காகத்தான் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னோம்ங்கிற கடுப்புல தான் போய்ட்டான்.
ஆனாலும் அத கண்டுக்காம நீ மறுபடியும் மறுபடியும் சுடர் கிட்டயே வந்து நிக்கிறியே. எதுக்காக அவளோட கேஸ்ல இவ்ளோ ரிஸ்க் எடுக்குற? ஏன் உனக்கு அவள அவ்ளோ பிடிக்குமா?" என்றவன் பைக்கை கொண்டு வந்து அவளின் முன் நிறுத்தினான்.
"இல்லண்ணா. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். " என்க, அவன் புருவங்களை சுருக்கி பார்த்தான்.
"உங்களுக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும். நான் என்ன நினைக்கிறேனோ அத மட்டும் தான் செய்வேன். யார் சொன்னாலும் அப்போதைக்கி சரின்னாலும் நான் நானாத்தான் இருக்க விரும்புறேன்.
ஒரு லைஃப். அத ஹப்பியா நிறைவா வாழணும். நமக்கு புடிச்ச மாதிரி வாழணும். நமக்கு பிடிச்சவங்களுக்காக வாழணும். பிடிச்சவங்க கூட வாழணும். யாரோட கட்டாயத்துக்கும் விருப்பத்துக்கும் வாழ கூடாது. அது தான் சந்தோஷத்த அள்ளி குடுக்கும்.
எனக்கு sad memories பிடிக்காதுண்ணா. நாம வாழ்நாளோட இறுதி கட்டத்துல உயிர் பிரியுற தருணத்துல நம்ம லைஃப்ல நடந்த எல்லாத்தையும் நினைச்சி பாக்க தோணும்.
என்னோட வாழ்க்கைய திரும்பி பாக்கும் போது அது முழுக்க நான் தான் இருக்கணும். முழுக்க முழுக்க சந்தோஷமான நினைவுகள் மட்டும் தான் இருக்கணும். பொறாம, வன்மம், காயம், கோபன்னு எதுவும் இருக்க கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும். ஆனா நான் இப்ப ஹப்பியா இல்லண்ணா.
நாட்டுல ஒரு நிமிசத்துக்கு பல கற்பழிப்பு நடக்குது. பல கொலைகள் நடக்குது. அதெல்லாம் வெறும் நியூஸ்ஸா மட்டும் தான் தெரிஞ்சது. ஏன்னா செத்தது யாரோ.
இங்க அப்படி இல்ல.
ஒரு வேளை சுடரக்கா கூட நான் பழகாம இருந்திருந்தேன்னா கண்டிப்பா எனக்கு அவங்க மரணமும் நியூஸ் தான். ஆனா நான் பழகிட்டேன். என்னால அத விட முடியல. மனசுல ஏதோ ஒரு இடத்துல அது உறுத்திட்டே இருக்கு. அது யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி கூட செய்யலன்னா! என்னால என்னை மன்னிக்க முடியாதுண்ணா. " என நீண்ட விளக்கம் தர,
"எல்லாம் சரி தான் பையூ. சுடர் சுடர்ன்னு கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்லாம இருந்தேன்னா உன்னோட மேரேஜ் லைஃப் நல்லா இருந்திருக்கும்ல." என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அதில் கணம் இல்லை.
"என்ன காத்துல பறந்திட்டாளா!" என்றபடி திரும்பி பார்க்க, பையூ நடந்து சென்று கொண்டிருந்தாள்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..