முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 66


 

அத்தியாயம்: 66


சுதந்திர இந்தியாவில் தன் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. இங்கு அமைதியான முறையில் போராடி

தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அடைய முடியும். நம் நாடே இது போன்ற அஹிம்சை வழியில் போராடி தானே விடுதலை பெற்றது. 


தேசத் தந்தையின் கொள்கைகளை முன்னிருத்தி அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது அந்த ஊர்வலம். திட்டமிட்ட படி அது மெரினா கடற்கரையில் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை நகர்ந்து செல்ல, மது பிரவீனின் மூலம் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்கினான். 


விருப்பமே இல்லை என்றாலும் தாமரை என்ற ஒரு ஜீவனுக்காக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான் மது. அவனின் கையில் ஒரு பதாகையை கொடுத்து நடக்கச் சொல்ல, அதை விறிசியாக்கி வீசிய படி நடந்து வந்தான். 


அதிக மக்கள் கிடையாது தான். ஆனால் தனி தனியாக புறப்பட்ட அணிகள் வந்து சேர்க்கையிலும், ஆளுநர் மாளிகையிலும் எதாவது நடக்கலாம் என மது கணிக்க, அந்த இடத்தில் ராக்கியை நிறுத்தி. தன் கண் பார்வைக்குள் அனைவரையும் வைத்திருந்தான்‌. 


தான் கணித்தது உண்மையாக இருந்தால் இந்த ஊர்வலம் நடக்க கூடாது என்பதற்காக தான் தாமரை கடத்தப்பட்டிருக்க வேண்டும். ஊர்வலம் நடந்தாலே போதும். தாமரையை அடைகாக்க வேண்டிய அவசியம் இருக்காது. சந்தோஷமா நடமாடலாம், என்ற நினைப்பே அவனை இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைத்தது. 


முக்கியமாக, "அவ இந்த ஊர்வலத்துல கலந்துக்கிட்டா, நான் வர மாட்டேன். நீயே பாத்துக்க. " என ராக்கியிடமும் பாண்டியிடமும் கண்டிப்பாகச் சொல்ல, வேறு வழியில்லாது பைரவியும் சாருவும் தாமரைக்கு துணையாக சாரதா வீட்டில் விடப்பட்டனர். 


மது, "ராக்கி, அங்க எதுவும் அப்நார்மலா இருக்கா?" 


இருவரும் ப்ளூடூத் மூலம் இணைப்பில் இருந்தனர். 


ராக்கி, "இதுவர இல்ல. " 


"வாட்ச் பண்ணிட்டே இரு. புதுசா எந்த ஒரு வண்டி வந்தாலும் இன்ஸ்பெக்டர் சௌவுந்தர்க்கு இன்பார்ம் பண்ணு. நாங்க மாளிகைய நெருங்கிட்டோம். " 


"ஓகே… ஓகே… " என்றான் கடுப்புடன். 


'ச்ச இவெங்கூட பாடி கார்ட்ஸ் வேலைக்கி வந்ததுக்கு பதிலா இந்த வேலையே செஞ்சிருக்கலாம். பாரு கடைய தொரந்த ஒரு மணி நேரத்துல கல்லா நிறைஞ்சிடுச்சி. லாபமான தொழில் தான். சும்மா வா சொன்னானுங்க. கை தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள கவலை உனக்கில்ல ஒத்துக்கொள்ன்னு. நம்மோட கைத் தொழில் இது‌ தா‌‌ன். ' என்றவன் ஆளுநர் மாளிகைக்கு எதிரே ஜூஸ் கடை வைத்துக் கொண்டு நின்றான். 


ஆரஞ்சி பழங்களைப் பிழிந்து அதன் சாற்றை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி விட்டு நிமிரும் போது தான் கண்டான் பைக்கில் ஐந்தாறு பேர் வந்திறங்கும் காட்சியை. அவர்களும் கையில் நீதி வேண்டும் என்ற பதாகைகளைத் தாங்கி கொண்டு நின்றனர்.


"மச்சான், இங்க ஒரு கும்பலே வந்து இறங்கிருக்கு. காலேஜ் பசங்க மாதிரிதான் இருக்கானுங்க. " எனத் தகவல் சொல்ல,


கொண்டு வந்த மனுவை ஆளுநர் வசம் ஒப்படைத்து விட்டு வெளிவரும் போது, கலவரம் மூண்டது. 


அதில் மாஸ்க் அணிந்த ஒருவன் கண்ணாயிரத்தை நெருங்கி கத்தியால் குத்த வந்தான்.


___ 


"ப்ளிஸ்… கம் திஸ் சைடு. " என்று புன்னகையோடு அழைத்துச் சென்றாள் அந்த ரிசப்ஷனிஸ்ட். இதற்கு முன் வந்த போது கிடைத்த மரியாதையை விட இப்போது கிடைக்கும் வரவேற்பு பலமாய் இருந்தது. ‘இருக்காதா பின்னே முதலாளியை ஓடி வந்து வரவேற்கும் போது மரியாதை தானாக வந்து சேர்ந்தது.’ 


அதை அனுபவித்த படி பைரவி பெருமிதத்துடன் நடந்து சென்றாள். 


அது தீஷித்தின் அலுவலகம். அதில் அவனுக்கு என இருக்கும் தனி அறை. அதில் பைரவியை அமரச் செய்த வரவேற்பாளர், குடிக்க என டிரிங்ஸ் எடுத்து வந்து உபசரித்தாள். 


"ஃபைவ் மினிட்ஸ் மேம். நான் இன்பார்ம் பண்ணிட்டேன். ஸார் இப்ப வந்திடுவாரு. இஃப் யூ நீடு எனி திங். ப்ளிஸ் கால் மீ. " எனபீ பணிவுடன் சொல்லிச் செல்ல,


"சோக்காக்கிதே மருவாத. பைரவி நீ அதிர்ஷ்டசாலி டி. கைல ஸ்ட்ராபெரி ஜுஸ்ஸ குடுத்து உங்காருங்க… இருங்க… வெய்டுன்ங்க…ன்னு எத்தன ங்க போட்டுட்டு போறா! அன்னைக்கி ஆளு யாருன்னு தெரியாம அப்படி பேசிட்டா போல. பரவாயில்லை பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுவோம். " என இருகரங்களையும் மேலே உயர்ந்து சோம்பல் முறித்தவள் அறையைச் சுற்றி தன் பார்வையைச் சுழல விட்டாள். 


"இந்த அவக்கேடோக்கு செம்ம டேஸ்ட் இருக்கும் போல. எல்லாத்தையும் மரத்துலயே செஞ்சி வாங்கி வச்சிருக்கான். பாருடா பென் வைக்கிற ஸ்டாடுல இருந்து பூ ஜாடி, சுவத்துல மாட்டுற கடிகாரம், டீ கப்பு, ஏன் அத ஊத்தி வைக்கிற ஜாடி கூட மரம் தான். " என அதை கையில் எடுத்து பார்க்க நல்ல மணம் வந்தது. 


அனைத்தும் சந்தன மரத்தில் செய்தது. வாசம் நாசியை நிரப்பியது. முந்தைய காலத்தில் புதையல் இருக்கிறது என்று துணி போன்ற ஒன்றில் படம் வரைந்திருப்பார்களே அதைக் கூட மரத்தில் செய்து வாங்கி தொங்க விட்டிருந்தான். அதில் எதுவோ வரைந்திருக்க, 


"இது என்னென்னு கண்டு பிடிச்சா புதையல் கிடைக்குமா என்ன!" என வெகுநேரமாக அதில் வரையப்பட்டிருந்த  வரைபடத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முயன்றவளின் முயற்சியைக் கைவிடச் சொல்லி வந்தான் தீஷித். 


"இத ஃபாலோ பண்ணிட்டு வந்தா என்னோட வீடு தான் வரும். வருவியா? என்னோட வீட்டுக்கு. " என ஆழ்ந்த குரலில் கேட்டபடி வந்தவனின் குரலில் இருந்த உணர்வு அவளுக்குப் புரியவே இல்லை. 


"எந்த வீடு? சென்னையா! பெங்களூரா!" என விளையாட்டாக கேட்க, 


"பெங்களூர்." 


"வரலாம். ஆனா எனக்கு பாஷ செட்டாகாது."


"அப்ப செட்டான வருவா?" 


"ம்… " எனத் தோள் குளுக்கியவள், "இதெல்லாம் எங்க வாங்குனிங்க. உங்க ஊர்ல சந்தனமரம் அதிகமா இருக்குங்கிறதுக்காக எல்லாத்தையும் சந்தனத்துலயா செஞ்சி வாங்குவிங்க. சூப்பரா இருக்குது. " எனப் பாராட்ட,


"பாராட்டுக்கு நன்றி. இத வாங்கல. செஞ்சது. எல்லாமே எங்கையால செஞ்சது. "


"இந்தக் கையாலயா!" எனக் கரத்தை பார்க்க அதில் இருந்த வாட்ச் கூட மரம் தான். 


'ச்ச… இத்தன நாளா இவெங்கூட இருக்கேன். இதக் கூட பாக்கலயே.' எனத் தலையில் தட்டிக் கொள்ள,


"எனக்கு லக் வேணும்னு நினைச்சா இதக் கட்டிப்பேன். " என அவளின் பார்வைக்கு விளக்கம் தந்தவன்,


"எனக்கு மரத்துல பொருட்கள் செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும். அம்மா செஞ்சி தர்ற களிமண் பொம்மய பாத்து மரத்துலயும் அது மாதிரி செய்ய ஆசை வந்தது. கத்துக்கிட்டேன்." என்றவன் காட்டிய அழகிய கீ செயிண்னைப் பார்த்து வியந்து விட்டாள். அது நான்கே நான்கு பக்கங்களைக் கொண்ட மரத்தாலான புத்தகம். சிறியது. கையடக்கமான அதில் எதுவோ எழுதி இருந்தது. இல்லை வரையப்பட்டிருந்தது.


அது ஒரு கதை. நீதி நெறி கதை போலும். விடா முயற்சியை எடுத்துக்காட்டும் விதமாக இருந்த போதிலும் அந்த வரைபடம் மிகவும் நேர்த்தியாக நுணுக்கமாக தீட்டப்பட்டிருந்தது. 


"அமெய்சிங்… ரொம்ப அழகா இருக்கு. கீழ எதோ சிம்பள் மாதிரி இருக்கே! என்னதது?" 


"அது எங்க க்ளப் எம்பளம். எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப்பா இந்த மாதிரி ஐட்டம்ஸ் செஞ்சி  sell பண்ணிட்டு இருந்தோம்."


"இப்பவும் விக்கிறீங்களா?" என ஆவலுடன் கேட்க. 


"இல்ல." என ஒற்றை வரியில் பதிலளித்தவனின் முக மாறுதலை பெண்ணவள் கவனிக்கவில்லை. 


"வந்த வேலய பாக்கலாம். " என்றவன் அவளுடன் கணினி முன் அமர்ந்தான். அந்த மடிக்கணினியை வைக்க கூட  வேலைப்பாடுகளுடன் மரத்தாலானா மேஜை தான். அதில் இருந்த டிசைனை ரசித்தவளை வேலையில் மூழ்கச் செய்தான் தீஷித். 


பொழுதுகள் கலவாடப்படும் என்று கேள்வியுற்றதுண்டா. உண்டு. கலவாடிக் கொண்டிருக்கிறான் தீஷித். சிறு வேலை… அவன் நினைத்தால் சில நொடிகளிலேயே அவளுக்கு வேண்டியதை எடுத்து தந்து விடலாம் தான்‌. 


இந்த இடத்தில் அவனின் மூளை வியாபாரியாக சிந்தித்தது. அதான் வேலையை முடித்து கொடுத்து விட்டால் திரும்பியும் பார்க்க மாட்டாள். பின் எப்படி அவளுடன் பழகுவது… ரசிப்பது… கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணுவது. 


அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தி, முழுதாக இல்லாது அரைகுறையாக பணியை முடித்தான். எப்படி என்றால் இப்படி? 


"தீஷ்… என்னதிது?"


"பிரிண்ட் அவுட். "


"அது தெரியுது. இது ஹைய் வே மாதிரி நீண்டுக்கிட்டே இருக்கு."


"நீ கேட்டத தான் எடுத்திட்டு இருக்கேன். எல்லாமே அந்த ஃபோன்ல இருந்த டேட்டாஸ். "


"வாட்… இவ்ளவா!" என வாயை பிளக்க, 


"நம்ம ஃபோன் GPS internet மூலமா நம்மோட ஒவ்வொரு ஆக்டிவிட்டியையும் ரிஜிஸ்டர் பண்ணும். நெட் ஆன்ல இருக்கும் போது நீ எங்கெங்க நடக்குற! என்னென்ன பாக்குற! யார் யார்க்கிட்ட பேசுறன்னு எல்லாமே சேவ்வாகும். 


இப்ப நம்மோட கேஸ்ல ஃபர்ஸ்ட் தந்தேல்ல அந்த மொபைலுக்கு யார் யார் கால் பண்ணாங்கங்கிற லிஸ்ட் இது. லாஸ்ட் டூ டேஸ் காணது. " எனப் பத்து பக்கத்துக்கு காகிதத்தை நீட்ட,


"இத்தனயா!" என நினைத்தவளுக்கு தலை சுற்றியது. 


"அப்றம் இந்த ஃபோனுக்கான இமெயில் ஐடி. இந்த ஐடிய வச்சி ஓப்பன் பண்ண வாட் ஆஃப். அதோட டீட்டெய்ல்ஸ். அப்றம் ஜீபே… ஃபேஸ் புக். மெஸ்ஏஜ்ர். " என வரிசையாக அடுக்க,


"போதும்."


"இன்னும் முடியலயே. "


"இல்ல போதும். கிடைச்ச வரைக்கும் முதல்ல விசாரிக்கிறேன். அப்றமா… அப்றம் பாத்துக்கலாம்.‌" என்க, அவளின் பாவனையில் புன்னகை வந்தது ஆடவனுக்கு. 


"நீ ரெண்டாவதா குடுத்த நம்பர். "


"அதான் போதும்னு சொன்னேல. அப்றம் என்ன?" என அங்கிருந்து செல்ல முயன்றாள். 


'இன்னும் கொஞ்ச நேரம் இந்த கம்ப்யூட்டர பாத்திட்டே இருந்தேன்னா கண்ல பூச்சி பறக்கும். எல்லாமே சின்ன சின்ன கட்டம் கட்டமா. பழைய டீவில சிக்னல் இல்லன்னா இரையுமே அந்த மாதிரி மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். ஆல்ரெடி கண்ணுல பவர் க்ளாஸ்ஸு. இதப் பாத்தா கண்ணையே புடுங்கிப் போடுற நிலைமை தான் வரும். கண்ண காப்பாத்தனுனா கம்ப்யூட்டர விட்டு தூரமா இருக்கணும். ' எனப் புலம்பிய படியே செல்ல,


"அந்த ஃபோன் திருடு போயிருக்குன்னு தான சொன்ன. எனக்கு அப்படி தோனல. அத யாரும் திருடல. " எனக் கத்தினான் தீஷித்.  


சில நொடிகளில் கண்ணாடி கதவைத் தாண்டி ஓடிய பைரவியை இப்படி கத்தித்தான் அழைக்க வேண்டி இருந்தது. 


"என்ன சொன்னிங்க! யாரும் திருடலயா?"


"எஸ்... திருடி இருந்தா கண்டிப்பா உடனே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிருப்பாங்க‌. அப்படி பண்ணிருந்தாலும் இல்லன்னாலும் அந்த ஃபோனுக்கு கிடைச்ச சிக்னல் மூவ் ஆகிருக்கும். அப்படி ஆகல. எந்த ஒரு மூவ்மெண்டும் பதிவாகல. 


சிம்ம தூக்கி போட்டுட்டு வேற சிம் வாங்கி யூஸ் பண்ணிருந்தா ip அட்ரஸ்ஸ வச்சி கண்டுபிடிச்சிருக்கலாம். பட் அப்படியும் ஆகால. சிம் டிஆக்டிவ் ஆகிருக்கு. அதாவது ரொம்ப நாள் ரீசார்ஜ் பண்ணாம இருந்ததுனால கம்பெனிக்காரனே டிஆக்டிவ் பண்ணிருக்கான். அந்த நம்பர இப்ப வேற ஒருத்தர் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. அதுனால தான் சொல்றேன். அந்த ஃபோன் காணம போகலன்னு. " 


"அப்ப அந்த ஃபோன் எங்க?"


"தொலச்ச இடத்துல தான் இருக்கும்."


"ஹாங்…"


"மே பீ. அது சைலண்ட் மோடுல இருந்திருக்கலாம். எங்கயாது மறந்து வச்சிட்டு. இல்லன்னா விளையாட்டுத்தனமா யாராது ஒழிச்சி கூட வச்சிருக்கலாம். சார்ஜ் இல்லாததுனால ஸ்விட்ச் ஆஃப் ஆகி. யார் கைக்கும் கிடைக்காம இருக்கலாம். " என்க, பைரவி ஆழ்ந்த யோசனையில் இறங்கினாள். 


'அப்படின்னா அது அரசனூர்ல தான் இருக்கும். அது காணும்னு அக்கா அழுதாங்கன்னா‌ அது அவங்களுக்கு முக்கியமான ஒன்னு. சோ, நாம அரசனூர் போகணும்.. ' அவளின் மோன நிலையை கலைக்கும் பொருட்டு அவளின் காதருகே சென்று,


"நீ வேணும்னா treasure hunt மாதிரி இத தேடிப்போ. புதையலுக்கு பதிலா செல்ஃபோன் கிடைக்கும். " என்றவன் கடைசியாக சிக்னல் பதிவான இடத்தை மார்க் செய்து அவளிடம் கொடுத்தான். 


'நான் நினைச்ச மாதிரி இது அரசனூர காட்டுது. ஐய்யோ! அங்க போய் தேடணுமா! எப்படி? ஒரு வேளை அது கிடைக்கலன்னா. ச்ச... இவ்ளோ தூரம் வந்து உருப்படியா எதுவும் கிடைக்கலயே. ' என மனம் சோர்ந்து போக,


'கூடாது பைரவி… கூடாது… மனச தளர விட்டுடாத. இப்ப நீ சோர்ந்து போய் இந்த கேஸ்ஸ விட்டுட்டேன்னா சுடர் மாதிரி நிறைய பொண்ணுங்கள இந்தச் சமூகம் இழக்க வேண்டி வரும்‌. சொசைட்டிக்குச் சேவ பண்ணன்னு கிளம்பி வர்ற ஒன்னு ரெண்டு பொண்ணுங்களும் இனி பயந்திட்டு வரவே மாட்டாங்க. 


ஆனா அந்த அரக்கனுங்க அடுத்தடுத்தன்னு போய்க்கிட்டே இருப்பாணுங்க. கூடாது… அவனக் கண்டு பிடிச்சி நடு ரோட்டுல நிக்க வைச்சி ஒரு அடியாது அடிக்கணும். அதுவும் செருப்பால… தேடு பைரவி. நிச்சயம் உனக்கு எதாவது ஒன்னு‌ கிடைக்கும். ' என அவளுக்கு அவளே தைரியம் கொடுத்தபடி சாரதா வீட்டிற்கு வர, அவள் தேடிய நிறைய விசயங்கள் அவளைத் தேடியே வந்தது. 


இரவு ஏழு மணிக்கு மேல் தன் சாப்பரை ஓட்டிக் கொண்டு வந்தவளை வாசலிலேயே வரவேற்றான் மது. 


"மாம்ஸ்… எனக்காகவா காத்திருக்கிங்க. ஒரு ஃபோன்… ம்ச் ஒரு மெஸ்ஏஜ்ஜ தட்டி விட்டிருந்தா கூட சிட்டா பறந்து வந்திருப்பேனே. " என ஆசையுடன் சாப்பரை நிறுத்தி விட்டு அவனின் அருகில் செல்ல,


"இது தான் நீ வீட்டுக்கு வர்ற நேரமா!" எனக் காட்டமாக கேட்டிருப்பான் பழைய மதுவாக இருந்தால். ஆனால் இப்போது அவளைத் திட்ட, கேள்வி கேட்க தனக்கு உரிமை இல்லை என்பதை உருப்போட்டது போல் திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டவன். 


"கார்ல ஏறு." என்றான். பைரவி குழப்பத்துடன் வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு மதுவுடன் புறப்பட்டாள். 


"விஜி அண்ணனோட மச்சினன் பேரு என்ன சொன்ன!" 


"செந்தில். சரியான பொறுக்கி." என அஷ்ட கோணத்தில் முகம் திருப்பியவள், அவனின் புகைப்படத்தை எடுத்து மதுவிற்குக் காட்டினான். அதைப் பார்த்தவன் அமைதியாக காரை ஓட்ட‍


"எதுக்கு அவனப் பத்தி கேக்குறீங்க. ‍" என்ற கேள்விக்கு பதில் வரவில்லை அவனிடமிருந்து. 


"நாம எங்க போறோம்?"


"ஹாஸ்பிடலுக்கு.‌" ரத்தின சுருக்கமாக சொல்ல,


"ஏன்? ஊர்வலத்துல கலவரம் வந்ததா! இல்லையே நியூஸ் எதுவும் அப்படி வரலயே." என்றவள் அப்போது தான் தன் செல்ஃபோனில் இன்டர்நெட் கனெக்ஷனை கொடுக்க, நிறைய வாட்ஸ் அப் மெஸ்ஏஜ்கள் வந்திருந்தது. 


"சுடர் விழியின்‌ மரணம் தொடர்பான வழக்கை சீபிஐயிடம் ஒப்படைக்க கோரி நடந்த ஊர்வலத்தில் மூண்ட கலவரம். ஊர்வலத்திற்கு தலைமை வகித்த கண்ணாயிரம் அவர்களும் இறந்த பெண்ணின் தாயான சாரதா அவர்களும் காயங்கள் காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்." என விரிவாக ஒரு பெண் செய்திவாசிப்பாளர் பேச,


"சாரதாம்மாக்கு என்னாச்சி? ஊர்வலத்துல என்ன நடந்தது? நீங்க தான் பாதுகாப்பு தர்றதா சொன்றிங்களே! அப்றம் எப்படி இது நடந்தது?" எனக் கேட்கும் போதே கண்ணில் நீர் சுரக்க, மது பேசவில்லை. 


எப்படி பேசுவான்? நீ பாதுகாப்பு கொடுத்தும் கலவரம் நடந்திருக்கிறது என்றால் எந்த லட்சணத்தில் பாதுகாப்பு கொடுத்திருப்பாய்! என்று குறை சொல்வது போல் தான் தெரிந்தது அவளின் புலம்பல்கள். கூடவே அவனுக்குத் தான் அவள் அழுதால் பிடிக்காதே. அதனால் சாலையை தவிர்த்து வேறு எங்கும் பார்க்காது ஓட்ட, அவள் பாண்டிக்கு ஃபோன் செய்தாள். 


அவன், லேசான காயம் தான். பயப்பட ஒன்றுமில்லை எனக் கூற, நம்பாது தவித்தவளிடம் சாரதாவே பேசினார். 


"ஒன்னும் ஆகிடலம்மா. மது தம்பி தான் எங்களக் காப்பாத்துச்சி. இல்லன்னா இன்னேரம் எம்மககூட இருந்திருப்பேன்.‌"


"அப்ப நான். நான் உங்க பொண்ணு இல்லையா! ஏன் அவங்க கூட போறதுலயே குறியா இருங்கிங்க?" எனக் கோபமாக கேட்க, அவர் சிரித்தார்.


"நம்ம போராட்டத்துக்கு வெற்றி கிடைச்சிருக்கு மா. கேஸ் சீபிஐ கிட்ட போயிடுச்சி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நியூஸ் வந்தது. " என்க. 


"நீங்க கவலயே படாதிங்க. இன்னும் ரெண்டே மாசத்துல, அவங்க கண்டுபிடிக்கிறானுங்களோ இல்லயோ. நான் கண்டுபிடிப்பேன்." எனச் சபதம் ஏற்றவள், மருத்துவமனை வருவதாக சொல்லி வைத்தாள். ஆனால் கார் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 


"சாரதாம்மா சொன்ன ஹாஸ்பிடலுக்கு இந்தப் பக்கமா போகணும்." எனச் சிந்திய மூக்கை துடைத்தபடி சொல்ல,


"இப்படியும் போகலாம்." என்றவனுக்கு பைரவியின் கேள்விகளுக்குப் பதில் செல்லவும் பிடிக்க வில்லை, அவளைப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஏதோ மனம் கணத்தது போன்ற உணர்வு. 


"கேஸ் தான் சீபிஐ கிட்ட போயிடுஞ்சில்ல. இனியும் நீ ஏன் வீர வசனம் பேசிட்டு இருக்க?" என இறுகிய குரலில் கேட்க,


"அவெ யாருன்னு கண்டுபிடிக்கிற வர நான் தேடிட்டே தான் இருப்பேன்‌." என்ற முன்னாள் மனைவியின் பதில் பிடிக்கவில்லை. 


"நான் எது சொன்னாலும் நீ அதுக்கு ஆப்போஷிட்டாத்தா செய்வியா பைரவி. அவளப் பாக்கப் போய்த்தா நாம இப்படி பிரிஞ்சி இருக்கோம். நிறைய இழந்திட்டோம். இப்ப மறுபடியும் அவா பேரச் சொல்லிட்டு சுத்துற. உனக்கு எதாவது ஆனா என்ன பண்ணுவ. " என்றவனின் பேச்சில் காதல் இல்லை. ஆனால் மனைவியாக இல்லை என்றாலும் அவள் உயிருடன் இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தது. 


"கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகாது. ஆக என் புருஷன் விடமாட்டாங்கிற நம்பிக்க இருக்கு." என்றவளைத் திரும்பி பார்த்து முறைத்தவனிடம், 


"இப்ப எங்க போறோம்?"  


"அகாடமிக்கு. " என்றான் முகத்தை உர்றென வைத்துக் கொண்டு. 


"அங்க எதுக்கு?" என்ற அவளின் கேள்விக்கான விடையை பிரவீனும் ராக்கியும் தலைகீழாக தொங்க விட்டு வைத்திருந்தனர். 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


பனி 65

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...