முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 65


 

அத்தியாயம்: 65



"இப்ப நம்புறீங்களா! நான் பொய் சொல்லலன்னு. அவன நான் விஜியோட அண்ணே பொண்ணு பர்த்டே பார்ட்டில பாத்திருக்கேன். அவெ விசாகனோட அடியாளு. விஜியோட அண்ணே கொஞ்சம் சரியில்லாத ஆளு.‌ அவருக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கம் இருக்குன்னு விஜி சொல்லிருக்கா. அப்ப அதப் பத்தி எனக்கு க்ளியரா தெரியாது. 


விசாகன பத்தி இப்ப நான்  விசாரிச்சப்ப  கட்டப்பஞ்சாத்து, அடிதடி, கூலிப்படைன்னு ஏகப்பட்டது வச்சிருக்குறதாவும், பெரிய பெரிய அரசியல்வாதிங்க பிஸ்னஸ் மேன்னு செல்வாக்கு இருக்குற நிறைய பேரோட சொத்த பாதுகாக்குற பிணாமியா இருக்குறதாவும் கேள்வி பட்டேன். ஏன் நீங்க இன்னைக்கி பாதுகாப்பு வந்திருக்குற மிஸ்டர் சிராஜ் குப்தா. அவரோட சென்னை சிட்டி பிணாமியே விசாகன் தான். சிராஜ்ஜோட வலது கைன்னு சொல்லலாம். " என அன்றைய பிறந்தாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக காட்ட, மதுவிற்கு மாலையில் வந்திறங்கிய மூவரும் யார் என்று இப்போது புலப்பட்டது. 


"இது தான் விஜியோட அண்ணே. விசாகன். இது அவரோட வைஃப் ஷீலா. இது ஷீலாவோட தம்பி. செந்தில். " என வரிசையாக அன்று எடுத்த புகைப்படங்களைக் காட்ட,


தன்னைச் சிக்க வைக்க தன்னைச் சுற்றி காய்களை நகர்த்தியது விசாகன் தான் என உறுதியாக தெரிய வந்தது. ஆனால் ஏன் என்று யோசிக்கும் போது சிராஜ்ஜுடன் உண்டான மோதல்  நினைவு வந்தது. சிராஜ்ஜின் தொழில் ரகசியங்கள் திருடு போனதற்கு தானும் ஒரு காரணம் என்பதால் சிராஜ் விசாகனை ஏவி விட்டு தன்னைப் பழி வாங்க பார்க்கிறான் என்று மூளை சொல்லியது. 


கூடவே வேறு ஒன்றையும் சொல்லியது. பைரவி காட்டிய புகைப்படத்தில் இருந்த ஒருவனை தாமரை கடத்தப்பட்ட அன்று பார்த்தாகவும், மற்றொருவனை இரு தினங்களுக்கு முன் பள்ளியில் வைத்து கடத்த முயன்ற போது பார்த்தாகவும் சொல்லியது. 


அப்படியெனில் விசாகன் தான் தாமரையை கடத்தப் பார்த்தது. ஆனால் ஏன் தாமரையைக் கடத்த வேண்டும். ஒருவேளை கண்ணாயிரம்  தன் நிறுவனத்தில் மீது போட்ட வழக்கை வாப்பஸ் வாங்க வைக்க விசாகனை சிராஜ் ஏவி விட்டிருக்கலாம். அப்படிக் கடத்தி இருந்தால் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கடத்தி இருக்கலாமே. அவனின் பக்கம் தீர்ப்பு வழங்கும் தருவாயில் உள்ள வழக்கிற்காக கடத்த வேண்டும். 


இல்லை அந்த விளையாட்டு ஆசிரியர் ஆர்பாட்டத்தைப் பற்றி எதோ கூறினானே! அப்படி எனில் சுடர் மரணத்திற்கும் விசாகனுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். இல்லயேல் சிராஜ்ஜிற்காக விசாகன் இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும்.’ என மதுவின் மனம் சொல்ல. கடைசி இரு வார்த்தைகளை சத்தமாக சொல்லி விட்டான். 


"என்ன மாமா சொன்னிங்க? சுடர் அக்கா கொலைல யாரு இறங்கி வேலை பாத்திருக்கா?" எனப் பைரவி கேட்க,


"ம்ச்… எதுவும் இல்ல. நீ சுடர பத்தி யோசிக்காம கிளம்பு. " என விரட்டினான் அவன். 


அவனுக்குச் சுடரின் கொலை வழக்கு தேவையே இல்லை. சொல்ல போனால் அவளால் தான் தன் குடும்ப வாழ்க்கை சிதைந்தது. அப்படி இருக்க அவளைக் கொன்றது யார் என நான் ஏன் துப்புதுலக்க வேண்டும். தன்னைச் சீண்டி விளையாடிய சிராஜ்ஜையும் விசாகனையும் கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும். அது தான் அவனின் முதன்மை பணி. அதனால் சுடர் கொலை தனக்கு தேவையற்றது என ஒதுக்க,


பைரவி, 'என்ன சொன்னிங்க மாமா? என்ன சொன்னிங்க?' எனக் கேட்டு கேட்டு நச்சரிக்க, அவளின் கரம் பற்றி இழுத்து சென்றான் மது. 


அதைக் கண்ட தீஷித் வேகமாக வந்து மதுவை தடுத்து, ‍" what's wrong with you man. leave her hand. " எனக் கோபமாக தீஷித் மதுவின் எதிரில் நின்றான்.


'டேய்… உனக்கு என்னடா வேணும். அதா புருஷனும் பொண்டிட்டியுமா பேசிட்டு இருக்கோமே! அப்றம் எதுக்கு ஊடால கொண்டு வந்து உன் மூக்க நுழைக்கிற. நான் அவள இழுத்திட்டு போனா உனக்கு எங்கடா வலிக்கிது! ' இது மதுவின் மைண்ட் வாய்ஸ். பட் அதை வெளியில் சொல்லாது விரைப்பாய் நிற்க,


"இது எங்க பர்ஷ்னல். சோ, better you stay away. " எனக் காட்டமாக பற்களைக் கட்டித்தபடி சொல்ல, மதுவின் காதிற்கு அருகில் சென்ற தீஷித்


"எப்ப பெட் ரூம விட்டு வெளில சண்ட போட ஆரம்பிச்சிங்களோ அப்பவே உங்க ரெண்டு பேருக்கும் இடைல பர்ஷ்னல்ன்னு ஒன்னும்… கிடையாவே கிடையாது. " என மெல்லிய குரலில் சொல்லிக் கடுப்பேற்றியவன்,


"அண்ட்… பைரவி என்னோட கெஸ்ட். பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒரு செக்யூரிட்டி பாய் என்னோட ஃப்ரெண்டு கிட்ட  அரகெண்டா! இன்டீசன்ட்டா பிகேவ் பண்றத நான் அலோ பண்ண மாட்டேன். சோ, leave her hand and say sorry to her. " என தீஷித் அழுத்தமாக சொல்ல, தீஷித்தின் கோர்ட் காலர் மதுவின் கைக்குள் அடைக்கப்பட்டது. 


'எது மன்னிப்பு கேக்கணுமா! அதுவும் நீ சொல்லி இவ கிட்ட!' என்பது போல் பைரவியை ஒரு பார்வை பார்த்தவன்… முடியாது என்பது போல் இறுக்கமாக இருக்க, இருவரும் ஒருவர் சட்டைக்காலரை ஒருவர் பிடித்தபடி நின்றிருந்தனர். 


பைரவி தான், "ப்ளீஸ். விடுங்க ரெண்டு பேரும். மாமா… ப்ளிஸ்… எல்லாரும் நம்மல பாக்குறாங்க. கொஞ்ச மேர்னஸ்ஸோட நடந்துக்கங்க. தீஷித் ப்ளிஸ்…" என விலக்கி விட நினைத்து இருவருக்கும் இடையே போராடினாள். தீஷித் பைரவி சொன்னதும் மதுவின் மேலிருந்து கையை எடுத்து விட்டான். 


ஆனால் மது மட்டும் கோபமாகவே தீஷித்தை பிடித்தபடி நின்றான். பைரவி அவனிடம் கெஞ்ச, மது அவனை லேசான குலுக்கலுடன் பிடித்து தள்ளி விட்டான். தீஷித் பின்னால் நின்றிருந்த பைரவியின் மீது மோதி நின்றான்‌. பாவம் பைரவி தான் கீழே விழுந்து விட்டாள்.  


விழுந்தவள் தொடர்ந்து தும்மவும் தொடங்கினாள். 


"பையூ வாட்ஸ் ஹப்பென்.‌" எனப் பதறி போய் தூக்கியது தீஷித்தை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. 


'அவளுக்கு கையும் காலும் நல்லாத்தான இருக்கு. கீழ விழுந்தா எந்திரிக்க தெரியாதா என்ன! இவெ ஏன் இவ்ளோ சீன் போடுறான்!' மதுவின் மைண்ட் வாய்ஸ். 


தொடந்து தும்மியவள் தீஷித்தின் அருகில் சென்று அவனின் சட்டை காலரை முகர்ந்து பார்த்து, "body spray யூஸ் பண்ணிருக்கிங்களா?" எனக் கேட்க, அதைக் கண்ட மதுவிற்கு ஆத்திரம் தான் வந்தது. 


'அவெ என்ன யூஸ் பண்ணா உனக்கு என்ன? உனக்கு தான் சென்ட் ஸ்மெல்லே சேராதே. அவெ போட்டிருக்காங்கிறத  மோந்து பாத்து தான் தெரிஞ்சிக்கணுமா!' எனப் பொருமியபடி நின்றவன், அருகில் இருந்த அலங்கார மலரைப் பறித்து தன் கைக்குட்டையில் வைத்து அவளின் மூக்கில் அழுத்தினான். 


முகர்ந்து பார்த்தவளின் தும்மல் நின்றது. பின் கரத்தை பிடித்து இழுத்து சென்று ஹோட்டலின் வாயிலை அடைய. தீஷித் உடை மாற்றி விட்டு வந்தான், பைரவியை ட்ராப் செய்ய. 


'டேய் நீ சும்மாவே இருக்க மாட்டியா!' 


"எப்படி வந்த? உன்னோட சாப்பர்லயா!" என மது கேட்க வேண்டியதை தீஷித் கேட்டுக் கொண்டு நிற்க,


"பாண்டி அண்ணா வருவாரு. கால் பண்ண சொன்னாரு. பண்ணிட்டேன்.‌ அஞ்சி நிமிஷம் தான். நீங்க போங்க. உங்களுக்கு ஏன் சிரமம்." எனத் தீஷித்தின் உதவியை மறுக்க, அது மதுவிற்கு ஆனந்தமாக இருந்தது‌. 


"அதா ஆள் வர்றதா சொல்றாங்களே உங்க ஃப்ரெண்டு. விட்டுட்டு போக வேண்டியது தான. இன்னும் ஏன் நிக்கணும், உதவிக்கரம் நீட்டிட்டு." மது முணுமுணுக்க. அவனைத் திரும்பியும் பார்க்காதவன்,


" கம்… நான் ட்ராப் பண்றேன்.” என்று அவளின் கரம் பற்றி நடந்த தீஷித்தைப் பார்க்கையில் மதுவிற்கு முள் மேல் நிற்பது போன்று இருந்தது. வேகமாக பார்ட்டி ஹாலிற்கு வந்தவன்,


" அவளுக்கு எப்படி தீஷிதன் ஃப்ரெண்டான்னா? எப்ப இருந்து அவெ பழக்கம்?" எனக் காட்டமாக ராக்கியைப் பார்த்து கேட்க, 


"என்னைக் கேட்டா?"


"வேற யார கேக்கணுங்கிற!" என்றவனிடம் விளையாடாது அனைத்தையும் கூறினான்.‌


"சாருக்கு பொருத்தமா இருப்பான்னு சொன்னா. மத்தபடி வேற எதுவும் கிடையாது மச்சான். நம்பு. " என்றவனிடம் எதுவும் பேசாது சென்று விட, மதுவின் மனம் அவனுடன் பேசத் தொடங்கியது‌. 


'இல்லை நிச்சயம் தோழியாக மட்டும் தீஷித் அவளைப் பார்க்கவில்லை. அதற்கு மேலும் உள்ளது. ' என்றது ஒரு மனம். 


'இருந்தா உனக்கு என்ன? நீ தான் அவள வேண்டாம்னு டைவர்ஸ் பண்ணிட்டேல. அப்றம் அவளுக்குன்னு ஒரு லைஃப்ப உருவாக்கிக்கிறதுல என்ன தப்பு இருக்கு. உன்ன நினைச்சிட்டேவா கடைசி வர வாழணும் எதிர்பாக்குற. ' என்றது மற்றொரு மனம். 


'இல்ல தான். ஆனால் எங்களுக்குள்ள டைவர்ஸ் ஆகி சில  மாதங்கள் தானே  ஆகிறது. அதற்குள்…”


'எதுக்குள்ள இருந்தா என்ன!  நீ அவள வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணிட்ட. அவ்ளோ தான். இனி அவளப் பத்தி யோசிக்காத. வந்த வேலய பாரு. அந்த சிராஜ்ஜும் விசாகனும் உன்னத்தா பாத்து ஏதோ சொல்லிட்டு இருக்கானுங்க. என்னன்னு கண்டு பிடி.' என மனம் அவனை வேறு புறம் திருப்பி விட்டாலும், பைரவி தீஷித் உறவு அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை. 


மதுவின் மனம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறது. சிராஜ்ஜும் விசாகனும் மதுவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தானர். கூடவே தீஷித்தையும் தான். 


ஏனெனில் இத்தனை நேரம் இருவரும் எதிரும் புதிருமாக சட்டையைப் பிடித்துக் கொண்டு சண்டைக்கு நின்றது. தூர இருந்து பார்த்த சிராஜ்ஜின் கண்களுக்கு நண்பர் இருவரும் கட்டி பிடித்து நட்பு பாராட்டுவது போல் தெரிந்தது. 


ஏற்கனவே திருடு போன தன் வியாபாரத் தந்திரங்கள் தீஷித்திடம் உள்ளதை அறிந்தவன், மது தான் அதை அவனிடம் ஒப்படைத்திருப்பானோ என்று 70% சந்தேகம் கொண்டிருந்த நிலையில். இருவரின் நட்பான பேச்சும் செயலும், 100% உறுதி செய்தது. 


தீஷித் கேட்க. மது எடுத்துக் கொடுத்துள்ளான் என்ற முடிவுக்கு வந்து விட்டான். 


"இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னையும் என் சாம்ராஜ்யத்தையும் அளிக்க திட்டம் போட்டுட்டு இருக்கானுங்க.‌" என விழிகள் எரிய மதுவை பார்த்தவனின் கண்களில் மேற்கொண்டு பெட்ரோலை ஊற்றுயது போல் இருந்த விசாகன் சொன்ன செய்தி. 


"அந்த கண்ணாயிரம் பொண்ண கடத்த விடாம அன்னைக்கி காப்பாத்துனதும் இவெந்தா. ஜிம் பாய். ஸ்கூல்ல காப்பாத்துனதும் இவெந்தா. " என்க, 100 அல்ல 200% இருவரும் கூட்டு சதி செய்து தன்னைத் தீர்த்துக்கட்ட பார்க்கின்றனர் என்ற முடிவுக்கே வந்துவிட்டான். நம் ஹீரோக்களுக்கும் இருவருக்கும் அரசனூர் வழக்கிற்கும் என உறவு உள்ளது என்பதை விசாரிக்கச் சொல்லி விட்டு தீவிர சிந்தனையுடனேயே அன்றிரவு சென்னையை விட்டு பறந்து சென்றான். 


அவனுக்கு தெரியாத ஒன்று அவன் எதிரியாய் நினைத்து நோக்கி வீசும் அம்புகளைப் படிக்கட்டுகளாக மாற்றி நம் ஹீரோக்கள் அவனை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருக்கின்றனர் என்று. அதற்கு முதல் படியாய் அமைந்தது அந்த போராட்டத்தை நிறுத்த அனுப்பிய ஆள். 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

பனி 64

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...