அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 25 தன்னை விடச் சிறியவளாகினும்… தங்கத்தை விட உயர்ந்தவளாக… அண்ணனின் உள்ளத்தில்... வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்... ஒரு ஆண் அறியும்… இரண்டாவது அன்னை... உடன் பிறந்தவள்... மனமானது சற்று லேசாக இருந்தது. தன் தங்கையின் கல்லறையைக் காண்கையில். ஏனோ இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டதை போல் ஒரு உணர்வு. தங்கையை இழந்ததற்கு பழி வாங்க தயாராக இரு என்றது மனம். எந்த வழியும் கிடைக்காத போதும், கிடைத்துவிட்டதை போல் நிறைந்து போனது மனம். ஏன் என்று தான் புரியவில்லை. தங்கையின் கல்லறையில் இருந்த மலர்களில் வந்தமர்ந்த சில பட்டாம்பூச்சிகளை கண்டவன் நிறைந்த புன்னகையுடன் வீடு திரும்ப, ஒரு இனிப்புக் கடை கண்ணில் பட்டது. நேற்று பவதாவிடம் சண்டையிட்டு கடைசி ஸ்பூன் அல்லவாவை அவளுக்குத் தராது உண்டதால் கோபமாக முகம் திருப்பிச் சென்றது நினைவு வர, அந்தக் கடையில் குலோப்ஜாமுனை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்ய நினைத்தான். வீடு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் தர. அவளோ. "எனக்கு வேண்டாம். நா கேக்கும்போது தந்திங்களா. இல்லல்ல. இப்ப எனக்கு வேண்டாம். " என எழுந்து செல்ல, "என்ன ACP. உன்னோட பாப்பா கோயிச்...