முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 24


 

அத்தியாயம்: 24



"என்ன தனா? இந்த நேரத்துல கூப்பிட மாட்டியே. என்ன விசயம்?. " என்றது அந்தக் குரல்.


" அது ஒன்னுமில்லை.‌ நம்ம ப்ளான்ல எதுவும் சேஜ் இருக்கா?. இல்ல அத வேற தேதிக்கு மாத்திடலாமா?. " தன்செயன் சற்று பயந்த குரலில், ஃபோனில் பேசிக் கொண்டு இருக்கிறார்.


" ஏ?. என்னாச்சி?. "


"கொஞ்சம் பயமா இருக்கு. "


"எதுக்கு நீ இப்ப தேவையில்லாம பயப்படுற?. எத்தன மொற‌ இந்த மாறிப் பண்ணிருக்கோம்!. அப்பெல்லாம் நீ இந்த வார்த்தைய சொன்னதே இல்லையே. இன்னைக்கி ஏ இத சொல்ற." என்றது அந்தக் குரல்.


"மனசுக்கு எதோ சரின்னு படல. இது வேண்டாமே. இந்த மொற மட்டும் தா. அடுத்ததுல பாத்துக்கலாம். " என்க. எதிரில் கேட்ட குரல் கோபமாக வந்தது.


" யூ இடியட். ***. நம்ம தொழில்ல டயமிங்க தா முக்கியம். நாம ஆல்ரெடி பேசி எல்லா ஏற்பாட்டையும் செஞ்சி காச வாங்கியாச்சி. இப்ப முடியாதுன்னு சொன்னா என்ன ஆகும். நம்ம மேல கஸ்டமருக்கு இருக்குற நம்பிக்க போய்டாது. அதுமட்டுமில்ல இப்ப நம்மகிட்ட டீலிங்க வைச்சவெ பெரியாளு. நம்மல சும்மா விடமாட்டான். ஒட்டு மொத்தமா நம்மல இல்லாம ஆக்கிடுவான்.


ம்ச். இது பல கோடிய கொட்டி குடுக்குற பிஸ்னஸ். செய்றோம்னு சொல்லிட்டு பின் வாங்குனா‌ நம்ம உடம்புல உயிர் இருக்காது. சொன்ன தேதில எல்லாம் நடந்தாகனும். நீ மட்டும் கவனமா இருந்துக்க. " என்றது அந்தக் குரல்.


"இல்ல இன்னைக்கி நா ரோஸ் குரூப் எம்டி மிஸ்டர் ஓம் கார்ரோட இப்போதைய நிலமைக்கி காரணமானவன இங்க பாத்தேன். ஓம்மோட மொத்த சாம்ராஜ்யத்தையும் கொஞ்ச நாள்ளயே தரமட்டம் ஆக்கிட்டான்னு கேள்விப்பட்டேன். அதா லேசா பயம் வந்துடுச்சி. "


"ம்ச்... ஓம்லாம் ஒரு ஆளுண்டு. நீ கவல படத் தேவையில்ல. நாம செய்யுற பிஸ்னஸ் யாருக்கும் தெரியாது. வீணா பயந்து வெளில காட்டி குடுத்துடாத. விடு. " என்றது அசால்ட்டாக.


"கதிரேசன் சொல்லிட மாட்டானா?. "


"மாட்டான். சொல்லமாட்டான். "


"எப்படி உறுதியா சொல்ற?. "


"சொல்லணும்னா அதுக்கு அவெ உயிரோட இருக்கணும்ல. நாளைக்கி சாகப்போறவெ எப்படி பேசுவான். அப்படியே சொன்னாலும் உயிரோட இல்லாத அவெ சொன்னது எல்லாம் பொய்யுன்னு நமக்கு நிறுபிக்க தெரியாதா என்ன?. "


"அதுவும் சரிதா. நீ சீக்கிரம் இங்க வந்து சேரு. அப்பத் தா எனக்குக் கொஞ்சம் நிம்மதி வரும்.‌" தன்செயன்.


" ஓகே நாளைக்கி ஃப்ளைட் ஏறிடுவோன். ம்… அவெ பேரு என்ன சொன்ன?. " எனக் கேட்க.‌.


" ரிஷி தரன். " என்றான் தன்செயன். சில நொடி மௌனத்திக்கு பின்


"எதுக்கு வந்திருக்கான்னு தெரியுமா.? "‌


"இங்க ஒரு மீட்டிங்கு. வைஃப் ஃப்ரெண்ட்ஸ் கூட வந்திருக்கான். மே பீ நாளைக்கழிச்சி கிளம்பிடலாம். "


"ம்... நீ எதுக்கும் அவெ மேல ஒரு கண் வச்சிக்க. அவெ பின்னாடி ஃப்லோ பண்ண ஆள ஏற்பாடு பண்ணு. பல நாளைக்கி அப்றம் நமக்குக் கிடைச்ச நல்ல வாய்ப்பு தனா இது. இத நீ வெற்றிகரமா முடிச்சிட்டேன்னா. இந்தியால ஒன் ஆஃப் பெஸ்ட் சர்ஜரியன் நீயாத்தா இருப்ப. இழந்த உண்ட பேர நாம பண்ண போற இந்தக் காரியத்து மூலமா திரும்பக் கிடைக்கும். கவனமா இரு. " என்று வைத்து அந்தக் குரல்.


'இவன நம்பி நாம இறங்கலாமா வேண்டாமா' எனக் குழப்பமாக இருந்த தன்செயன் கண்களுக்கு ரிஷி வேகவேகமாகக் காரை எடுத்துக் கொண்டு செல்வது பட்டது. உடனே ஃபோனில் யாரையோ அழைத்து அவனை ஃபாலோ செய்யச் சொன்னார்.


உண்மையிலேயே காரை வேகமாகத் தான் ஓட்டினான ரிஷி. ஏனெனில் அவனுக்கு வந்த மெஸ்ஏஜ் அப்படி. அனுப்பியது கௌதம்.


'அவசரம். உயிர் போனாலும் போகலாம். அதற்குள் வந்து காப்பாற்று. ' என்று சில பல பயங்கர பொம்மைகள் கொண்ட எமோஜியை போட்டுக் கௌதம் ரிஷிக்கு தகவல் அனுப்பியிருந்தான்.


நேற்றைய இரவு பனியில் வெகுநேரம் அமர்ந்திருந்தால் தன்னுடைய மனைவிக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ என்ற பயத்தில் காரைப் புயல் வேகத்தில் ஓட்ட முயன்றான். ஆனால் மரங்கள் பாறைகள் மனிதர்கள் எனப் பல குறுக்கீடுகள் வந்ததால் சற்று மெதுவாகவே ஓட்டிச் சென்றான்.‌. ஹரிணியை காண.


தோட்டத்தில் அமர்ந்து கொண்டு.‌ காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டு இருந்தாள் ஹரிணி. ‌கையில் நாவல் பழங்கள். அதைச் சர்க்கரை தொட்டு உண்டவளின் இதழ்கள் நிறம் மாறி இருந்தன.


"கிட்!!. ஆர் யூ ஓகே?. " என் கேட்டபடி ரிஷி வர, அவள் முழித்தாள்.


" என்னாச்சி பாவா?. ஏ டென்ஷனா இருக்க?. " என்றவளின் தலை முதல் கால்வரை ஆராய்ந்தவன், நிம்மதியான மூச்சு ஒன்றை விட்டு அணைத்துக் கொண்டான்.‌


"என்னாச்சி பாவா?. " என்க.


" எங்க அவன?. "


" யாரு?. "


" உன்னோட ஃப்ரெண்டு. " என்றவன் சத்தமா கத்திக் கொண்டே வீட்டிற்குள்‌ தேட, கௌதமை காணவில்லை.‌ தன்னை ஏமாற்றி வர வைத்துள்ளானென நினைத்தவனுக்கு கோபம் வந்தது.‌


" நம்மூர் மாறி இல்ல டார்லிங். வஞ்சிரம் மீன் இருக்கான்னு கேட்டா நெய்மீன் இருக்குங்கிறான். ஷீலா மீன் இருக்கான்னு கேட்டா ஊளி இருக்குங்கிறான். நண்டு கேட்டா நார்நாரா பிஞ்சி போனத காட்டுறான். ஆனாலும் அடிச்சி பிடிச்சி எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன். உனக்காக நா பீட்ரூட். பூசணிக்கா. இதுக்கு பேரு கூடத் தெரியாது ஆனா பெருசா இருக்குங்கிறதுக்காவே வாங்கிட்டி வந்தேன்.‌" எனக் கூடை நிறைய காய்கறிகளை வாங்கி வந்துகொண்டிருந்தான். கூடவே கோழி ஆடு மீன் என எல்லா வகை இறைச்சியையும் வாங்கி வந்திருந்தான்.


'ஏன்டா இங்க ஒருத்தன்ட்ட உயிர் போகப்போது அவரசரம்னு வர வச்சிட்டு. தலைல மீன் கூடையோட நடந்து வர்ற. ' என நினைத்தவன் அவனை அடிக்கப் பாய, " ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம்... காலைல இருந்து பாத்து பாத்து வாங்கிருகேன். எல்லாமே காசு. சாப்பிடுற பொருள வேஸ்ட் பண்ண கூடாது. சரியா. " என நலுவப் பார்த்தான்.


" அப்ப வச்சிட்டு வா. பேசி. தீத்துக்கலாம். " என்றான் ரிஷி அணிந்திருந்த முழு நீளச் சட்டையின்‌ கையை மடக்கியபடி சொல்ல.


"பெரிய பாஸ்… பேசனுமா தீக்கனுமா?. எதுவா இருந்தாலும் உடனே பண்ணிடுங்க. யோசிக்காதிங்க. " மனோ, கௌதம் அடி வாங்குவதை பார்க்கும் ஆவலில்.‌. ஏனெனில் கௌதம் தனியா செல்லாமல் துணைக்கு இவனையும் இழுத்துட்டு போய்க் கடைகடையாக அழய விட்டுட்டான். அதா காண்டு.


" எதுக்குடா பொய் சொன்ன. " என சட்டையைப் பிடித்து உலுக்கி கேட்க.


" இதோ பாரு நா ரொம்ப நல்லவெ. எனக்குப் பொய் சொல்ற பழக்கம் எல்லாம் கிடையவே கிடையாது.‌ உண்மைய மட்டும் தா பேசுவேன். இது இந்த வீணா போன போலிஸ் மேல சத்தியம். " என மனோவின் தலையில் கை வைக்க, அவன் பயந்து விட்டான்.


"என்ன புசுக்குன்னு தலைல கை வச்சிட்டாரு. ஹரிணி பொய் சத்தியம் பண்ணா உயிர் போகிடுமா.‌" மனோ.


" வாய்பிருக்கு. உனக்கு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கா. நீ செத்ததுக்கு அப்றம் உன்னோட குடும்பத்துக்குக் காசு கிடைக்கும். " ஹரிணி.‌


" ஏ நீ LIC ஏஜெண்டா பார்ட்டயம் வேல பாக்குறியா?. என்ன. " என்க, இருவரையும் முறைத்தான் ரிஷி.


" யாரையோ காப்பாத்துன்னு சொன்னியே?. யார?. "


" காப்பாத்த தா செய்யனும். என்ன, இல்ல எங்கள. " கௌதம்


" என்னடா சொல்ற.? " என உலுக்க.


" ஹேய். கொஞ்சம் அமைதியாத்தா இருங்களேன். இப்ப தா மாத்திர போட்டிருக்கா. தூங்க ட்ரெய் பண்ணும்போது சந்த மாறிக் கூச்சல் போட்டா என்னா அர்த்தம்?. " விக்னேஷ், வெளியே வந்து கத்த.


" என்னாச்சி விக்னேஷ்?. பவதாக்கு உடம்பு சரியில்லையா!. " ரிஷி.


" ம்… காலைல வந்ததுல இருந்து கொஞ்ச ஃபீவர். டாக்டர்ட்ட காட்டியாச்சி.‌ மருந்து குடுத்திருக்காங்க.‌" என்க, ரிஷி அறைக்குள் சென்று பார்த்தான்.


கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் பவதா. அருகில் சென்றவன் நெற்றியில் கரம் வைக்க, அது சூடாவே இல்லை.


'என்னடா காய்ச்சல்ன்னு சொன்ன. சுடவே இல்லையே. ' என்பது போல் விக்னேஷை பார்க்க.


'நம்பு‌ய்யா. அந்த டாக்டர் அம்மாவே ஒன்னுமில்லன்னு சொல்லிடுச்சி. ஆனா இவா காய்ச்சல் தானு சொல்லிப் படுத்திருக்கா. நம்பலன்னா சோறு போடமாட்டாளாம். ' என்பது போல் விக்னேஷ் பார்த்தான்.


" பவதாக்கு உடம்பு சரியில்ல. அதுனால உம்பொண்டாட்டி 'நா சமக்கிறே.'ன்னு சமக்கட்டுக்குள்ள போய்ட்டா. எங்க உயிர் முக்கியம் இல்லையா. அதா உன்ன கூப்பிட வேண்டியதா போச்சி. இல்லன்னா உங்கிட்டல்லாம் யாரு பேசப் போறா." என்றான் கௌதம், எங்கையோ பார்த்துக் கொண்டு.


ரிஷி எழுந்து சமயலைறைக்குள் செல்ல, " இன்னைக்கி நம்ம நாக்குக்கு அறுசுவை விருந்து கிடைக்கப் போது. மகிழ்ச்சியான செய்தி. " கௌதம்.


" பாஸ் என்ன சொல்றீங்க. ஹீரோன்னு அறிமுகப்படுத்திட்டு சமக்க சொன்னா என்ன அர்த்தம் பாஸ். அவரு இமேஜ் என்ன ஆகும். " என்றவனை முறைத்தவன்.


"இமேஜ்ஜ எமோஜி மாறி ஃபோன்ல சேவ் பண்ணி வச்சிப்போன். வா. என்ன பண்றான்னு பாக்கலாம். " எனச் சமயலறையை எட்டி பார்க்க,


ரிஷி கஞ்சி காய்ச்சிக் கொண்டு இருந்தான்.


 'இது தா அறுசுவை விருந்தா. ' என்பது போல் மனோ பார்க்க.


'பொறு மனோகரா. ' என்றான் கௌதம்.


கின்னத்தில் எடுக்கக் கொண்டு பவதா எழுப்பினான் ரிஷி. அவள் போர்வையை மூடிக் கொண்டு எழ மறுத்தாள். உடல் நடுங்கியது. அவள் எதையோ பார்த்துப் பயந்திருக்கிறாள் என்று புரிந்தது ரிஷிக்கி. என்ன நடந்தது எனக் கேட்க, அனைவரும் ஹரிணியை லுக்கு விட்டனர்.


" என்ன எல்லா கேமராவும் என்ன பாக்குது. திருப்புங்க அங்கிட்டு. நா ஒன்னும் பண்ணல. அவா தா பயந்தா கொள்ளியா இருக்கா. இந்துவ விட மோசமான பயந்தாங்கொள்ளி. " ஹரிணி.


"இப்ப எதுக்கு நீ தேவையே இல்லாம எம்பொண்டாட்டியப் பத்தி பேசுற. அவா தைரியத்த தயிர் சாதம் மாறித் தட்டுல வச்சி சாப்பிடுறவ. " கௌதம். ஹரிணி அதற்கு ஒன்று சொல்ல என இருவரும் சண்டைபோட.


" இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லிட்டு. அப்றமா வெளில போய்ச் சண்ட போட்டா நல்லா இருக்கும். " ரிஷி.


" நா சொல்றேன். " பவதா, எழுந்து அமர்ந்து கொண்டு.


" ஏய். நீ இவ்ளோ நேரமா தூக்கிகிட்டு தான இருந்த. இப்பையும் போய்த் தூங்கு. நா சொல்றேன் பாவா. " ஹரிணி


" இல்ல நானே சொல்றேன் ண்ணா. இவா சொன்னா இவளுக்குச் சாதகமா மாத்தி மாத்தி சொல்லுவா. " பவதா.


" இல்ல நாந்தா சொல்லுவேன். " என இருவரும் வீம்பு பண்ண, சரி ரெண்டு பேரும் சேர்ந்தே சொல்லுவோம்னு சமாதானம் ஆகி.


" ஒரு படம் பாத்தோம். அது தா பிரச்சினையை. " என்றனர் இருவரும்.


இது ஒன்னுமில்லங்க. ஹரிணிக்கி பேய் படம்னா கொஞ்சம்… கொஞ்சந்தாங்க...‌ பிடிக்கும். அதுவும் இருட்டுல உக்காந்து பாக்கனும்னு சொல்லுவா. அப்படி படம் பாத்துட்டு இருக்கும்போது பேய்க்குப் போட்டியா இன்னொரு குரல் கேட்டது. அது பவதாவோடது. ஹரிணி என்ன செய்கிறாள் என்று ரூமை எட்டி பாக்க பவதா வர. அந்த நேரம் பாத்து பேய்க்கு க்ளோஷப் சாட் வைக்க, பயந்துவிட்டாள் பவதா. 


அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டையே ரெண்டு பண்ணி விட்டு இப்பொழுது தான் படுத்தாள். அதுக்குள்ள பஞ்சாயத்து தலைவராக ரிஷி வந்து அமர்ந்திருக்கிறான். 


ஆலமரமும் சொம்பும் மிஸ்ஸிங்.


"கௌதம் அண்ணா சொன்னது ரொம்ப சரி. நீங்க நல்லா இருக்கணும்னா. இவள முதல்ல டைவர்ஸ் பண்ணுங்க ண்ணா. இந்தப் பஜாரி கூட இவ்ளோ நாள் இருந்ததுக்கு உங்களுக்கு நா நோபல் பரிசு வாங்கித்தாறேன். " பவதா.


"ஏய் யார பஜாரிங்கிற?. நீ தான் டி பஜாரி. ஏய் விக்கி உனக்கும் நா வீர தீரத்துக்கான அர்ஜுன் அவார்ட் வாங்கித்தாரேன். இவள டைவர்ஸ் பண்ணிடு. போலிஸ்காரனுக்கு இப்படியொரு பயந்தாங்கொள்ளி பொண்டாட்டி தேவையில்லங்கிறேன். " ஹரிணியும் விடவில்லை.


" கிட்... அவா தா சின்னப் பொண்ணு அவகூட போய் வம்பு பண்றியே. விடு கிட்‌. " 


"அப்படி சொல்லுங்கண்ணா என்னவிட தடிமாடு வயசாகுற இவளுக்குத் தா புத்தி சரியா வேல செய்ய மாட்டேங்கிது. நா எவ்ளோ பயம் பயந்தேன்னு தெரியுமா. " பவதா.


" ஐய்யோ பவதாம்மா எதுக்கு மா பயம். அதா அண்ணே நா இருக்கேனே. இந்தா இத முதல்ல சாப்பிடு. அப்றம் தெம்பா நின்று சண்ட போடலாம். ம்… ஆ. " எனக் கௌதம் கஞ்சியை ஊட்ட, ரிஷி ஊட்ட, கூடவே விக்னேஷும் ஊட்ட,


'நானும் இந்தக் கஞ்சி ஊத்துற ஃபங்ஷன்ல கலந்துக்கனும்.'னு அடம்பிடித்த மனோவை ஹரிணி 'நீயுமா இப்படி. ' என்பது பார்க்க.


'வேற வழி இல்லம்மா. நாளைக்கோ நாளான்னைக்கோ. நீ போய்டுவ. ஆனா நா அவா கூடவே தா இருக்கனும். க்ளோஸ் ஃப்ரெண்டோட வைஃப். தங்கச்சி மாறில்லலையா. ' எனக் கண்களாலேயே பேசி, ஊட்டி விட்டுக்கொண்டிருந்தவர்களின் பின்னால் வரிசையில் நின்றான்.


" என்னங்கடா ஓவரா படம் காட்டுறீங்க. 'ப' வரிசைல பேரு ஸ்டாட் ஆனா உடனே தங்கச்சியா தத்தெடுத்துக்கிவிங்களோ. பார்கவி… பவித்ரா... பவதா... ஹப்பா! என்ன! ஒரு தங்கச்சி பாசம். அது வெறும் படம், பேய்ல்லாம் ஒன்னுமில்லன்னு சொல்லி மூஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்பி விடுவிங்கன்னு பாத்தா. பாசமலர விடப் பயங்கரமா பண்றிங்க. இந்தச் சென்டிமென்ட் ஸீன்லாம் எங்கிட்ட வேணாம்." என கை கட்டிக் கொண்டு அனைவரையும் முறைக்க,


"முதல்ல அவள வெளில போச் சொல்லுங்க. அவா என்ன வேணும்னே தா பயங்காட்டுனா. இல்லன்னா நானாது பயப்படுறதாது." என வீர வசனம் பேசியவளை ஆண்கள் அனைவரும் 'எங்களுக்குத் தெரியாத ம்மா உன்ன பத்தி. ' என்பது போல் பார்க்க.


"நா படத்துல வந்த ஸீன பாத்ததுக்கு கூடப் பயப்படல ண்ணா. கிச்சனுக்கு வந்து நா பயப்படுறேன்னு தெரிஞ்சும் பின்னாடியே வந்து கத்தி பயங்காட்டிடா. அதுவும் மூஞ்சி முழுசா பவுடர அப்பிட்டு வந்து பக்கத்துல வந்து காட்டி கத்துனா. " என அழத் தொடங்க.


'என்ன புசுக்குன்னு கண்ணுல தண்ணி விட்டுட்டா. இப்ப இவனுங்க கேமராவ எம்பக்கம்ல திருப்புவானுங்களே. ' என அவள் நினைத்துப் போல்.


' ஒரு சின்னப் பொண்ண பயங்காட்டி விளையாண்டுருக்க. நீயெல்லாம் என்ன பொண்ணோ. ச்ச. ' என்பது போல் ரிஷி ஒரு பார்வை பார்த்துவிட்டு அழும் பவதாவின் கண்ணீரை துடைத்தபடியே ஊட்டி விட்டான்.


"அட போங்கடா. நீங்களும் உங்க தங்கச்சி பாசமும். " என்றவள் காலைத் தரையில் ஓங்கி உதைத்தபடி வெளியே சென்றாள். விக்னேஷ் பின்னாலேயே வர.


" விக்கி நா ஒன்னும் பண்ணல. இவெ மேல ப்ராமிஸ். " என வந்து கொண்டிருந்த மனோவின் தலையில் கை வைக்க.


"என்ன பாத்தா எப்படி தெரியுது." எனப் போலி கோபத்துடன் கேட்க.


" இங்குத் தலையில் சத்தியம் வாங்கப்படும்னு போர்டு மட்டும் போடலான்னு தெரியுது. "கௌதம்.


" அப்படி என்ன படம் பாத்த. பவதா பயப்படுற அளவுக்கு. " என விக்னேஷ் கேட்க.


"அதுவே ஒரு மொக்க படம். பேய் படம்னு சொன்னாங்க. ஆனா கடைசி வரைக்கும் பேய மட்டும் காட்டவே இல்ல. " ஹரிணி.


"என்ன படம்னு சொல்லிட்டு அப்றம் உன்னோட ரிவ்யூவ குடு. " கௌதம்.


"அரண்மனை 3 டா. அதுல ஆண்ரியா கைல ஒரு துணிய வச்சிட்டு 'வந்து என்னோட கொழந்தைய பாரு.'ன்னு சொன்னாங்க. பாக்குறதுக்குள்ள இவா கத்திட்டா. கடைசில துணிக்குள்ள குழந்த இருந்துச்சா இல்லையான்னு பாக்கவே இல்ல. " என்றாள் வருத்தமாக.


காலி கின்னத்துடன் வந்த தன் கணவனை ஹரிணி முறைக்க, அவன் அவளின் அருகில் வந்தான். ச்சச்ச... சமாதானம் செய்ய இல்லை. சமயல் செய்ய. அதற்கு வெங்காயம் வேண்டும் இல்லையா அதான் ஹரிணியிடம் கொடுத்து கட் பண்ண சொன்னான்.


"மறுபடியும் வெங்காயமா!!. " எனச் சலித்துக் கொண்ட போதும் கணவனுடன் சேர்ந்து சமைத்தாள். ஸாரி சமையல் செய்யும் கணவனுக்கு உதவினாள்.


பவதா தனக்கு இனிப்பு பிடிக்கும் என்றதால் அன்று செய்தது போல் பூசணி அல்வா செய்திருந்தான். பவதாவிற்காக மட்டுமல்ல. கௌதமிற்காகவும் தான். கௌதமிற்கு பிடிக்கும் என அனைத்தையும் அவனே செய்தான்.


சென்ற முறை கௌதம் உண்ணவே இல்லை, ரிஷியின் மீதிருந்த கோபத்தால். ஆனால் இப்போது உண்டான். தவறு இருவரின் மீதும் உள்ளது என்று உணர்ந்ததால் ரிஷியுடனான் தன் உறவை முதலிலிருந்து தொடங்க நினைத்தான்.


டைனிங் டேபிளில் பவதாவிற்கும் கௌதமிற்கும் இடையே போட்டியே நடந்தது. அல்வாவை யார் காலி செய்வது என்று.‌ அவை அனைத்தையும் ஹரிணி புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.


ஹரிணி அறிவாள் இது கௌதமிற்காகச் சமைக்கப்பட்டது என்று. அவனின் சந்தோசம் தான் என்றும் அவளின் தேவை. எனவே நன்றி சொல்லத் தன் கணவனை திரும்பிப் பார்க்க, அவனின் சாம்பல் நிற விழிகளில் நீர் கோர்த்து நின்றன.


ஒட்டிப் பிறக்கவில்லை.


ஒரு தாய் வயிறும் இல்லை.


உதிரம் கூட ஒன்றில்லை.‌


ஆனால் என் மனம் சொல்கிறது.


நீ என் உடன் பிறந்தவன் என்று.


வார்த்தைகளால் பரிமாறும் பாசத்தை விடச் செயல்களால் உணர்த்தி விடும் அன்பு வித்தியாசமானது என நிருபித்தான் ரிஷி.‌


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


விழி 23



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...