முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 23

அத்தியாயம்: 23


" நீ நிஜமாவே எக்ஸாம் எழுதி டிரெயினிங் எல்லாம் போய்த்தா போலிஸ் ஆனியா. இல்ல லட்சக்கணக்குல லஞ்சம் குடுத்து ஆனியா. டவுட்டா இருக்கே. " கௌதம்.


" கௌதம் நா என்னோட பேர்ஜ்ல டாப் ஃபைவ் கேன்டிடேட்ல ஒருத்தேன். என்ன பாத்தா இந்தக் கேள்வி கேக்குற. "விக்னேஷ் ரோசமாக.


" டாப்பா வந்து என்ன பிரயோஜனம். பொண்டாட்டிக்காக ஒரு அம்பு விடத் தெரியலயே. என்ன பண்ண?. வேலைக்காகாத வெட்டிப் போலிஸு. நா இப்ப என்ன கேட்டேன் குறிபாத்து அடிச்சா நமக்கு ஒரு பொம்ம பரிசா கிடைக்கும். அத தான கேக்குறேன். " பவதா.


" ஏய்! இதெல்லாம் ஓவர். கடைல காசு குடுத்தா இத விடப் பெரிய பொம்மையாவே வாங்கிக்கலாம். அத விட்டுட்டு ஒரிஜினல் துப்பாக்கிய வச்சி சுட்ட என்ன டம்மியா ஒரு வில்லையும் அம்பையும் குடுத்து சுடச் சொன்னா! அதா கொஞ்சம் மிஸ்ஸாகிடுச்சி. அதுக்குன்னு என்னோட திறமைய எல்லாம் கிண்டல் பண்ண கூடாது. " விக்னேஷ்.


" திறமன்னு ஒன்னு இருந்தாத்தான அத கிண்டல் பண்ண. நாங்க அது உங்கிட்ட இல்லன்னு சொல்றோம். " பவதா வெடுக்கென.


" அம்பு விட்டு எனக்குப் பழக்கம் இல்ல பாப்பா. " என்றான் சமாதானமாக. அதாவது வில்லில் அம்பு வைத்து ஏய்த தெரியாது துப்பாக்கியில் மட்டுமே சுடத் தெரிந்த போலிஸ்காரன்.


" அதுக்கு தா வாரத்துல ஒருக்கையாது பொண்டாட்டி கூட இருக்கணுங்கிறது. அவள பீச் பார்க் மாலுன்னு கூட்டீட்டு போய், அவங்க கூட இந்த மாறி ஜாமானோட விளையாடணுங்கிறது. எதுக்குமே கூட வராம இருந்தா எப்படி தெரியும் வில்லையும் அம்பையும் யூஸ் பண்ண?. மாமா கடைல இருக்குறதையாது எடுத்துப் பாத்திருக்கணும். எதுக்குமே லாய்க்கு இல்ல விக்னேஷ் நீ. "


'வில்லு விடுறதுக்கும் இவள வெளில கூட்டீட்டு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு. ' எனத் தெரியாது குழம்பி நின்றான் அவன்.


" என்னம்மா சொல்லுற!. நிஜமாவா!. உன்ன அவெ எங்கையுமே வெளில கூட்டுட்டு போலையா?. உன்ன இவெ காதலிச்சி தா கல்யாணம் பண்ணிக்கிட்டானா?. " கௌதம். ஆச்சர்யமாக.


"ஆமாண்ணே. எங்களுக்குக் கல்யாணம் ஆகி கொஞ்ச மாசம் ஆச்சி. ஆனா இவெ என்ன இதுவரைக்கும் எங்கையுமே வெளில கூட்டீட்டு போனது இல்ல. ஏற்காடு போனோம். அத தவிர எங்கையும் இல்ல. எப்ப பாத்தாலும் அவனோட மொத பொண்டாட்டி கூடவே தா இருக்கான். " என்றாள் பவதா சோகமாக.


"எது மொத பொண்டாட்டியா!. யாருடா அது?. அதுக்குள்ள ஸ்மால் வீடா.!" என விக்னேஷை கேட்டான் கௌதம்.


“அது அவனோட காக்கி சட்ட தான். எப்ப பாரு அத பத்தி மட்டுமே பேசுவான். காலைல எழுந்ததுல இருந்து ஒரு நாளையோட பாதி நேரத்த அது கூடவே தா செலவு செய்வான். ஆனாலும் அவனுக்குப் பத்தாது. எங்கூட இருக்க அவனுக்கு நேரமே கிடைக்காது. " என்றாள் சோகமாக.


"அச்சோ பாவம். டேய்! நீ போலிஸ் தான!. பொய் சொல்லிட்டு ஸ்டேஷன விட்டு வந்து இந்தப் பிள்ளைய வெளில கூட்டீட்டு போனாத்தா என்னவாம். " எனக் கேட்க.


" அப்படி கேளுங்க. லவ் பண்றேன் சொல்லும்போது மட்டும் பின்னாடியே வந்தான். ஆனா கல்யாணம் முடியையும். "


" முன்னாடி போய்ட்டானாம்மா. "


"ஆமா ண்ணா. என்ன பின்னாடி அழைய விட்டுட்டு முன்னாடி போய்டான். இப்ப கூடப் பாருங்க. நாந்தா இவெ கைய பிடிச்சிட்டு வாரேன். ஆனா இவெ மனோ அண்ணா கூடச் சேட் பண்ணிட்டு இருக்கான். கேட்டா கேஸ் ரிலேட்டடா பேசுறோம்னு சொல்றான். " பவதா மிகப் பெரிய குற்றப்பத்திரிகையே வாசித்தாள் விக்னேஷின் மீது.


"நீ அண்ணே கிட்ட உன்னோட பிரச்சனைய சொல்லிட்டல்ல. நா பாத்துக்கிறேன். இவன ஒரு வழி பண்ண எங்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு. நீ என்ன பண்றன்னா. "


"தெய்வமே. போதும் தெய்வமே. இந்தப் பதனி வியாபாரமே வேண்டாம். இந்தக் குடும்பத்துக்குள்ள குண்டு போடுற சமாச்சாரத்த உங்க ஃப்ரண்டு கிட்ட மட்டும் காட்டுனா நல்லா இருக்கும். நா ரொம்ப பாவம். ஒரு சாதாரண போலிஸு. விட்டுடேன். " எனக் கௌதமை பார்த்துக் கும்பிடவே செய்தான் விக்னேஷ். பவதா சிரிக்க,


"என்ன விக்கிக் கும்புடு பலமா இருக்கு. என்ன வேண்டுதலா!." எனக் கேட்டபடி வந்தாள் ஹரிணி. கையில் பெரிய பெரிய கவருடன். ஷாப்பிங் சென்றிருக்கிறாள் போலும்.


"ஆமாம். வேண்டுதல் நா. நா ஊர் போய்ச் சேர்ற வரைக்கும் குடும்பஸ்தனாவே இருக்கனும்னு தா கும்பிடுறேன்."  


பவதாவின் விருப்பப்படி மூவரும் அந்த வீடியோ கேம் விளையாடும் இடத்தில் தான் இருந்தனர். ஹரிணி அங்கிருக்கும் சில கடைகளுக்கு ஷாப்பிங் என்று சென்று விட்டு இப்போது தான் வருகிறாள். விக்னேஷ் அவ்வபோது மனோவுடன் ஃபோனில் பேசிவிட்டு நடுவில் நடுவில் பவதாவுடன் இணைந்தான். கௌதமும் பவதாவும் தா ஜோடி போட்டுக்கு கொண்டு விளையாடினர். 


பவதா இப்போது விக்னேஷின் காலை வாரக் காரணம்.


ஒரு கேம்.


மொத்தம் இருபது பந்துகள் முக்கோண வடிவில் அடுக்கப்பட்டு உயரத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். ஐந்து அம்புகள் கொடுக்கப்படும். இரு அம்புகளில் மொத்த பந்தையும் விழ வைக்க வேண்டும். விழுந்தால் ஒரு கரடி பொம்மை கிடைக்கும். இல்லையேல் மூன்று அம்புகளில் விழச் செய்யலாம். அதற்கு ஏற்றச் சைசில் பரிசு கிடைக்கும். ஐந்து அம்பையும் உபயோகித்தும், அனைத்து பொம்மைகளையும் விழ வைக்க இயலவில்லை எனில் அந்தக் கடைக்காரர் வெறும் கையைக் கொடுத்து போய் வாருங்கள் என்று விடுவார்.


போலிஸ்காரனான தன் கணவன் தனக்கு அந்தப் பெரிய பொம்மையைப் பரிசாய் வாங்கித் தருவான் என்று பவதா நினைக்க, அவனால் ஐந்து அம்புகளில் பத்து பொம்மையை மட்டுமே சாய்க்க முடிந்தது. அதான் போலிஸ்காரனின் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்.


"சரி வாங்க போலாம். " என ஹரிணி அழைக்க,


"நோ... நெவர்... முடியாது… எனக்கு அந்தப் பொம்மை வேணும். அப்பதா நா வருவேன் இல்லன்னா நா வரமாட்டேன். " எனப் பவதா பிடிவாதம் செய்ய, ரிஷி வந்தான் அங்கு. அவனிடம் நடந்ததை ஹரிணி கூற,


" சரி நான் அத வாங்கி தந்தா எனக்கு என்ன கிடைக்கும். " என்றான் ரிஷி. அவனைப் பார்த்தும் தன் கணவனின் பின்னால் மறைந்து நின்றவளிடம் புன்னகையுடன்.


விக்னேஷ் அவளை திரும்பிப் பார்க்க, "அதுக்கெல்லாம் இவரு சரிப்பட மாட்டாரு. போலீஸ்காரனான எ புருஷனாலேயே முடியலயாம். இவரால மட்டும் முடிஞ்சிருமா என்ன. வாங்க போலாம். " எனத் திரும்பி நடக்க,


ரிஷி வில்லை எடுத்தான். இரு அம்புகளில் மொத்தமும் விழுந்தது. பரிசாகக் கிடைத்த கரடி பொம்மையைக் கையில் வாங்கியவன் பவதாவிடம் தராமல்.


"என்ன பாத்து பயப்படாம எங்கிட்ட பேசுனா… இது உனக்குத் தா. இல்லன்னா. எங்க ஆதிக்கி தா. அவளுக்கு இந்தப் பொம்ம ரொம்ப பிடிக்கும். அவா கிட்ட குடுத்துக்கிறேன்." என சொல்லித் திரும்ப பவதா வேகமாகச் சென்று அதைப் பறித்துக் கொண்டாள்.


"நா அவருகிட்ட பேசவும் மாட்டேன். இந்தப் பொம்மைய தரவும் மாட்டேன். எனக்குத் தா இது. " என்றபடி கௌதமிற்கும் விக்னேஷிற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள, அவளின் சிறுபிள்ளைத்தனத்தை கண்டு அனைவரும் சிரித்தனர்.


மதிய உணவு நேரம் மனோவும் வந்து இணைந்து கொண்டான் மடோனா வைத்த விருந்தில். விருந்து இவர்களுக்கு மட்டும் அல்ல. இந்தக் காண்ட்ராக்டை பேசி முடிக்க வந்த மத்த கன்ஸ்ட்ரெக்ஷன் பிரதிநிதிகள் அனைவருக்கும் தான்.


அது பஃபே முறையில் அவரவருக்கு வேண்டியதை அவரவரே எடுத்துக் கொள்ளும் வகையில் இருந்தது. யார் யாருடன் வேண்டுமானாலும் பேசிக் கொண்டே அமர்ந்து உண்ணலாம்.


அனைவரும் கூட்டமாகச் சிரிப்பே வராத ஜோக்கைச் சொல்லி மற்றவர்கள் சிரிக்கும் முன் தானே அனைத்து பல்லும் தெரியுற அளவுக்குச் சிரித்துக் கொண்டிருந்தனர். வேண்டிய உணவு, ஆல்கஹால் என அனைத்தும் கிடைத்தது அங்கு.


அதில் நாகரீகம் என்ற பெயரில் மடோனா ரிஷியிடம் நடந்து கொண்டது ஹரிணியின் வயிற்றை நெருப்பு இல்லாமல் புகைய வைத்தது. மடோனா தேவையற்று ரிஷியிடம் நெருங்கிப் பழகுவது போல் தெரிந்தது. அதை ரிஷி உணர்ந்தாலும், அவளுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறேன் என்று ரிஷி ஆடியது ஹரிணியின் கோபத்தை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றது.


ஆடியது மடோனாவுடன் மட்டும் இல்ல. அவளின் தம்பியுடனும் தான். இருபது வயது இருக்கும் அந்தப் பையனுக்கு. அழகாய் வெள்ளையாய் பளிங்கு சிலைபோல் இருந்தான்.‌ ஆனால் யாருடனும் பேசாது அமைதியாகவே இருந்தான்.‌ நிக்கில் செபாஸ்டியன். அவன் பேசிச் சிரிக்கும் ஒரு நபர் ரிஷி மட்டும் தான்.‌ தூரத்திலேயே டாக்டர் தன்செயன் நிக் கை பார்த்த படி அமர்ந்திருந்தார். 


கண்காணிக்கிறாரோ!. எதற்கு?. ஆமாம் இது மடோனா கொடுக்கும் பிஸ்னஸ் விருந்து என்றால் அதில் டாக்டருக்கு என்ன வேல?


"அவாய்ட் பண்றானாமா. உன்ன கண்டுக்கலையாமா. நீ இப்பவே சொல்லு. எழுந்து போய் அவனோட மண்ட மேலயே நாலு தட்டு தட்டி. பொண்டாட்டி இருக்கும்போது எது டா அடுத்த பொண்ணு‌கூட ஆடுறன்னு சொல்லி இழுத்துட்டு வருவோம். " என்றபடி வந்து அமர்ந்தான் கௌதம். நால்வரும் ஒரிடத்தில் இருந்தனர்.


"தேவையில்ல. நா பாத்துப்பேன். " என ரிஷியை முறைத்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் ஒரு இளைஞன்.


"Hi Harini. How are you. Really happy to see you." என்ற படி.


"ஹாய் ராகுல். எப்படி இருக்க மேன்?. நீ மட்டுமா வந்த. "


"இல்ல. சிஸ்டரும் அவளோட பசங்களும் வந்திருக்காங்க. ட்ரக்கிங் போயிருக்காங்க. " என இருவரும் மட்டுமல்லாது கௌதமும் பேசிச் சிரித்து பேச, மனோ கௌதமை சுரண்டினான்.


"பாஸ் யாரு இது?. பாக்க ரித்திக் ரோஷன் சட்டையையும் பேண்ட்டையும் திருடீட்டு வந்த ரக்கூன் மாறி இருக்கான். " .


"அவனா!!. Once upon a time ஹரிணியோட லவ்வரு. "


" எது.? " மனோ அதிர்ச்சியாக.


"அண்ணா விளையாடாதிங்க. " பவதா.


" இல்லம்மா. உண்மைய சொல்றேன். ஹரிணிக்கி பதினெட்டு வயசு முடியையும் அவளோட அண்ணே அவளுக்கு மாப்பிள்ள பாத்தான். வாரத்துக்கு ஒருத்தேன்னு எவனாவது வந்து ஹரிணிக்கிட்ட மேரேஜ்கு அப்ரோச் பண்ணுவான்.


பலர ஹரிணி நிமிந்து கூடப் பாக்கமாட்டா. ஆனா அதுல இருபது பேர இவளுக்குப் பிடிச்சிருந்தது. அந்த இருபது பேர்ல இவனும் ஒருத்தேன். இவெங்கூட எங்கேஜ்மெண்ட் தேதி எல்லாம் முடிவாகிடுச்சி."


"அப்றம் பாஸ். " மனோ… கதை கேட்கும் ஆவலுடன்.


" அது நடக்கல. எங்கேஜ்மெண்டுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து என்னால முடியாதுன்னு சொல்லிடான். " .


"ஏம்பாஸ். " மனோ


"பிடிக்கலயாமா. என்னோட டார்லிங் அவனுங்க குடும்பத்துக்குச் செட் ஆக மாட்டாளா மா."


" யார் சொன்னது. அப்படில்லாம் இல்ல. ஹரிணி எல்லார் கூடயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற பொண்ணு.‌ எல்லாருக்கும் அவள பிடிக்கும். எந்தச் சூழ்நிலையையும் அவளால ஈசியா ஹண்டில் பண்ண முடியும். " பவதா பேசினாள் ஆதரவாக.


"ஆனா அந்தச் சிம்பான்சி அப்படி தா சொன்னதே. ம்… நாங் கூட‌ எதோ ஒரு சைத்தானோ பூதமோ. ஹரிணி விரும்பித் திரும்பி பாக்குற எல்லா பசங்களையும். அப்பாலே போன்னு வேப்பில அடிச்சி விரட்டி விட்டுடுதுன்னு நினைச்சேன். இதோ இப்ப நடக்கப்‌போறது மாறி. " என ரிஷியைக் காட்ட, அவன் ஹரிணியின் அருகிலிருந்த ராகுலை பார்வையாலேயே மிரட்டிக் கொண்டு அவர்களின் எதிரில் வந்தமர்ந்தான். அமர்ந்தவன் சும்மாவும் இருக்கவில்லை. எதையாவது செய்து ராகுலை பயமுறுத்திக் கொண்டே தான் இருந்தான். ராகுல் ஹரிணிக்கு டாட்டா சொல்லிட்டு போகும் வரை.


ரிஷியும் ஹரிணியும் சில குணத்தில் ஒத்தவர்கள். தன் இணையை யாரும் காதலுடன் அணுகுவதை விரும்பாதவர்கள். நட்பாய் பேசலாம் தவறில்லை. ஆனால் வேறு மாதிரி அது செல்லும்போது. இருவருக்கும் Possessiveness அதிகமாகி விடும். அதிலும் ரிஷி ஹரிணிக்காக என்ன வேண்டுமாலும் செய்வான்.


இதை எதையும் அறியாத ஹரிணி தன் கணவனிடம் ராகுலை அறிமுகம் செய்து வைத்துப் பேசி சிரிக்க, ராகுல் நலுவிக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இல்லை ஓடவிட்டு விட்டான் தரன். 


ரிஷி, ஹரிணி மீது வைத்திருக்கும் காதலை யாருக்கும் பகிர்ந்திட விரும்பவில்லை என்பதை மற்றவர்கள் அறிந்தாலும் அதை ஹரிணி சரியாக உணரவில்லை.


" ஏன் கௌதம் ராகுல் போய்ட்டான். "


"ஒரேடியா போய்ச் சேந்துட கூடாதுல்ல. அதா நடைய கட்டிட்டான். அவனுக்கும் அவனோட உயிர் மேல ஆச இருக்கும்ல. " என்க, மற்றவர்கள் சிரித்தனர்.‌ கௌதமை முறைத்தாள் ரிஷியிடம்.


" நா உங்கிட்ட ஒன்னுகேக்கணும் பாவா. " என்க.


" என்ன கேக்க போற. பார்பி டால் கூட ஏ டான்ஸ் ஆடுறேங்கிற பேருல தலைய வெட்டுன ஆடு மாறிக் கொடூறமா பண்ணிட்டு இருந்தன்னு தான. " கௌதம் ரிஷியைக் கேலி செய்ய, தரன் அவனின் தலையில் தட்டினான்.


"ம்ச்… அது இல்ல. அந்த டாக்டரு. தன்செயனுக்கு என்ன வேல இங்க. இது ஒன்னும் ஹாஸ்பிடல் கிடையாதே. அப்றம் எதுக்கு வந்தான். அந்தப் பையன் நிக்கில்ல கடத்த போற கடத்தல் காரெ மாறி உத்து உத்து பாத்துட்டே இருக்கான். ஏன்னு உனக்குத் தெரியுமா பாவா. ம்… அப்றம் உனக்கு எப்படி அவரு ஹாட் சர்ஜரியன்னு தெரியும்?. " எனக் கேட்க,


" கடத்தல கிட். கண்காணிக்கிறான். மடோனாவோட தம்பி நிக்கிக்கு ஹார்ட்டுல சில பிரச்சன இருக்கு. எந்த நேரம்னாலும் எதாவது ஆகலாம்." 


"ஓ... முன்னெச்சரிக்கையா!. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாலோ. இல்ல நெஞ்சில கைய வச்சிட்டு உக்காந்துட்டாலோ.‌ அவசரத்துக்கு யார் ஹாஸ்பிடல் கதவையும் தட்ட கூடாதுல்ல.‌ அதா தன்செயன் மாறி ஒரு டாக்டர கூடக் கூட்டீட்டு வந்திருக்காங்க போல காப்பாத்த. நடமாடும் ஒரு மருந்துவமனை நம்ம தன்செயன்." கௌதம்.


" அவ்வளவு சீரியஸ்னா. அப்ப ஏ இங்க கூட்டீட்டு வரணும்.‌ ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆக வேண்டியது தான. ஆப்ரேஷன் பண்ணா சரியாகிடுமா.‌.‌" ஹரிணி சரமாரியாகக் கேள்விகளை அடுக்க.‌


"ம்...‌ பண்ணத்தான இங்க வந்திருக்காங்க. " ரிஷி


" எது இங்கவா?. டெல்லி மும்பை சென்னைன்னு சிட்டிக்கி போகாம இங்க எதுக்கு வந்திருக்காங்க. " ஹரிணி.


"அத மடோனாட்டையே கேட்டுத் தெரிஞ்சிக்க." என்றான் ரிஷி அலட்சியமாக. ஆனால் பார்வை மட்டும் தன்செயனை வெறித்துப் பார்த்தது.


விருந்து முடிந்து அருகில் இருக்கும் டீ எஸ்டேட், சில பழத்தோட்டங்கள் என அன்றையபொழுது இனிதாய் கழிந்ததனர் அறுவரும்.‌.


இரவு விக்னேஷிற்கும் பவதாவிற்கும் அந்த ஹோட்டலிலேயே ஒரு சூட் ஏற்பாடு செய்து விட்டு மற்ற நால்வரும் வீடு வந்து சேர்ந்தனர்.


நடு இரவைத் தாண்டி விட்டது. தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த கௌதமிற்கு உறக்கம் வரவில்லை.‌ மனமானது நிறைவுடன் இருக்கும்போது, விழியானது மூட மறுத்தன. பல ஆண்டுகளுக்குப் பின் ரிஷியுடன் சேர்ந்து களிக்கும்பொழுது ஆனந்தத்தை தந்தது.‌ கூடவே பார்கவி இல்லை என்ற நினைவு வேதனையையும் தந்தது.


"நீ இன்னும் தூங்கலயா!." எனக் கேட்டபடி கையில் காஃபிக் கப்புடன் வந்தாள் ஹரிணி.


"வரல. " என்றவன்.


"ரொம்ப நாள் ஆச்சி. நா அவனோட ஊட்டிய சுத்தி." என்றான் ஒருவிதமான குரலில். அதை ஏக்கம் என்று கூடச் சொல்லலாம்.


"ம்…" என்றாளே தவிர எதுவும் சொல்லவில்லை.


"எனக்கு நல்லா நியாபகம் இருக்கு டார்லிங். மல பெஞ்சிருந்தா சகதியால பாத வலுக்கும். கஷ்டப்பட்டு எஸ்டேட் மேல ஏறிச் சறுக்கிக்கிட்டே கீழ வருவோம். டவுசர் கிளிஞ்சி போச்சின்னு சொல்லிப் பெரிப்பா எங்கள திட்டுவாரு. உம்புருஷென் செடியோட வேர காட்டி பாம்புன்னு பயமுறுத்துவன். அது தெரியாம நா பயந்து ஓடிக் கீழ விழுந்து பல்ல உடச்சிக்கிட்டேன். அப்ப ஓட்டப் பல்லன்னு சொல்லிக் கிண்டல் பண்ணி சிரிப்பான்.


அப்றம் ஒருக்க எங்க பாப்புடுவ அட்ட பூச்சி ஒன்னு கடிச்சிடுச்சி‌. அப்பப் பாப்பு எவ்ளோ பயந்து அழுதா தெரியுமா. ம்ச்... எதையுமே மறக்க முடியல டார்லிங். எங்க பாத்தாலும் எதாவது ஒன்னு கண்ணுக்குள்ள வந்து பாப்புடுவ நியாபகப் படுத்திட்டே இருக்கு. " எனத் தன் தங்கையின் நினைவுகளின் கண் கலங்க, அவனின் தோளில் கை வைத்துத் தட்டி கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஹரிணி.


" ஏ டார்லிங்? ஏ பாப்புடு ஏங்கூட இல்லாம போகணும். எத்தன பேரு காட்டுக்குள்ள தொலஞ்சி போய்ப் பல நாள் கழிச்சி உயிரோட வந்திருக்காங்க. அந்த மாறிப் பாப்புடுவும் வந்திருக்கலாம்ல. ஏ கடவுள் கூட அவளுக்கு ஹெல்ப் பண்ணல. அப்படி பண்ணிருந்தா இன்னேரம் பாப்புடுவும் எங்கூட இருந்திருப்பால்ல. " என்றான் வேதனை நிரம்பிய குரலில்.


மனிதனின் பூத உடல் அழியலாம். ஆனால் ஆத்மார்த்தமான அன்பும். அது தந்த நினைவுகளும் என்றும் மாறாது.‌ வெகு நேரமாகக் கௌதம் மட்டுமே பேசினான். ஹரிணி குறுக்கிடவில்லை. அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து தன் தங்கையின் சேட்டைகளைச் சொல்ல. புன்சிரிப்புடன் கேட்டாள் ஹரிணி.


" கிட் ரொம்ப லேட் ஆகிடுச்சி. வா. வெளில குளிர் அதிகமாக இருக்கு. அப்றம் காய்ச்சல் வந்துடும். " என்றபடி ரிஷி வர,


" கொஞ்ச நேரம் பாவா. ப்ளீஸ். " என்றவள். "நீயும் வா. இங்க உக்காரு. " எனத் தன் கணவனுக்கும் இடம் தர, கௌதமை பார்த்தபடி வந்து அமர்ந்தான் ரிஷி. ரிஷியின் கரத்தைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கௌதமின் தோளில் சாய்ந்து கொண்டு,


" ம்... அப்றம்… பாரு என்ன பண்ணாங்க." எனக் கௌதமை பேசச் சொல்ல. அவன் மட்டுமல்ல ரிஷியும் சேர்ந்து கொண்டு பார்கவி மற்றும் வைசுவின் சிறு வயது நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.


இரு ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை பெண்ணாய் இருவரை சேர்க்கும் பாலமாய் மாறி இருந்தாள் ஹரிணி.


அந்த இரவு மூவருக்கும் ஒரு நிறைவான இரவாக அமைந்தது.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 22


விழி 24


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...