அத்தியாயம்: 22
என்னைவிட அதிகமாக.
உன்னை நேசிக்க.
என்னைத் தவிர.
யாராலும் முடியாது.
பெரிய கட்டில் தான் அது. ஆனாலும் அதில் உறங்கவில்லை அவள். தரையில் போர்வையின்றி தலையணையை அணைத்தபடி துயில் கொண்டிருந்தாள் தரனின் காதலி ஹரிணி.
ஏன. மஞ்சம் தலைவனின்றி முள்ளாய் குத்தியதால் தரையில் உறங்குகிறாளோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவளுக்குப் படுக்கையில் உருளும் பழக்கம் உண்டு. படுக்கும்போது மட்டுமே கட்டிலில் கிடப்பாள். கண் விழிக்கும்போது தரையில் தான் இருப்பாள். இவளுக்கு எதற்குக் கட்டில் என்று தான் தெரியவில்லை.
திருமண முடிந்து அவள் மட்டும் தனியாக உறங்கும் போதும் அப்படித்தான். ஆனால் அவளைப் பாதுக்காக்க தலையணை கொண்டு தரையில் மெத்தை அமைத்திருப்பான் அவளின் நாயகன். அதற்குப் பின் கணவனுடன் உறங்கும்போது அவனை அணைத்து கொண்டும் அவனால் அணைக்கப்பட்டும் கிடப்பதால் கீழே விழுவதில்லை. இப்போது அவன் அருகில் இல்லாததால் கீழே கிடக்கிறாள்.
காலை மணி ஏழை நெருங்கும் வேளை, இதமான தூக்கம் அந்த வேளையில் தான் வரும். இனிய கனவுகள் கண்களில் தவழப் புன் சிரிப்புடன் உறங்கும் தன் மனைவியைப் பூக்குவியலாய் நினைத்துக் கைகளில் ஏந்தினான் தரன்.
மெல்ல அவளைக் கட்டிலில் கிடத்தியவன் அவள் உறங்கும் அழகை ரசித்தான். மெதுவாக அவளின் நெற்றியில் தன் இதழ் பதித்தான். பார்த்த நொடியிலிருந்து தன்னுடன் உறவாடும் அவளின் விழிகள் இரண்டும் இமை என்னும் சிறையில் அடைந்திருப்பது பொறுக்காது, அதற்குத் தண்டனையாய் இரு முத்தங்களை மூடிய விழிக்குத் தர, அது திறக்கவே இல்லை. இதழ் சுழித்து அவள் அந்தப் பக்கம் பிரண்டு படுக்க, இவனும் அந்தப் பக்கம் சென்று அவளை ரசித்தான்.
சாயம் பூசாத அதரங்கள் அவனை மோகம் கொள்ளச் செய்யும் ஆயுதம். அதற்கு இதமான ஒரு இதழொற்றலை தந்தவனின் பார்வை தாய்மையின் பூரிப்பில் திரண்டிருக்கும் கன்னத்தின் மீது பட்டது. அதற்கு ஒரு முத்தம் தரத்தான் நினைத்தான். ஆனால் அதற்குள்ளும் அவனின் கவனத்தை வேறு ஒன்று ஈர்த்தது.
இலைமேல் பனி துளியாய் அவளின் கன்னம்மேல் ஒரு பரு. அவனுக்குப் பிடிக்காத ஒன்று. அதைக் கிள்ளி விடக் கைகள் துடித்த போதும் அவளின் துயில் கலையக் கூடாது எனப் பொறுமை காத்தான். அவளின் விலகிய ஆடைகளைச் சரி செய்தவன் மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகிச் சென்றான்.
எப்படி அவளின் அறைக்குள் வந்தான்.? எப்படி செல்வான்? என்று தெரியாது. ஆனால் வந்தான், சென்றான்., அவள் அறியாமல். பூட்டிய அவளின் அறைக்குள்.
காலைத் தன் ஜாக்கிங்கை முடித்து வீடு திரும்பிய விக்னேஷின் கண்களுக்கு, ரிஷி, ஹரிணியின் அறையில் இருந்த பத்தடி உயர சிறிய ஜன்னலில் இருந்து கீழே குத்திப்பது தெரிந்தது.
'பக்கத்துல மரமோ! பைப்போ இல்ல. எப்படி ஏறுனான்?. இப்ப அத்தன உயரத்துல இருந்து குதிச்சும் அசால்ட்டா கைய தட்டி விட்டுடு நடந்து போறான். எப்படி?. ' என நினைத்தபடி வர.
" குட் மார்னிங் விக்னேஷ். ஜாக்கிங் முடிச்சிட்டியா. இல்ல இனிமே தா போகப்போறியா. " எனப் புன்னகையுடன் கேட்க.
'இவனுக்கு இப்ப என்ன பதில் சொல்றது. ' எனத் தெரியாது எல்லா பக்கமும் தலையை ஆட்டினான்.
" என்னாச்சி விக்னேஷ்.? ஏ முழிக்கி.? " என்க.
" அது... ம்... நாம இதுக்கு முன்னாடி எங்கையாது பாத்து பழகிருக்கோமா.? " என்றான் விக்னேஷ். இரு நாட்களாக அவன் மண்டையை வண்டாய் குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான்.
"ம்... பாத்திருக்கோமே. மறந்துட்டியா என்ன?. " என எதிர் கேள்வி கேட்டான்.
'யோவ் மறந்ததுனால தா கேக்குறேன். ' என்பது போல் பாத்தவன். அதைச் சொல்லாது. "எங்க பாத்திருக்கோம்.? " என்றான் ஆவலாக.
" போச்சி டா. அதுக்குள்ள மறந்துட்ட. ஒரு போலிஸ்காரனுக்கு மறதிங்கிற வியாதி இருக்க கூடாதே.! " என்றவனை பார்க்காது புருவம் சுருக்கி யோசிக்க.
"நேத்துத்தான பாத்தோம். ஒரு நாள் முழுசா முடியுறதுக்குள்ள மறந்துட்டேங்கிற. என்னப்பா இது?. " எனக் கேலி செய்து புன்னகைக்க, உடன் விக்னேஷும் சிரித்தான்.
" நேத்து நடந்த கலவரத்துல சரியா பேசிக்க முடியலைல. என்னோட பேரு ரிஷி தரன். ஹரிணி சொல்லிப்பான்னு நம்புறேன். " எனக் கரம் நீட்ட.
" ம்... சொன்னா…ங்க. நிஜமாகவே நேத்து மாறி ஒரு டின்னர நா எங்கையும் சாப்டது இல்ல. உள்ள போலாம். வாங்க. " என அழைத்துச் சென்றான்.
" நா உனக்குப் பத்து மணிக்கி தான அப்பாயிண்மெண்ட் தந்தென். எதுக்கு நீ இப்ப வந். போ. மணி பாக்க தெரியாம வாட்ச்ச மட்டும் பந்தாவா கட்டிக்கிட்டு கோட்டு சூட்டு போட்டுட்டு திரியுறானுங்க ஊருக்குள்ள. வெக்கம் இல்லாதவிங்க. " என்றான் கௌதம் கிண்டலாக. ஏனெனில் ரிஷி கோர்ட் சூட்டில் தான் வந்திருந்தான், அந்தக் காலை வேளையில்.
' டயம் பாக்க தெரியலன்னா நீ வந்து சொல்லித் தாயேன்?.' என்பது போன்றொரு பார்வையை தந்தவன் சோஃபாவில் அமர, கௌதமும் வந்து அமர்ந்தான், கால்மேல் கால் போட்டுக் கொண்டு.
" நீங்கப் பேசிட்டு இருங்க. நா இப்ப வந்திடுறேன். " என அறைக்குச் சென்றான் விக்னேஷ். வியர்வையில் நனைந்திருந்ததால் குளிக்கச் சென்றான். செல்லும் முன் தன் மனைவியிடம் தரன் வந்திருப்பதாகவும் அவனுக்கு காஃபி எடுத்துச் செல்லும் மாறும் கூறிச் சென்றான்.
ரிஷியை முறைத்தபடி அமர்ந்திருந்த கௌதமை கண்டு கொள்ளாது, ரிஷி பத்திரிக்கையைப் படிக்கலான்னான்.
ட்ரேயில் இரு கப்புடன் வந்த பவதாவின் கரங்கள் நடுங்கியது. அதை ரிஷியும் பார்த்தான். ஏன் என்று புரியாமல் கௌதமை பார்க்க, அவன் எதேதோ சைகை செய்தான். பவதா உடனே சமயலறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
"என்னடா சொன்ன அந்தப் பொண்ணு கிட்ட என்ன பாத்து பயப்படுது?. " என ரிஷி கேட்க.
" உண்மைய சொன்னேன். " என்றவனின் தலையில் பத்திரிக்கையைச் சுருட்டி அடித்தான் ரிஷி. பின் சமையலறையை பார்க்க, பவதா எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரிஷி பார்ப்பதை உணர்ந்து பவதா வேகவேகமாக மறைந்து கொண்டாள். அதை பார்த்துக் கௌதம் சிரித்தான்.
அவள் பயப்பட காரணம் இருக்கிறது. அது கௌதம் தான். " அவெ ரொம்ப மோசமானவெ ம்மா. பாக்க டிப்பு டாப்பா டிரெஸ் பண்ணிட்டு தன்ன அழகா காட்டிக்கிட்டு வெட்டி பந்தா பேசிட்டு ஊருக்குள்ள சுத்தி திரிவான். ஆனா ஆள் சரியில்லாதவெ. நல்லா பேசிட்டே இருப்பான். திடீர்னு கை நீட்டுவான். சில நேரம் பைத்தியக்காரெ மாறிக் கையில கிடைக்கிறத தூக்கி போட்டிடுவான்னா பாத்துக்கையே. அவனால என்னோட ஃப்ரண்டுக்கும் பயங்கரமான அடி கூட விழும்.
ஆனா அவா தா இதிகாசத்துல வாழ்ந்த பொண்டாட்டி மாறி அவளோட ப்ரானநாதன விட்டுக்குடுக்க மாட்டேங்கிறா. ம்... என்ன பண்ண!. நீ எதுக்கும் அவன பாத்தேன்னா பத்தடி தள்ளி நின்னே பேசு. இல்லன்னா பாஞ்சி வந்து காத கடிச்சிடுவான். நர மாமிசம் சாப்பிடுற அரக்கெ. பாத்து இருந்துக்க." எனக் கிடைக்கும் நேரம் எல்லாம் ரிஷியை பற்றிப் பேசுவான். ஸாரி திட்டித் தீர்ப்பான்.
முதலில் நம்பாதவள், நேற்று ரிஷி நடந்து கொண்டதை பார்த்தபின் நம்ப தொடங்கி விட்டாள். கூடவே பயந்தும் விட்டாள். அதான் ஒழிந்து கொண்டாள்.
ரிஷியை எட்டி பார்ப்பதும் பின் மறைந்து கொள்வதும்மான அவளின் விளையாட்டை ரசித்தபடி காஃபியை பருகினான். அது ருசியாக இருந்தது. நிமிர்ந்து "சூப்பர். " என அவள் எட்டிப்பார்க்கும்போது அவன் கையைக் காட்ட, அவள் மீண்டும் எட்டிப் பார்க்கவே இல்லை.
ரிஷியின் கண்களுக்குப் பவதா பார்கவியாகத் தெரிந்தாள். அவளும் அப்படிதான் கௌதம் கூட இருந்தால் இப்படி ஒழிந்து நின்று தான் ரிஷியைப் பார்ப்பாள். பேசமாட்டாள். கௌதம் இல்லை என்றாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் ரிஷியுடன் பேசுவாள். ரிஷி தான் வேண்டும் என்றே பார்கவியுடன் வம்பு வளர்த்து அவளின் சிணுங்கள் மொழி கேட்பான். அது நினைவுக்கு வர ரிஷியின் உதடுகளில் ஒரு கசந்த புன்னகை ஒன்று வந்தன.
அதன் பின் மனோவும் விக்னேஷும் வர, அறிமுகப் படலம் நடந்து சாதாரணமாகச் பேசிக் கொண்டிருந்தனர்.
" நீ எப்படி உள்ள வந்த?. என்னோட ரூம் உள் பக்கமா தாழ் போட்டிருந்தது. கதவ தட்டி பர்மிஷன் கேட்டுட்டு வர்ற பழக்கம் இல்லையா உனக்கு?. " என கோபமாகக் கேட்டபடி வந்தாள் ஹரிணி. கண்விழிக்கும்போது கட்டிலில் கிடந்தது, வெளியே கேட்ட குரல், இது அவனின் வேலை என்று சொல்லியது.
" நா தட்டுனேன். நீ திறக்கல. அதா வந்தேன். "
"அப்பத் திறக்குற வரைக்கும் காத்திருக்கனும். " ஹரிணி.
" கதவ திறந்தாத்தா கண்ட நாயெல்லாம் உள்ள வந்துடுதே. அதுக்கு தா மூடி வைக்கிறது. ஆனா அது ஜன்னல் ஏறிக் குதிச்சி வரும்னு எதிர்பாக்கல போல. என்ன டார்லிங். " எனக் கௌதம் ரிஷியை, நாய் என்று சொல்ல,
அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவன் அவனைப் பயமுறுத்தும் பொருட்டு சட்டென விறைத்து எழுந்தான். அது கௌதமை மட்டுமல்ல, காஃபி கப்புடன் வந்த பவதாவையும் பயமுறுத்தியது. பீங்கான் கப் தரையில் விழுந்து சிதறியது.
"ஏன் காலங்காத்தால வந்து பயமுறுத்துற பாவா. " ஹரிணி பவதாவிற்கு உதவியபடி,
" எதுக்குன்னா உங்கள கூட்டீட்டு போக. "
"எங்க?."
" ஹோட்டலுக்கு. மடோனா உங்க எல்லாரையும் Lunchக்கு இன்வைட் பண்ணிருக்கா. எனக்குப் பத்து மணிக்கி மீட்டிங்க இருக்கு. அது முடியுற வர அங்க நீங்கப் பொழுத போக்க சுத்திச் பாக்கன்னு நிறைய இடம் இருக்கு. அதா கூட்டீட்டு போலாம்னு வந்தேன். பத்து நிமிசம் தா டயம். அதுக்குள்ள கிளம்பி ரெடியா இருங்க. " என்றான் ரிஷி.
" யார கேட்டு எங்க அப்பாய்ண்மெண்ட்ட நீ புக் பண்ற?. எங்களுக்கு நிறைய வேல இருக்கு. டேய் சொல்லுடா போலிஸு. அக்யூஸ்ட்டுக்கு ஆயுள் மசாஜ் பண்ணனும்ல. வர முடியாதுன்னு சொல்லு. " கௌதம்.
"பாஸ்… பார்பி டால் கூட காஃபி குடிக்கிறதே பெரிய விசயம். அது நம்மல விருந்துக்கு அங்க கூப்பிட்டிருக்கு. போகாம இருந்தா நல்லாவா இருக்கும். வாங்க பாஸ். " மனோ.
"நேத்து அவ்ளோ நடந்ததுக்கு அப்றம் அங்க வர்றதே எனக்கு அசிங்கம் டா. " கௌதம்.
"நமக்கு அசிங்கப்படுறது எல்லாம் ஆதார் எடுக்குற மாறிச் சர்வ சாதாரணம் பாஸ். இத போய்ப் பெருசா பேசிட்டு. பெரிய பாஸ் நாங்க வாரோம். " என்க. விக்னேஷ் மறுத்தான், வேலை இருப்பதாகச் சொல்லி. ஆனால் பவதாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது ஹரிணியுடனும் கௌதமுடனும் ஊர் சுற்ற. எனவே ஏக்கமாகத் தன் கணவனைப் பார்க்க, அவன் சரி எனத் தலையசைத்தான்.
"அப்றம் என்ன தல தா கோயில் மணி மாறி அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு அசஞ்சிடுச்சே. வேற என்ன வேணும். வாங்க எல்லாரும். " என மனோ எழ. விக்னேஷ் அவனின் கைகளில் தன் காரின் சாவியை திணித்தான்.
" நேத்து காலைல நா சொன்ன விசயத்த மறந்துட்டியா. போ. போய் விசாரிச்சிட்டு வா. " விக்னேஷ்.
" இன்னைக்கே வா. ஏ நாளைக்கி போனா யாரும் அந்த எடத்த குண்டு போட்டு அழிச்சிடுவாங்களா?. இல்ல சுனாமி தா வந்து சுருட்டீட்டு போயிடுமா?. " மனோ.
"ம்ச்... வாய் பேசாத. நீ இப்பவே போயாகணும். " என்றான் காவலனாக. அவனுக்கு அவனின் வேலை முக்கியம் அல்லவா!.
அனைவரும் ரெடியாகி காருக்குச் செல்ல, " இது எங்காருல்ல!!. எதுக்குடா என்னோட கார எடுத்துட்டு வந்த?. இத தொடுறதுக்கு முன்னாடி அதோட ஒனர் எங்கிட்ட கேட்டிருக்கனும் நீ?. " கௌதம் கத்த.
"உங்காரா!!. பேரையே காணும். ம். அடுத்த முறை உன் கார கல்வெட்டா நெனச்சு உன் பேர அதுல செதுக்கி வை. அப்பத்தான் இது உன் காருன்னு எனக்குத் தெரியும். இப்ப வழி விடுறியா. லேட் ஆகுது. " என ரிஷி நக்கலாகக் கூறி காரை எடுத்தான். மனோ வேறொரு காரில் ஏற, இரு கார்களும் இரு வேறு பக்கம் பயணித்தன.
20 நிமிட பயணத்திற்கு பின் அந்தக் கார் அந்த ஹோட்டலை அடைந்தது. பவதாவிற்கு ஆர்வமாக இருந்தது. தன் கணவனுடன் பொழுதைக் கழிப்பதை எண்ணி. ஆனால் ஹரிணி மட்டும் ரிஷியை முறைத்துக் கொண்டே வந்தாள். ஏனெனில் நேற்று நடந்த நிகழ்வுக்குப் பின்னும் அவன் ஃபோன் செய்யவில்லை.
என்ன பண்ண இவன.
கீழே அனைவரும் இறங்க ரிஷி ஹரிணியை மட்டும் தனியாகப் பிடித்து வைத்தான்.
" என்ன " என்றாள் கோபமாக.
" கிட்... கோபப்படும்போது நீ க்யூட்டாக இருக்க." என்றான் ரசனையாக.
" இத சொல்லத்தா இருக்கச் சொன்னியா. ஹிம்... எனக்கு உன்னோட காம்ப்லீமென்ட் ஒன்னும் தேவையில்லை. " என இறக்கப் பார்க்க,
"கிட்… ஒரு ரகசியம் சொல்லனும். கொஞ்சம் பக்கத்துல வந்தா காதுல சொல்வேன். " என்க, நேற்றைய நிகழ்விற்கு காரணம் தான் சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து அவன் புறம் காதை நீட்டினாள்.
கள்ளச் சிரிப்புடன் நெருங்கி வந்தவன் அவள் கன்னத்தில், காலையில் இருந்தே அவனைத் தொந்தரவு செய்த அந்த பருவைக் கிள்ளி எடுத்தான்.
"ஸ்... ஆ…. எரும... எரும… உனக்கு எத்தனை முறை சொல்றது. அதெல்லாம் கிள்ளாதன்னு. கேட்க மாட்டியா... மாட்டியா. " என அவனைச் சில அடிகள் அடித்து விட்டு இறங்கினாள்.
கன்னத்தைத் தடவிய படியே வந்த ஹரிணியை கண்ட கௌதம், " போச்சி அடிச்சிருக்கான் போல. அதா கன்னத்துல கை வச்சிட்டே வர்றா. இப்ப என்னன்னு கேட்டா. சிரிச்சிட்டே போயிடுவா பாறேன். வாழ்க்கை முழுக்க என்னோட ஃப்ரண்டு கஷ்டப்பட்டுடே இருக்கணும் எழுதிருக்கு போல. " எனக் கௌதம் வராத கண்ணீரை துடைத்து, ரிஷி ஹரிணியை அடித்ததாகச் சொல்ல. பவதா ரிஷியை முறைத்துக் கொண்டே நடந்தாள்.
"இங்க ப்ளே ஸ்டேஷன் இருக்கு. ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு அங்க டயம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அப்றம் என்னோட மீட்டிங்க முடிவும் பக்கத்துல இருக்குற இடத்துக்குப் போலாம். " என ரிஷி சொன்ன போதே பவதாவின் வழிகள் ஆனந்தத்தில் விரிந்தன.
அவளுக்குச் சென்னையில் மிகவும் பிடித்த இடம் என்றால் அது மால் தான். அங்கு Kids zone என்று விளையாடும் இடம் இருக்கும். அதில் நுழைந்து விட்டால் பசிக்க கூடச் செய்யாது அவளுக்கு. அதே போன்றெரு இடம் அதுவும் கணவன் உடன் தன் பொழுதைக் கழிக்க போகிறாள். மகிழ்ச்சியில் விக்னேஷின் கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க. அவனும் இதை எதிர்பார்த்து தானே இங்கு வந்தான். அதான் அவளின் சந்தோஷம்.
ரிஷி இடத்தைக் காட்டிவிட்டு காலை உணவுக்கு அனைவரையும் அழைத்துச் சென்ற போது ஹரிணி தெரியாது ஒருவரை இடித்து விட்டாள். பாவம் அவர் கீழேயும் விழுந்து விட்டார்.
" ஸாரி ஸார். நா கவனிக்கல. ஸாரி. " என அவருக்கு எழ உதவ, அவரின் முகம் பார்த்தவள் குழப்பத்துடன்.
"நீங்க டாக்டர் தன்செயன் தான?. என்ன அடையாளம் தெரியுதா?. என்னோட பேரு ஹரிணி. ஓம்மோட சிஸ்டர். " என்க, ரிஷியின் முகத்தில் எரிச்சல் வந்தது. அவனுக்குத் தான் ஹரிணி ஓம்காரை அண்ணன் என்று சொன்னாலே பிடிக்காதே.
"டாக்டர் நீங்க ஓகே தான. அடி எதுவும் பட்டிருக்கா!. " என அவளைப் பார்த்து மலங்க முழிந்த அவரைக் கேட்க, அவர் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ரிஷியைப் பார்த்தார்.
ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும் அவருக்கு. பாதி முடி வெள்ளையாக இருந்தது. அவரின் சாந்தமான முகம் ரிஷியைப் பார்த்தபின் ஒரு நொடி வெளிறி பின் சாந்தமாய் ஆனாது. ஹரிணியை தெரியாததது போல் காட்டிக் கொண்டு அங்கிருந்து வேகவேகமாகச் சென்றார் அவர்.
" ஏ கண்டுக்காம போறாரு?. என்ன இவரு ஓம் கூட நிறையவாட்டி பாத்திருக்காரே. இப்ப ஏ பேசாம போறாரு.? "
'ஏம்மா உனக்கே இது நியாயமா இருக்கா. அந்த ஓம தான் குற்றவாளின்னு சொல்லி ஜெயில்ல அடச்சி வச்சிருக்கிங்க. அதுக்கு காரணம் உ புருஷன். அப்ப உம்புருஷன பாத்தா ஓம்மோட கூட்டாளிங்களுக்கு பயம் வரத்தான செய்யும். லூசு மாறிப் பேசிட்டு இருக்க. ' கௌதமின் மைண்ட் வாய்ஸ்.
" ஹேய் இவரு எதுக்கோ ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே. " என ஹரிணி யோசிக்க.
"இருதய நோய் அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட். Cardiologist." என்றனர் ரிஷியும் கௌதமும் சேர்ந்து.
" உங்களுக்கு எப்படி தெரியும் இவர.? " என இருவரையும் கேட்டாள்.
" உங்கண்ணே வச்சிருந்த பார்மஸி கம்பெனில இவர நா பாத்திருக்கேன். உங்கண்ணே கூடப் பேச அப்பப்ப வருவாரு. இவரு மட்டுமில்ல ஒரு பெரிய டீமே வரும். ஆனா எங்க வேல பாக்குறான்னு தா தெரியல. " கௌதம்.
"ICDS laboratory Ltd கீழ இந்தியால இருக்குற ஒரு Pharma medical companyக்காக டீல் பேச வந்திருக்கலாம். ஏன்னா அந்தக் கம்பேனிக்கின்னு சொந்தமா இருக்குற சில ஹாஸ்பிடலுக்கு அவரு தா சர்ஜரியன். " ரிஷி.
'ICDS laboratory Ltd' இது அதுல்ல.
கௌதமிற்கு அந்த laboratory பெயரைக் கேட்டதும் தான் நினைவு வந்து. அது தன் தங்கைக்குத் தவறான மருந்துகளைச் சிபாரிசு செய்த facility clinic கின் தலைமை நிறுவனம் என்று. எதுவோ சரியில்ல. இங்க அந்த டாக்டர் வரக் காரணம் என்ன என்று குழப்பமாக, செல்லும் அந்த டாக்டரைக் கௌதம் பார்த்தான் என்றால்.
ரிஷி கொலை செய்யும் வெறியுடன் பார்த்தான்.
ஏன்?.
இருவரின் இந்தப் பார்வையை விக்னேஷ் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். அதிலும் ரிஷியைத்தான் உற்று கவனித்தான். எதற்கென்று தெரியாது.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..