முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 21


 

அத்தியாயம்: 21


'ஐய்யோ!. இப்பத்தா மொத ரவுண்ட்டே முடிஞ்சது. அதுக்குள்ள அடுத்த ரவுண்டா!!. இன்னும் எத்தன ரவுண்ட் போகும்னு தெரியலையே ஆண்டவா. மதிம்மா உன்னோட தாலிய பத்திரமா பாத்துக்க சொல்லிக் கடவுள் கிட்ட ஒரு அப்லிக்கேஷன போட்டு வைம்மா. ' கௌதமின் மைண்ட் வாய்ஸ்.


" என்ன பண்ற முதல்ல விடு அவன. விடு பாவா. " என ஹரிணி கோபமாகக் கத்தியப் பின் தான் ரிஷி கரத்தை எடுத்தான். 


'நீயே சொல்லிடு. ' என்பது போல் ஒரு பார்வை கௌதமை பார்க்க,


" அது ஒன்னுமில்ல டார்லிங். நாம கிளம்புறதுக்கு முன்னாடி நா இவெங்கிட்ட போய் 'அன்னைக்கி நா அப்படி பேசிருக்க கூடாது. ஸாரி.'ன்னு கேட்டேன். நா பேசுனது தப்பு தான. அதா கேட்டேன். ஆனா இவெ என்ன பேசுனான்னு தெரியுமா உனக்கு?. ம்... தெரியுமா?. " 


" என்ன பாஸ் சொன்னாரு.‌?" மனோ ஆவலாக.


" ஒன்னுமே சொல்லல. நானும் ரொம்ப நேரமா உருக்கமா பேசி மன்னிப்பு கேட்டா என்ன சொல்லுணும். ம்… என்ன சொல்லணும். " என அனைவரையும் கேட்க, யாரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை.


" பரவாயில்ல விட்டுடுன்னு சொல்லிருக்கலாம். இல்ல நீ எனக்கு எதிரி அதுனால மன்னிக்க முடியாது போடான்னு சொல்லிருக்கணும். ரெண்டும் பண்ணாம பேசாம கல்லு மாறி நின்னான்.


அதா இனி அவெங்க கூடப் பேச்சு வார்த்தையே கூடாதுங்கிறதுக்கா. உன்னோட ஃபோன்ல இருந்து இவனுக்கும் அவனோட ஃபோன்ல இருந்து உனக்கும் கால் வராத மாறிச் செட் பண்ணேன். நீ கவனிக்காத நேரத்துல. " 


"அதுக்கு உங்க ஃபோன்ல இருந்து நம்பர தூக்கிருக்கணும் பாஸ். நீங்க ஹரிணி ஃபோன்ல பண்ணது தப்பு. " மனோ தன் கருத்தைச் சொல்ல, முறைத்தான் கௌதம்.


'பாத்துக்க...‌ எம்மேல எந்தத் தப்பும் இல்லம்மா. உன்னோட ஃப்ரெண்டு செஞ்ச வேல தா இது. ' என்பது போல் ரிஷி ஒரு பார்வை பாக்க,


" ஏ அவெ ஃபோன்ல இருந்து தான கூப்பிட முடியாது வேற யார்கிட்டன்னாலும் வாங்கி பேசிருக்கலாம்ல. ஒன்னுக்கு நாலு ஃபோன் வாங்கி ஆஃபிஸ்ல வச்சிருக்கான்ல அது ஒன்னுல இருந்து கூப்பிட்டு பேசிருக்கலாம்ல. ரெண்டு நாளுக்கு முன்னாடி நா மதிக்கி கால் பண்ணேன். ஆனா ஃபோன் போகவே இல்ல. சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. அதுக்கா நா அவா கூடப் பேசாம இருந்தேனா என்ன?.


வீட்டுல இருக்குற மத்த ஆளுக்கு ஃபோனப் போட்டுப் பேசுனேன்ல. உம்மேல அக்கற இருந்தா யார்கிட்டையாச்சும் ஃபோன கடன் வாங்கியாது பேசிருக்கணும்ல.‌ ஏ பண்ணல. அவனுக்குத் தா உன்னோட நினைப்பே…" பேச்சைப் பாதியிலேயே நிறுத்தினான் கௌதம்.


ஏன்?.


'ஓ!! அடுத்த அபிஷேகமா.! இந்த மொற என்ன?. ஓ!!. ஐஸ் கிரீமா! அப்பச் சூடா டீ. இப்ப சில்லுன்னு ஒரு ஐஸ். எவ்ளோ அடிச்சாலும் தாங்குறியேப்பா நீ. '


" இவெ சொல்றதும் சரி தான. ஏ மத்தவங்க நம்பர்ல இருந்து எங்கூட பேச ட்ரைய் பண்ணல?. "


" நா அவனுக்குக் கால் பண்ணேன். அவெ எடுக்கவே இல்ல. "எனக் கௌதமை சொல்ல.


" இங்க பாரு. ஒரே ஒருக்க கூப்பிட்டிருக்கான். அதுவும் நாம ரெண்டு நாளைக்கி முன்னாடி அன்னை இல்லம் போயிருந்தப்ப. அதுக்கப்பறமும் கூப்பிடல. அதுக்கு முன்னாடியும் கூப்பிடல‌. " எனக் கௌதம் ஃபோனை காட்ட, ரிஷி முறைத்தான் அவனை.


"ச்ச!!. நீ எனக்கவாது உன்னோட ஈகோவ விட்டுக் குடுப்பன்னு நினைச்சேன். என்ன மறுபடியும் மறுபடியும் ஏமாத்திட்டே இருக்க. நா ஏமாந்துட்டே இருக்கேன்.‌" என ஏமாற்றத்துடன் எழுந்து வெளியே சென்றாள். பின்னாலேயே பவதாவும்‌ சென்றாள்.‌


' டேய் இப்பயாது அந்தப் போலிஸ்காரன பேசச் சொல்லு பங்கு. ' என்பது போல் தான் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.


'இருங்கங்க. நியாபகம் வரட்டும். நியாபகம். நானும் நேத்துல இருந்து யோசிக்கிறேன், இந்த ரிஷிய எங்க பாத்தோம்னு நியாபகமே வர மாட்டேங்கிது. வந்தா பேசுவேன். '


" கிட்.! அட்லீஸ்ட் நீயாது எனக்குக் கால் பண்ணிருக்கலாம்ல. கிட்... " என இப்போதும் தன்னை நியாப்படுத்தி பின்னாலேயே சென்ற ரிஷியுடன் கௌதமும் சென்றான். சும்மா இல்லை. அவனை வெறுப்பேற்றுவது போல் பேசிக் கொண்டே.


"பிரதர், உங்க கிட் கிளியா மாறிப் பறந்து போயிடுச்சின்னு தோணுது. கூடவே பறக்க உங்களுக்கு ரெக்க இல்ல. ஷோ நாளைக்கி அந்தப் பார்பி டால பாக்குறதுக்கு முன்னாடி என்னோட டார்லிங்க பாக்க வந்திடுங்க. ஹாங்... சரியா பத்து மணிக்கி வந்து கதவ தட்டணும். அதுக்கு முன்னாடியோ பின்னாடியோ வந்துடாத. அப்றம் வெளில நிக்க வேண்டி வரும். பாத்துக்க. டேய் போலிஸ்ஸு இந்தப் பழனி மலைக்கி நம்ம வீட்டு அட்ரஸ்ஸ ஒரு துண்டு சீட்டுல எழுதிக் குடு." என்றவன் ரிஷியின் கோர்ட் பாக்கெட்டிலிருந்து அவனின் அறைச் சாவியை எடுத்தான்.


" ம்ச்...‌ என்னடா வேணும் உனக்கு?. ஏ பைத்தியம் மாறிப் பண்ணிட்டு‌ இருக்க?. " ரிஷி.


" உன்னோட நிம்மதி வேணும். கிடைக்குமா?. கிடைக்கிற வர இப்படி தா பண்ணிட்டு இருப்பேன்.‌. " என ரிஷியின் அறைக்குச் செல்லும் பாதையில் நடக்க, இப்போது ரிஷி அவனை ஃபாலோ பண்ண வேண்டி இருந்து.


" You crossing your limits Hari. " ரிஷி எச்சரிக்கும் விதமாக.


" நா க்ராஸ் பண்ண கூடாதுன்னா நீ அங்க ஒரு சிக்னல்‌ போஸ்ட்டு ஒன்ன நட்டு வச்சிருக்கலாம்ல. ரெட் போட்டா தாண்டணும். கீரின் போட்டா நிக்கணாம். ஆரஞ்ச்... அதுக்கு எதுவோ... எனக்குத் தேவையில்ல. நீ போய்ச் சிக்னல் கம்பத்துகு ஆர்டர் குடு. " என்க, அவனின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக் கொண்டு முன்னே நடந்தான் ரிஷி.‌


செல்லும் அவனின் உதடுகளின் ஓரத்தில் சிறு புன்னகை. அது கௌதமால் வந்து.‌ பல ஆண்டுகளுக்குப் பின் கேட்கிறான் கௌதமின் பிரதர் என்ற அழைப்பை. கேட்டதும் அவனுள் ஒரு சிலிர்ப்பு. இத்தனை நேரம் அவன் செய்த சேட்டைகள் அத்தனையையும் நினைத்துப் பார்த்தபடி அறைக்குச் சென்றான்.


"பாஸ் அவரு டாப் கியர் போட்டு வேகமா போய்டாரு. நீங்க என்னடான்னா ஃபஸ்ட் கியர்லையே இருக்கிங்க. சீக்கிரம் போங்க பாஸ். அப்றம் மூணாது ரவுண்டுலையும் தோத்துட்டிங்க. ஹாட்ரிக் தோல்வி.‌ இத பத்தின உங்களோட கருத்த சொன்னிங்கன்னா வாசகர்களுக்கு வசதியா இருக்கும்.” மனோ.


'நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ‌ போ போ.' எனப் பாட்டுப் பாடிக்கொண்டே வந்திருப்பான் போலும்.


"கருத்து சொல்றதுக்கு நா என்ன அரசியல்வாதியா.‌ தீவிரவாதி டா நா. அங்க வந்து பாரு என்னோட பெர்ஃபாமெண்ஸ்ஸ.‌ சும்மா கெவியா இருக்கும். ரெடியா இரு. "


" எதுக்கு பாஸ் அடுத்த தோல்விய கேக் வெட்டிக் கொண்டாடுறதுக்கா." என்றவனை முறைக்க.


" இல்ல கொஞ்சம் டேமேஜ் ஜாஸ்தியா தெரியுது.‌ அதா போய்டலாமேன்னு. உங்க நல்லதுக்கு தா சொல்றேன் பாஸ். "


" இப்படியே எப்படிடா வர முடியும். பாக்குறவங்க என்ன பைத்தியக்காரன்னு நினச்சிக்க மாட்டாங்க. " எனப் பாழாய்ப்போன தன் ஆடையைக் காட்ட.


"ச்சச்ச...‌ நினைக்கலாம் மாட்டாங்க பாஸ் கன்பார்மா பைத்தியம்னு சொல்லுவாங்க. "


" அப்படி யாரும் சொல்லிடக் கூடாதுல்ல. அதா டிரெஸ் மாத்திட்டு வர்றேன்.‌" என ரிஷியின் அறை வாசலில் நிற்க.


"அதுக்கு இவரு ரூம் வாசல் நிக்க காரணம். "


" அவனோட டிரஸ்ஸ வழிப்பறி பண்ண."


"உங்க பாடி கண்டிஷன் தெரிஞ்சும் இந்த ரிஸ்க் எடுத்து நாலாது ரவுண்டுக்காக அவரு ரூம்க்கு போய்தா ஆகணுமா பாஸ்.‌"


" ஆமா...‌ எத்தன ரவுண்டு போனாலும் எனக்கு வெற்றி கிடைக்கிற வர நா மோதிக்கிட்டே தா இருப்பேன். அவெங்கிட்ட தோக்க மாட்டேன். " என வீராய்ப்பாய் பேசியவன், பின்,


"எதுக்கும் நீ உன்னோட காத கலட்டி கதவு மேலயே வச்சிக்க. உள்ளருந்தும் எதாவது சத்தம் வந்துச்சின்னா உடனே உடச்சிட்டு வந்திடு கதவ.‌ சரியா?. ம்… கைல கன் வச்சிருக்கேல்ல.‌ உனக்குச் சுடத் தெரியும்ல. ம்… வந்திடு. " என்றவன் ரிஷியின் அறைக்குள் சென்றான்‌.‌


அங்கு ரிஷி எங்கே இருக்கிறான் என்றெல்லாம் பார்க்காது. நிதானமாக அறையைச் சுற்றிப் பார்த்தான். எல்லா வசதியும் கொண்ட சொகுசு அறையாக அது காட்சி தந்தது. ஒருவன் தங்குவதற்கு இத்தனை பெரிய அறையா என்றிருந்தது. விழுந்தால் அரை அடி தூரம் உள்ளே புதையும் அளவுக்கு மிருதுவாக இந்தக் கட்டிலில் குத்தித்து விளையாட, ரிஷி வந்தான், உடை மாற்றிக் கொண்டு.


" என்ன பிரதர் இன்றைய டின்னர் சூப்பரா இருந்ததுல்ல. மறக்க முடியாத அனுபவம்." கௌதம் நக்கலாக.


"ம்…ஈ ஆமாம்மா. டீயையும் ஐஸ்கிரீமையும் நல்ல அனுபவம் தா. கூடவே சூப்பும் இருந்திருந்தா ரொம்ப ரொம்ப நல்லாருக்கும். " என அடுத்த அபிஷேகம் வேண்டுமா என்பது போல் பேச, கௌதம் முறைத்தான்.


"நா இங்க இருக்கேன்னு தெரிஞ்சி தா நீ ஹரிணிய கூட்டீட்டு வந்த." என ரிஷி கேட்க.


"கதைல கொஞ்சம் சுவாரசியம் வேணாமா. அதா கூட்டீட்டு வந்தேன். பட் அவள பாத்ததும் உன்னோட மூஞ்சி மாறுச்சே பாரு. ஹாஹ்ஹா. அந்தப் பார்பி டால் முன்னாடி உன்னோட சில்லு மூக்கு சில்லு சில்லா நொறுங்கிடுச்சில்ல. ஹாஹ்ஹா. " எனச் சிரிக்க, ரிஷி முறைத்தான் அவனை.


"நீ தேவையில்லாம எனக்கும் ஹரிணிக்கும் இடைல சண்ட மூட்டி விடுற. இது உனக்கு நல்லது இல்ல. " என்றான் எச்சரிக்கும் குரலில். அதைக் கண்டு கொள்ளாது. கௌதம் தன் கோட்டையும் மேலே அணிந்திருந்த ஆடையையும் கலட்டி சோஃபில் வீசி எறிந்தான்.‌


" ப்ரதர்... அத ட்ரெய் கிளினிங் பண்ணி நாளைக்கி வரும்போது எடுத்துட்டு வந்திடு. காஸ்ட்லி கோர்ட்டு ப்ரதர். கசங்கிட கூடாது. கவனமா பக்கத்துலையே இருந்து வாங்கிட்டு வா. இப்ப உன்னோட டிரெஸ் எங்கன்னு சொன்னா அதுல ஒன்ன எடுத்துப்பேன்." என்றவனுக்கு பதில் சொல்லாது ரிஷி நிற்க.


‘நீ சொல்லலன்னா என்னால கண்டு பிடிக்க முடியாதா. பெரிய லண்டன் அரண்மன. வாசப்படி எது கொள்ளப்பக்கம் எதுன்னு தெரியாம உள்ளுக்குள்ளையே சுத்த. இருக்குற நாலு கபோர்ட்டுல ஒன்னுல இருக்கப் போது.’ என்றபடி ஒவ்வொன்றாகத் திறந்து ரிஷியின் உடையைக் கண்டுபிடித்து விட்டான்.


'பிஸ்னாரி பையன். ஒரு டீசர்ட் கூட ஆயிரம் ரூபாய்க்கு மேல வாங்கி வைக்கல. எல்லாமே அறநூறு எழநூறுன்னு போட்டிருக்கு. இப்ப எனக்குக் காஸ்ட்லியா ஒன்னு வேணுமே.' எனத் தேடியவனின் கண்ணிற்கு ஒன்று‌ சிக்கியது‌ அதை எடுக்க, ரிஷி வந்து அதன் கதவை மூடினான்.


" வேண்டாம் எடுக்காத. இது என்னோடது. இது மேல கை வைக்காத. " ரிஷி.


" இதுவா? அப்ப நா போட்டுக்கிறேன் ப்ரதர். தப்பில்ல. " என அந்த டீசர்ட்டை எடுக்க ரிஷி பிடுங்கினான் அதை.


"இது என்ன உங்கப்பா எடுத்துக் குடுத்ததா. இல்லலைல. என்னோட டார்லிங் வாங்கி தந்தது தான. குடு டா அத. " எனப் பிடிங்க, இருவருக்குள்ளும் சண்டை வந்தது.


பெரியவர்போல் அல்ல. சிறுவர்கள்போல் ஓடிப் பிடித்து. கட்டி உருண்டு கொண்டிருந்தனர்.


சிறுவயதில் மூர்த்தி இருவருக்கும் உடை வாங்கித் தரும்போது, ரிஷி கௌதமின் சட்டையைத் தான் அணிவான், அவனிடம் கேட்காமல். ஆனால் அவனுடைய எதையும் கௌதமிற்கு கொடுக்க மாட்டான்.


"நீ எனக்குக் குடுக்க மாட்ட. நா மட்டும் எதுக்கு உனக்குக் குடுக்கனும். முடியாது போடா. " எனக் கௌதம் சொன்னால்,


"இதென்ன உங்கப்பா வாங்கித் தந்த தா. இல்லைல்ல. எங்கப்பா தா தந்தாரு. அப்ப அதுல எனக்கும் உரிம இருக்கு.‌ குடுடா. " எனப் பிடிங்கிக் கொள்வான். தர மறுத்து ஒழித்து வைத்தால் அந்தச் சட்டையை மீண்டும் அணிய முடியாத படி கிழித்து விடுவான் ரிஷி.


இப்போது கௌதம் கையில் எடுத்தது ஹரிணி ரிஷிக்கென வாங்கி தந்தது. அதை எப்படி கௌதமிற்கு கொடுப்பான். கௌதமும் அது தெரிந்தேதான் கேட்டு வீண் சண்டை போடுகிறான்.


தான் செய்தது தவறு என்று உணர்ந்து விட்டால் எந்தவித ஈகோவும் பார்க்காமல் மறந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு இயல்பாய் நடந்து கொள்வான் கௌதம். அதே போல் தான் வைசுவை குறித்து அன்று தான் கோபத்தில் பேசியது தவறு என்பதை ஹரிணி கூறிய பின் உணர்ந்து ரிஷியிடம் மன்னிப்பு கேட்டான். ஆனால் ரிஷி மன்னித்தானா என்று தெரியவில்லை. அதனால் அவனுடன் இயல்பாய் பேசச் சிறு தயக்கம் கொண்டிருந்தான் கௌதம்.‌


ஊட்டி வந்த இந்த நாட்களில் கௌதமின் காலைப் பொழுது அவனின் தங்கையின் கல்லறையில் தான் விடியும். ஆள் நடமாட்டம் அற்ற ஒரு ஏரிக்கரையின் அருகில் இருந்தது அந்தக் கல்லறை. சுற்றி மூங்கில் மரங்கள் வளர்ந்திருக்க தங்கைக்குப் பிடித்த மலர்களை வைத்து அவளின் நினைவுகளைச் சுமந்தபடி கல்லறையின் முன் நிற்பான் வெகுநேரம். 


அன்றும் அதே போல் கல்லறைக்குச் செல்ல அது புது மலர்களால் நிரம்பி இருந்தது. யார் வைத்தது என்று தேடி பார்த்தான். கிடைக்கவில்லை.


மறுநாள் சீக்கிரமா வந்து பார்த்தபோது ரிஷி அதன் முன் நின்றுகொண்டிருந்தான். அவனின் கலங்கிய கண்களும், கவலையில் சுருங்கிய முகமும், சேர்ந்த நடையும், கௌதமிற்கு வருத்தத்தைத் தந்தது. 


'பார்கவி எனக்கும் தங்கை தான்' என்று அவன் கூறியது நினைவில் வர, சிறு குற்ற உணர்ச்சி எழுந்தது. ஆத்திரத்திலும் கோபத்திலும் வார்த்தைகளால் அவனைக் காயப்படுத்தி விட்டோமே என்பது தான் அது. அதைப் போக்க வேண்டும்.‌


எனவே இடையில் நிகழ்ந்த அத்தனையையும் மறந்து ரிஷியுடன் பழக முடிவு செய்தான் கௌதம். பதின்ம வயது நட்பைத் தொடர நினைத்தான். ஆனால் ரிஷி ஏற்பானா என்பது கேள்விக் குறியே.


" ஹரி அந்த டீ சர்ட் மட்டும் கிழிஞ்சது. நா உன்ன பீஸ் பீஸா கிழிச்சிடுவேன். விட்டுடு. " என்றான் ரிஷி.


ஒரு பக்கம் ரிஷி இழுக்க, மறு பக்கம் கௌதம். கயிறு இழுக்கும் போட்டிபோல் டீசர்டை இழுக்கும் போட்டி நடந்து கொண்டிருந்தது.


" நா சின்னப் பையனாக இருந்தப்ப எனக்கு நீ இப்படி தான பண்ண. அப்பப் பழி வாங்க தெரியல. இப்ப உன்ன பழி வாங்கனும்னு முடிவு பண்ணிட்டேன். இனி உன்னோட வில்லன் நாந்தான் டா. " என்றபடி சர்டை இழுத்தான்.


" ஹாஹ்ஹா... வில்லனா... நீயா... ஹாஹ்ஹா... " ரிஷி டீசர்டை விட்டு விட்டதால் கௌதம் தரையில் விழுந்து விட்டான்.


" இது ஜோக் இல்ல. சீரியஸ். எனக்கு நீ பண்ணது எல்லாமே நியாபம் இருக்கு. அத உனக்கே வட்டி போட்டி திருப்பித் தரப்போறேன். அதுக்கு சாம்பில் தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது. பாத்துட்டே இரு. என்னோட டார்லிங்க வச்சே உன்ன நா ஒரு வழியாக்குறேன். " எனச் சீரியஸ்ஸாக பேசப் பேச ரிஷி வயிற்றை பிடித்துக் கொண்டு சத்தமாகச் சிரித்தான்.


' என்ன சிரிக்கிறான். அதுவும் தரைல விழுந்து விழுந்து. நாம சரியாத்தான மிரட்டுனோம். அப்றம் ஏ சிரிக்கிறான். ' என்பது போல் பார்க்க,


"ப்ரதர்… போதும் நிப்பாட்டுங்க. அப்பறம் ஃபேஷன்ட் ஆகிடப்போறீங்க. " என இரு கரங்கையும் கட்டிக் கொண்டு ரிஷியை வேடிக்கை பார்க்க.


ரிஷி சிரித்தபடி கட்டிலில் அமர்ந்தான். " ஹரி நீ பேசுன டயாலாக்குக்கு எனக்குச் சிரிப்பு தா வருது. பயம் வரல. ஹாஹ்ஹா... நீ வில்லன் கிடையாது. ஜோக்கர். க்ளௌன். சீட்டுக்கட்டுல அப்றம் சர்க்கஸ்ல இருக்குமே. அந்த ஜோக்கர். நீ தா.‌ ஜோக்கர். ஜோக்கர்.‌" எனக் கத்தி சொல்ல, கோபம் வந்தது கௌதமிற்கு.


ஏனெனில் கௌதமிற்கு சர்க்கஸ்ஸில் வரும் கோமாளிகளைக் கண்டால் பயம். ஒரு முறை சர்க்கஸுக்கு சென்று வந்தபின் அந்த கோமாளிகளை பார்த்துக் காய்ச்சலே வந்து விட்டது. இரவு முழுவதும் புலம்பிக் கொண்டே இருந்தான். அதை அறிந்த ரிஷி எப்போதெல்லாம் கௌதம் காண்டேற்ற முடியுமோ அப்போதெல்லாம் அந்த வார்த்தையைக் கூறி கேலி செய்வான். இப்போதும் அதையே சொல்ல, கௌதம் கோபமாகப் பாய்ந்து சென்றான் ரிஷியிடம்.


இடையில் தடையாய் இருந்த சோஃபாவை உதைத்து உருட்டி விட்டு விட்டுக் கட்டிலில் அமர்ந்திருந்த ரிஷியின் மீது பாய்ந்து ஏறி அமர்ந்து வயிற்றில் குத்தினான். ரிஷி அதைத் தடுக்கும் முன், கதவு படார் எனத் திறந்து.


அதா காவலுக்கு ஒரு போலிஸ்காரன நிப்பாட்டிடு வந்தானே. அவந்தா வந்தது. தன் பாஸ்ஸை காப்பாற்ற. வந்தவன் அவர்கள் இருக்கும் பொஷிசனை கண்டு.


" ஸாரி பாஸ். சிவ பூஜைல கரடி மாறி நுழைஞ்சிட்டேன். நா போறேன். போகும்போது கதவ சாத்திட்டு போயிடுறேன். மறுபடியும் ஸாரி பாஸ். " எனச் சொல்லி வித்தியாசமாகச் சிரித்து விட்டுச் சொல்ல.


'இவனுக்கு என்னாச்சி?. ஏ இப்படி உலருறான்?. என்ன சொன்னா சிவ பூஜைல கரடியா!. ' என்று ரிஷியைப் பார்க்க அவன் கீழே இவன் மேலே அமர்ந்திருந்தான். 


வேகமாக எழுந்தவன். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே,


" ஏய்… ச்சீ… ஐய்யோ... அவெ என்ன சொல்லிட்டு போறான்னு கேட்டியா. கருமம் கருமம். அன்னைக்கே ஹரிணி நீ லவ்வரான்னு கேட்டா. இத மட்டும் அவா பாத்திருந்தா. ஐய்யோ நினைக்கவே கர்ண கொடுரமா இருக்கே. " எனப் புலம்பிய படியே வேறொரு டீசர்டை அணிந்து விட்டுச் சென்றான்.


செல்லும் கௌதமை காண்கையில் ரிஷியின் உதடுகள் புன்னகையால் விரிந்தன.


தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பவர்களை


ஆயுள் முழுவதும்


மறக்கக் கூடாது


ஏனென்றால் அவர்களின்


ஈகோவை விட


நீங்கள் அவர்களுக்கு முக்கியமானவர்கள்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


விழி 20


விழி 22



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...