விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
- திருக்குறள்
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..
உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் ..
இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..

அத்தியாயம்: 1
இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற கோடுகள் போட்டுப் பிரித்திருந்தனர். வெயில் காலம் முடிந்து இளங்காற்று வீசத் தொடங்கிய காலம் அது. மரங்கள் தலையசைத்து தென்றல் காற்றின் இனிமையை ரசிக்க, இரு பைக்குகள் வேகவேகமாகச் சென்று கொண்டிருந்தனர்…
ரேஸ் வைத்துள்ளனரோ!. போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்லும் அந்தப் பைக்கை இரு இளைஞர்கள் அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கின்றனர். இதில் யாரும் குறுக்கே வந்துவிட கூடாது என ஹாரனை விடாது சத்தமாக அடித்துக் கொண்டே, பேரிரைச்சலை ஏற்படுத்திவாரே சென்றனர்.
‘யாருப்பா இது! மண்ட மேல ஹெல்மெட்ட வச்சி மூஞ்சிய ஃபுல்லா மறச்சிங்கிட்டு போறது. கலட்டுங்கப்பா!. மண்ட யாரோடதுன்னு பாக்க.
ஒன்று ஹீரோ உடையது. ‘ஆளு இல்லங்க. பைக் பேரு’.
ஹெல்மெட்டை கலட்டிய பின் தான் தெரிந்தது அது விஜயபாண்டி என்று.
மற்றொன்று ராயல் என்ஃபீல்டு.
ரிஷி தரனா என்று கேட்டால் கிடையாது. அவனுடையது கருப்பு. இது தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.
‘யாரு அந்தக் கோல்டன் பாய். அட நம்ம கைப்புள்ள பிரகாஷு. எங்கப்பா இவ்ளோ வேகமா போய்கிட்டு இருக்க.’
" வணக்கங்க. இதோ நிக்கிறானே விஜய பாண்டி. இவனோட ஊருல தண்ணீயே இல்லாத ஒரு டேம் இருந்துச்சில்ல. அதுக்கு தண்ணீய ஊத்தி வைக்கப் பராமரிப்பு வேல பாத்துட்டு இருக்காங்க. கூடவே அந்த டேமு பக்கத்துல பிள்ளையாருக்கு ஒரு வீடு கட்டி குடிவச்சிடலாம்னு முடிவு பண்ணி, கோயில் ஒன்னும் கட்டுறோம். அடுத்த வாரம் அதுக்கு கும்பாபிஷேகமும் புதுசா மாறிருக்குற டேமுக்கு திறப்பு விழான்னு ஒன்ன நடத்தப் போறாங்க. அங்க நடக்குற வேலய மேற்பார்வ பாக்கத்தா போய்க்கிட்டு இருக்கேன். ஏன்னா! இவெங்க ஊர்காரனுங்கள நம்ப முடியாது. வேல பாக்குறேன்னு சொல்லி மண்ணு மூட்டைய தலைக்கி வச்சி படுத்துக்கிறாய்ங்க. "
" ஏய் பிரகாஷு. நக்கலா. வந்து பாருய்யா. அப்பதா தெரியும். எங்கூரு ஆளுக எப்படி வேல பாத்திட்டு இருக்காய்ங்கன்னு. அவெ அவெ வேர்வ சிந்தி வெயில்ல வெந்து போய் வேல பாத்தா தூங்குறானுங்கனு சொல்ற. " விஜய்.
"வெயில்ல நின்னா வேர்வ தாய்யா வரும். அதப்போய் அதிசயமா சொல்ற. " பிரகாஷ்.
" அதிசயந்தாய்யா. ரெண்டே மாசத்துல வேல கடகடன்னு நடக்குதுன்னா அதுக்கு காரணம் யாரு?. எங்கூரு இளசுக தா. மூனு மாதத்துல முடிய வேண்டியது. ஆறு மாசமா இழுத்தடிச்சது யாரு?. உ தங்கச்சி புருஷந்தா. "
" லேட்டானாலும் அந்த டேமு உங்கொள்ளுப்பேரெ காலம்வரைக்கும் இருக்குற மாறி ஸ்ட்ராங்கா மாத்திருக்காப்ல. எங்க வீட்டு மாப்ள.”
" பொல்லாத ஸ்ர்டாங்கு. திறப்பு விழால வந்து பாரு. யாரு வெய்ட்டுன்னு எங்க பசங்க காட்டுவானுங்க டா.”
" உங்க மாஸ்ஸ காத்தாடில கட்டி செவ்வா கிரகத்துக்கே அனுப்பிடலாம். அந்த அளவுக்கு வெய்ட்டே இல்லாதது. நாங்களும் தா பாத்தோமே. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீங்க நடத்துன சேனையம்மன் கோயில் திருவிழாவ. குடிக்க, கழுவன்னு எதுக்குமே தண்ணி இல்ல.
ஏன்டா உங்கூரு பயலுகளுக்கு கணக்கு தெரியாதா டா. ஆயிரக்கணக்குல பந்திக்கி உக்காந்திருக்குற ஜனத்துக்கு, நூத்துக்கணக்குல இலைய வாங்கி வச்சிட்டு, பையில்லையும் கையிலையும் சாப்பாட்ட போட்டிருக்கிங்க. முதல்ல அம்புட்டு பேருயும் கூட்டியாந்து எங்க அத்த ஸ்கூல்ல சேத்துவிடு. காத திருகிக் கணக்கு சொல்லித் தருவாங்க. " பிரகாஷ் நக்கலாக.
" உனக்கு நேரம் சரியல்ல பிரகாஷு. உத வாங்குறதுக்குள்ள போய்டு. " மிரட்டலாக.
" யாரு நீ அடிக்கப் போறியா. ஹாஹ்ஹா. இந்தக் காமெடிலாம் இங்க பண்ணக் கூடாது. போய் டீவி சோல காட்டு… போர்ட்ல மார்க்கு போட்டுப் பாராட்டுவாய்ங்க. எங்கிட்ட வச்சிக்கிட்ட, எங்கண்ணனுங்க மூஞ்சில மார்க் போட்டுடுவானுங்க. ஜாக்கிரத."
" யாரு. அந்த மும்பைக்காரன் கௌதமையும், இப்ப சென்னைல போய் ஒழிஞ்சிக்கிட்டானே ரிஷிதரன் அவனையுமா சொல்ற. என்னப் பாத்து பயந்துகிட்டு தா ஊரு பக்கமே வர்றது இல்ல அவிங்க. இதுல என்னைய அடிக்கபோறானுங்களாம். போடா டேய்… போடா… முதல்ல பயப்படாம எம்முன்னாடி வந்து நிக்கச் சொல்ல. " என வீரமாய் பேசினான் விஜய்.
" வந்தா நீ தாங்க மாட்ட. ஆனாலும் கொசுவ விரட்டப் பிரங்கி எதுக்கு. கொசு மருந்து அடிச்சா செத்துடாது. "
" அப்ப வா டா. இப்பவே நா யாருன்னு காட்டுறேன். " எனப் பைக்கை நிறுத்தி விட்டுச் சண்டைக்கி தயாராக,
" டேய் டேய் இப்ப தா நா ஹீரோங்கிற ரேஜ்ஜிக்கு முன்னேறிருக்கேன். யாருக்கு தெரியாத இடத்துல ரகசியமா உன்ன பந்தாடி அத கெடுத்துக்க நா விரும்பல. இந்தப் பிரகாஷோட வெற்றிய இந்த ஊரே கொண்டாடனும்.”
" அப்பத் திறப்பு விழால பாத்துப்போம். மினிஸ்டர் முன்னாடி சிலம்ப போட்டி நடத்தி, அதுல உன்னோட கால உடைச்சி, ஊர்காருனுங்க முன்னாடி உன்ன அழவைக்கிறேன்டா. " என இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் போட்டிக் களம், போட்டி நடைபெறும் நேரமென அனைத்தையும் முடிவு செய்து விட்டுச் சென்றனர்.
பழைய கட்டுமானமாய் இருந்தாலும் உறுதியுடன் தான் இருந்தது அந்தச் சிற்றணை. அதன் மூன்று மதகுகளையும் பராமரித்து, அணையின் உயரத்தை உயர்த்தி இருந்தனர்.
இந்தப் பொறுப்பை ராகவ் சம்பத் தான் ஏற்றிருந்தான். சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இன்ஜினியர். கைவசம் கவர்மெண்ட் காண்ட்ராக்ட் உட்பட பல டீல்களை வைத்திருக்கும் பிஸியான ஆள் அவன்.
சுற்றி நடக்கும் அனைத்து வேலையையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவன் பிரகாஷை பார்த்ததும் இறங்கி வந்தான். பணிகள் முடிந்து விட்டது. சிறு சிறு வேலைகள் மட்டுமே பாக்கி.
அகண்டு விரிந்த புளியமரத்தின் நிழலில் தன் பைக்கை நிறுத்திய பிரகாஷ், அதன் முன்புறம் இருந்த தூசியை துடைத்து அதற்கு முத்தம் ஒன்றும் கொடுத்தான்.
" மாலை வணக்கங்கள் மச்சான் ஸார். கயித்து மேல நடக்காமா கீழ இறங்கி வாங்க. துட்டு தாரேன். " எனக் கத்தினான் பிரகாஷ்.
" வாடாக் கைப்புள்ள. பைக்க பத்திரமா நிழல்ல நிறுத்துற. அதுகூடல்லாம் பேசுற மாறித் தெரியுது. முத்தம் வேற குடுக்குற. அவ்ளோ பிடிக்குமா என்ன."
" பிடிக்காம எப்படி. என்னோட அப்பா, மை ஃபாதர், எனக்காக…நா டிகிரி வாங்கி வக்கீலா மாறுனதுக்காக, ஆசையா அன்பா வாங்கிக் குடுத்ததாச்சே.
கஷ்டப்பட்டு என்னோட உழைப்பெல்லாம் போட்டுப் படிச்சதுக்கான வெகுமதி கோல்டன் கலர் ராயல் என்ஃபீல்டு பைக். " என உணர்ச்சி பொங்க பேசியவனை நம்பாத பார்வை பார்த்தான் சம்பத்.
" நமக்குள்ள என்னடா. உண்மைய சொல்லு. " என்க,
" நீங்கச் சொல்றத பாத்தா. நா என்னமோ கலர் கலர் கவுன வாடகைக்கு எடுத்து, ஒரு ஃபோட்டோ கிராபருக்கு காசு குடுத்து, பட்டம் வாங்குன மாறி மாஃபிங் பண்ணி ஊர ஏமாத்தி ஸீன் போடுற மாறில்ல இருக்கு. அதெல்லாம் கிடையாது. அந்த மாறி அயோக்கியத்தனம் எல்லாம் நா பண்ண மாட்டேன். நா அக்மார்க் நல்லவன் மச்சான் ஸார். " என்க, என்ன நடந்திருக்கும்னு சொல்லத் தேவையில்லை.
" அதெல்லாம் இருக்கட்டும். எதுக்கு வந்த. "
" அது வந்து மச்சான் ஸார். நீங்க அந்த வீட்டு மாப்பிள்ளையாம். அதுனால வகவகையா சமச்சி வச்சி, நீங்கச் சாப்டதுக்கு அப்றம் தா எங்களுக்குக் குடுப்பாங்களாம். எங்க அம்மா சொன்னாங்க. அதா உங்கள கையோட கூட்டீட்டு போலாம்னு வந்திருக்கேன். மச்சானோட இந்த நல்ல சேவைக்கு நீங்க உங்க தட்டுல வக்கிற கறி வகைகள்ள பாதி தந்தா போதும். மீ ஹப்பி மச்சான் ஸார். " என்க சம்பத் புன்னகையுடன் பிரகாஷின் வண்டியில் அமர்ந்தான்.
பவித்ராவை திருமணம் செய்யும் முன்பே அவன் சென்னைவாசியாக மாறி விட்டான். இந்த அணையின் கட்டுமான பணிகளுக்காக இங்கு வந்துள்ளான். திறப்புவிழா வரை மாமியார் வீட்டு விருந்து தான்.
ஐந்தரை அடி உயர மதில் சுவர் கொண்டு இன்றும் பழமை மாறாமல் பாதுக்கப்பட்டு வருகிறது அந்த வீடு. இருபுறமும் திண்ணைகள் வைத்துக் கட்டப்பட்டிருக்க, அதில் அந்த வீட்டு மூத்த குடிமகள் நாச்சியம்மாள் தன் தோழிகளுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தார்.
" மச்சான் ஸார் கிழவிகள் மாநாடு. போய் மைக்க பிடிச்சி நீங்களும் சொற்பொழிவாற்றலாம்ல… " என்றான் பிரகாஷ் பைக்கை நிறுத்திய படி.
" நா வரல பா. நீயே போய்ப் பேசிப் பேச்சாளரா மாறிக்க. " எனச் சம்பத் உள்ளே செல்ல எதானிக்க...
" மாநாட்டோட தலைப்பு என்னனு தெரிஞ்சா நீங்கப் போக மாட்டிங்க. இன்டர்ரெஸ்டிங்கான டைட்டில் அது. "
" என்னாதது. "
" மொத்தம் மூனு. மொதது இவ்ளோ சின்ன வயசுல அந்த ஹீரோயின் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். இது ஒரு கிழவியோட வாஸ்… ஐய்யோ பாவம்... இது மத்த கிழவிகளோட கோரஸ்ஸு.
ரெண்டாவது.... இத்தன வயதாகியும் இந்த ஹீரோயின் ஏ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலங்கிறது தா. அடக்கடவுளே... இதுவும் மத்த கிழவிகளோட கோரஷ்ஷு...
மூனாவது. ரொம்ப முக்கியமானது. அதாவது கல்யாணம் ஆகி ரெண்டு வர்ஷம் முழுசா முடிஞ்சி போச்சி. ஆனாலும் உங்க மனைவி அதாவது என்னோட சித்தப்பா மக. பவித்ரா. ஏ குழந்த பெத்துக்கலங்கிறது தா அது. " என்க.
" அடப்பாவிகளா!. அவளுக்கு யாருடா வேப்பல அடிச்சி விட்டா? இப்ப சாமியாடுவாளே." சம்பத்தின் குரலில் படபடப்பு இருந்தது.
" முதல்ல ஆரம்பிச்சது என்னமோ அப்பத்தாவோட ஃப்ரெண்ட்ஸ் தா. அடுத்து அப்பத்தா. அம்மா… சித்தின்னு வரிசையா பேச ஆரம்பிச்சி, ஒரு கலக்கு கலக்கிடுச்சி. பவி கோபமா உள்ள போய்க் கதவ மூடிக்கிட்டா. அவ்வளவுதா. " என்றவனை முறைத்துக் கொண்டு உள்ளே சென்றான் சம்பத்…
" என்னடா சொன்ன மாப்ளைட்ட. கோபமா போற மாறித் தெரியுது. " கவியரசன். பிரகாஷின் சித்தப்பா.
" உண்மைய சொன்னேன். "
" ஏன்டா வந்ததும் வராததுமா அவர்ட்ட போட்டுக் குடுத்த. மனுசெ சாப்பிட்டதுக்கு அப்றமா பக்குவமா சொல்லிருக்கலாம்ல. பாரு சாப்பிடாம போறாரு. " என்றார் அவர்.
" எப்ப சொன்னாலும் ஒன்னு தா சித்தப்பு. அதென்ன சாமு, சாபி." என்றான் நக்கலாக.
" பாக்க தா ஆளு மாடு மாறி வந்திருக்க. ஆனா பொறுப்புங்கிறது கொஞ்சங்கூட இல்லடா உனக்கு. " கவியரசன்.
"அதெல்லாம் பருப்பு சைசுக்கு இதுனுண்டா இருக்கு. அது போதும் உங்களயெல்லாம் மேக்கிறதுக்கு. "
"மாசமாசம் கேரளாக்கு அனுப்பின வேண்டிய அரிசி மூடையோட கணக்கு எங்க இருக்கு அரசு. " என அரிசி ஆலையின் கணக்கு புக்கை கையில் வைத்துக் கொண்டு, சத்தியமூர்த்தி கவியரசனிடம் விவரம் கேட்க…
" இருந்த நெல்ல ஃபுல்லா எலி தின்னுடுச்சு. அதுனால எலிய பிடிச்சு மூட்ட கட்டி வச்சிருக்கேன். எடுத்துட்டு போய் எலிக்கறிய வியாபாரம் பண்ணுங்க. நல்ல லாபம் கிடைக்கும்." சற்று கோபமாக மூர்த்தியை முறைத்துக் கொண்டே கூறினான்.
உடல் நலம் சரி இல்லாமல் இருந்த மூர்த்தி, நலம் பெற்றுப் பின் அவரிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ரிஷிதரன் சென்னைக்கு சென்று விட்டான். இவரால் தான் தன் அண்ணன் தன்னுடன் இல்லை என்ற கடுப்பு தா அந்த முறைப்பிற்கு காரணம்.
"என்னடா உனக்குப் பிரச்சன. " மூர்த்தி.
" நீங்கத் தா எம்பிரச்சன. இதுக்கு முன்னாடி எங்க தரன் அண்ணே இருந்து பாத்த வேல, இதெல்லாம். உங்களால தா இதெல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கி போய்டாரு. இப்ப எங்கண்ணே எங்கூட இல்லாததுக்கு நீங்க தா காரணம். தெரிஞ்சுக்கங்க. " என ஆவேசமாக அவன் சொல்ல, மூர்த்திக்குச் சிரிப்பு வந்தது.
" டேய் அவனுக்குன்னு வேல ஒன்ன செட் பண்ணிட்டு இங்கருந்து போய்டான். உனக்கும் எதாவது வேல கிடைச்சா, நீயும் பட்டணத்துக்கு போக வேண்டியது தான. உனக்கெப்படி கிடைக்கும். நீ தா ஒத்த டிகிரிக்கே ஏழு வர்ஷம் உழைச்சவனாச்சே… " கவியரசன் கிண்டலாக.
" இங்க பாருங்க! எங்கண்ணே சொன்னாருங்கிற ஒரே காரணத்துக்காகத் தா இந்த முதியோர் இல்லத்தையே பாத்துக்கிறேன். அதுவும் வேல தா. என்ன சம்பளம்னு ஒன்னு கிடைக்கவே கிடைக்காது. அவ்வளவு தா."
"முதியோர் இல்லமா. " இருவரும் சந்தோகமாக.
" பின்ன என்னாது இது. வீடா. இல்லவே இல்ல. வீடுன்னா எல்லா வயசுக்காரங்களும் இருக்கனும். ரிடையர்டு பீப்புள் ஒன்லி கிற மாறி எல்லாரும் அம்பது வயசுக்கு மேல இருந்தா அது முதியோர் இல்லம் தா. "
புன்னகைத்த மூர்த்தி. "உங்கண்ணே எப்ப வர்றானாம். " என்றார்.
" நாளக்கழிச்சி வர்றேன்னாரு. பெத்த மகெ எப்ப வர்றாருங்கிறது கூடத் தெரிய மாட்டேக்கிது. என்ன தா அப்பாவோ நீங்க. " என முணுமுணுத்துக் கொண்டே சென்றான் அவன்.
அப்ப முக்கியமானவங்கல்லாம் அடுத்த எபில வர்றாங்களா. எப்படி இருக்காங்கன்னு பாக்க நா ஆர்வமா இருக்கேன். அந்தக் கதை முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பார்க்க உள்ளோம் அவர்களை.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..