அத்தியாயம்: 1
" அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..
சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி..
"......"
" சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக..
" என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி..
" பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "
" சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி..
" இல்லப்பா.. நீ போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா சீக்கிரம் வந்துட்டா திட்டும்.. "
" ரொம்ப நேரம் ஆகாதுப்பா வா.. " என அவளை ஸ்டேஜில் இருந்து அழைத்துச் சென்றாள்..
தன் ராயல் என்ஃபீல்டு பைக்கில், தன்னை முந்திச் செல்ல யாரால் முடியும் என சவால் விடும் வேகத்தில் அனைத்து வாகனங்களையும் பின்னே தள்ளி முன்னேறி வந்து கொண்டு இருந்தான் ரிஷிதரன்.. இந்த கதையின் நாயகன்.. கல்லூரி மாணவன்..
மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம்.. அலை அலையாக கேசம்.. மீசையும் தாடியும் இல்லாத அவன் முகம் காண்போரை இவன் அழகன் என ரசிக்க வைக்கும்.. ஆனால் அவன் கண்கள் தன் எதிரில் இருப்பவரின் எண்ண ஓட்டத்தையும் உணர்வுகளையும் ஒரு நொடியில் எடை போட்டு விடும்.. அவன் பார்வையே ’என்னை விட்டு விலகியே இருங்கள்..’ என எச்சரிக்கை விடுவது போல் இருக்கும்.. அவன் உடல் விடாது உடற்பயிற்சி செய்பவன் என கூறிவிடும்.. அத்தனை தின்னம் அது..
அரங்கத்தின் அருகில் வந்ததும் ஃபோனில் தங்கையை அழைத்தான்.. அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவே கடுப்புடன் பார்க்கிங்கை நோக்கிச் சென்றான்.. பார்க்கிங்கில் இருந்த கூட்டத்தைப் பார்த்தவன்..
" அஞ்சி நிமிஷத்துல வந்திட போறோம்.. இதுக்காக அந்த கூட்டத்துக்குள்ள நாம மிதக்கனுமா.. வேண்டாம்.. " என முடிவெடுத்து ஒரு மரத்தின் அடியில் பாதுகாப்பாய் தன் வண்டியை நிறுத்தினான்..
" அண்ணா… " என ஒரு குரல் கேட்க.. நம்மை அல்ல என திரும்பியும் பாராது நடந்தான்..
" அண்ணா.. " என குரல் மீண்டும் கேட்டது..
" உங்களைத்தான் ண்ணா.. " நிதானமாக கேட்டது அந்த குரல்.. ஆனாலும் நம்மை அல்ல என்றவன் தொடர்ந்து நடக்க..
" ஹலோ மிஸ்டர்.." சிறிய கடுப்புடன்..
" டேய் ப்ளூ டீசர்ட்ட… உன்னத்தா.. நில்லு.. " இம்முறை மிகவும் கோபமாகவே வந்தது..
தன்னை யார் அழைக்க போகிறார்கள் என முன்னேறிச் சென்றவன்.. ப்ளூ டீசர்ட் என்றவுடன் குனிந்து தன் டீசர்டைப் பார்த்தான்.. தன்னைத்தான் என்பதை உணர்ந்தவன் அழைப்பது யார் என சிறிது ஆர்வம் இருந்தாலும்.. மரியாதை இன்றி அழைத்தமையால் கோபமே மேலோங்கி இருந்தது..
இங்கே அழகிய ரோஜா வண்ண நிறத்தில் இருந்தவள் காவி நிறத்தில் பேன்ட் அதற்கு மேட்சானா சட்டை என என்.எஸ்.எஸ் உடையில் இருந்தாள் அந்த மாணவி.. அவள் கன்னங்கள் கோபத்தில் சிவந்து இருந்தது.. பூசிய உடல்வாகுடன் இருந்த அவளை காண்பவர் கல்லூரி மாணவியோ என எண்ணுவர்.. ஆனால் முகம் பார்த்து பேசுபவர் மட்டுமே அறிவர் அவள் பதினைந்து வயது பால்மணம் மாறாத சிறுமி என்று..
ரிஷியின் அருகில் வந்து பைக்கின் சாவியை அவனிடமிருந்து வெடுக்கென பிடுங்கினாள் அவள்..
பின் கோபமாக.. " இது ஒன்னும் வண்டி நிப்பாட்டுற இடம் இல்ல.. போய் உள்ள நிப்பாட்டுங்க.. நீங்க படிச்சவங்க தான அங்க நோ பார்கிங் அப்படின்னு எழுதி இருக்குறது தெரியல.. லூசு.. " என தன் மயக்கும் குரலில் வசைபாடிக் கொண்டு இருக்க..
" குழந்த என்னாதிது.. அந்தப் பக்கம் ப்ளே கிரவுண்ட் இருக்கு அங்க போய் விளாடு.. போறப்ப சாவிய குடுத்திட்டு போ.." என கேலியாக கூறிவிட்டு சாவியை அவளிடமிருந்து வாங்க முயன்றான்..
தான் சொல்வதை காதில் வாங்காது தன்னையே கேலி செய்கிறான் என கடுப்பான அவள்.. " யோவ் இது என்ன உன்னோட இடமா, கண்ட இடத்துல நிப்பாட்டுற.. மரியாதையா உள்ள போய் நிப்பாட்டு இல்லன்னு வச்சுக்க.. " என சீரியஸ்ஸாக விரல் நீட்டி அவனை மிரட்டிக் கொண்டு இருந்தாள்..
அவன் ஏதோ காமெடி படம் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தான்..
" ஏய் என்ன பாக்குற மேன்.. இங்க என்ன படமா காட்டுறாங்க.. "
" உன்னப் பாத்தா கார்டூன் கதைல வர்ர கேரைக்டர் மாதிரித்தான் இருக்கு.."
அவள் விழிகளை உருட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தவள்.. " என்ட்ட பேசுறத நிறுத்தீட்டு முதல்ல வண்டிய உள்ளக் கொண்டுபோய் பார்க் பண்ணுங்க.. பெரிய சீமராஜான்னு நினைப்பு இவருக்கு.. ஒய்யாரமா வண்டிய நிப்பாட்ட இடம் கேக்குதோ.. " என்றாள் ஏளனமாக..
" ஹே பம்கின்.. நா இங்க தான் நிப்பாட்டுவேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க.." ரிஷி என்றான் திமிராக..
" யூ.. யூ.. என்னைய்யா பம்கின்னு சொல்லுற.. இன்னைக்கு நீயும்.. உன்னோட இந்த டப்பா வண்டியையும் காலி.. என்ன பண்றேன்னு பாரு.." என அங்கும் இங்கும் தேடி ஒரு கல்லை கையில் எடுத்து அவன் மீது வீச.. அவன் லாவகமாக நகர்ந்து கொண்டான்.. குறி தவறி விட்டது..
அவன் மீது கல் படவில்லை என்றதும் கோபமாக ஒரு பெரிய கல்லை எடுத்து எரிந்தாள்.. இம்முறை அவனை நோக்கியல்ல அவனது பைக்கின் மீது குறி வைத்தாள்..
அவள் எறியும் முன்னே அருகில் சென்று அவளின் கைகளை உயர்த்திப் படித்தான்.. அவன் மார்பின் அளவே அவள் வளர்ந்து இருந்ததால் ஈசியாக ஒரு கையில் இருந்த கல்லைத் தட்டிவிட்டு மறுகையில் வைத்திருந்த பைக் சாவியை பிடுங்கிக் கொண்டான்..
பின் அவளை முறைத்தபடியே நின்றான்.. கோபமாக.. இருக்காதா பின்ன இஞ்சினியரிங் கடைசியாண்டு மாணவனா அவன் பதினாறு வயதில் இருந்து பார்ட் டைம் ஜாப் செய்து சிறுக சிறுக சேமித்து தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி சண்டையிட்டு வாங்கியது.. தினமும் தூசி தட்டி துடைத்து சிறு கீறல் கூட விலாதவாறு பத்திரமாக பார்த்துக் கொண்டு இருக்கிறான்.. அதை நோக்கி கல்லை எறிவதா.. அதுவும் அவன் கண்முன்னே.. விட்டுவிடுவானா அவன்..
அவர்கள் சண்டையிட்டு கொண்டு இருப்பதைப் பார்த்து அங்கு மற்ற என்.எஸ்.எஸ் மாணாக்கர்களும் வந்து
இருவரையும் திசைக்கு ஒன்றாக பிரித்துச் சென்றனர்..
" அண்ணா.. அண்ணா.. ப்ளீஸ் ண்ணா கோபப்படாதீங்க.. எங்களுக்கு இதெல்லாம் பண்றதுனால மார்க் கிடைக்கும்ண்ணா.. எங்க பீட்டி சார் நோ பார்க்கிங்ல இருக்குற வண்டிய பாத்தா.. பைக் டயர பன்சர் பண்ணி விடச் சொல்லிருக்காங்கண்ணா.. உங்களுக்காக நீங்க சீக்கிரம் எடுத்துட்டு போற மாதிரி முன்னாடி ப்ளேஸ் அரேஞ்ச் பண்ணித்தாறேன் ண்ணா.. அமைதியாகுங்கண்ணா.. " என அவனை இழுத்து வந்த மாணவர்களின் பேச்சிற்கு செவி சாய்த்து அமைதியானான்..
வைசுவிற்கு கால் செய்தவன் அவள் ஒரு பத்து நிமிடம் காத்திருக்கச் சொல்லவும் மாணவர்கள் காட்டிய இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஆடிட்டோரியம் சென்று அங்கு ஸ்டேஜ்ஜிற்கு அருகிலேயே சேரில் அமர்ந்து கொண்டான்..
இங்கு.. " அறிவு இருக்கா இல்லையா.. உனக்கு பப்ளிக் ப்லேஸ்ல இப்படியா பிகேவ் பண்ணுவ.. நாம பொறுமையா இருந்து ஒவ்வொருத்தர் கிட்டையும் அன்பா பேசி பழகனும்ன்னு தான இந்த வேலைய நமக்கு சார் கொடுத்தாங்க.. யாரு என்னனு தெரியாத ஒருத்தர அடிக்க கல்ல ஓங்கீட்டு போற.. இதுதான் உனக்கு இங்க சொல்லிக் கொடுக்குறாங்கலா.. உன்னோட அண்ணணுக்குத் தெரிஞ்ச ரொம்ப வருத்தப் படுவாங்க.. போ போய் அந்த அண்ணாக்கிட்ட ஸாரி கேளு.. போ..." என மற்ற மாணவிகள் அவளை துரத்த..
" நா.. போய்.. அங்க நடந்து போய்க்கிட்டு இருக்குற நெட்ட கொக்கு கிட்ட... ஸாரி கேக்கனும்.. முடியாது.. சத்தியமா முடியாது.. என்னப் போய் பம்கின்னு சொல்லிட்டான்.. சோ நா ஸாரி கேட்க மாட்டேன்.. லைட் ஹவுஸ்.. ஈபிள் டவர்... பனமரத்துல பாதி இருந்துட்டு என்னப் போய்.. ச்ச.. நீ தா ஈர்குச்சி கணக்கா இருக்க.. என்னைய பாத்தா பம்கின்னா சொல்லுவ.. நா அந்த ஆளப் பாக்கவே விரும்பல.." என அவள் பொரிந்து தள்ள..
" நீ அந்த அண்ணாட்ட பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா வண்டிய நாம பஞ்சர் பண்ணீருக்கலாம்.. கிடைச்ச சான்ஸ்ஸ விட்டுட்டு இப்ப திட்டி என்ன பிரயேஜனம்.. " என்றாள் உடன் இருந்த ஒருத்தி..
" சரி விடு அதப்போய் பேசிட்டு.. நீ போய் ரெடி ஆகு.. அடுத்து உங்க ஸ்கூல் பெர்ஃபமென்ஸ் தான்.. பப்ளிமாஸ் ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் யுவர் ஃபெர்பாமென்ஸ்.."
" ஏய் என்ன பப்ளிமாஸ்ன்னு கூப்பிடாத.. “ என அவள் கோபமாக சொல்ல..
“ஓகே சொல்லல.. போ.. “
“ஓகே.. நா போய் அப்ப ரெடியாகுறேன் ஃபை.." என அழகாய் தன் முதுகுவரையுள்ள கூந்தல் காற்றில் கவிபாட மான் போல துள்ளி குதித்தோடினாள்..
பத்து நிமிடம் என்று கூறியவள் இதோ அதோ என அரைமணி நேரத்திற்கும் மேல் ஆக்கிவிட்டாள் வைசு.. சென்றுவிடலாம் தான் பின் தந்தையிடம் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது.. இதழ் திறக்காது புலம்பிய வண்ணமே சுற்றி இருக்கும் அழகான பெண்களை சைட் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷி..
" அண்ணா நா பார்க்கிங்ல உனக்காக காத்திருக்கிறேன்.. " என வைசு குறுந்தகவல் அனுப்ப.. எழுந்து நடந்தவன்.. வாசலில் வைத்திருந்த பெரிய LED திரையில் தெரிந்த பிம்பம் கண்டு அசையாது அங்கேயே நின்றான்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..