முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 2

அத்தியாயம்: 2 


சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?


சௌக்கியமா சௌக்கியமா?



தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த,


தனதன தோம் தனத்தோம்!


திகுதிகுதிகுதிகு தனதன தோம்


தனத்தோம்!


தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்!



தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம்


த, தீம் என


விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு


இதயத்தில் இறங்கிவிட்டாய்;


மெல்ல மெல்ல என்னுயிரைப்


பறித்துக்கொண்டாய்!



பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌


சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்.. 


அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பிப் போய் நின்றான் அவன்.. 


கோவைப் பழம் என சிவந்து இருந்த அதரங்கள் பாடல் வரிகளுக்காக அசைந்த போது அவை தன்னுடன் பேசியது போன்றும்.. அவள் கைகளில் காட்டிய முத்திரையயும்.. கண்களில் காண்பித்த ஏக்கமும் தன்னை நலம் விசாரிப்பது போன்றும்.. கால்களில் கட்டிய சலங்கையின் ஒலியுடன் தன் இதயத்தின் ஓசையும் போட்டி இடுவது போன்றும் அவனுள் ஒரு மாயையை உருவாக்கியது அவளது நடனம்..


நொடியும் விழி அசைக்காது பார்த்துக் கொண்டே இருந்த அவனின் கவனத்தைக் கலைத்தது அவனின் கைபேசியின் அழைப்பு.. தங்கை தான் என அறிந்து அதை அட்டன் செய்தவன்..


 “ வந்துட்டியா.. நா இதே பக்கத்துல வந்துட்டேன்.. திரும்பிப் பாரு..” என உடனே பார்க்கிங்கை நோக்கிச் சென்று கைகளை அசைத்தான்.. 


 “ நல்ல வேலை வந்துட்டண்ணா.. எங்க நீ கோபிச்சுட்டு போய்ட்டியோன்னு நினைச்சேன்..” வைசு..


“ அப்படித்தான் போய் இருந்திருக்கனும்.. தப்பு பண்ணிட்டேன்.. பத்து நிமிசம்னு சொல்லிட்டு என்ன ஒன்றம நேரம் காக்க வச்சுட்டேல்ல வாடி.. வா... உன்ன வீட்டுல போய் கவனுச்சுக்கிறேன்..” என தங்கையை செல்லமாக முறைத்த படியே வண்டியை எடுத்தான்.. இம்முறை வேகமாக அல்ல நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.. 


“ ஹே வைசு இன்னைக்கு நடந்த ஃபங்சன்ல எந்தெந்த ஸ்கூல்லாம் பார்டிசிபேட் பண்ணது.. “ ரிஷி..


“ எதுக்குண்ணா..” 


“ சும்மா தா.. “ ரிஷி


“ பொண்ணு எதுவும் பாத்தியா?.. அவளப் பத்தி தெரியணுமா?.. எப்படி இருந்தா.. ஆளு.. ” வைசு ஆவலாக கேட்க..


‘கரெக்டா கண்டுபுடிச்சுட்டாளே..’ என மனதில் மெச்சிக் கொண்டாலும்..  “ கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.. நீ என்ன திருப்பி என்னையவே கேள்விக் கேக்குற..‌ ஒழுங்கா பதில் சொல்லு... “ என்றான் அதிகாரமாக..


“ மிரட்டுறியா.. "


"அப்படியே வச்சிக்க.. "


"என்னைவே பகைச்சுக்கிட்டேல.. ஆளு எப்படி இருப்பான்னு சொல்லிருந்தா நானே ஹெல்ப் பண்ணருந்திருப்பேன்.. இப்ப பாரு உன்னால கண்டுபிடிக்க்க்க்கவே முடியாது..” வைசு..


“ நா கேட்டதுக்கு மட்டும் பதில் செல்லுடி.. ” கெத்தாக கூறிவிட்டு மனதிற்குள் ‘ எப்படி கண்டு பிடிக்கனுங்கிறத நா பாத்துப்பேன்..’ என்றான்..


“ உன்னால முடியாதுண்ணா ஏன்னா சிக்ஸ்த்துல இருந்து ட்வெல்த் வரைக்கும் இருக்குற மொத்தம் பதினஞ்சு ஸ்கூல் ஸ்டுடெண்ட் அங்க வந்திருந்தாங்க.. சோஓஓஓஓ கஷ்டம் தான்.. பட் நா உனக்கு ஹெல்ப் பண்றேன்... யாருன்னு சொல்லு.. எங்க பாத்தன்னு மட்டும் சொல்லு.. “ என கண் சிமிட்டி கேட்க.. 


அவன் பதில் சொல்லும் முன் வீடு வந்துவிட்டது.. இறங்கியபடியே.. “ ரொம்ப கூட்டமா இருந்ததுனால கேட்டேன்.. நீயா எதையாச்சும் கற்பனை செய்துட்டு ஊருக்குள்ள சுத்ததாத  சரியா.. போய் படிக்கிற வேலையப் பாரு முதல்ல.. போ.. உள்ள போ.. “ என்றவனை நம்பாது பார்த்த தங்கையை அடிக்காத குறையாய் உள்ளே தள்ளிச் சென்றான்..


கனகவள்ளி இவர்களது தாய்.. இரவு உணவுக்கான பணியை மும்மரமாக செய்து கொண்டு இருந்தார்.. இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை.. கவனித்தாலும் பெரிதாக எந்த ஒரு ரியாக்ஷனும் இருக்காது.. ஆள் ஆரவாரம் கேட்டும் தலை நிமிர்ந்து பார்க்காது இருக்க.. அண்ணனும் தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டனர்..


“ அண்ணா இரு.. நா போய் உனக்கு டீ போட்டுத் தர்றேன்.. “ என்ற வைசு சமையலறை நோக்கி செல்ல..


அவளது கையைப்பிடித்து நிப்பாட்டி “ எனக்கு சுடுதண்ணிக் குடிக்குற ஐடியால்லாம் இப்ப இல்ல.. அப்பறம் பாத்துக்கல்லாம்..” 


“ உனக்கு போய்... ச்ச...” என முறைத்தபடியே தன் அறைக்குச் சென்று கதவு மூடினாள்.. 


அவளின் சிணுங்கள் கண்டு புன்னகைத்தவன் அறைக்குச் சென்று ஃப்ரஷ் ஆகிவிட்டு சமையல் அறைக்குச் சென்றான்.. தன்னைத் திரும்பியும் பார்க்காத அன்னையிடம் “ ம்மா சாப்பாடு ரெடியா.. எங்க இருக்கு..” என்றான்


தனக்கு பதில் வராது என்பதை அறிந்தும் அவன் கேள்வி கேட்டான்.. 


அவன் நினைத்தது போலவே கனகவள்ளி டைனிங் டேபிளை நோக்கி விரலை நீட்டினாளே தவிர நிமிர்ந்து பார்க்கவில்லை.. அன்னையின் முகம் பார்த்து சில நொடிகள் நின்றவன் பின் இரு தட்டுக்களில் உணவை எடுத்துக் கொண்டு தங்கையின் அறைக்குச் சென்றான்.. 


அவளிடம் இன்று என்னென்ன நடந்தது என கேட்டுக் கொண்டும்.. அவளை கேலி செய்து கொண்டும் உணவை உண்டு முடித்தான்.. 


அவளின் முதல் நண்பன் தந்தை சத்தியமூர்த்தி, அடுத்தபடியாக அவள் மனம்விட்டுப் பேசும் முதல் ஆள் தன் அண்ணன் ஆவான்..


கதைகள் பல பேசியபடியே அவள் உறங்கிப்போக அவன் உறக்கம் வராமல் மொட்டை மாடிச் சென்றான்.. இங்கிருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து வானத்தின் நிலவை கண்டவன் அதன் குளுமையில் மெல்ல விழிகள் மூடிக் கொள்ள..


மூடிய விழிகளுக்குள் “ ண்ணா.. எனக்கு வரவே இல்ல.. “ என தன் பிஞ்சு உதடுகளை சுருக்கி.. விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரை கசக்கி கசக்கி எடுத்தவாரே அழுது கொண்டு இருந்தாள் ஐந்து வயது சிறுமி.. இந்த பிஞ்சு வயதில் பரத நாட்டிய வகுப்பில் சேர்க்க.. நடனம் வராததால் அழுதாள் சிறுமி.. பொம்மை போன்று இருக்கும் அச்சிறுமியை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.. 


சட்டென கண்களைத் திறந்தான் ரிஷி.. கண் முன்னே அச்சிறுமி இருப்பது போன்று தோன்ற ‘உனக்கு  நிச்சயம் நியாயம் கிடைக்கும் பாப்பு.. கிடைக்க வைப்பேன்.. ஏ உயிரு இருக்குற வர உன்ன சிதச்ச அத்தன பேரயும் கொன்னு புதைக்காம விட மாட்டேன்..’  என உறுதி கொண்டவனின் விழிகள் ரௌத்திரத்தில் அக்னி பிழம்பாய் மாறி இருந்தது..


பால் போன்ற வெண்ணிலா முகிலின் பின்னால் ஒளிந்து கொள்வதும் பின் எட்டிப்பார்ப்பதும் என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது.. அதனைப் பார்த்தவனுக்கு முன்மாலைப் பொழுதில் சந்தித்த அவனது பம்கின் நினைவுக்கு வந்தாள்..  ஏதோ ஒரு மேனநிலை தோன்ற விழி மூடி நித்திரையில் ஆழ்ந்தான்..  


சூரியன் வந்து வாவெனும் போது;

சூரியன் வந்து வாவெனும் போது;

சூரியன் வந்து வாவெனும் போது...

என்ன செய்யும் பனியின் துளி?

என்ன செய்யும் பனியின் துளி?


கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு;

ஜோடி கையில் என்னை அள்ளி எடு!


அன்புநாதனே, அணிந்த மோதிரம்

வளையலாகவே துறும்பென இளைத்தேன்!

அந்த மோதிரம் ஒட்டியாணமாய்

ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்!


என் காற்றில் சுவாசம் இல்லை!

என் காற்றில் சுவாசம் இல்லை!

என் காற்றில் சுவாசம் இல்லை!

என் காற்றில் சுவாசம் இல்லை!

அது கிடக்கட்டும் விடு; உனக்கென ஆச்சு!


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


 

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...