முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

அன்பே 36

  அத்தியாயம்: 36 டம்... டமார்...  பாத்திரங்கள் உருளும் சத்தம் அது. அந்த வீட்டின் மூத்த மருமகள் மலர்மங்கை கோபமாக உள்ளார் என்று அர்த்தம்.  'பின்ன மகன் பொண்ண கூட்டீட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டியா கூட்டிட்டு வந்தா! ' வாடா மகனேன்னு.' வரவேற்பாங்களா என்ன?. கோபத்துல சமக்கட்டையே தொம்சம் பண்ணிட்டு இருக்காங்க.'  "டேய்!. உங்கிட்ட நேத்தே என்ன சொன்னேன். உம்பக்கம்‌ பேச ஆளுகள சேருன்னு சொன்னேனா இல்லயா?." "நா ஃபோன் பண்ணேண்ணே."  "அப்ப எங்கடா நம்ம நட்சத்திர பேச்சாளர்கள். ஒருத்தரையும் காணுமே!. நாம வர்ற தகவல சரியா சொன்னியா இல்லையா?." "அது நா ஃபோன் பண்ணேனா! ஆனா, யாருமே எடுக்கல. சரி வந்து பேசிக்கிவோம்னு விட்டுட்டேன். எங்காத்தா வாயிமேலையே நாலு போடு போட்டு, பேச விடாம ஓரமா ஒதுக்கி வச்சிடு வாங்கன்னு யாரு கண்டா!." என்றவனை முறைத்தான் கௌதம்.  "கௌதம், வீட்டுல இப்போதைக்கி சிக்குன ஆடு நாம நாலு பேர் மட்டும் தான். மத்த ஆம்பளைங்க யாரும் வீட்டுல இல்ல." சம்பத், உடன் வேல்ராஜிம் இருந்தான்.  பிரகாஷிற்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்ய...

அன்பே 35

அத்தியாயம்: 35 பூக்களைக் கோர்க்கின்ற சரங்களிலே  ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க யாக்கையில் அணிந்திட வா. ஆநிரை தூங்கிடும் இரவினிலே அதிராமல் ஆடிட வா. உதிராமல் சூடிட வா. மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா.ஆ. மாதவா யாதவா குழல் உதவாது  இதழோடு இசையாக வா.  என்ற பாடல் வரிகள் ஹரிணியின் காதில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. எத்தனை மணி நேரம் பார்த்தாலும் சலிக்காது என்பது போல் தன் கையில் இருந்த லெமினேஷனை பாத்துக் கொண்டிருந்தவளுக்கு மேலே சொன்ன பாடல் வரிகளும், தன் கணவனின் நினைவும் வந்தன. தன் மயக்கும் குரலில் பாடிக் கொண்டே தன் மாயவனை ரசித்தாள். அவளைப் பொருத்த வரை ரிஷி தரன் மாயவன் தான்.  காதலை உதடுகளும் சொற்களும் சொல்வதை விடத் தரனின் சாம்பல் நிற விழிகள் அவளிடம் உணர்த்தியது தான் அதிகம். அவனின் கண்ணெனும் சிறையில் தன்னையே நிரந்தர கைதியாக்கிக் கொண்டாள் ஹரிணி. அவளை முதலில் கவர்ந்ததும் அவனைக் காதல் செய்ய வைத்ததும் அதுவே. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். எப்போழுது அவனிடம் பேசினாலும் அவனின் விழிகளைப் பார்த்துக் கொண்டு தான் பேசுவாள். தரனின் கண்கள் மட்டுமே அவளின் உண்மையான விஸ்வாச...

அன்பே 34

  அத்தியாயம்: 34 நிலவொளி இல்லாத அந்த இரவில் இருளை கிழித்துக் கொண்டு மிதமான வேகத்தில் சென்றது அந்தக் கார். கௌதமின் கார். ஆனால் கௌதம் ஓட்டவில்லை. ஓட்டிச் செல்பவன் ரிஷி தரன்.  அவனின் மனநிலை என்பது குழப்பமாக உள்ளது போலும். அவனின் முகத்தில் வருத்தம், மகிழ்ச்சியெனக் கலவையான உணர்வுக்கள் வந்து வந்து சென்றன. ஏன் என்று தான் தெரியவில்லை. ரிவர்வியூ மிரர் வழியே பின்னால் அமர்ந்திருந்த தன் மனைவியைக் காண, அவள் எதையோ சிந்தித்து கொண்டு இருப்பது போல் தெரிந்தது. தன் மார்போடு ஒரு‌ செவ்வக வடிவ சட்டத்தை‌ இறுக அணைத்தபடி விழி மூடாது இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கௌதமின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள். நிச்சயம் இருவருக்கும் இடையே எதுவோ நடந்திருக்க வேண்டும். சண்டையாகத் தான் இருக்கும்.  இவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஹரிணியின் அருகில் அமர்ந்திருந்தவளின் நிலையை மிகவும் மோசமாக இருந்தது. மனமெனும் பக்கம் முழுவதும் கேள்விகளே. விடை தெரியாத கேள்விகள் அவை. தன் மோதிர விரலில் அணிந்திருக்கும் தன் திருமண மோதிரத்தை சுழற்றியபடி இருந்தவளுக்கு இதை ஏற்பதா வேண்டாமா என்ற‌ குழப்பம் இருக்கிறது. ...

like

Ad