முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 34


 

அத்தியாயம்: 34


நிலவொளி இல்லாத அந்த இரவில் இருளை கிழித்துக் கொண்டு மிதமான வேகத்தில் சென்றது அந்தக் கார். கௌதமின் கார். ஆனால் கௌதம் ஓட்டவில்லை. ஓட்டிச் செல்பவன் ரிஷி தரன். 


அவனின் மனநிலை என்பது குழப்பமாக உள்ளது போலும். அவனின் முகத்தில் வருத்தம், மகிழ்ச்சியெனக் கலவையான உணர்வுக்கள் வந்து வந்து சென்றன. ஏன் என்று தான் தெரியவில்லை. ரிவர்வியூ மிரர் வழியே பின்னால் அமர்ந்திருந்த தன் மனைவியைக் காண, அவள் எதையோ சிந்தித்து கொண்டு இருப்பது போல் தெரிந்தது. தன் மார்போடு ஒரு‌ செவ்வக வடிவ சட்டத்தை‌ இறுக அணைத்தபடி விழி மூடாது இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கௌதமின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள். நிச்சயம் இருவருக்கும் இடையே எதுவோ நடந்திருக்க வேண்டும். சண்டையாகத் தான் இருக்கும். 


இவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஹரிணியின் அருகில் அமர்ந்திருந்தவளின் நிலையை மிகவும் மோசமாக இருந்தது. மனமெனும் பக்கம் முழுவதும் கேள்விகளே. விடை தெரியாத கேள்விகள் அவை. தன் மோதிர விரலில் அணிந்திருக்கும் தன் திருமண மோதிரத்தை சுழற்றியபடி இருந்தவளுக்கு இதை ஏற்பதா வேண்டாமா என்ற‌ குழப்பம் இருக்கிறது. ஒரே ‌ஒரு நாளில் தன் வாழ்க்கை திசை மாறியதை உணர்ந்தவளுக்கு அதில் பயணிப்பது சரியா என்பது தான் அந்தச் சிந்தனை. இன்று காலையில் நிகழ்ந்தை நினைத்துப் பார்த்து மனமானது அசை போட்டது.


ஜெனிபர்... 


தன் முன் இருக்கும் வெள்ளை நிற நீள வெட்டிங் கவுனை அணிவதா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் அதை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 


ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது சிறப்பானது. தங்கள் வாழ்வில் நிகழும் முக்கியமான நிகழ்வு. பல கனவுகளுடன் தங்களின் இணையுடன் சேர்ந்து மகிழும் தருணமது. ஆனால் ஜெனிபருக்கு அவளின் திருமணம் வியாபாரமாகவே தெரிந்தது. தன்னை யஷ்வந்த் விலை கொடுத்து வாங்கி உள்ளான். அவன் பல லட்சம் பணம் கொடுத்து வாங்கிய உயிருள்ள பொம்மை தான் நான் என்பதை அறிந்தவளின் மனம் வேதனையில் நிறைந்தது. யஷ்வந்தின் வக்கிர பார்வைக்கு மத்தியில் தன்னுடன் மரியாதையாகவும் அன்பாகவும் வெளிப்படையாகவும் பழகும் பிரகாஷின் முகம் வேறு இடையிடையே வந்து இம்சித்தது. 


'பிரகாஷ் வருவான் தன்னை காக்க' என்று மனம் நம்பினாலும், மூளை அதை ஏற்க மறுத்து வேறு திட்டம் தீட்டியது. வேறு என்ன உயிரை மாய்த்துக் கொள்வது தான் அது. யஷ்வந்தின் கைப்பாவையாய் மாற விரும்பவில்லை. வீட்டு சிறையில் இருக்கும் அவள் எதற்கும் உதவுமெனச் சில பல தூக்க மாத்திரைகளை வாங்கி கையோடு வைத்திருந்தாள். அதைப் போடவா வேண்டாமா என யோசித்தபடியே இருக்க, அறைக்குள் வந்தாள் அவளின் சகோதரி ஜெஸ்ஸி. 


"இறைவனோட அருளால உனக்கு நல்ல வாழ்க்க அமையப் போது ஜெனி. யஷ்வந்த் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா!. உங்க மாமா சொன்னாரு, அவருக்கு எக்கச்சக்க சொத்து இருக்காம். இன்டெஸ்ட்டீல பெரிய ஆளாம். அவர கல்யாணம் பண்ணிக்க நா நீ ன்னு போட்டியே நடக்குதாம். நல்ல வேள அவரு கூட உன்னோட கல்யாணம் நடக்கப்போது. நீ குடுத்து வச்சவ ஜெனி. இந்த நேரம் நம்ம அப்பாம்மா இருந்திருந்த நல்லா இருக்கும்."


"அப்படி அவங்க இருந்திருந்தா இந்நேரம் என்னோட லைஃப் நாசமா போயிருக்காது." என்றாள் எங்கோ பார்த்தபடி. 


"ம்ச்... இப்ப என்ன நாசமா போயிடுச்சி. நம்ம அப்பாவ விட யஷ்வந்த் உன்ன நல்லா பாத்துப்பாரு. உள்ளங்கைல வச்சி தாங்கப் போறாரு பாரு. அப்பத் தெரியும் இந்த அக்கா உனக்கு எவ்ளோ பெரிய நன்ம செஞ்சிருக்கேன்னு.‌ ஓட்டு வீட்டுல இருந்த உன்ன பங்களா வீட்டுல ராணி மாறி வாழ வச்சிருக்கேன்னு புரியும்."


"ஆனா நம்ம வீட்டுல இருக்கும்போது தா நா ராணி மாறி இருப்பேன். சந்தோஷமாவும் இருப்பேன்."


"என்ன சந்தோஷம்?. சொல்லு. நம்ம அப்பா நமக்குன்னு சொத்துன்னு எதாச்சி ஒன்னு சேத்து வச்சிருந்தாரா என்ன!.‌ மழைக்கி கூடத் தாங்காத ஒரு ஓட்டு வீடு. அத கட்டீட்டு அவருக்கு அவ்ளோ பெரும வேற. ச்ச... அவரு சொன்ன பையன கட்டீட்டு வாழ்ந்திருந்தா நா அந்த மாறி ஓட்டு வீட்டுல இருந்து கஷ்டப்பட்டிருப்பேன். அவர விட்டு வந்ததுனால தா நல்லா இருக்கேன். உங்க மாமா எம்பேருல அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கிருக்காரு. மும்பைல வீடு வாங்குறது சும்மாவா!." எனத் தன் கணவனின் பெருமை பேச, கடுப்பாக வந்தது ஜெனிபருக்கு. 


"ஆனா உம்பேருல இருக்குறது வெறும் செங்கலும் சிமிண்டும் தான். நிலம் உன்னோடது கிடையாது. நாளைக்கி அந்தப் பிள்டிங்குக்கு எதாவது ஆச்சின்னா நீ நடு ரோட்டு தா நிப்ப. ச்சீ... அப்பா நமக்குன்னு சேத்து வச்ச நகை, பணம், நம்ம வீடுன்னு எல்லாத்தையும் வித்து அனுபவிச்சிட்டு அப்பாவையே குறை சொல்லுற. உன்னால தா அப்பா இறந்து போனாரு. மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால பேச முடியுது?." என்றாள் கோபமாக.


"ஆனா என்னால தா சாகக் கிடந்த அம்மாவ கூடக் கொஞ்ச நாள் காப்பாத்த முடிஞ்சது. இல்லன்னா எப்பவோ நீ அநாதையாகி நடு தெருல தா நின்னிருப்ப." 


"ம்ச்... அவங்க பேச்ச விடு. இங்க பாரு!. என்ன விட உனக்கு நல்ல லைஃப் அமையப்போது.‌ யஷ்வந்த் பணக்காரென் ஜெனி. உனக்குத் தேவையான எல்லாத்தையும் அவெ பாத்துப்பான். அதுக்கு பதிலா நீயும் அவனுக்குத் தேவையானத செஞ்சா போதும். சொகுசா வாழலாம்." என்றாள் ஜெஸி, அவளின் மூளையை தன் பேச்சால் சலவை செய்ய நினைத்து. 


"அதுக்காக அவனுக்கு வப்பாட்டியா வாழச் சொல்றியா என்ன?."


"அவரு உன்ன கல்யாணம் பண்ணிக்கத்தா கேட்டிருக்காரு. வாய்க்கி வந்த படி பேசாத."


"இன்னும் எத்தன மணி நேரத்துக்கு என்ன ஏமாத்த போறிங்க?. இங்க நடக்கப்போறது கல்யாணம் இல்ல. என்னோட வாய அடைக்கிறதுக்கு நீங்கப் போடுற டிராமான்னு எனக்குத் தெரியும்." என்றாள் ஜெனி கண்ணீருடன்.


"நீ என்ன சொன்னாலும். அந்த யஷ்வந்த் நினைச்சது தா நடக்கும். அவெங்கூட தா நீ இருந்தாகனும். சும்மா வேலைக்காகதத பேசாம ரெடி ஆகு. எதோ கல்ச்சர் கில்ச்சர்ன்னு நீ பொனாத்துனதுனால தா இந்தக் கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணிருக்காரு. கண்டத பேசிக் கழுத்துக்கு வர்றப்ப போற தாலிய வேணாங்காத. மாமா சர்ச்சில மோதிரம் மாத்திட்டு கோயிலுக்குப் போனும்னு சொன்னாரு. தயாராக இரு." எனக் கட்டளை இட்டுச் சென்றாள் ஜெனிபரின் அக்கா. 


ஜெஸியும் அவளின் கணவனும் ஜெனி திருமணம் யஷ்வந்துடன் சட்டப்படி நடத்தி கட்ட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தனர். அப்போது தான் யஷ்வந்தின் சொத்தில் ஜெனியை மனைவி என்று காட்டி பங்கு கேட்கலாம். அதனால் தான் திருமணத்தை யஷ்வந்து குடும்பத்தின் வழக்கமான இந்து முறைப்படியும் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் யஷ்வந்த் இதற்குச் சம்மதிப்பானா என்று அவர்களுக்குத் தெரியாது.‌ 


வாழ்க்கையை சுகமாக வாழ்வதற்கும், நிம்மதியுடன் வாழ்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் பணம் மட்டுமே குறி என்று பேசிச் செல்ல ஜெனிபருக்கு வேறு வழி இல்லை. எழுந்து உடை மாற்றித் தயாரானாள். 


அந்த வெள்ளை நிற உடையில் அவள் தேவதைபோல் இருந்தாலும் முகத்தில் ஒரு துளி புன்னகை இல்லை. ஹரிணி சொன்னது போல் இது கண் துடைப்புக்காக நடத்தப்படும் திருமணம் என்பதால் அந்தச் சர்ச்சில் ஆட்கள் என்று பத்து பேரைத் தவிர யாரும் இல்லை. அதில் ஆறு பேர் ஜெஸிக்கும் அவளின் கணவனுக்கும் தெரிந்தவர்கள். யஷ்வந்தின் சார்பாக அவனின் அலுவலகத்திலிருந்து இருவர் மட்டுமே வந்திருந்தனர். அவன் வீட்டிலிருந்து யாரும் வர வில்லை. ஏனெனில் ஜெனியை திருமணம் செய்யப் போவது குறித்து யாரிடமும் ஆலோசிக்கவும் இல்லை தெரியப்படுத்தவும் இல்லை. 


ஒரு சிறுமி வந்து அவளை அழைக்க, அந்தத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தாள் ஜெனிபர். அங்கு அந்த ஆலயத்தின் பாதிரியார் அவளிடம் ஏதேதோ பேசவும் கேட்கவும் செய்தார். ஜெனி மௌனமாக அனைத்திற்கும்‌ தலையசைத்தாள். அவர் கூறிய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து மோதிரம் மாற்றிக் கொள்ள சொல்ல, ஜெனி அப்போதும் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. அனைத்தும் வேகவேகமாக நடந்து முடிந்தது.



அருகில் இருந்தவன் தன் கரத்தினை பற்றி மோதி அணிவித்தையும், தன்னை மனைவியாக அந்த இறைவனின் சாட்சியாய் ஏற்று கொண்டதையும் அவள் உணர்வே இல்லை. இது அவளுக்காகப் போலியாக நடத்தப்படும் திருமணம் என்றால் ஏன் முறைப்படி அனைத்தும் நடக்கிறது என்று யோசிக்கவில்லை அவள். திருமணம் சட்டப்படி நடந்தேறியது. பதிவு செய்யும் ரிஜிஸ்டரில் கையெழுத்திட சொல்ல, அப்போது தான் கவனித்தாள் அதில் இருக்கும் பெயரை. வேக வேகமாக விழிகளை உயர்த்தி அருகில் நின்றவனை பார்க்க, அவன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி புன்னகைத்தான். 


பிரகாஷ்... 


கண்ணீருடன் அவனை அணைக்க எண்ணித்தான் அடி எடுத்து வைத்தாள். ஆனால் அதற்குள் அவள் உட்கொண்ட மாத்திரைகள் அதன் பயனைக் காட்டின. மயங்கி அவனின் மார்பிலேயே சாய, அவன் பயத்துடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். 


கண் விழித்தபோது அவளின் அக்காவும் மாமாவும் அவளை வசைபாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் வாழ்க்கையை ஜெனி நாசம் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டி ஜெனிக்கு சாபம் இடுவது போல் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர எதுவும் பதில் பேச வில்லை. 


"உங்க பொலம்பல எல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு வெளிய போய் வைச்சிக்கிட்டா நல்லா இருக்கும். நா என்னோட வைஃப்ப டிஸ்சார்ஜ் பண்ணிட்டு அவகூட ஊருக்குக் கிளம்பனும். இடத்த காலி பண்றீங்களா?." என்றபடி அறைக்குள் வந்தான் பிரகாஷ். ஜெனியின் முகம் பூவாய் மலர்ந்து போனது அவனின் வருகையால். 


இப்போது அவர்களின் ஏச்சு பேச்சு பிரகாஷை குறிவைத்து தாக்கியது. இருவரும் ஜெனியை வைத்துப் பல திட்டங்கள் போட்டு வைத்திருந்தனர். தங்களின் எதிர்கால திட்டங்களைப் பிரகாஷும் ஜெனியும் சிதைத்ததால் உண்டான ஆத்திரத்தில் போலிஸிடம் செல்வதாக மிரட்ட,


"தாராளமா போங்க. இருபத்தி நாலு மணி நேரமும் உங்களுக்குச் சேவ செய்யத்தா போலிஸ்காருங்க இருக்காங்க. ஆனா என்னன்னு கம்ப்ளைண்ட் குடுப்பிங்க.? ஜெனி மேஜர். அவளோட சம்மதமில்லாம எங்க கல்யாணம் நடக்கல. அதுனால கடத்திட்டு போய்ட்டான்னு கம்ப்ளைண்ட் குடுக்க முடியாது. ம்... எத சொல்லிக் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்னு நல்லா யோசிச்சிட்டு அப்றமா வாங்க. இது எங்க வீட்டு அட்ரஸ்ஸு. இப்ப வெளி போறிங்களா!. உங்க ரெண்டு பேரையும் பாத்தாலே எரிச்சலா வருது." என நக்கலாகப் பேசி இருவரையும் வெளியே துரத்தி விட்டான். பின் ஜெனியிடம் திரும்பி,


"நாந்தா வருவேன்னு சொன்னேன்ல‌‌. எம்மேல நம்பிக்கை இல்லயா உனக்கு?. லூசு மாறித் தூக்க மாத்திரையைப் போட்டுட்ட! உயிருக்கு எதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்பா?." பிரகாஷ் கோபமாகக் கத்தினான். 


"அவனுக்குப் பொண்டாட்டியாகுறத விடச் சாகுறது நல்லதுன்னு தோனுச்சி. அதா. ஸாரி." என்றாள்.


 அவளின் வாடிய முகம் பொறுக்காது தன் மார்போடு அணைத்து முன் உச்சியில் முத்தமிட்டான் பிரகாஷ். இனி என்ன ஆனாலும் உன்னுடனே என்பது போல். 


"யஷ்வந்த் எங்க.? எப்படி என்ன உங்களுக்கு விட்டுக் குடுத்தான்?. அவெங்கூடவே சுத்துற‌ பாடி கார்ட்ஸ்ஸ எப்படி சமாளிச்சி வந்திங்க." என அவனின் மார்பில் இருந்த தலையைத் தூக்காது கேட்க, பிரகாஷ் புன்னகைதான். அவன் பதில் கூறும் முன்,


"தற்கொல கூட ஒழுங்கா பண்ணிக்க தெரியாதவளோட எப்படி பிரகாஷ் காலம் முழுக்க குப்ப கொட்ட போற பிரகாஷ்?." ஹரிணி. அவளின் கையில் சில காகிதங்கள் இருந்தன. உடன் கௌதமும் வந்தான். அவர்களைக் கண்டதும் ஜெனி அவனை விட்டு விலகிக் கொண்டாள். 


"என்ன பண்றது எல்லாம் என்னோட தலையெழுத்து!." என்றான் பிரகாஷ் போலி சலிப்புடன்.


"தலையெழுத்தேன்லாம் நீங்க வாழ வேணாம். அந்தப் பிள்ளைய கூட்டீட்டு போய் அண்ணே வேற எங்கையாது விட்டுடுட்டு வந்திடுறேன். உனக்குப் பேச்சிய ரெண்டாம் தாரமா கட்டி வைக்க ப்ளான்‌ போட்டிருக்கேன். ஊருக்குப் போனது உனக்குக் கல்யாணம் பேச்சி கூட எப்படி?." என்க. பிரகாஷ் கௌதமுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான்.‌ 


ஹரிணி ஜெனியிடம், "அடுத்து சாகனும்னு முடிவு பண்ணா கத்தி வாங்கி கழுத்த அறுத்துக்க. இல்ல நல்ல உயரமான பில்டிங் மேல இருந்து குதிச்சிடு. அறிவு கெட்டவளே!!. நா உங்கிட்ட என்னடி சொன்னேன்?. அப்பவே போலிஸ்ட்ட கம்ப்ளைண்ட் குடுப்போம்னு சொன்னேனா இல்லயா!. நீ தா உதவி செஞ்சவெ மேல நன்றியோட இருக்கனும் கேஸ்லா போடக்கூடாதுன்னு புராண கதையெல்லாம் பாடுன!. இப்ப பாரு சூசைட் அட்டன் பணணிருக்க!. அவ்ளோ தா உன்னோட தைரியமா?." சற்று கோபமாகவே பேசினாள். ஏனெனில் அவளுக்கு யஷ்வந்த் உடனான ஜெனியின் திருமணமும் பிடிக்கவில்லை. இப்போது உயிரைவிடத் துணிந்த ஜெனியின் செயலும் பிடிக்கவில்லை. 


"இல்ல ஹரிணி நா." எனப் பேசத் தொடங்கும் முன்,


"போதும். இதுவரைக்கும் நீ பேசுனதே போதும். இனி நா அத கேக்க விரும்பல. இது யஷ்வந்த்கிட்ட நீ கையெழுத்து போட்டுக் குடுத்த பாத்திரம். இனி நீ யாருக்கும் காசு குடுக்க வேண்டியது இல்ல. கிளம்பு ஊர்ல போய்ப் பேசிக்கலாம்." எனச் சொல்லி யஷ்வந்த் உடன் ஜெனி போட்டுக் கொண்ட அக்ரிமெண்ட்டை கிழித்து எரிந்து விட்ட செல்ல, ஜெனிக்கு குழப்பமாக இருந்தது. 


பிரகாஷிடம், எப்படி திருமண நேரத்திற்கு வந்தீர்கள்? என்றும், யஷ்வந்த் எங்கே? என்றும் ஜெனி விடாது கேட்க, பிரகாஷ் தனக்கு தெரிந்ததை கூறினான். 


அதாவது பிரகாஷுடன் தேவாலயத்திற்கு வந்த ஹரிணியும் ரிஷியும் யஷ்வந்தை தனியே அழைத்துச் சென்று பேசியதாகவும், சிறிது நேரத்திற்கு பின் யஷ்வந்த் கோபமாக அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறினான். காரணம் ஏன் என்று அவனுக்கும் தெரியாது. 


ஓயாது கத்திக் கொண்டே இருந்த ஜெனியின் அக்காவையும் மாமாவையும் சமாளிக்கத் தான் சற்று சிரமமாக இருந்தன என்றும் கூற ஜெனி முகம் வாடிப் போனது. 


ரிஷியும் சில காவலர்களும் ஜெனியின் அறைக்கு வர, காவலர்கள் அவளிடம் யஷ்வந்தை பற்றிச் சில கேள்விகளைக் கேட்டுச் சென்றனர். பின் ஜெனியை டிஸ்சார்ஜ் செய்து காரில் தூக்கி போட்டுக் கொண்டு நால்வரும் அவர்களின் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். 


நியாயமாகப் பார்த்தால் ஜெனி பிரகாஷுடன் நடந்த தன் திருமணத்தை நினைத்துச் சந்தோஷமாக அல்லவா! இருக்க வேண்டும். ஆனால் அவளின் முகத்தில் சந்தோஷத்திற்கு பதிலாகக் குழப்பமும் பயமுமே இருந்தது. 


ஏனெனில் யஷ்வந்த் உடன் அவள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அப்படி. யஷ்வந்த் அவளுக்கு இரு வழிகளை மட்டுமே காட்டியிருந்தான். ஒன்று சம்பாதித்து அவனுக்குப் பணம் கொடுப்பது. அதுவும் மாடலிங்க துறையிலிருந்து மட்டுமே. மற்றொன்று அவனின் ஆசை நாயகியாக அவனுடன் இல்லீகலாக வாழ்வது. அதுவும் சில வருடங்களுக்கு மட்டுமே. 


இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாதபோது, மூன்றாவதாக ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்றால் இவர்களும் தன்னை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனரா என்ன? என்ற குழப்பமும்,


என்றாவது ஒரு நாள் உனக்காக நா இத்தனை லட்சம் பணம் கொடுத்திருக்கிறேன் என்று பிரகாஷ் வாயால் கேட்க நேர்ந்தால் அன்று அவன்மீது தான் கொண்டிருக்கும் காதல் பொய்யாகி போய்‌ விடுமோ‌! என்ற பயமும் தான் வந்து அவளின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தன. 


ஆனாலும் தன் மனம் விரும்பியவனையே மணாளனாக அடைந்ததை நினைத்து மகிழ்ச்சியும் இருந்தது. எந்தவித ஆக்ஷன் சீக்வென்ஸ்ஸும் இல்லாமல் சிம்பிளாக மோதிரத்தை போட்டு விட்டு ஜெனியை மனைவியாக்கிக் கொண்டான் பிரகாஷ். 


ஒரு வழியாக இவர்களின் கல்யாணம் முடிந்தது. ஆனால் ஏற்கனவே கல்யாணம் பண்ணி மூணு வர்ஷத்துக்கும் மேல ஒன்னாவே சண்ட போடாமா ஸாரி சண்ட மட்டுமே போட்டுகிட்டு வாழ்ந்துட்டு வர்ற ரிஷி ஹிரிணி ஜோடி ஏ சோகமா இருக்கு?. 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...