அத்தியாயம்: 33
"Do you have any sense?. ஒருத்தனோட வீக்னஸ் பாய்ண்ட் வச்சி கேலி பண்ணற நீங்களெல்லாம். கௌதம் உங்களோட தம்பி தான. அவன போய் டீஸ் பண்ற. எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு. இன்னைக்கி அத நீ அதிகமா தாண்டிட்ட. ச்ச... உங்கிட்ட இருந்து நா இத expect பண்ணவே இல்ல. இர்ரெஸ்பாண்ஷபுல் இடியட். இதுக்கு முன்னாடி நீ அவெ கிட்ட எப்படி பிகேவ் பண்ணன்னு எனக்குத் தெரியாது. பட் இனிமே நா இருக்குற வர உன்னால அவன காயப்படுத்த முடியாது. Be careful." என மிரட்டியவள் இன்னும் பலவாறு திட்டப் படகு கரையை அடைந்தது.
திட்டும் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கைக்களில் சிக்க விடாது கௌதம் அவளை இழுத்துச் சென்று விட்டு விட்டான். கோபமாகவே சென்றாள் அவளும்.
ரிஷிக்கும் கோபம் தான். இதுவரை யாரிடமும் அவன் அடி வாங்கியது இல்லை. அப்பா அம்மா என யாரிடமும் இல்ல. சில நேரம் சண்டை வரும்போது கௌதமிடம் ஒன்றிரண்டு வாங்கியிருக்கிறான். அதற்குப் பதிலாகப் பலமடங்கு திருப்பியும் கொடுத்திருக்கிறான். ஆனால் ஒரு பெண்ணின் கையால். அதுவும் தன் மனைவியின் கையால் வாங்குவது இதுவே முதல் முறை. ஆத்திரம் மேலோங்க அது அவனின் ஈகோவை தட்டி எழுப்பியது.
அங்கேயே இருந்தால் அவளைக் காயப்படுத்தி விடுவோம் என்பதை அறிந்ததாலே, கௌதம் அவளை இழுத்து செல்லும்போது அமைதியாக நின்றான். ஹோட்டல் அறையின் சாவி அவனிடம் இருந்ததால் உள்ளே கோபமா அமர்ந்திருக்கிறான், ஹரிணியின் வருகையை எதிர்பார்த்து.
வந்தாள் பெண். நிலம் நோக்கி நடப்பது என்பதை ஹரிணி அறியமாட்டாள். எனவே தயக்கத்துடன் நடந்து வந்தாலும் ரிஷியைப் பார்த்தபடியே தான் வந்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரின் விழிகளும் ஒருவரில் ஒருவர் பின்னிக் கொள்ள, ஹரிணி அவனின் சாம்பல் விழிகளைப் படிக்க முயன்று தோற்றுப் போனாள்.
தரனின் இதழ்கள் பேசியதை விட அவனின் விழிகள் தான் அவளிடம் உண்மை சொல்லும். இப்போது அது எவ்வித அசைவுமின்றி தன்னை வெறித்து நோக்குவதை உணர்ந்தவளுக்கு,
'ச்ச... இவெ பாக்குறத பாத்தா இன்னைக்கி டாக்டர் கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்க வேண்டி வரும் போலையே. இந்த ஊருல எது நல்ல ஹாஸ்பிட்டல்லுன்னு கூட எனக்குத் தெரியாதே. ஆனாலும் உனக்கு இவ்ளோ கோபம் ஆகாது ஹரிணி. ஆம்பளப் பையன அதுவும் கட்டுன புருஷனையே கை நீட்டி அடிக்கிற அளவுக்குக் கோபம் இருக்கவே கூடாது உனக்கு. எதோ நாலு சுவத்துக்குள்ள அடிச்சிருந்தா கூடப் புருஷெ பொண்டாட்டி செல்லமா கன்னம் வீங்குற அளவுக்குக் கொஞ்சிக் கிட்டாங்கன்னு சொல்லிச் சாமாளிச்சிருக்கலாம்.
ஆனா நீ, உன்னோட colleagues முன்னாடி அடிச்சிருக்க. தப்பு... ரொம்ப பெரிய தப்பு. அவெங்கிட்ட ஸாரி கேட்டுடனும். அதுக்கப்றமும் கோபமாவே இருந்தான்னா ஒன்னுமே பண்ண முடியாது. அன்னைக்கி மாறி வார்த்தைய மட்டும் விடாம, அமைதியா இருக்கனும். இல்லன்னா உடம்பு புண்ணாகிடும். பலமா அடி விழாம கூடவே இருந்து என்ன காப்பாத்து கடவுளே.' என உள்ளுக்குள் டைப்ரைட்டர் போல் அடித்துக் கொண்டாலும் வெளியே திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அவனின் எதிரில் அமர்ந்தாள்.
நேரம், நொடிகளைக் கடந்து நிமிடங்களாகப் பாய்ந்தோடியது. மௌனமாகவே இருந்தனர் இருவரும். தன் மூச்சை ஆழ இழுத்து விட்டுப் பேசத் தொடங்கினாள் ஹரிணி.
"பாவா நா பண்ணது தப்பு. ஸாரி கேட்டாலும் நடந்தத மாத்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். பட் அத தவிர வேற என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியல. ரியலி ஸாரி. நா ப்ராமிஸ் பண்றேன். இனி மத்தவங்க முன்னாடி உங்ககிட்ட இன்டீஷெண்ட்டா நடந்துக்கவே மாட்டேன். ஸாரி..." என அவனுக்குத் தன் மனதில் உள்ள வருத்ததை மறைக்காது சொல்லிக் காப்பாற்ற முடியாத ஒரு சத்தியத்தை செய்ய,
'அப்ப எல்லார் முன்னாடியும் அடக்கமான மனைவியா இருந்துட்டு. தனியா கூட்டீட்டு போய்க் கோவை சரளா மாறிக் கதவ சாத்தி வச்சிட்டு சாத்து சாத்துன்னு சாத்துறேன்னு சொல்ற.' என்பது போல் ஒரு பார்வையை தரன் அவளுக்குத் தந்தான்.
"அது... நீ காலைல இருந்து கௌதம மட்டம் தட்டுற மாறிப் பிரகாஷ் கிட்ட கிண்டல் பண்ணி பேசிட்டு இருந்தியா!. அதா கோபம் வந்துடுச்சி. அவனுக்கு அந்தரத்துல தொங்குறது பயம்ன்னு உங்களுக்குத் தெரியும் தான. அப்றமும் ஏ அவன சீண்டிக்கிட்டே இருந்த?. அதுனால தா அவெ பாராசூட்ல ஏறி, தண்ணீல விழுந்து. ம்ச்... அவனுக்கு எதாவுதும் ஆகிருமோன்னு நா ரொம்ப பயந்துட்டேன்." என்க,
"ஆகிருந்தா..."
தன் கையில் இருந்த சிகிரெட்டை ஆஷ் ட்ரேயில் போட்டவன், நிதானமாகப் பேசினான். இவ்வளவு நேரம் சிலைபோல் அமர்ந்திருந்தவன், திடீரெனப் பேசவும் ஹரிணி முழித்தாள்.
"என்ன?."
"உன்னோட ஃப்ரண்டுக்கு எதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்பன்னு கேட்டேன்." அழுத்தமாக வந்தது அவனின் குரல். அதில் கௌதமா நானா என்ற போட்டி இருப்பது போல் இருந்தது.
நொடியும் தாமதிக்காது, "உன்ன சும்மாலாம் விட்டுட மாட்டேன். கொன்னுடுவேன்." என்றாள் மிடுக்காக.
அவளின் பதிலுக்குத் தன் ஒற்றை புருவம் உயர்த்தினான் தரன்.
"See எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். இதுல யாரு ஃபஸ்ட் யாரு நெக்ஸ்ட்டுன்னு நா வரிசபடுத்த விரும்பல. அதெ நேரத்துல ஒருத்தருக்காக இன்னொருத்தர விட்டுக் குடுக்குற சூழ்நிலை வந்தா. நா கண்டிப்பா கௌதம் பக்கம் தா நிப்பேன்." என்றவுடன் கோபம் வந்துவிட்டது போலும் தரனுக்கு. எழுந்து அவள் அமர்ந்திருந்த ஒற்றை சோஃபாவின் கைப்பிடியில் தன் கரங்களை வைத்து அவளைச் சிறை செய்தவன்,
"சோ... உன்னோட ஃப்ரெண்டுக்காகக் கொல பண்ணக் கூடத் தயங்க மாட்ட. ம்..." என அவளின் விழிகளை உற்று பார்த்த படி கேட்டான்.
அவளும், "எஸ்... அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. ஹீ இஸ் மை ஃப்ரண்ட். எப்பையுமே." என அவனின் பார்வைக்கு பதிலாகச் சளைக்காமல் அவளும் பார்க்க, அவனின் கோப விழிகளைக் காண நேர்ந்தது. விரல்களை மடக்கி அவன் கரம் ஓங்கவும் தன் கன்னங்கள் இரண்டையும் பொத்திக் கொண்டாள்.
"ப்ளீஸ். அடிக்கனும்னா கைக்காலு அப்றம் முதுகுல அடி. மூஞ்சில மட்டும் வேண்டாம்." என்க, ஓங்கிய கரத்தால் தன் சிகை கோதியவன், அவளின் பேச்சைக் கேட்டுச் சிரிக்கலானான். வாய்விட்டுச் சிரித்தான் ரிஷி தரன்.
'என்ன காமெடி பண்ணிட்டோம்னு இவெ சிரிக்கிறான்.' என ஆராய்ந்து பார்த்தாலும், கன்னத்தில் இருந்த கரத்தை மட்டும் எடுக்க வில்லை அவள். முன்னெச்சரிக்கையாமாம்.
"ஏ கன்னத்துல அடிக்கக் கூடாது?." என்றான் சிரிப்புடனேயே.
"அது கன்னத்துல அடிச்சா காது கேக்காம போய்டுமாம். சின்ன வயசுல எங்க அம்மா சொல்லுவாங்க. அதுமட்டுமில்லாம தலை வலிக்குமாம். அப்றம் காதுல இருந்து ரத்தம் வருமாம். அத நிப்பாட்டக் காதுக்குள்ள ஊசி போடுவாங்களாம். இதெல்லாம் பொய்யின்னு எனக்குத் தெரியும். ஆனா சின்ன வயசுல இருந்து கேக்குறேனா, அதுனால பயம் மட்டும் இன்னும் போகல. அதுனால நா யாரையும் கன்னத்துல மட்டும் அடிக்க விடுறது இல்ல." என விளக்கம் தர, அவனின் கண்களுக்கு அவள் சிறுமிபோல் தெரிந்தாள்.
"கிட்... நீ எப்ப வளரப் போற. உனக்கே ஒரு கிட் இருக்கு. ஆனாலும் நீ அம்மா மாறி நடந்துக்காம கிட்மாறிப் பிகேவ்வ பண்ணா என்ன அர்த்தம்." என்றான் கோபமற்ற கேலியான குரலில்.
"நா ஒன்னும் கிட் கிடையாது. போதுமான அளவு வளந்துட்டேன். ஹேய் உனக்கு எம்மேல கோபம் இல்லையா!. இவ்வளோ நேரம் நீ என்ன பயங்காட்டத்தா மிரட்டுனியா பாவா. என்னோட ஸாரிய அக்சப்ட் பண்ணிட்டீயா என்ன?." உற்சாகமான குரலில்.
‘அந்தக் கன்னத்துல இருக்குற கைய மட்டும் இறக்குனா நல்லாயிருக்கும். ஆனா பண்ண மாட்டேங்கிறா. ‘
"இல்ல, உள்ளுக்குள்ள கோபந்தா இருக்கு. அதிகமாவே இருக்கு. எனக்குக் கிடைக்கிறத ரெண்டு மடங்காகத் திரும்பித் தந்து தான் பழக்கம். அது எதுவா இருந்தாலும். " என்றான் வார்த்தைகளைப் பற்களுக்கு இடையில் மென்ற படி. அவனின் இந்தத் திடீர் அன்னியன் அவதாரத்தைப் பார்த்துப் பயந்தவள், தன் மருண்ட விழிகளால் அவனைப் பார்க்க, அவன் தந்து விட்டுத் தான் சென்றான்.
கரத்தால் அல்ல. இதழால் அவளின் இதழிலை சிறை செய்ததன் மூலம் தன் கோபத்தை காட்டினான். வார்த்தைகளிலிருந்து கடுமை அவன் தந்த முத்தத்தில் துளியும் இல்லை.
"உவ்வக்... சிகிரெட் பிடிச்ச வாயாலயா எனக்கு முத்தம் குடுத்த. ச்சீ... உங்கிட்ட நா எத்தன தடவ சொல்றது. அந்தக் கருமத்த பிடிக்காத. பிடிச்சா பக்கத்துல வராதன்னு. கேக்குறியா?. ம்." எனத் தன் இதழ்களைத் தன் டீசர்டில் துடைக்க, அவன் சிரித்துக் கொண்டே வெளியே சென்றான்.
"இவ்வளோ தா இவனோட ரியாக்ஷனா. ரொம்ப கோபமா இருந்த மாறித் தெரிஞ்சதே. ச்ச... கிஸ் தா பண்ணுவான்னு தெரிஞ்சா, கூட நாலு அற விட்டுருக்கலாமோ!. ம்... இவன என்னால புரிஞ்சிக்கவே முடியலையே. என்ன பண்ண?." என யோசித்தப்படியே அமர்ந்திருந்தாள் ஹரிணி.
வெளியே கௌதம் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றுகொண்டிருந்தான். அவனுக்குத் தங்களின் சிறு பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வானது திடீரென நினைவுக்கு வந்தது. அதனால் தான் வாசலிலேயே நிற்கிறான்.
நீங்கள் உங்கள் பெற்றோரை விட்டுத் தனித்து உறங்கியிருக்கிறீர்களா? அதுவும் சிறு வயதில். கௌதமிற்கு தன் அன்னை ஜோதியின் அருகில் அவரின் அரவணைப்பில் உறங்கியதாக நினைவு இல்லை. அப்படி ஒன்று நடந்தால் தானே நினைவில் இருப்பதற்கு. அவனின் தந்தை கலியபெருமாள் அவனைத் தங்களுடன் படுக்க அனுமதித்தது இல்லை. சத்தியமூர்த்தி என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் கௌதம் என்ற ஜீவன் இருந்திருக்காது.
அவரின் மனைவி கனகவள்ளியை பொருத்த வரை ரிஷியும் கௌதமும் ஒன்றே. இருவருக்கும் இடையில் தான் உறங்குவார். ரிஷி எப்பொழுதும் மூர்த்தியைக் கௌதமிற்கு விட்டுத் தந்ததே இல்லை. எனவே மூர்த்தியின் அருகில் அவன் மட்டுமே தான் படுத்துக் கொள்வான். கௌதம் எதுவும் தனக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததே இல்லை. அவர்களின் கதைகளைப் பிறகு பார்க்கலாம். இப்போது கௌதமின் நினைவிற்கு வந்த ஃப்ளாஷ் பேக் என்னவென்றால்.
வைசாலியை கருவில் சுமக்க தொடங்கிய பின் மூர்த்தி இருவரையும் தனியாக ஒரு அறையில் தூங்க வைத்தார். கனகாவை அவர்கள் தொல்லை செய்யக் கூடாது என்பதற்காக. இருவருக்கும் ஒரே ஒரு அறையைத் தந்து ஒரே ஒரு கட்டிலையும் தந்தார் மூர்த்தி.
மாட்டேன் என்று அடம்பிடித்த ரிஷியைக் கௌதமுடன் தூங்கு இல்லை என்றால் ஹாலில் படுத்துக்கொள் என்று விட்டார் மூர்த்தி. தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் கதகதப்பான உறங்கிய தன்னை தனியா உறங்க வைத்த கௌதமை சும்மா விடுவானா ரிஷி.
சிறு வயதில் படுக்கை ஈரம் செய்வது வழக்கமான ஒன்று தான். ஐந்து ஆறு வயது வரை கூடச் சில சிறார்கள் ஈரம் செய்வர். அதுவும் ஊட்டிக் குளிரில் இது போன்று செய்யவில்லை என்றால் ஊட்டிக்கு தான் மரியாதை இருக்குமா. இல்லை குளிருக்கு தான் மரியாதை இருக்குமா!. நான்கு வயது சிறுவன் அவன்.
வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜோதியும் கனகவள்ளியும் பிரித்துக் கொள்வர். சமயலை கனகா தான் செய்வார். எனவே வீட்டைப் பராமரிப்பது ஜோதியின் வேலை. அதில் துணி துவைப்பதும் அடக்கம். தினமும் கௌதம் போர்வையை ஈரம் செய்ய, கடுப்பாகிப் போனது அவருக்கு. இதற்கு முன் அப்படி செய்தது இல்லை அவன். ஏனெனில் கனகா அவர்கள் இருவரையும் நடு இரவில் எழுப்பிப் பாத்ரூமிற்கு கூட்டிச் செல்வார்.
இப்போது யாரும் அருகில் இல்லை. இதில் ரிஷி வேறு படுக்கையின் முக்கால் பாகத்தைத் தலையணை கொண்டு நிரப்பி விட்டு, இத்துணுண்டு இடத்தைத் தான் தருவான். அதிலும் இரவில் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விடுவான் ரிஷி. கூடவே சில பயங்கர மிருகங்களின் பொம்மைகளையும் கொண்டு வந்து அறையில் வைத்து விடுவான். அது இரவில் சில நேரம் சத்தம் குடுக்கும், மின்னவும் செய்யும்.
இருளும் குளிரும் திகிலூட்டினால் யாராக இருந்தாலும் படுக்கையை ஈரம் தான் செய்வர். அதைத் தான் கௌதமும் செய்தான். அது தவறு இல்லை. ஆனால் மனைவி கஷ்டப்படுகிறார் என்று கூறி அடிக்கும் கலியபெருமாளின் செயல் தவறு தானே. அவருக்கு வார்த்தைகளால் சொல்வது எல்லாம் பிடிக்காது. பிரம்பு இல்லை என்றால் பெல்ட்டு தான். தினமும் அடிவிழும் கௌதமிற்கு.
ஒரு இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்தும் அதிகாலையில் சிறிது நேரம் தூங்கியும் பார்த்தான் கௌதம். அப்போதும் ஈரமாவே இருந்தது படுக்கை. தான் அணிந்திருந்த ஆடை நனையாது. போர்வை மட்டும் நனையும் ரகசியம் தான் தெரியவில்லை அவனுக்கு. ஆனால் மூர்த்திக்குத் தெரிந்திருந்தது. அது ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு ரிஷியும் செய்யும் வேலை. ஏதோ கௌதம் கலியபெருமாளிடம் அடிவாங்குவதை பார்க்கையில் ரிஷிக்கு ஒரு சந்தோஷம்.
கௌதம் ரிஷியுடன் சண்டைக்கி சொல்ல, ரிஷியும் சண்டை போட என இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தரையில் உருள, கடைசியில் ரிஷியுடன் சண்டை போட்டதற்கும் சேர்த்து கலியபெருமாளிடம் அடி வாங்குவான் கௌதம்.
நம் உடன் பிறந்தவர்கள் செய்யும் சின்ன சின்னத் தவறுகளையும் பெற்றோரிடம் போட்டுக் கொடுத்து அடி வாங்கி குடுப்பது போல், கௌதம் செய்யும் எல்லாவற்றையும் கலியபெருமாளிடம் ஒப்பித்து விடுவான் ரிஷி. அவருக்குத் தான் கௌதம் எது செய்தாலும் தவறாகிற்றே. தினமும் அடி தா. திட்டு தான். மிதி தான்.
இப்படி எப்போதுமே கௌதமை சீண்டிக் கொண்டே தான் இருப்பான் ரிஷி. யாரும் அவனைச் செய்யாதேயெனச் சொல்லியதே இல்லை. ஏன் அப்படி செய்தாய் என்று மூர்த்தி கூடக் கேட்கவே இல்லை. மாறாக அவர் அலாரம் வைத்து எழுந்து கௌதமை பாத்ரூமிற்குஅழைத்துச் செல்வார். கௌதமை முயன்றவரை பாதுக்காத்தார் கலியபெருமாளிடமிருந்து.
இதன் மூலம் என்ன சொல்ல வர்றேன் அப்படின்னா. ரிஷிக்குப் பிடிக்காதத யார் செய்தாலும் அவர்களைக் கேலி செய்தும் வம்புக்கு இழுத்தும் அவர்களைச் சண்டைக்கி தூண்டி விடுவான். சண்டைக்கி அவன் முதலில் இறங்க மாட்டான். மற்றவர்களே இவனை வந்து வீண் சண்டைக்கு இழுப்பது போல் செய்து விடுவான். இந்தச் சின்ன வயசுல இவனுக்கு அவ்வளவு vengeance.
ஒரு வேளை அன்றே மூர்த்தி கன்னத்தில் ஒன்று வைத்திருந்தால், இன்று மனைவியிடம் அடி வாங்கிருக்க மாட்டானோ.!
இப்ப கௌதம் ரிஷிக்கி பிடிக்காததுபோல் என்ன செய்தான் என்றால், தன் தோழியைத் தன்னுடனேயே இருக்க செய்தான். கோவா வந்த மூன்று நாட்களிலும் ஹரிணி ரிஷியுடன் இருந்த நேரத்தைவிடக் கௌதமுடன் இருக்கும் நேரம் தான் அதிகம். மற்ற நாட்களில் ஓகே. பட் ஸ்பெஷலான ஒரு இடத்துக்குப் போகும்போது தன் மனைவி தன் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணினான் ரிஷி.
இந்தக் கௌதம் 'நா எம்பொண்டாட்டிய இல்லாம தான ஊர் சுத்துறேன். இதுல இதுக ரெண்டும் எங்கண்ணு முன்னாடி ஜோடி போட்டுச் சுத்துனா வெறுப்பாகும்ல. அதா என்னோட டார்லிங்க எம்பக்கத்துலேயே வச்சிருக்கேன்.' என்று ஹரிணியை ரிஷியின் அருகில் செல்லவே விடாமல் பார்த்துக் கொண்டான் காலையிலிருந்து. இதற்குத் தா revenge வாங்கியிருக்கிறான் ரிஷி. பாவம் அது அவனுக்கே return வந்துவிட்டது.
விதி!. இன்னைக்கி இவெ இவனோட பொண்டாட்டி கையால அடி வாங்கனும்னு எழுதியிருக்கு போல.
உள்ளே சென்ற ஹரிணியின் நிலை மோசமாக இருக்குமோ என்ற கவலையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் கௌதம். தங்கள் இருவருக்கும் இடையில் ஒன்றும் அறியாத தன் தோழியை ரிஷி காயப்படுத்தி விடுவானோ என்ற கவலை தான் அது. வெளியே வந்து ரிஷி அங்குக் கௌதமை பார்த்ததும் தன் தலையில் அடித்துக் கொண்டு வேறு பக்கம் சென்றான்.
செல்லும் அவனைப் பார்க்கையில் ஹரிணிக்கும் அவனுக்கும் பெரிய சண்டை வந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவன் வேகவேகமாக ஹரிணியை காண சென்றான். எவ்வித டேமேஜும் இல்லாமல் அவள் அமர்ந்திருப்பதை பார்த்தபின் தான் அவனுக்கு நிம்மதியாகவே இருந்தது. நல்ல ஃப்ரெண்டுப்பா நீ.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..