முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 32


 

அத்தியாயம்: 32


இரவு ஏழு மணிக்கு மேல் இருக்கும். கௌதம் அறையின் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் ஹரிணி கன்னத்தில் கை வைத்துச் சோகமாக, கப்பல் மூழ்கி விட்டது போலும். அவளுக்குக் கம்பெனி கொடுக்கவெனப் பிரகாஷும் கௌதமும் கன்னத்தில் கை வைத்து அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்தனர். 


"நீ இப்படி பண்ணிருக்க கூடாது டார்லிங்."


"ஆமா, பண்ணிருக்க கூடாது." ஹரிணி கவலையாக.


"நீ பண்ணது உலக மகா தப்பு." பிரகாஷ் 


"ம்... தப்பு தா!."


"அதுவும் எல்லார் முன்னாடியும் நீ செஞ்சிருக்கவே கூடாது." கௌதம் 


"கரெக்ட்டு, செஞ்சிருக்க கூடாது."


"இது எங்கண்ணனுக்கு எவ்ளோ பெரிய அவமானம்னு தெரியுமா.?" பிரகாஷ்


"ம், நல்லாவே தெரியும்." ஹரிணி.


"ஒரு பொம்பளப்பிள்ளைக்கி, அதுவும் ஒரு குழந்தையோட அம்மாக்கு இவ்ளோ கோபமும் ஆத்திரமும் இருக்க கூடாது டார்லிங்."


"ஆமா! இருக்க கூடாது தா."


"எங்கூர்ல எங்கண்ணே யாருன்னு தெரியுமா?. நாட்டாம படத்துல வர்ற சரத்குமார் மாறி. தன்னோட தம்பிக்காவே வாழ்றவரு அவரு. உன்னால அவருக்கு." பிரகாஷ் 


"கெட்ட பேரு வந்திடுச்சி."


"சின்ன வயசுல இருந்து நா அவன பாத்திருக்கேன். ஆனா இப்படியொரு சூழ்நிலைல நா பாத்ததே இல்ல." கௌதம்.


"ரொம்ப கவலையா இருக்கு."


"நீ பண்ண‌ காரியம் வெளில தெரிஞ்சா என்னாகும்னு உனக்குத் தெரியுமா?." கௌதம்.


"அதே நாட்டாம படத்துல வர்ற தாய்க்கிழவி மாறி என்ன ரூம்க்குள்ள அடச்சி வச்சிடுவாங்க பூவத்த." ஹரிணி.‌


"போய் அவெங்கிட்ட ஸாரி கேட்டுச் சமாதனப்படுத்து." கௌதம் 


"நானா!!. பயமா இருக்கே."எனச் சட்டென எழுந்து‌ நின்றாள் அவள்.


"யாரு உனக்கா?. ஹப்பா இது ஆஸ்கார் அவார்ட் வீன்னிங் பெர்ஃபாமெஸ்ஸால்ல இருக்கு.‌" பிரகாஷ், வாயில் அடித்த படியே எழுந்து நின்றான் அவனும்.‌


"நா உண்மையாத்தா சொல்றேன். எனக்குப் பாவா பக்கத்துல போய் ஸாரி கேக்குறதுக்கு பயமா இருக்கு. கோபமா திட்டுனா கூடப் பரவாயில்லை. காதுல வாங்கிக்க மாட்டேன். ஆனா‌ அடிச்சிட்டா.‌" ஹரிணி. 


"வாங்கிக்க. நீ அவன அடிச்சப்ப அவெ வாங்கிக் கிட்டான்ல. அப்ப அவெ அடிச்சாலும் நீ வாங்கிக்கனும். அவிச்சி வச்ச உருக்கிழங்கு மாறி வெள்ளையா இல்லன்னாலும். ரிஷியும் கலரு தா. அவனோட கன்னத்துல அணிலுக்கு முதுகுல கோடு போட்ட மாறிப் போட்டு வச்சிருக்க. உன்னோட கை ரேகைய அவனோட கன்னத்துல இருந்து எடுத்திடலாம். அந்த அளவுக்கு விழுந்த அடி பலமா இருந்துருக்கு." கௌதம்.


"புருஷன் அடிச்சி தா பொண்டாட்டி வாங்கிப்பான்னு நா கேள்வி பட்டிருக்கேன். நம்ம ஊருக்குள்ள சில பொண்டாட்டிகள பாத்தும் இருந்திருக்கேன்.‌ ஆனா இங்க பொண்டாட்டி கை நீட்டிப் புருஷன அடிச்சிட்டா. அதுவும் சுத்தி சுவரே இல்லாத வெட்ட வெளில, நாப்பது பேர் முன்னாடி. இது மட்டும் நம்ம வீட்டு கிழவிக்கும் என்னோட அம்மாக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்." பிரகாஷ். 


"டேய் நீ வேற சும்மா இருடா.‌ இது நமக்குள்ளையே இருக்கட்டும். சும்மாவே நா அவனுக்கு மரியாத குடுத்து பேசாம வாடாப் போடான்னு கூப்பிடாறேன்னு பூவத்தைக்கி எம்மேல கோபம் இருக்கு. இதுல நா அவன அடிச்சேன்னு தெரிஞ்சா பூவத்த மட்டுமில்ல அமைதியாவே இருக்குற கனகாத்தையும் சேந்து என்ன குத்தி கொன்னுடுவாங்க. ஆனாலும் எப்படி ஸாரி கேக்குறது.‌" என‌‌ அறைக்குச் செல்லமாட்டேன் என அடம்பிடித்தவளை, அவர்களின் அறைக்கு இழுத்து சென்றனர் இருவரும். அவளை மட்டும் உள்ளே ‌அனுப்பி விட்டு இவர்கள் தப்பித்துக் கொண்டனர்.‌ 


"டார்லிங், வாங்குன அடிக்குப் பதில் உன்ன திருப்பி அடிச்சான்னா சொல்லு. நா போய் டைவர்ஸ் பேப்பர ரெடி பண்றேன். ஏன்னா நமக்குக் குடுத்து தா பழக்கம். வாங்கி பழக்கம் இல்ல." எனக் கத்தியபடியே சென்றான் கௌதம். 


இதே போல் தான் தன் முதலிரவு அன்றும் தயங்கித் தயங்கி ரிஷியின் அறைக்குச் சென்றாள். ஆனால் அன்றுக்கும் இன்றுக்கும் நிறைய வித்தியாசம். அன்று உள்ளே என்ன நடந்தால் என்ன! ஒரு ஆணுடன் இருக்க போகிறோம் என்ற அசால்டு தானம் இருந்தது அவளுக்கு. ஆனால் இன்று என்ன நடக்கும் என்பதும் தெரியும். ரிஷியின் கோபமும் தெரியும். எனவே பயம் வந்து ஒட்டிக் கொண்டது. நடந்ததை மாத்த முடியாது. சரி சமாளிப்போம் என்று வராத துணிச்சலை முகத்தில் காட்டிக் கொண்டு அறைக்குள் வந்தாள் ஹரிணி.


உள்ளே தரன் கையில் சிகிரெட்டுடன் சோஃபாவில் அமர்ந்திருந்தான்.‌ பார்க்கக் கோபமாக இருப்பது போல் தான் தெரிந்தது.‌ ஆனாலும் அவன் இதுவரை ஒரு முழு சிகிரெட்டை கூடப் புகைத்து முடிக்கவில்லை. 


முகத்தை உரென வைத்திருந்தவன் தன்னை நோக்கித் தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்த ஹரிணியை தன் சாம்பல் நிற விழிகளால் உற்று பார்த்த படி இருந்தான். உற்று பார்க்கிறானா இல்லை முறைத்து பார்க்கிறானா. அவனுக்குத் தான் தெரியும் அது. கௌதம் கூறியது போல் அவளின் நான்கு விரல்களும் பதிந்ததற்கான அடையாளமாக அவனின் கன்னத்தில் மூன்று கோடுகள் இருந்தன. 


'தல! இந்த மொற அடி பலம்மோ!. '‌ எனப் பார்ப்பவர் கண்டிப்பாகக் கேட்பார்கள். ஏன்னா அடி அப்படி.‌


ஆமா‌ எதுக்கு ஹரிணி ரிஷியை அடிக்கனும். அடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது அவர்களுள். 


சின்ன ப்ளேஷ் பேக்.


நாளை மாலை ஊருக்குப் புறப்பட உள்ளனர். நாளைக் காலை ஜெனியின் திருமணத்தை நிறுத்தி. அவளைத் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் இன்று ஊர் சுற்ற கிளம்பி விட்டனர். முதலிலேயே கூறியது போல் கோவா சுற்றிப் பார்க்க மட்டுமல்ல.‌‌ சாகங்களை விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம். 


அலைசறுக்கு. ஃபன்ஜி ஜம்பிங். தனி நபருக்கான வாட்டர் பைக் சவாரி, ஸ்கூபா டைவிங், பாராசூட் சவாரி, படகு பாராசூட் சவாரியென வீர சாகசம் செய்ய நினைப்பவர்களுக்கு அது சிறந்த இடம். மனதை லேசாக வைத்துக் கொண்டு பர்ஸ்ஸை கனமாக வைத்திருந்தால் அனைத்து இடங்களுக்கும் சென்று அனுபவிக்கலாம். 


ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்தனர் ஹரிணியும் அவளின் குழு உறுப்பினர்களும். உடன் கௌதம், பிரகாஷ், ரிஷியும் இருந்தனர். முதலில் ஆரம்பித்தது என்னவோ ரிஷி தான். ஃபன்ஜி ஜம்பிங் என்று சொல்லப்படும் இடத்திற்கு சென்றபோது கௌதமை கேலி செய்யத் தொடங்கினான். 


நீங்கள் அனைவரும் குஷி படத்தில் வரும் மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் என்ற பாடலைப் பார்த்திருப்பீர்கள். அதில் நடிகர் விஜய் காலில் கயிறுக் கட்டி உயரமான பாலத்திலிருந்து குதிப்பார். அதற்குப் பேர் தா ஃபன்ஜி ஜம்பிங். 


ரிஷியும் ஹரிணியும் குதித்தனர். பிரகாஷ் பார்வையாளராக மட்டுமே இருக்க விருப்புகிறேன் என்றதால் அவனைக் கட்டாயப்படுத்த வில்லை. ஆனால் இந்தக் கௌதம் இருக்கிறானே...


"இதென்னடா ஹைட்டு! அண்ணே இமய மல‌ உயரத்துல இருந்து குதிச்சவே. சுத்தி பனி. கீழ ஜில்லுன்னு ஆறு. சலசலன்னு சத்தம் குடுத்துட்டே ஓடும். 83m ல இருந்து குதிச்சவன பிஸ்கோத்து 25m ல குதிக்க சொல்ற. உன்ன மாறிச் சின்னப் பையனுக்கு ஏத்த இடம் இது தா. நா நல்லா வளந்த பெரிய பையன் டா. அதுனால நீயே குதி. நமக்கு இந்தச் சின்னப் பிள்ளைங்க சமாச்சாரமே ஆகாது." எனப் பில்டப்புடன் பேச. 


"நீ ஏற்கனவே போயிருக்கியாண்ணே!. இதுல குதிச்சி உனக்குப் பழக்கமாண்ணே!. அப்ப உனக்குப் பயங்கிடையாதாண்ணே.!" பிரகாஷ் கௌதம் கூறியதை உண்மையென நம்பி தன் அண்ணனைப் பெருமையாகப் பேச, 


"அண்ணே தைரியத்தோட மறு அம்சம் டா. டிஸ்னரில தைரியம்னா என்னானு பாரு. அதுல அண்ணே பேரையும் சேத்து போட்டிருப்பாங்க." என்க, ரிஷி சும்மா இருப்பானா என்ன?


"இப்பல்லாம் யாரும் டிஸ்னரி யூஸ் பண்றது இல்ல. எல்லாரும் கூகுள்ல தா தேடுறானுங்க. உனக்குப் பயம் போகனும்னா.‌ உன்னோட தைரியசாலி அண்ணன‌ குதிச்சி காட்ட சொல்லிட்டு, பின்னாடியே நீயும் குதி. உங்கண்ணே காப்பாத்துவான்." எனப் பிரகாஷிடம் தரன் சொல்ல,


"அண்ணே குதிண்ணே. நீ தலகீழா குதிச்சி நல்ல படியா மேல வந்தேன்னா தம்பியும் குதிக்கிறேன். ம்... அண்ணே குதிண்ணே." என அணத்த ஆரம்பித்தான் பிரகாஷ் கௌதமை. 


'விட்டா இவனுங்களே தள்ளி விட்டுடுவாய்ங்க போல இருக்கே' என நினைத்தவன், 'நாள் சரியில்லை, நேரம் சரியில்லை, ராகுவும் கேதுவும் டுயட் படுற நேரம் இது' எனக் கௌதம் ஏதேதோ சொல்லிச் சமாளித்து தப்பிக்க வேண்டியதாய் இருந்தது. 


கௌதமிற்கு உயரம் என்றால் பயம் இல்லை தான். சுவர் ஏறுவது மரம் ஏறுவது எல்லாம் செய்வான். ஆனால் பிடிக்க எதுவும் இல்லாமல் அந்தரத்தில் நடப்பது பயம் தான்‌. அதாவது சுவர் ஏறிக் குதிப்போம். ஆனால் சுவரில் பூனைபோல் நடக்க மாட்டோம் என்று சொல்லும் சங்கம். 


அவனின் பயத்தை அறிந்த தரனால் அவனின் வீரப்பு பேச்சைக் கேட்க முடியாமல் வம்பிற்கு இழுத்தான். அங்கு மட்டுமல்ல பாராசூட்டில் பயணம் செய்ய என ஓர் இடத்திற்கு சென்ற போதும், பிரகாஷிடம் கௌதமை பார்த்துக் கொண்டே நக்கலாகப் பேசிச் சிரிப்பது, கௌதமின் காது படவே கடுப்பேற்றுவது போல் உசுப்பேற்றிக் கொண்டே வந்தான் ரிஷி. 


"இதுல தனியாலாம் போக வேண்டியது இல்ல. நம்ம கூட ஆள் வருவாங்க. நம்மூர்ல தலைல சொம தூக்கிட்டு போற பொண்ணுங்க பிள்ளைங்கள இடுப்புல தூக்க முடியாம, கழுத்துல சேலைய கட்டி முதுகுல தூக்கிட்டு போவாங்கல்ல அந்த மாறிப் பாராசூட் ஓட்டத் தெரிஞ்சவெ உன்ன அவனோட சேத்து கயத்துல கட்டிக்கிட்டு பின்னாடி இருப்பான். பத்திரமா போய்டு வரலாம். உங்கண்ணே மாறிப் பயப்படாம போ. சில விசயங்கள கிடைக்கும் போதே அனுபவிச்சிக்கனும். சாக்கு போக்கு சொல்லிட்டு வெட்டிப் பந்தா காட்டக் கூடாது. உங்கொண்ணே மாறி." என ரிஷி பிரகாஷை ஏற வைக்கக் கௌதமை கேலியாகப் பேசினான்.


உடனே பொங்கி ஏழ வேண்டும் என்று தான் கௌதமும் நினைத்தான். ஆனாலும் முடியவில்லை. ஹரிணி தான் ரிஷியிடம், "என்ன ரொம்ப ஓவரா பேசுற பாவா நீ. நானும் காலைல இருந்து பாக்குறேன். அவனுக்குப் பிடிக்கலன்னா பிடிக்கல தா. யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. இதுல பறந்து காட்டுனாத்தா வீரமா என்ன?. இன்னொரு மொற என்னோட ஃப்ரெண்ட்டா கேலி பண்ணாதா பாவா. நீ வா கௌதம் போலாம்." என ரிஷியை மிரட்டி விட்டுக் கௌதமை அழைத்துச் சென்றாள் ஹரிணி. 


"கரெக்ட்டா சொன்ன டார்லிங். கடுப்பேத்துறானுங்க காட்டாண்ஸ். நாம போய் ஃபீஸ் ஃபிரை சாப்பிடலாம்." என அவளின் தோளில் கைப்போட்டுச் சென்றவன் திரும்பி ரிஷிக்குத் தன் ஆள்காட்டி விரலை மடக்கி அழகு காட்டி விட்டுச் சென்றான். செல்லும் அவர்களைப் பார்த்தவனின் உதடுகள் புன்னகையால் விரிந்தன. 


அடுத்து ஒரு படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள் செல்ல, அங்கும் பாராசூட் இருந்தது. இதில் யாரின் உதவியுமின்றி யார் வேண்டுமானாலும் பறக்கலாம். சிறு பிள்ளைகள் பலூனை நூலில் கட்டி தங்களுடன் இழுத்து ‌சொல்லுமே அதுபோல் பாராசூட்டில் மனிதர்களை ஏற்றி அதைப் படகுடன் கட்டி சிறிது தூரம் இழுத்து செல்வர். பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பறப்பர். 


தரன் ஒன்றும் வாய் திறக்கவில்லை. அவனின் மனைவி தான் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறாளே பயந்து விட்டான் போலும். ஆனால் இம்முறை கௌதமே முன் வந்தான். 'நாங்களும் தைரியத்த தயிர் மாறித் திரட்டி வச்சிருக்கோம்.' என்று காட்ட, 


"கௌதம், அவன் கிண்டல் பண்றான்னுலாம் நீ‌ ஏற வேண்டாம். விட்டுடு." என ஹரிணி சொல்ல. நான் பறந்தே தீருவேன் என உறுதியாக இருந்தான்.


'ஏப்பா உனக்கு இந்த விபரீத எண்ணம்.' 


'ஒன்னுமில்ல அந்தப் பாராசூட்ல இருந்து தவறி கீழ விழுந்தா, மல இடுக்குல காளான் மாறி நட்டுக்கிட்டு நிக்க வேண்டி வரும். ஆனா இதுல இருந்து விழுந்தா கீழ தண்ணி தான. எனக்கு நீச்சல் தெரியும் ல. ' எனத் திட்டமிட்டு தன் திறமையைக் காட்ட தயாரானான். 


அது இருவர் செல்லும் வசதி கொண்டது. ஒன்றில் கௌதமும் மற்றொன்றில் ஹரிணியும் ஏற இருந்தனர். ஆனால் ரிஷி, தான் செல்வதாகச் சொல்ல, ஹரிணி இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு ரிஷியையே‌ ஏறச் சொன்னாள். அவளுக்கு இருவரும் ஒரு சேர இருப்பதை பாக்க ஆசை வந்த விட்டது. அதனால் தான் ரிஷியை உடன் அனுப்பினாள். 


முதலில் கடல் நீரில் சிறிது தூரம் இழுத்து சொல்லும் அதுபின் மெல்ல மெல்ல உயரே பறக்கத் தொடங்கும். எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கௌதம் பறக்க‌ ஆரம்பித்ததும் அசௌகரியமாக உணர்ந்தான். அஜெஸ்ட் செய்கிறேன் என சோஃப்டிக்காக மாட்டியிருந்த பெல்லை நோண்ட,


"ஹரி என்ன பண்ற?. எல்லாம் சரியாகத் தான் மாட்டிருக்கு. எதையும் நோண்டாதா." எனத் தரன் எச்சரிக்க,


'யோவ் போய்யா. காலுக்குக் கீழ தரையே இல்ல. அந்தரத்துல பட்டம் மாறி என்ன பறக்க விட்டு, கீழ நின்னு ஒரு கும்பலே கைக்காட்டி வேடிக்க பாக்குது. இதுல இவெ வேற. சும்மா இருய்யா.'‌ என மனதிற்குள் திட்டினானே தவிர வெளியே ரிஷி பேசியது கேட்காதது போல் இங்கும் அங்கும் நெளிந்து கொண்டே இருந்தான். 


"ஹரி! ஆடாதா. நீ கீழ விழ வாய்ப்பிருக்கு. அமைதியா இரு. இன்னும் கொஞ்ச நேரம் தா."


ம்ஹீம்...‌ கௌதம் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் மாட்டியிருந்த பெல்ட் அவிழ கௌதம் நீரில் விழுந்தான். அப்படியே விழுந்திருந்தால் பிரச்சினை இல்லை நீந்திச் சென்றிருப்பான். அவிழ்ந்த பெல்ட் அவனின் கால்களைச் சுற்றி இருந்தது. ஆதலால் நீந்துவது சிரமமாகிப் போனது.


நீரில் மூழ்கியவன் மேல வர முடியாது தவிக்க, நொடியும் தாமதிக்காது ரிஷியும் நீரில் பிரவேசித்தான். நீந்த முடியாது தத்தளித்த கௌதமை இழுத்துக் கொண்டு படகுக்கு விரைந்தான். 


சோர்வுடன் படகேறியவனை ஹரிணி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். "ஒன்னுமில்லைல கௌதம். எங்களையும் அடி பட்டிருக்கா. காட்டு." எனக் கைக்கால்களை ஆராய, அனைவரும் கௌதமை சுற்றி நின்று கொண்டனர். 


'இங்க ஒருத்தேன் மழைல நனஞ்ச ஆடு மாறி வெடவெடத்து நிக்கிறானே!. அவன்ட்ட நாலு வார்த்த, ஏ! நீ ஓகே தானான்னு ரெண்டு வார்த்த கேக்கலன்னா கூடப் பரவாயில்லை. ஹரிணி திரும்பிக் கூடப் பாக்கலன்னா பாருங்களே. இத்தனைக்கு இவெ தான் அவளோட புருஷன். உனக்கு மதிப்பே இல்ல ப்பா ரிஷி தரா. ' 


"இந்தாண்ணே துண்டு." எனப் பிரகாஷ் வந்தான் அக்கறையுடன் தன் அண்ணனின் அருகில். 


"தண்ணீல தான விழிந்தான். எதோ தணல்ல விழுந்து எந்திரிச்சவே மாறி எதுக்கு இத்தன செண்டிமெண்ட் ஸீன்." எனச் சலித்துக் கொண்டே தலை துவட்டினான் ரிஷி. 


பேசியவன் மெதுவாகத் தன் கருத்தைக் கூறியிருக்கலாம். சற்று சத்தமாகப் பேசியதால் அது ஹரிணியின் காதுகளில் வந்து சேர்ந்தன. திரும்பித் தரனை கோபமாகப் பார்த்தவள், வேகமாக அவனின் அருகில் வந்தாள். வந்தவள் டயலாக்லாம் பேசி டயம் வேஸ்ட் செய்யாமல் ஸ்டெய்ட்டா ஆக்ஷனில் இறங்கி விட்டாள். அதான் கன்னத்தில் சத்து என்று ஒரு அடி. ஒரே ஒரு அடி. 


இதை ரிஷி எதிர்பார்க்க வில்லை. அவள் வந்த வேகத்தைப் பார்த்துத் திட்டுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் இதைச் சுத்தமாக எதிர்பார்க்க வில்லை. எதிர்பார்த்திருந்தால் தடுத்திடுப்பான். 


ஹீம்... இன்னைக்கி இவனுக்கு இவெ பொண்டாட்டி கையால அடி வாங்கனும்னு எழுதி இருக்கு. பாவம். 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...