முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 31


 

அத்தியாயம்: 31



"என்ன டா நடந்துச்சி?" ஹரிணி. கௌதமின் மீது தவறு இருக்காது என்று தெரியும். ஆதலால் எவ்வித பதட்டமுமின்றி கூலாக விசாரித்தாள். 


"கொஞ்சம் கூடப் பொறுமையே கிடையாது கௌதம் உனக்கு. ச்ச... டேய் அவெந்தா அவசரக் குடுக்கையாட்டம் சண்ட போட்டான். உனக்கு எப்படிடா காயம் பட்டுச்சி." எனக் கௌதமின் காயத்தை ஆராய்ந்தபடி பிரகாஷை கேட்க. 


"அண்ணே ரெண்டு பேர் கூடச் சண்ட போட்டுட்டு இருந்தாப்ல. தம்பி எப்படி சும்மா இருக்குறது. அதா நானும் ஹீரோ தான்னு உள்ள புகுந்து மூணு பேர அடிச்சேன். அதுல ஒருத்தேன் அந்த மல மாடு தா, மண்ட எப்டி வீங்கிருக்குன்னு பாத்தியா.!" எனப் பிரகாஷ் தன் வீரத்தை சொல்ல… கௌதமும் தன் பங்கிற்கு எத்தனை பேரை அடித்தேன் என்று சொல்ல,


"ஸ்டாப் பிட். ஏன்டா அவன அடிச்ச.?" எனக் கேட்க வேண்டிய கேள்வியைத் தாமதமாகக் கேட்டாள்.


"டார்லிங், நா ஒன்னுமே பண்ணல. அவெந்தா நம்ம மீரா கிட்ட வம்பு பண்ணான். நம்ம மீராக்கு நாம தான உதவிக் கரம் நீட்டனும். அதா நீட்டுனேன்." 


"கொஞ்சம் நீளமா நீட்டீட்டாப்ல. அது ஸாரோட மூக்குல பட்டுடுச்சி. அது எங்க தப்பில்ல." பிரகாஷ்.


"மூக்கு நீளமா வளத்து வச்ச அந்தாளோட தப்பு. போய் மூக்கு ஆப்ரேஷன் பண்ணி மாத்திக்க சொல்லு. டோல் கேட் மாறிப் பாதைய மறைச்சிட்டு இருக்கு." கௌதம் கேலியாகச் சொல்ல, அதைக் கேட்ட ஹரிணிக்கும் ரிஷிக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் சமாளித்து, 'நீ திட்டுவது போல் திட்டு நா வருத்தம் படுவது போல் வருத்தப்படுகிறேன்' என்பது போன்ற ஒரு நாடகத்தை ஹரிணியும் கௌதமும் சேர்ந்து நடத்த, கடுப்பான சுனில்,


"கால் தா போலிஸ். மேனேஜர் இப்ப போலிஸ் இங்க வந்தே ஆகனும். இவங்னுங்க ரெண்டு பேரையும் கண்டிப்பா ஜெயில்ல தள்ளனும். கால் தா போலிஸ்." எனத் தன் ஃபோனில் காவலர்களை அழைக்க,  


"இப்ப போலிஸ் வர்றதுனால என்ன ஆகிடப்போது. கூட்டீட்டு போவாங்க. அப்றம், கொஞ்ச நேரத்துலையே விட்டுப் போறாங்க. அதுக்கு எதுக்கு போலிஸ்ஸு. அவங்க வந்தாலும் நீ வாங்குன அடி இல்லனு ஆகிடப் போதா என்ன." என நக்கலாகப் பேசிய படி அவனின் முன்னால் அமர்ந்தான் ரிஷி. 


"அப்ப எல்லார் முன்னாடியும் இவெ எங்கிட்ட மன்னிப்பு கேக்கனும். அதுவும் நா அடி வாங்கும்போது யார் யார் இருந்தாங்களோ அத்தன பேர் முன்னாடியும் கேக்கனும். இல்லன்னா வெளில வர முடியாதபடி கம்ப்ளைண்ட் குடுப்பேன். நீ என்ன செஞ்சாலும் உந்தம்பிங்கள வெளியவே ‌கொண்டு வரவே முடியாது." எனத் திமிராகக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு சொல்ல, ரிஷிக்குச் சற்று கடுப்பானது.


‘தன் தம்பிகளை இவன் மன்னிக்கப் போகிறானாம்.’ என்ற ஏளனம் கலந்த சிரிப்பு அவனின் இதழ்களில் படர்ந்தது. 


"என்னவாம் அவனுக்கு! ரொம்ப குதிக்கிறான்." கௌதம்


"ஸாரி கேக்கனுமாம்." பிரகாஷ் 


"கேட்டா போச்சி. மன்னிப்பு கேக்குறவெ மனுஷென்னு கமல்ஹாசன் சொல்லிருக்காப்ல. வா டா தம்பி போவோம். ஸாரி ஸார் உங்க மூஞ்சிலையே பெருசா இருந்ததுனால தா மூக்குல குத்திட்டேன். அதுக்கு பதிலா மூளையே இல்லாத உங்க மண்டைய ரெண்டா பிளந்திருக்கனும், அடுத்த மொற வாய்ப்பு கிடைக்கும்போது தப்பு பண்ணாம கரெக்ட்டா மண்ட ஓட்ட உடைச்சிடுறேன். இப்ப எங்கள மன்னிச்சிடுங்கன்னு கேட்டுட்டு வருவோம்." எனக் கௌதம் தயாராகி விட்டான். ஆனால் அவனைத் தடுத்தாள் ஹரிணி. விளையாட்டிற்கு கூடக் கௌதம் மன்னிப்பு கேட்பதை அவள் விரும்பவில்லை. 


மன்னிப்பு கேட்பதில் தவறில்லை‌ தான். ஆனால் கேட்கப்பட வேண்டியவரிடம் தான் கேட்க வேண்டும். இப்போது கௌதம் மன்னிப்பு கேட்டால் அவன் செய்தது தவறென்றும், சுனில் பேசியது சரி என்றும் ஆகி விடும். முதலாவதில் பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டாவது. நடக்கக் கூடாத ஒன்று. அதுவும் சுனிலிடம், ம்ஹீம்... 


"கொஞ்ச நேரம் சும்மா இரு கௌதம். ஷூ..." ஹரிணி.


"ஆமாண்ணே. அவசரப்படாம இருண்ணே. தரன் அண்ணே எதுவோ பேசுறாப்ல. கேட்போம்." 


"இவெ எப்பத்துல இருந்து கருத்து கந்தசாமி யா அவதாரம் எடுத்தான்." எனக் கேலி செய்தவன் சுனிலும் ரிஷியும் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.


"அப்ப ஸாரி கேட்டா மட்டும் போதும். ம்..." எனப் புருவம் உயர்த்தி ரிஷி கேட்க,


"எஸ், என்ன அவமானப்படுத்துன அவிங்கள எப்படி சும்மா விடுறது. ஒன்னு எங்கிட்ட மன்னிப்பு கேக்கனும். அத என்னோட ஆளுங்க வீடியோ எடுப்பாங்க. ஃபேஸ் புக், யூட்யூப், டுவிட்டர்னு எல்லாத்துலையும் அந்த வீடியோவ போட்டு அவன அசிங்கபடுத்த போறேன். இல்லன்னா ஜெயில்ல நிச்சயம் கம்பி எண்ண வேண்டி வரும்." எனச் சுனில் சொல்ல ரிஷி சிரித்தான். அதுவும் சத்தமாக. எதோ ஜோக் கேட்டது போல் கைகளைத் தட்டி வேறு சிரித்தான்.‌


"நா உன்ன வில்லன் ரேஜ்ஜுக்கு இமாஜின் பண்ணேன். இப்ப தா தெரியுது நீ வேஸ்ட்டு பீஸ்ஸுன்னு. ஹாஹ்ஹா." எனச் சொல்லிச் சிரிக்க, சுனில் அவனை விசித்திரமான பார்த்தான். 


"ரெண்டு பேர்ல ஒருத்தேன் வக்கில். இன்னொருத்தேன் ஹேக்கர். நீ வீடியோ எடுத்தாலும் சரி. கேஸ் போட்டாலும் சரி. ஒன்னுமே இல்லாம பண்ணிட முடியும். 


உன்னோட இடத்துல நா இருந்திருந்தேன்னா, இந்தச் சந்தர்ப்பத்த யூஸ் பண்ணி எனக்கு வேணுங்கிறத ப்ளாக் மெயில் பண்ணி வாங்கிப்பேன்.‌ ஆனா உனக்குத் தா மூளையே இல்லையே. எப்படி புத்திசாலித்தனமான யோசிப்ப." என நக்கலாகப் பேச,


"என்ன சொல்ல வர்ற?." 


"ம்ச்... கௌதம் ஹரிணியோட பெஸ்ட்டு ஃப்ரண்டு. இப்ப அவெ‌ உன்ன அடிச்சிருக்கான். உனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்துக்கு compensateடா நீ டீல் பேசலாமே. நீ தா ஃபேஷன் இன்டெஸ்ட்டீல ஒன் ஆஃப் தா இம்பாட்டெண்ட் மெம்பர். அத விட்டுட்டு நீ என்னன்னா சின்னப்பிள்ளங்க மாறிப் பண்ணிட்டு இருக்க." என்க சுனில் யோசித்தான். 


அவனுக்குத் தெரியும் கௌதமிற்காக ஹரிணி என்ன வேண்டுமானும் செய்வாள் என்று. அதனால் இதைப் பயன்படுத்தி அவளின் ஃபேஷன் ஹவுஸ்ஸை தன் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்வது மற்றும் தன்னிடம் வம்பு செய்யும் கௌதமையும் அவமதிப்பது என முடிவு செய்தான். கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசைய்யா என்பது போல் மலர்ந்தது அவனின் முகம். 


"ஆனா ஒரே ஒருக்க அடி வாங்குனதுக்கு பல லட்சம் மதிப்புள்ள கம்பெனிய எழுதி வாங்குறது, நியாயமா என்ன." எனச் சந்தேகமாக ரிஷி கேட்க,


'உனக்கு என்ன தாய்யா வேணும்?. என்ன தா சொல்ல வர்ற?. அவெ சொன்னத செஞ்சிட்டு ஊரு பக்கமே போய்டலாம்னு பாத்தா. இவெ டார்லிங்க வேலையில்லா பட்டதாரியா ஆக்காப்போறான் போலயே.' கௌதமின் மைண்ட் வாய்ஸ். 


"இப்ப இத இந்த நேரத்துலையே முடிச்சிக்கலாம். கேசினோ ராயல்ஸ்க்கு போய்.‌" என அழைத்தான் அவன். ஹரிணியின் ஃபேஷன் ஹவுஸ்ஸௌ பணையமாக வைத்து ஆட நிர்பந்தித்தான். 


அது ஒரு சூதாட்ட விடுதி. நதியில் மிதந்து கொண்டு சூதாட வசதிகள் செய்யப்பட்ட ஒரு படகு. 


"டார்லிங், உன்னோட பாவா உன்ன பாவமா மாத்திட்டு இருக்கான். உன்னோட ஹவுஸ்ஸ பணயமா வச்சி சூடாப்போறானாமா." கௌதம் சொல்ல, ஹரிணி வேகவேகமாக ரிஷியின் அருகில் சென்றாள். 


"எனக்கு இதுல விருப்பமில்ல." ஹரிணி என்றாள் காட்டமாக. 


"ஏ, உம்புருஷெ தோத்துடுவான்னு பயமா." எனச் சுனில் சொல்லிச் சிரிக்க, அவனுக்கு ஒரு அலட்சிய பார்வையை தந்தவள் ரிஷியிடம்.


"பாவா, ஒருத்தனோட திறமைய வச்சி போட்டுப் போட்டா தப்பில்ல. இருக்கா இல்லையான்னே தெரியாத அதிஷ்டத்த வச்சி பந்தயம் கட்டுறது தப்பு. எனக்கு அது சுத்தமா பிடிக்கல."


"அப்ப உன்னோட ஹவுஸ்ஸ பணயம் வைக்கிறதுல உனக்கு ஆட்சேபன இல்லயா?." எனச் சுனில் கேட்டான். அவனுக்குத் தெரியும் ரோஸ் குழுமம் திவாலான போதும் போராடி தன் ஃபேஷன் ஹவுஸை காத்தவள், இப்போது அதைப் பணயமாக வைக்கிறேன் என்றது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. 


ஆட்சேபனை இல்லை என்பது போல் தலையசைத்தாள் மிடுக்காக. ரிஷி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளின் முகத்தில் தெரிந்தது. அது தரனை கர்வம் கொள்ள செய்தது.  


"அப்ப ரேஸ் வச்சிப்போம். இப்பவே உன்னோட கார எடுத்துட்டு வா. கிரவுண்ட்ல மீட் பண்ணலாம். ஹாங்… இதுல ஜெயிக்கனும்னாலும் உனக்கு அதிஷ்டத்தோட தொண வேணும். ஹாஹ்ஹா." எனப் பெருங்குரலில் சிரித்துச் சென்றான் சுனில். 


சுனில் விடாமல் மும்பையில் நடக்கும் சில கார் பந்தயங்களில் கலந்து கொள்பவன். சில நேரம் வெற்றி.‌ சில நேரம் தோல்வியைக் கண்டிருந்தாலும். ரிஷிக்குத் தான் கார் பந்தையத்தை பற்றி ஒன்றும் தெரியாது எனத் தரனை குறைத்து மதிப்பிட்டதால் அழைக்கிறான். பாவம் ஏமாந்து போகப் போகிறான். 


"என்ன டார்லிங், நீ கோபமா போனத பாத்தா, கைக்குக் கிடைக்கிறத எல்லாம் தூக்கிப் போட்டு அவனுங்கள கதிகலங்க வப்பன்னு நினச்சேன். ஆனா நீ என்னடான்னா கைய கட்டிக்கிட்டு எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காதுன்னு செல்ஃப் இன்ட்ரோ குடுத்துட்டு இருக்க. என்ன ஆச்சு உனக்கு. படம் வரையுறத தவிர உனக்கு ஒன்னுமே தெரியாதே. இந்த வேலயையும் விட்டுட்டா வீட்டுல உக்காந்து பொறுமையா சோறாக்க வருமா உனக்கு." எனக் கிண்டல் செய்ய,


"அதுக்கு அவசியமே இல்ல. எனக்கும் சேத்து பாவாவே ஆக்கிப் போடுவான். தோத்தாலும் ஜெயிச்சாலும் பாவா சமச்சி தா நா சாப்பிடப்போறேன்." என அசால்டாகச் சொல்ல, பிரகாஷ் ஒரு துண்டை எடுத்து வந்து கௌதமின் தலையில் மூடினான்.



"எதுக்கு டா இது?."


"உங்காரு கோயிந்தாண்ணே. அந்தாளோட கார் மாடல் பாத்துட்டு தா வர்றேன். மணிக்கி 350 கிமீ வேகத்துல போகும். கார் பந்தயத்துக்கு ஏத்த மாறி இருக்கு. ஆனா உங்காரு காய்லாங்கடைக்கி போடுற மாறியே இருக்குண்ணே. அதாண்ணே உன்னோட நிலமைய தம்பி சிம்பாலிக்கா சொன்னேன்." 


"டார்லிங்! முன்பகுதி உனக்கு. பின் பகுதி எனக்கு. இப்பவே நாம ரிசர்வ் பண்ணி முக்காடு போட்டுப்போம். ஏன்னா உனக்கு எனக்கும் பல லட்சம் நட்டம் ஆகப் போதுல்ல. ஆண்டியான தலைல துண்டு போட்டுக்கனும். டேய் தம்பி வந்து நடு பகுதிய நீ எடுத்துக்க."


"நா எதுக்கு வந்து நிக்கனும்."


"என்ன டா இது கேள்வி. உன்னோட ஆசை காதலி கல்யாண பண்ணிக்க போறது யாருன்னு உனக்குத் தெரியுமா. இப்ப போனானே. டோல்கேட் மூக்கேன். அவனோட தம்பியத்தா."எனப் பிரகாஷிற்கு ஷாக் குடுக்க. 


"எது தம்பியா.?"என்றான் நம்பாமல். 


"தம்பின்னா சொந்த தம்பின்னு சொல்லிட முடியாது. ஒரு வகையில. தூரத்து. மொறையில. டேய் வந்து நீயும் எங்க துக்கத்துல பக்ககெடுத்துக்கல நாளான்னைக்கி உங்கூட வந்து பொண்ண தூக்க மாட்டோம். இப்பவே கோயிச்சிட்டு ஊருக்குப் போய்டுவோம் பாத்துக்க. நீ தனியாத்தா போனும். மொத பந்தில உக்காந்து மூக்கு முட்டச் சாப்டுடுட்டு. நூறு வர்ஷம் மாப்பிள்ளையும் பொண்ணும் தான்னு பாட்டு பாடிட்டு வீட்டு பக்கம் வந்து சேரு. " 


"இப்ப என்ன எந்தலைலையும் நீங்கத் துண்ட போடனும் அதான. போட்டுட்டு போங்க." என்றதும் கௌதம் மூவரின் தலையிலும் துண்டு போட, ஹரிணி அதைத் தட்டி விட்டு விட்டு அவர்களை முறைத்தபடியே சென்றாள் தரனை காண.


கோவா சுற்றுல்லா தளம் மட்டுமல்ல சாகச விளையாட்டுக்களுக்கும் ஏற்ற இடமும் கூட. கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு நீளச் சாலையைத் தேர்ந்தெடுத்து அதில் இருவரும் காருடன் தயாராக இருக்கின்றனர். 


உர்... உர்... எனக் காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தியபடி இருந்தவர்களுக்கு நடுவில் ஒரு பெண் வந்து கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாள். கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து முதலில் யார் வருகிறாரோ அவருக்கு வெற்றி.


‘பில்டப் லாம் வேணாம். எந்தப் போட்டியா இருந்தாலும் ஹீரோ வின் பண்றது தான வழக்கம். சோ. ரிஷி தரனே வெற்றி பெற்றான். ‘


வெள்ளைக் கோட்ட கடந்த தன் காரின் நிலை எப்படி உள்ளது என்பதை பார்த்தபின் தான் கௌதமிற்கு உயிரே வந்தது. பாதுகாக்கிறானாம். தன் சம்பாத்தியம் அல்லவா. காரை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அவனே ஓட்டி வந்து பார்க்கிங்கில் பத்திரமாக நிறுத்தி வைத்தான். 


இரவில் படுக்கையில் உழன்றவளுக்கு தூக்கம் தான் வரவில்லை. காரணம் போட்டி என்றொன்று நிகழ்தால் வெற்றி பெற்றவருக்கு அதில் ஆதாயம் இருக்க வேண்டும் அல்லவா. தரனுக்கு இதில் என்ன ஆதாயம் இருக்கிறது என்ற யோசனையில் தான் உறக்கம் வராமல் தவிக்கிறாள். 


"கிட்... தூங்கலையா.?" என அருகில் படுத்திருந்தவன் கேட்க, வேகமாகச் சென்று அவனின் மார்பில் புதைந்து கொண்டாள். 


"பாவா, அவெ என்னோட ஃபேஷன் ஹவுஸ்ஸ கேட்டான். பதிலுக்கு நீ என்ன பாவா கேட்ட." எனக் கொஞ்சும் மொழி பேசிய மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன். 


"கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா?."


அவள் ஆம் எனத் தலையசைத்தாள். 


"காலைல சொல்றேனே." என்று இமைகளை மூடிக் கொள்ள, அவள் விலகிக் கட்டிலின் நுனிக்கு சென்று படுத்துக் கொண்டாள், கோபமாக. 


"எப்ப எது கேட்டாலும், பதில் மட்டும் உடனே வர்றது இல்ல. காலைல, நாளைக்கி, அடுத்த மாசம்ன்னு டயம் கேக்க வேண்டியது. கடிகாரத்த முழுங்குனாவே." என வாய்விட்டுப் புலம்பியவளை பின்னாலிருந்து அணைத்தவன் அவளின் காது மடலில் தன் இதழுரச,


"பீச்ல‌ வச்சி என்னோட கிட் ஒன்னு கேட்டா. அத நா நிறைவேத்திட்டேன்." என்று சொல்லிக் கன்னத்தில் முத்தமிட,


"என்ன கேட்டேன்." என்றவளுக்கு நினைவு வரவில்லை. அது அந்த நேர கோபத்தில் பேசியதால் நினைவில் இல்லை அவளுக்கு. 


"ம்ச்.‌.. மறந்து போச்சு பாவா. நீயே சொல்லேன்."


"அந்தச் சுனில்ல பண்ணனும். எதாவது பண்ணனும். நாம தான் பண்ணோம்னு அவனுக்குத் தெரியனும். பட் அத வெளில சொல்லவும் முடியாம. நம்ம முகத்த பாக்கவும் முடியாம. அவதிப்படனும்னு நீ சொன்னேல. அதா அவனோட கழுத்துல கயற மாட்டி விட்டு ஸ்டூல் மேல நிக்க வச்சிருக்கேன். உங்கிட்ட நல்ல படியா நடந்துக்கிட்டா சேஃப். இல்லன்னா உதச்சி தள்ளி விட்டுட வேண்டியது தான்.‌"


"புரியல. அவெ வெளில சொல்ல முடியாத அளவுக்கு என்ன பண்ண பாவா நீ."


"ம்... ஒரு ஒருமணிநேரம் அவெங்கிட்ட அப்பாய்ண்மெண்ட்ட வாங்கிருக்கேன். "


"எதுக்கு?."


"பத்து ஃபோட்டோ எடுக்கனும். அதுக்கு போஸ் குடுக்க."


"ச்ச... அவன ஃபோட்டோ எடுத்து என்ன யூஸ்?. அதுக்கு பதிலா ஒரு கழுதைய எடுத்தாலாவது‌ வீட்டுல மாட்டி வைக்கலாம். என்னைப்பார் யோகம் வரும்னு. கிடச்ச வாய்ப்ப இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே பாவா. போ... இதுக்கு ரேஸ் வக்காமலேயே இருந்திருக்கலாம்."  


அவளின் காதில் சென்று மீண்டும் ஒரு ரகசியம் சொல்ல, அவளின் விழிகள் இரண்டும் கோலிக்குண்டு போல் விரிந்தது, "பா... வா..." என வேகமாகத் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். 


"உன்னோட பாவா எப்படி?." எனப் புருவம் உயர்த்தி கேட்க. 


"சூப்பர் பாவா நீ. இந்த மாறி யோசிக்கிறதுல உனக்கு நிகர் நீயே தா. ஐ லவ் யூ பாவா. ஐ லவ் யூ." என மார்பை மஞ்சமாக்கி உறங்க ஆயத்தமானவளை இறுக்க அணைத்துக் கொண்டான் அவளின் நாயகன் ரிஷி தரன்.‌


என்ன செஞ்சிருப்பான் அப்படி. உங்களுக்குத் தெரியுமா?. எப்படி தெரியும் சொன்னால் தான தெரியும். 


எந்தப் பெண்களை வீட்டு வேலைக்கு மட்டுமே லாயக்கு என்றானோ, அந்தப் பெண்களின் உடைகளை அணிந்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டான் ரிஷி. அதுவும் டூ பீஸ் எனப்படும் நீச்சல் உடையில் சில, சேலையில் சில, எனப் பல உடைகளில் புகைப்படும் எடுத்து வைத்திருக்கிறான். எப்பையாவது தேவைப்படும் என்று. 


ஆண் என்ற கர்வத்துடன் திரியும் சுனிலுக்கு இது தலைக்கு மேல் தொங்கும் கத்தி தான். 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...