அத்தியாயம்: 35
பூக்களைக் கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா.
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா.
உதிராமல் சூடிட வா.
மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா.ஆ.
மாதவா யாதவா குழல் உதவாது
இதழோடு இசையாக வா.
என்ற பாடல் வரிகள் ஹரிணியின் காதில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. எத்தனை மணி நேரம் பார்த்தாலும் சலிக்காது என்பது போல் தன் கையில் இருந்த லெமினேஷனை பாத்துக் கொண்டிருந்தவளுக்கு மேலே சொன்ன பாடல் வரிகளும், தன் கணவனின் நினைவும் வந்தன. தன் மயக்கும் குரலில் பாடிக் கொண்டே தன் மாயவனை ரசித்தாள். அவளைப் பொருத்த வரை ரிஷி தரன் மாயவன் தான்.
காதலை உதடுகளும் சொற்களும் சொல்வதை விடத் தரனின் சாம்பல் நிற விழிகள் அவளிடம் உணர்த்தியது தான் அதிகம். அவனின் கண்ணெனும் சிறையில் தன்னையே நிரந்தர கைதியாக்கிக் கொண்டாள் ஹரிணி. அவளை முதலில் கவர்ந்ததும் அவனைக் காதல் செய்ய வைத்ததும் அதுவே. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். எப்போழுது அவனிடம் பேசினாலும் அவனின் விழிகளைப் பார்த்துக் கொண்டு தான் பேசுவாள். தரனின் கண்கள் மட்டுமே அவளின் உண்மையான விஸ்வாசி.
அந்தக் கண்களில் வடியும் காதலையும், அதற்குப் பிரதிபலனாக ஹரிணியின் முகம் காட்டும் நாணமெனும் பாவனையையும் அழகாய் புகைப்படமாக்கி அதை லேமினேட் செய்தும் தந்திருந்தான் கௌதம். ஃபேஷன் ஷோவில் இருவரும் சேர்ந்து இருந்த தருணங்களைப் புகைப்படமாக்கி அதை ஆல்பம்போல் செய்து பரிசளித்திருந்தான் கௌதம்.
அவனுக்குமே அன்றைய ரிஷியை மிகவும் பிடித்திருந்தது. அவனின் கம்பீர நடை, எவ்வித தயக்கமுமின்றி வரும் கணீரென்ற குரல், உற்று நோக்கி எடை போடும் பார்வை, அவ்வபோது தன் மீசையை முறுக்கி விடும் விதம், தன் தோழியைக் காண்கையில் அவனின் முகத்தில் படரும் மென்மை, ஹரிணியின் பெண்மையிடத்து குலையும் ரிஷியின் ஆண்மையென இருவரும் கரம் கோர்த்து வளம் வந்ததை ரசிக்கத் தோன்றியது கௌதமிற்கு. இருவரும் 'மேக் பார் இச் அதராக' தெரிந்தனர். அதைத் தன் ஃபோனின் புகைப்படமாகப் பிடித்து, ஊருக்குச் செல்லும் முன் அதை லேமினேஷன் செய்து அவளிடம் கொடுத்தான்.
அது கைக்கு வந்ததிலிருந்து ஹரிணியின் கண்களுக்கு வேறு யாரும் தெரியவில்லை. ரசிக்கிறாள் ரசிக்கிறாள் ரசித்துக் கொண்டே இருக்கிறாள்.
"நா உன்ன டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேண்ணே. என்ன சொல்ற." பிரகாஷ் காண்டுடன்.
"அதுக்கு நிறைய செலவாகும். அதுனால் நீ என்ன பண்றன்னா ஒத்த ரூபா காச ரெண்டா வெட்டு. ஒன்ன நானும் இன்னொன்ன நீயும் வச்சிக்கிவோம். முந்திக் காலத்துல உறவே வேண்டாம்னா இப்படி தா செஞ்சி வெட்டி விட்டுடுவாங்களாம். அதுக்கப்பறம் பேசவோ, பழகவோ, ஏ! பாத்துக்கவே கூடாது. எங்கிட்ட இருந்து விலகி இருப்ப. அது தா உனக்கு நல்லது எனக்கும் நல்லது. ஊருக்குப் போனதும் பஞ்சாயத்து தா. ஒத்த ரூபா வச்சிருக்கியா இல்ல அதையும் நா தரனுமா?." கௌதம் கேலியாக.
"உன்னப் போய்ப் பாசமுள்ள சூரியன்னு சொன்னேனே, ச்ச… என்ன நினச்சா எனக்கே வெக்கமா இருக்கு."
"வெட்கமா! எங்க காமி." என அவனின் முகத்தை இடம் வலமாகத் திருப்பிப் பார்த்தவன்.
"எனக்குத் தெரிஞ்சி உனக்கு லேட்டோஸ்கோஃபியான்னு ஒரு நோய் இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம டீவில படம் பாக்கும்போது வீடியோ முன்னாடி வந்திடும் ஆனா, ஆடியோ லேட்டா வரும்ல அந்த மாறிக் காலைல கல்யாணம் பண்ணிக்கும்போது வர வேண்டிய வெக்கம், லேட்டா ஈவ்னிங் வந்திருக்கு. வேற ஒன்னுமில்ல. இத சரி பண்ண எந்த டாக்டர்ஸ் கிட்டையும் போய்டாத டா. விசித்திர ஜந்துன்னு சொல்லி உன்ன கண்ணாடி கூண்டுக்குள்ள அடச்சி வச்சி, கைல கால்லலாம் வயர மாட்டி விட்டுடுவானுங்க. அண்ணே உ நல்லதுக்கு தாச்சொல்றேன் பாத்துக்க. இப்ப தாங்கல்யாணம் வேற ஆகிருக்கு ஜாக்கிரதையா இருந்துக்க."
' ச்ச... எந்தப் பக்கம் பந்து போட்டாலும் அடிக்கிறாப்ளையே. என்ன பண்றது?. ஹரிணிக்கி கிடைச்ச மாறி நமக்கு ஒரு கல்யாண பரிசு கிடைக்காதோ!. சரி நாம கோபமா எழுந்து போவோம்.' எனப் பிரகாஷ் எழுந்து செல்லப் பார்க்க, அவனின் கரம்பற்றி அமர வைத்தான் கௌதம்.
' ஏ இந்தக் காண்டு. ' என்ற கேட்டபடி.
"பின்ன என்னண்ணே. இன்னைக்கி கல்யாணம் யாருக்கு?. எனக்குத் தான!. புதுசா கல்யாணம் பண்ண எனக்கு கிஃப்ட் குடுக்காமா!. நாளைக்கி கிழவியாகப் போற ஆண்டிக்கு கிஃப்ட் குடுக்குற. இது நியாயமாண்ணே." என்ற பிரகாஷுடன் சண்டைக்கி சென்றிருப்பாள் ஹரிணி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் மூவரும் ஒரே டேபிளில் அமர்ந்து இருந்தாலும், ஹரிணி தான் இந்த உலகத்திலேயே இல்லையே!. எப்படி சண்டை போடுவாள்?.
"டேய்!. நீ எங்கிட்ட கேட்டாடா கல்யாணம் பண்ண?. பொண்ண தூக்கனும், தடுக்க யாரு வந்தாலும் அடிச்சி தூக்கி போட்டு அந்தப் பொண்ண ஊருக்குக் கூட்டு வரனும்ன்னு தான சொன்ன."
"அதுமட்டும் சொல்லலண்ணே, ஊர்ல பஞ்சாயத்த கூட்டுவானுங்க, அங்க வெள்ள வேட்டி வெள்ளச்சட்ட போட்டு, வெள்ள முடி வச்சிருக்குற மில்க் மேன்ஸ் எல்லாத்திட்டையும் பேசி, எனக்குச் சேனையம்மன் கோயில்ல வச்சி உன்னோட கையால தாலி எடுத்துக் கொடுத்தாத்தா! ஜெனிய நா கட்டிப்பேன்னு சொன்னோண்ணே."
"இப்றம் என்ன இதுக்கு டா இப்ப கல்யாணம் பண்ண நீ?. அந்தப் பிள்ள வெரலு சும்மா கிடக்குன்னு ஒத்த மோதிரத்த போட்டு விட்டு, உனக்கு எழுதப் படிக்கத் தெரியுங்கிறத நிறுபிக்க, சும்மா கிடந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டா!. அத நா கல்யாணம்னு ஏத்துக்குக்கிட்டு உனக்குப் பரிசு மழையா கொட்டனுமா என்ன?."
"அப்ப இத கல்யாணம்னு ஏத்துக்கிட்டு மொய் வைக்க மாட்டியாண்ணே நீ?. "
"தம்பி, நா ஏத்துக்கிறத விட இன்னொருத்தர் இருக்காரு. அவரு ஏத்துக்கிட்டா உனக்கு நாலு மடங்கு, இல்ல நூறு மடங்கு அதிகம் மொய் செய்வாப்ள."
"யாருண்ணே அது?." உற்சாகமாக.
"உனக்குக் கூட நெருங்குன சொந்தம் தா. ஜஸ்ட் உன்ன பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா தா அது." என்க, பிரகாஷ் முழித்தான்.
"காதலிக்கிறேன் சொன்ன நீ, கல்யாணம் பண்ணி கூட்டீட்டு வாரேன்னு சொன்னியா?. திடீர்னு மாலையும் கழுத்துமா நின்னா, நம்ம வீட்டு தலைவரும் உங்கப்பாவுமான சிவநாதன் ஏத்துப்பாரா, இல்ல அவரு வைஃப்பும் உனக்கு அம்மாவாவும் இருக்குற மலர்மங்கை தா ஏத்துப்பாங்களா, சொல்லு?. சொத்துல பங்கில்லன்னு சொல்லி வெளில போடா நாயேன்னு தொரத்தி விட்டுட மாட்டாங்க."
"என்னண்ணே பயங்காட்டுற!."
"நீ என்ன பண்றன்னா உடனே உன்னோட தரப்பு ஆட்கள ஒன்னு திரட்டு. அதான்ட்டா மூர்த்தி பெரிப்பா, நம்ம சித்தப்பு, நங்கை அத்தைன்னு நல்ல நல்ல பேச்சாளரா பாத்து உம்பக்கம் இழுத்து போட்டுட்டன்னு வை, பெரிமா கூட அவங்க எல்லாரும் சண்ட போட்டுக்கிட்டு இருப்பாங்க. நீ ஜெனி கூட ஹப்பியா இருக்கலாம்." என்றவுடனே சென்றுவிட்டான் பிரகாஷ் மூர்த்தியிடம் விசயத்தைச் சொல்ல.
"கல்யாணம் பண்றதுக்கு ஐடியா சொல்லுவாங்க. பாரு, இவனுக்கு மட்டும் கல்யாணம் ஆனதுக்கு அப்றம் ஐடியா குடுக்க வேண்டி இருக்கு. ச்ச... நேரக்கொடும." எனப் புலம்பியபடியே திரும்பிப் பார்க்க, இன்னும் கனவு உலகிலிருந்து ஹரிணி ரிட்டன் வரவில்லை.
"க்கும், இவள நடப்புக்குக் கொண்டு வர்றது கஷ்டம் போலையே. நம்மூர்ல ஆட்டப் பலி குடுக்குறதுக்கு முன்னாடி மஞ்சத்தண்ணி தெளிக்கிற மாறித் தெளிக்க வேண்டியது தான்." என அவளின் முகத்தில் தண்ணீரை ஊற்ற, ம்ஹிம்... தண்ணி என்ன அமிலமே ஊற்றினாலும் நாங்க அசஞ்சி கொடுக்கமாட்டோம், என்பது போல் இருந்தவளை உளுக்கிவிட்டான் கௌதம்.
"ஏய், நாளைக்கி காலைல ஊர்ல இருக்கனும். நாங்களும் புள்ள குட்டிகள பாக்க வேண்டாமா!. என்னோட வைஃப்ப கூட நானும் எவ்ளோ நாளு தா ட்ரீம்லையே டூயட் பாடுறது. போம்மா." அடித்துத் துரத்தாதது ஒன்று தான் குறை.
புன்னகையுடன் தன் அறைக்குச் செல்ல, அங்கு ரிஷி ஜன்னல் அருகே நின்று கடற்கரையை ரசித்துக் கொண்டு இருந்தான். வேகமாக ஓடிச் சென்று அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள் ஹரிணி.
"பாவா, ஐ லவ் யூ வெரி மச்." என்றபடி.
"லவ்வா... திடீர்னு என்னாச்சு கிட் உனக்கு." என்றவன் திரும்பி அவளைத் தன் மார்போடு அணைத்து உச்சியில் முத்தமிட்டார் தரன்.
"உங்கிட்ட ஒன்னு காட்டனும். வா." என்றவள் அவனுக்குக் கௌதம் தந்த புகைப்படங்களைக் காட்ட, அதை ரிஷி ஆசையுடன் வருடி ரசித்தான்.
"இதுல செம்மையா இருக்க பாவா நீ.! இந்ததுல பாரே!. ஐய்யோ!. எல்லாமே சூப்பரா இருக்கு. இந்தப் பெரிய ஃபோட்டோவ நாஞ்சென்னைல நம்ம வீட்டுல வைக்கப் போறேன். அப்ப ஊர்ல நம்ம ரூம்க்கு ஒன்னு வேணும்ல, அதுக்கு இத லெமிடேட் போட்டுடுவோம். அப்ப என்னோட ஆஃபீஸ்க்கு." எனப் பேசிக் கொண்டே சென்றவளை ரசிக்கத் தோன்றியது தரனுக்கு.
அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து தன் மனையாளின் பேச்சை ரசிக்க, ஹரிணி சட்டென அதை நிறுத்திவிட்டாள்.
"கிட்... வாட் ஹப்பென்ட்.?"
"நா முடிவு பண்ணிட்டேன் பாவா. என்னோட ஃபோர்த் இயர் அன்வெஸ்ஸரி கிஃப்ட்டா என்ன வேணும்னு டிசைட் பண்ணிட்டேன்."
"கிட், அதுக்கு இன்னும் பல மாசம் இருக்கு. இப்பவே கேட்டா எப்படி?."
"பாவா, நீ ஒரு இன்டியன் ரயில்வே. தக்கல்ல டிக்கெட் புக் பண்ற மாறி உடனுக்குடனே கேட்டா ஒன்னுமே கிடைக்கிறது இல்ல. ஆறு மாசத்துக்கு முன்னாடி ரிசர்வ் பண்ணாத்தா சீட் உண்டு. அதுனால நா என்னோட ப்ரசெண்ட் என்னன்னு இப்பவே சொல்லிடுறது நல்லது." என்க, ரிஷி புன்னகைத்தான்.
"என்ன வேணும் கிட்?." எனக் கேட்டவனின் அருகில் வந்து அமர்ந்தவள் தன் கையில் ஒரு புகைப்படத்தை வைத்திருந்தாள்.
"நா இத கண்டிப்பா செய்யனும்னு கேக்கல. பட் இது நடந்தா இந்த உலகத்துலேயே ஹப்பியா இருக்குற ஒரே ஆளா நாந்தா இருப்பேன்." என அந்தப் புகைப்படத்தை ரிஷியிடம் காட்டினாள்.
அந்த ஜிம் ரூமிலிருந்து எடுத்தாளே அது தான். அதில் கௌதமும் ரிஷியும் சேர்ந்து இருப்பது போல் இருந்தது. ஒருவரின் கரம் மற்றவரின் தோளோடு தோள் சேர்த்து அணைத்திருந்தன. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி என்பது அளவிட முடியாத படி கரைபுரண்டு இருந்தது.
"இதே மாறி, எனக்கு இப்ப இருக்குற உங்க ரெண்டு பேரோட ஃபோட்டோ வேணும். அதுவும் காலம் முழுக்க நாம் பாத்து ரசிக்கிற மாறிப் பெருசா லேமினேட் பண்ணி. கிடைக்குமா?." என்றாள், அவனின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு முகம் பார்த்தபடி. அவளுக்கு அதைக் காட்டாது ரிஷி எழுந்து நின்று கொண்டான் வேகமாக.
அவளும் எழுந்து,
"நீங்க ரெண்டு பேரும் பேசுங்க பழகுங்கன்னு நா சொல்லல. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்தது நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அது எனக்குத் தேவையும் கிடையாது. ஆனா ரெண்டு பேருமே எனக்கு முக்கியமானவங்க. அதுனால ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும். எனக்காக... அது மட்டும் போதும். மத்தபடி நீங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒத்துமையா இருங்கன்னு நா சொல்லமாட்டேன். ஏன்னா எந்த ஒரு உறவையும் கட்டாயப் படுத்துறதுனாலயோ. இல்ல ஆர்டர் போடுறதுனாலையோ ஒன்னு சேக்க முடியாது. அன்பால மட்டும் தா ஒன்னு சேக்க முடியும்."
"அந்த அன்ப யாசகம் செஞ்சி கெஞ்சி வாங்க கூடாது." என்றான் திருப்பிக் கோபமாக. அவள் திருதிருவென முழிக்க, அவளை மீண்டும் சோஃபாவில் அமர வைத்தவன்.
"எந்த ஒரு ரிலேஷன்ஷிப்போட ஆரம்பமும் நம்பிக்க தா ஹரிணி. ஒருத்தர் அடுத்தவங்க மேல வைக்கிற நம்பிக்க தா. நம்பலன்னாலும் பரவா இல்ல, எதுக்கு சொல்றாங்க, பண்றாங்கங்கிறதையாது புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும். சந்தேகப்படக் கூடாது. அது அந்த உறவ மொத்தமா சிதச்சிடும். அப்றம் யார் நினைச்சாலும் ஒன்னு சேராது." என்றான் ரிஷி. ஹரிணி புரியாமல் குழம்பியிருக்க, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் ரிஷி.
"என்னோட அம்மா கனகவள்ளி. அவங்க எங்கூட நல்லா பேசிப் பழகி எத்தன வர்ஷம் ஆச்சின்னு உனக்குத் தெரியுமா.? இருபது வர்ஷத்துக்கு மேல இருக்கும். அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப கூட எங்கிட்ட பேச முயற்சி பண்ணல அவங்க.
பிறக்கும் போதுல இருந்தே அவங்களால பேச முடியாது. கைக்கால் உடம்புன்னு நல்லா இருக்குற மனுஷனையே உருவக்கேலி பண்ற இந்தச் சமூகத்துல. அதுவும் சின்னக் கிராமத்துல அவங்க பட்ட அவமானமும், கேலியும், கிண்டலையும், பாத்து அம்மா பட்ட மன வேதன அதிகம். அம்மா அப்பான்னு எல்லாரும் இருந்தும் அவங்களுக்கு யாருமே ஆதரவா இல்ல.
ஆனா எந்த ஒரு சூழ்நிலைலையும் அவங்க துவண்டு போய் நா பாத்தது இல்ல. தனக்கு இது வேணாம்னு யார்கிட்டையும் உதவின்னு போய் நின்னதில்ல. அதே நேரம் தன்னோட பிடிவாதத்த விட்டுக் குடுத்ததே இல்ல. அப்பா படுக்கைல இருந்த போதும் சரி, வைசுவ காணும்னு நா தேடும் போதும் சரி, திடமா இருந்தாங்க. அப்ப அவங்க என்ன ஒரு பார்வ பாப்பாங்க. அவ்ளோ தா. ஆனா அந்தப் பார்வைலையே சொல்லிடும் அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு. என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.
அதுனால தா சென்னைய விட்டுட்டு அப்பாவோட ஊருக்கு வந்தோம். அங்கையும் அம்மா யார் கூடவும் பேச முயற்சி பண்ணது இல்லை. அத பாக்குறவங்களுக்கு திமிரா தெரியும். ஆனா அது அவங்களோட சுயமரியாத. தன்னை வேண்டாம்னு ஒதுக்குனவங்கள அம்மா வேண்டாம்னு ஒதிக்கிட்டாங்க. அது அவங்களோட வைராக்கியம்.
அவங்க யாரு கூடப் பழகுனாலும் மனசார நம்பிக்க வச்சி தா பழகுவாங்க. அது பொய்த்து போச்சின்னா! ஒட்டு மொத்தமா வெறுத்துடுவாங்க. திரும்ப அவங்க மனசு சொல்ற வர அவங்ககிட்ட பேசவே மாட்டாங்க.
என்னோட சின்ன வயசுல இருந்து நா அவங்கள பாக்குறேன். அவங்களோட வைராக்கியமும், தன்மானமும் எனக்கும் ரொம்ப பிடிச்சது. அதுனாலயோ என்னவோ எனக்கும் யார்கிட்டையும் எதுக்காகவும் கெஞ்சி பழக்கமில்ல. என்னோட எந்த ஒரு செயலுக்கும் யார்கிட்டையும் விளக்கம் குடுத்தும் பழக்கமில்ல. என்ன புரிஞ்சிக்காமா, அவநம்பிக்கையா இருக்குறவங்க எனக்குத் தேவையும் இல்ல. உனக்கு இது புரியுதான்னு எனக்குத் தெரியும். பட் என்னோட மைன்ட் செட்ல இருந்து என்னால இறங்கி வர முடியாது.
நா இப்படி தா. உங்கிட்ட மட்டும் தா என்னால சில விஷயங்கள விட்டுக் குடுத்து போக முடியும். உன்னோட ஃபிரண்டுக்கிட்டலாம் முடியாது. அடுத்த மொற அவனுக்காக எங்கிட்ட பேசாத." எனச் சொல்லிச் சென்றவனின் குரலில் சிறு வலியை உணர்ந்தாள் ஹரிணி.
ரிஷியின் பேச்சிலிருந்து அவனின் மனம் காயப்பட்டிருக்கிறது என்பதை ஹரிணியால் உணர முடிந்தது. அந்தக் காயத்தைத் தந்தது தன் நண்பன் என்பதையும் தான். ஆனால் எப்படி? எங்கே? எப்பொழுது? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாது, அந்தக் காயத்திற்கு மருந்திடுவது கஷ்டம். அவளின் கேள்விக்குத் தான் ரிஷி பதில் சொல்வதில்லையே. ஹரிணியின் கேள்விக்கு இருவரின் பள்ளிப் பருவ நிகழ்வுகள் தான் பதில் சொல்லலாம்.
ஒரு மனிதனின் 70 சதவீத குணங்களும், பழக்க வழக்கங்களும் அவனின் சிறு வயதில் சுற்றி இருப்பவர்களால் நிர்ணயிக்கப்பட்டுகிறது. ரிஷியின் குணங்களும் அப்படிதான். கனகா மூர்த்தி அவனின் ஆசிரியர் எனப் பலரிடமிருந்து நகலெடுக்கப்பட்டவை. கௌதமை முறைப்பதை மட்டும் கலியபெருமாளிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பான் போலும்.
"நமக்கு இவனோட உதவியே தேவயில்ல. ஃபோட்டோவ கிராபிக்ஸ் பண்ணா போதும். நா ஏ வேற வேல வெட்டி இல்லாமா இவெங்கிட்ட கேட்டு, இவனோட புரியாத பேச்ச கேக்கனும். ச்ச... முட்டாள் ஹரிணி நீ. கண்டு பிடிக்கிறேன். இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குறத நா கண்டு பிடிக்கிறேன். என்ன நடந்திருக்கும். எப்படி கண்டு பிடிக்கிறது?." என யோசித்தபடி காரில் பயணம் செய்கிறாள் ஹரிணி.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..