முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 89

  அத்தியாயம்: 89 பேசுவதற்காக காத்திருப்பதும்… பேசும் போது சண்டையிடுவதும்… சண்டை போடவே பேசுவதும்…  சண்டை போட்டாவது பேசுவோமே… என்பதும் அன்பின் உச்சகட்டம். தடக் தடக் என்ற சத்தம் கணவனின் வருகையை சொல்ல… அவன் சாவி கொண்டு திறக்கும் முன் பைரவி வேகமாக திறந்து விட்டாள். அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது உள்ளே சென்று வழக்கம் போல் குளியலறைக்குள் புகுந்தான்.  "துண்டு மாமா. " எனக் கதவை தள்ளியவள் உள்ளிருந்து மதுவின் கடுகடுத்த குரல் கேட்கவும் ஓடி விட்டாள்.  டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து விட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்க, அவன் சிங்கிஹ் பெட்டைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையை ஹாலில் விரித்து படுத்துக் கொண்டான். இரு நாட்களாக ஹால் தான் பெட் ரூம் அவனுக்கு. மனைவியுடன் பேச மாட்டானாம்.  "சாப்பிடலயா. "  "வேண்டாம். " என்றவன் போர்வைக்குள் சரணடைய,  'இவன இப்படியே விட்டா தூங்கிடுவான். கூடாது. ' என டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்தாள் பைரவி.  "ம்ச்... நான் படுத்திருக்குறது உங்கண்ணு தெரியலயா!"  "நல்லாவே தெரியுது. இது ஹால், பெட் ...

பனி 88

  அத்தியாயம்: 88 சாரதா ஹோம்.  திருமணம் முடிந்த இந்த ஏழெட்டு மாதங்களாக பைரவி அந்த பக்கமே சென்றது இல்ல. இப்போது வந்து அமர்ந்திருக்கிறாள். அங்கு அனைவரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க இவள் மட்டும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.  எப்பொழுதும் வாயாடி வம்பு செய்யும் பெண் இன்று அமைதியாக இருக்க, அங்கு இருப்பவர்களுக்கு அது வித்தியாசமாக பட்டது. அவளை உற்சாகப்படுத்த என அவர்களும் ஏதேதோ செய்ய, பைரவி எதையும் கண்டு கொள்ளாது மலை முழுங்கி போல் உம் என முடிவில்லாத வானை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.   " என்ன! கல்யாண மயக்கம் தீந்து இப்ப தான் இந்த பக்கம் வர்ற வழிய கண்டுபிடிச்சிருக்க போலயே. " என்றபடி வந்து அவளின் அருகில் அமர்ந்தாள் சுடர்.  "ஹலோ… மிஸஸ் பைரவி மதுசூதனன். இந்த உலகத்துலதா இருக்கிங்களா. ஹலோ…" என அவளின் முன் கை அசைக்க, பைரவி அப்போது தான் சுயநினைவிற்கே வந்தாள்.  "ஹாய் க்கா... எப்ப வந்திங்க?. நல்லா இருக்கிங்களா?" என‌ச் சிரிக்க முயன்று தோற்றாள். "இதே கேள்விய நான் கேக்குறேன். பதில் சொல்லிட்டா உன்னோடதுக்கு பதில் தர்றேன். என்னாச்சி உனக்கு. ...

பனி 87

  அத்தியாயம்: 87 மனிதன் அணியும்… கொடூர முக மூடிகளில்…  ஒன்று பொறாமை…  அது நற்குணத்தை…  அழிக்கும் நோய்.‌.. பொறாமை தான். பைரவி மீது சைந்தவிக்கு இருப்பது பொறாமை தான்‌. முதலாவது பைரவியின் அழகு. அது பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கின் குளுமையான சுடரை ஒத்தது. அதைப் பார்ப்பவர்கள் யாரும் அவளைப் பார்த்து புன்னகைக்காது சென்றதே இல்லை. அதன் மீது பொறாமை.  தான் பத்து வார்த்தை பேசினால் தான் ஒரு வார்த்தை வரும் தந்தையின் வாயில் இருந்து. ஆனால் சிதம்பரத்திடம் பைரவி காட்டிய உரிமை அவளுக்கு எனசீ சிதம்பரம் மனத்தில் தனி இடத்தைத் தந்திருந்தது. குறும்பு சிரிப்புமாக குழந்தைதனம் மாறாத அவளின் பேச்சிற்கு அவரும் ரசிகர் தான். அதுவும் பொறாமையைக் கிளப்பியது.  எப்பொழுதும் சிடுசிடு என இருக்கும் மதுசூதனனின் முகம் பைரவி காணும் போது காதல் அலைகளை வீசுவதைப் பார்க்கையில் பற்றி எரிந்தது. அவன் தன் மனைவியைக் காதலுடன் கவனித்துக் கொள்வதை பார்க்கையில் மனம் தானாகவே தன் கணவனுடன் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொண்டது பைரவியின் மீது. அவளை அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்பது அதில் எண்ணெய் ஊற்றி...

like

Ad