அத்தியாயம்: 89
பேசுவதற்காக காத்திருப்பதும்…
பேசும் போது சண்டையிடுவதும்…
சண்டை போடவே பேசுவதும்…
சண்டை போட்டாவது பேசுவோமே…
என்பதும் அன்பின் உச்சகட்டம்.
தடக் தடக் என்ற சத்தம் கணவனின் வருகையை சொல்ல… அவன் சாவி கொண்டு திறக்கும் முன் பைரவி வேகமாக திறந்து விட்டாள். அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது உள்ளே சென்று வழக்கம் போல் குளியலறைக்குள் புகுந்தான்.
"துண்டு மாமா. " எனக் கதவை தள்ளியவள் உள்ளிருந்து மதுவின் கடுகடுத்த குரல் கேட்கவும் ஓடி விட்டாள்.
டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து விட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்க, அவன் சிங்கிஹ் பெட்டைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையை ஹாலில் விரித்து படுத்துக் கொண்டான். இரு நாட்களாக ஹால் தான் பெட் ரூம் அவனுக்கு. மனைவியுடன் பேச மாட்டானாம்.
"சாப்பிடலயா. "
"வேண்டாம். " என்றவன் போர்வைக்குள் சரணடைய,
'இவன இப்படியே விட்டா தூங்கிடுவான். கூடாது. ' என டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்தாள் பைரவி.
"ம்ச்... நான் படுத்திருக்குறது உங்கண்ணு தெரியலயா!"
"நல்லாவே தெரியுது. இது ஹால், பெட் ரூம் இல்ல. இங்க படுக்கு கூடாது. அது தான் உங்களுக்கு தெரியல. " என நக்கலாக சொல்லியவள் ரீமோட்டுடன் டீவி சீரியலில் மூழ்க, அவன் எழுந்து படுக்கை அறைக்குள் சென்றான். பின்னாலேயே சென்றவள், கட்டிலில் படுக்க,
"நீ சீரியல் பாக்கல?"
" சுபம் போட்டுட்டானுங்க மாமா. பினிஸ்… கதம் ஹோகையா…" என்க, அவளுக்கு முதுகைக் கூட காட்டாது உச்சந்தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு உறங்க முயல, பைரவி மூடிய போர்வைக்குள் இருந்த கணவனைக் கண் கொட்டாது பார்த்தாள். வெகு நேரம் விழி விலக்காது பார்த்துக் கொண்டே இருக்க,
"இப்படியே பாத்திட்டு இருந்தா மனுஷெ எப்படி துங்குறது?" என்றான் போர்வைக்குள் இருந்த படி.
"கண்ண மூடி தான் மாமா. நீங்க தான் உடம்புல எந்த பகுதியும் தெரியக்கூடாதுன்னு மூடிருக்கீங்களே. அப்பறம் நான் உங்கள பாக்குறது மட்டும் எப்படி தெரியுது. ம்… அப்படியே பாத்தாலும் உங்களுக்கு என்ன? தூங்குங்க. கொரட்ட விட்டு. கொர்ர்ர்... கொர்ர்ர்ர்னு… " எனக் கொரட்டை விட்டு காட்ட,
"எனக்கு கொரட்ட விடுற பழக்கம் கிடையாது. " என்றான் விருட்டென போர்வையை விலக்கி,
"அத பக்கத்துல படுத்து இருக்குறவங்க சொல்லணும். திருவாளர் மதுசூதனனுக்கு உறங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இல்லை என்று. ஆனால் எனக்கோ பொய்யுரைத்து பழக்கம் இல்லையே. என்ன செய்வது." எனச் சுத்த தமிழில் பேச, வேகமாக எழுந்து அமர்ந்தவன்,
"தூக்கத்துல பயந்து உலருற நீயெல்லாம் என்னைக் கிண்டல் பண்ணாத. "
" ஏய்... என்ன புதுசா இருக்கு. நான் எப்ப தூக்கத்துல உலறுனேன். பொய் சொல்ல கூடாது. "
"நீ உலறுனியா இல்லயான்னு பக்கத்துல படுக்குற நாந்தா சொல்லணும். திருமதி பைரவிக்கு இரவில் பொனாத்தும் பழக்கம் இல்லை என்று. " என அவளை போலயே சொல்ல,
"பொய் பொய்யா சொன்னா உங்க சப்பாத்தி நாளைக்கி உங்களுக்கு கிடைக்காது.."
"யாரு பொய் சொல்றா? நீ இப்படி எதாவது சொல்லுவன்னு தெரிஞ்சி தான் நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன். ஷீ... " எனத் தன் மொபைலை எடுத்துக்காட்ட, அதில் பைரவி எதெதையோ உலறிய படி எழுந்து அமர்வதும், பின் மொத்தென சாய்வதும் பதிவாகி இருந்தது.
அன்றொருநாள் திகில் படம் பார்த்து பயந்து அலறி எழுந்தவள் பேசிய பேச்சுகள் மைக் வசதி இல்லா விட்டாலும் தெள்ள தெளிவாக கேட்க,
"ஆ... ஐயோ… ஐயோ… இதெல்லாமா வீடியோ எடுப்பாங்க. குடுங்க அத. நான் டெலிட் பண்றேன். " எனப் பிடுங்க வர,
"உங்கிட்ட குடுத்து டெலிட் பண்ணத்தா இந்த வீடியோவ நான் எடுத்தே பாரு. "
"இதெல்லாம் தப்பு. பொண்டாட்டிய, நைட் நேரத்துல அவளுக்கே தெரியாம வீடியோ எடுத்திருக்கிங்க. "
"பர்மிஷன் கேக்க உன்ன எழுப்புனா நீ தான் எந்திரிக்கிறதே இல்லையே. கும்பகர்ணி. " என்க,
" என்னை அப்படி சொல்லாதிங்க. " என்றாள் சிணுங்களாக,
"சொன்னா நீ அழுவியோ! எப்ப பாத்தாலும் கண்ணீல தண்ணிய வச்சிட்டே. அழுமூஞ்சி… உஊ..உஊ.. " என நடித்துக் காட்டியவனின் மீது தலையணை பறந்து வந்து விழுந்தது. அதுவும் சரியாக முகத்தில்.
"என்ன அழுமூஞ்சி சொல்லாதிங்க. " எனக் கையில் மற்றொரு தலையணையை வந்துக் கொண்டு காளியாய் அவள் முறைக்க, அவனும் தன் மேல் வந்து விழுந்த தலையணையை எடுத்துக் கொண்டான்.
தலையணைச் சண்டை வேற சண்டையாக உருமாறியது. அது என்ன என்று விளக்க தேவையே இல்லை.
"என்ன அவாய்ட் பண்ணிட்டேல்ல. இந்த ரெண்டு நாள்ள நான் எவ்ளோ துடிச்சேன்னு தெரியுமா? என்ன விட்டுட்டு தனியா போய் தூங்குற அளவுக்கு கோபமா எம்மேல. " என்றவள் கடிக்க வந்தாள் அவனின் மார்பில், அவளைத் தடுத்தவன்,
"நான் மட்டும் சந்தோஷமா இருந்தேன்னா நீ நினைக்கிற. எனக்கு கோபம் தான். அது உம்மேல இல்ல. எம்மேல. நாஅ கத்தவும் நீ பயந்து பாத்த அந்த பார்வக்கு தான் எனக்கு நானே தண்ட குடுத்துக்க தனியா போனேன். கோபம் குறையிற வர வெய்ட் பண்ணேன்." என்றவனை மீண்டும் அணைத்தாள், இறுக்கமாக.
"ப்ளீஸ்… ப்ளீஸ்... இனி என்ன ஆனாலும் என்னை விட்டு மட்டும் தனியா நீ இருக்க கூடாது. பேசமாலும் இருக்காதிங்க. கோபப்பட்டா கூட நான் தாங்கிப்பேன். ஆனா பேசாம இருந்தா ரொம்ப வலிக்குது மாமா. " என்றவளின் தவிப்பு உண்மை.
" ஸாரி… இனி நான் எங்கயும் போக மாட்டேன். இந்த வீட்ட விட்டு எங்கயும் மாட்டேன். நீங்க சொல்லறத கேக்குறேன். சமத்தா இருப்பேன். " என்றவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன்,
"லூசு… நீ நீயா இருடி. அது தான் எனக்கு பிடிச்சிருக்கு. எனக்காக நீ ஆசையோட கண்ணுல ஏக்கத்தோட குறும்போட காத்திருக்கங்கிற நினைப்பு தான், என்னை வீட்டுக்கே வரவைக்குது. நான் உன்ன அடைச்ச வைக்க விரும்பல டெடி. நீ எங்க போனுமோ போ. "
"நிஜம்மா. "
"ம். "
"நான் உங்க கன்டிஷன ப்ரேக் பண்ணிட்டேன்னு பிரச்சன இல்லைல்ல. "
"இல்ல... நீ போனது எனக்கு பிரச்சன இல்ல. நீ போட்டிருந்த டிரெஸ்ஸும் இல்ல... நிவி. அவ தான் காரணம். கூடவே நீ எங்கிட்ட பொய் சொல்லிருக்க. நான் உன்ன அடைச்சி வைக்கலன்னாலும் நீ ஏங்கிட்ட சொல்லாமா, அதுவும் without my knowledge I can't accept that. எப்பயும் நீ எங்கிட்ட ஓப்பன பேசுறது தான் எனக்கு பிடிக்கும். "
பாவம் மது, 'நீ பப்புக்கு போனது பிரச்சன இல்ல'ன்னு சொன்ன உடனேயே பைரவியின் காதுகள் அடைத்து விட்டது போலும். பின் பாதியையும் முழுதாக கேட்டு கடைபிடித்திருந்தால் சண்ட வந்திருக்கவே செய்யாது.
‘அப்படிச் சட்டுன்னு சொல்ல முடியலன்னாலும் டைவர்ஸ் வரைக்கும் அது கொண்டு வந்து விட்டிருக்காதுன்னு வேணும்னா சொல்லலாம். ஏன்னா சண்ட போடுறது இவங்களுக்குள்ள ஒரு வழக்கமா மாறிடுச்சி. காலைல காபி குடிக்கிற மாதிரி வாரம் ஒரு சண்ட.’
மது கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்று தான். 'உன் மனைவியை நான் அவ்விடத்தில் பார்த்தேன். ' எனப் பிறர் வந்து கூறும் போது, 'அப்படியா!' என அதிர்ச்சி அடைவதற்கு பதில். 'ம்… எனக்கு தெரியும். ' என்று பதில் கூற விரும்பினான்.
கையில் எதோ ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, " உங்க பொண்டாட்டி எங்க போயிருக்கான்னு தெரியுமா. " எனச் சைந்தவியின் கணவன் கேட்கும் போது,
"எங்க போயிருக்கான்னு எனக்கு தெரியும். " என அழுத்திக் கூறியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.
அப்படி சொல்லாது எங்கே என அவனிடம் கேட்க, அவனும் அவனின் மனைவி சைந்தவியும் ஒன்றையே நூறு என்று திரித்து சொல்ல, அதிலும் பைரவி விசயத்தில் நூறு நூறு ஆயிரங்களாக திரித்து கூறப்பட்டன. முதலில் நம்பாது இருந்தவனிடம்,
"நான் சொல்றது பொய் இல்ல. பாருங்க... " என பப்பில் கையில் க்ளாஸ் உடன் அமர்ந்து பைரவியை காட்சி பதிவாக காட்டினாள் சைந்தவி. அது நிஜம் என்பது போல் நடந்து கொண்ட மனைவி எல்லாம் சேர்ந்து கொண்டது.
இந்த கணவன் மனைவி இருவருக்கும் இடையே எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் ஒரு முறை சண்டையிட்டு கட்டில் வைத்து பேசி சமாதானம் செய்த பின் அந்த சண்டை புதைக்கப்பட்டு விடும். இருவருமே அதைப் பற்றி பேச மாட்டார்கள். மலர் வளையம் வைத்து மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாது மறந்து அடுத்த சண்டைக்கு தங்களைத் தயாராக்கி கொள்வர்.
'ஓ... இது தா பைரவி கேட்ட பத்து நிமிஷமா... இப்ப அவெ கேக்குறான். அவ தர மாட்டேங்கிறா. '
இதுவரை பல சண்டைகள் வந்துள்ளது. அது கூடலாய் முடிந்தும் இருக்கிறது. ஏனோ சண்டையிட்டு பின் கூடும் போது தாம்பத்தியம் வேறு விதமான புதிய உணர்வை தந்தது இருவருக்குமே. இதற்காகவே சின்ன சின்ன சண்டைகள் வரும். சில பெரிய சண்டைகளும் வந்திருக்கு.
இரண்டாவது பெரிய சண்டை என்றால் அது சுடரின் இறுதி பயணத்திற்கு சென்றது.
அடிக்கடி சுடரைப் பற்றி பேசுவதாலோ என்னவோ மதுவிற்கு சுடரின் பேச்சு பிடிக்காது. அவளின் மரணம் பைரவியை இத்தனை பாதிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
"பைரவி புரிஞ்சிக்க. நீ இப்ப ப்ரக்னெட்டா இருக்கா. இந்த மாதிரி நேரத்துல டிராவல் பண்றது ரொம்ப ரிஸ்க். உனக்கு வீக்கான உடம்புன்னு டாக்டர் சொன்னது உனக்கு தெரியும் தான…" என மறுத்த மதுவை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்யும் போது மதுவிற்குள் லேசான அடி. அது தாம்பத்தியம் என்ற பெயரில் ஏமாற்றுவதாக ஓர் உணர்வு வராமல் தடுக்க முடியவில்லை.
அவன் வரவில்லை என்றாலும், நான் சென்றே தீருவேன் என்றது சென்றது அடுத்த அடி. அனைத்திற்கும் மேலாக இருவரின் முதல் உயிர் கருவிலேயே கலைந்து சென்றது.
அந்த உருபெறாத குழந்தையைப் பற்றி இருவருக்கும் பெரிய பெரிய கனவுகள் இருந்தன. சரி இது இல்லயென்றால் அடுத்தது என நினைக்கும் போது எதுவுமே இல்லை என அனைத்தும் தங்காது கலந்து சென்றது.
"அங்க பாரு மாமா சின்ன புள்ளியா... அசையுது பாரு. அது அது தான் நம்ம குழந்த. " என ஸ்கேனில் தங்களின் குழந்தையைக் கண்டு ரசித்தவர்களின் சிசு நான்காம் மாதம் ஆரம்பிக்கும் தருவாயில் இல்லாது போனது.
அது கணவன் மனைவி என இருவருக்குள்ளும் இருக்கும் உறவில் விரிசல் விட வைத்தது.
பைரவியின் நினைப்பு முழுவதும் கலந்து சென்ற குழந்தையின் மீதே இருக்க, எதிலும் உற்சாகம் குன்றிப் போனது. கவனம் இருந்தில்லை.
"சும்மா தான வீட்டுல இருக்க. இத கூட செய்ய மாட்டியா. எப்ப பாத்தாலும் பைத்தியம் மாதிரி விட்டத்த பாத்திட்டு இருக்க. " எனச் சிடுசிடுத்து கணவன் கூறும் போது இம்முறை கண்ணீருக்கு பதில் கோபம் வந்தது.
இதற்கு முன்னும் அவள் வீட்டை ஒழுங்கு படுத்துவதில்லை எனச் சத்தமிடுவான் தான். ஆனால் அதில் அக்கறை இருக்கும். இது வேலை ஏவுவது போல் இருந்தது.
எதற்கெடுத்தாலும் 'சும்மா தான இருக்க. '
' சும்மா தான இருக்க. ' என அவன் சொல்லும் போதெல்லாம்,
"யாரு சும்மா இருக்கா? நீங்க வந்து பாத்திங்களா. " எனச் சண்டைக்கு நின்றாள் பெண்.
அதைக் கட்டிலாலும் சமாதானம் செய்ய முடியவில்லை. வீட்டில் இறுக்கம் அதிகமானது. பெரும் மழை கொட்டும் முன் உண்டாகும் புழுக்கம் அது.
" ஒரு கொழந்த கூட பொத்துக்க முடியாதா உன்னால. அழகு போய்டும்னு ஏன் தள்ளி போட்டுக்கிட்டே இருக்க. " என எப்பொழுதும் குத்தும் மாமியாரைத் துணிந்து எதிர்த்து பேசினாள்.
"நான் பெத்துக்கிறேன் பெக்காம இருக்கேன். அதுல உங்களுக்கு என்ன வந்தது. நாந்தான தூக்கி சுமக்கப் போறேன். எப்ப சுமக்கணும்னு நானே முடிவு பண்ணிக்கிறேன். நீங்க சொல்லி உங்களுக்காக நான் பொத்துக்குடுக்க மாட்டேன். "
அது பைரவி வாழ்க்கையில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருப்பெற்றது. புயலாக வலுத்தது என்றால் அது பைரவி வேலைக்கு சேரச் சொல்லி வந்த பணி நியமன ஆணை. வேறு வேலைக்கானது.
"சும்மாலாம் யாரும் இருக்கல. வெட்டியா யாரும் எனக்கு சோறு போட வேண்டாம். உங்களுக்கு பாரமாவும் இருக்க மாட்டேன். " என்றவளை மதுவே வேலை வேண்டாம் என்று கூறி படிக்க சேர்த்து விட்டான்.
"நீ ரொம்ப ப்ரஸ்டேஷனா இருக்கன்னு தோணுது. பழய மாதிரி சந்தோஷமா பாசிட்டிவ் வா. வெளில போ. புதுசா ஆளுங்கல பாரு. பழகு. முடிச்சா சுடரப்பத்தி யோசிக்காம இருக்க ட்ரெய் பண்ணு. " எனச் சொல்லியே அவளை கோச்சிங் சேர்த்து விட்டான்.
ஆனால் "வேல மட்டும் பாக்க வேணாம். இந்த க்ளாஸ் முடியவும் வேற போ. பாட்டு டான்ஸ்ன்னு என்னென்ன கத்துக்க முடியுமோ அது எல்லாத்தையும் கத்துக்க. மேல படிக்கப் போறியா. ஓகே… உன்னோட பொழுத பிஸியா வச்சிக்க. அப்பத்தா உன்னோட மனசுக்கு இதமா இருக்கும். " என்றான்.
ஆனால் பைரவியால் சுடர் விசயத்தைச் சும்மா விட முடியவில்லை. பரிச்சை எழுதியவள் பாஸ்ஸாகி இன்டர்வியூக்கான ஆணையையும் வாங்கி விட்டாள். கூடவே ஜெயாவிடமும் வாங்கி கட்டிக் கொண்டாள்.
இப்போதெல்லாம் பைரவி இவர்களின் குத்தல் பேச்சிற்கு கண்ணீர் விடாது திடமாய் காதில் வாங்காது கண்டும் கொள்ளாது புன்னகையுடன் வளைய வருவதால் கடுப்புடன் இருந்தவரின் கோபத்தை ஏற்றி விடுவது போல் அமைந்தது மோகனாவின் திருமண பேச்சு.
பிரவீனை மோகனாவிற்கு மாப்பிள்ளையாகப் பேசி சிதம்பரத்தின் சம்மதத்தை பைரவி வாங்க, 'எம்பொண்ணுக்கு மாப்ள பாக்க இவ யாரு. இப்பவே ஆரம்பிச்சிட்டா. இந்த வீட்டோட அதிகாரம் எங்கிட்ட இருக்கணும்னா நான் கை காட்டுறவ தான் மதுசூதனனுக்கு மனைவியா வரணும். பிரிக்கிறேன். உங்க ரெண்டு பேரையும் நான் பிரிக்கிறேன். ' எனப் பொருமியபடி இருந்தவருக்கு அல்வா சாப்பிட்டது போல் இருந்தது பைரவியின் நேர்முக தேர்வுக்கான கடிதம்.
"இங்க பாத்திங்களா இத. ஐயோ ஐயோ ஐயோ. நம்ம பையனுக்கு சம்பாதிக்கி வக்கில்லன்னு காட்டிட்டா. " என வாயிலும் வைத்திலும் அடித்துக் கொண்டு பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்.
"பைரவி என்னதிது?" எனக் காட்டமாக கேட்ட மதுவிற்கு சுடரை பற்றி சொல்லி கோபத்தை ஏற்றி, அந்தக் கோபத்தை இமயமலையின் உயர்ந்த சிகரம் எவரஸ்டில் ஏற்றி வைத்தது சைந்தவியைச் சாரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..