முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 90

அத்தியாயம்: 90



"நாம ஹாஸ்பிடல் போகலாமா? பெட்டிலிடி க்ளீனிக்? என்ன பிரச்சனன்னு செக்கப் பண்ணி ரீட்மெண்ட் பாத்தா நமக்கு குழந்த கிடைக்கும்ல. ரொம்ப நாள் ஆச்சி. கார்டுல கண்பார்ம் பண்ணதுக்கு அப்றம் கலலயுதுன்னா எதாவது பிராப்ளம் இருக்கும்ல." என்றவளிடம், 


"எதுக்கு பைரவி அங்கெல்லாம் போய்க்கிட்டு. மருந்து மாத்திர ஊசின்னு நம்ம உடம்பு கெட்டுடும். நீ சுடர மறந்திட்டு ரிலாக்ஸ்ஸா இருந்தாலே பேபி தன்னால தங்கிடும். எப்ப பாத்தாலும் அவளப் பத்தி பேசிட்டு." எனச் சிடுசிடுவென பதில் வந்தது.


'சுடரின் ப்யூனரல்க்கு போய்ட்டு வந்ததுனால தான குழந்த தங்கல.‌ போகலன்னா இன்னேரம் குழந்தையே கைக்கு வந்திருக்கும். எப்ப பாத்தாலும் அவளோட வழக்கை விசாரிக்கிறேன்னு சுத்தி திரிந்தால் எப்படி குழந்தை கிடைக்கும்.' என்ற கடுப்பு தான் வந்தது. 


பைரவி தான் மனதில் தோன்றியது எதுவாக இருந்தாலும் செய்து விடுவாளே. உடனை புறப்பட்டு விட்டாள் கருத்தரிப்பு மையத்திற்கு. அங்கு சில பல சோதனைகள் செய்ய மதுவை அழைத்து வர சொன்னார்கள்.  


யாருக்கும் தெரியாமல் கணவனிடம் பொய் கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த பைரவி சைந்தவியிடம் மாட்டிக் கொண்டாள். அதுவும் மருத்துவமனையில் மருத்துவர் அறைக்குள் சென்ற போதே பார்த்துவிட்டாள். உடனே ஃபோன் செய்தாள் தன் தாய்க்கு. 


" உன்னோட ஹஸ்பெண்ட் இல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது. அடுத்த மொற வரும் போது அவரையும் கூட்டீட்டு வா." என்ற டாக்டரிடம், பைரவி மதுசூதனனைக் கட்டாயம் அழைத்து வருவதாக வாக்கு கொடுக்க, அதை ஜெயா அழைத்து வந்த மதுசூதனன் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்து. வழக்கம் போல் மதுவின் ஆதரவு கிடைக்காது போக பைரவி வீட்டை விட்டு வெளியே விட்டாள்.


"எங்க வீட்டு பிள்ளைய ஆம்பளையா இல்லயான்னு சோதன பண்ணி பாக்குற அளவுக்கு உனக்கு திமிரு கூடீடுச்சு. எல்லாம் நீ குடுக்குற இடம்." என ஆரம்பித்தவர் என்னென்ன வார்த்தைகளை உபயோகித்தால் மது  ட்ரிகர் ஆவான் எனத் தெரிந்து அதை உபயோகித்து, டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கி கோர்ட்டுக்கு அனுப்பி விட்டார். 


மதுவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் பைரவி காக்கி உடையைத் தேர்வு செய்ததில் இருந்தே ஒருவித வெறுப்பு உண்டாகியிருக்க, அடுத்தடுத்து அவள் செய்யது எல்லாம் உடன்பட வைத்து விட்டாள்.


மதுவிற்கு பைரவியின் மீதிருக்கும் வெறுப்பு குறையாதவாறு தினமும் இரு முறை ' சம்பாதிக்க முடியாத ஆம்பளன்னு உன்ன சொல்லாம சொல்லிட்டா. பிள்ள பெக்க விருப்பமில்லாம அவ மேல குறைய வச்சிட்டு உன்னால தான் பிள்ளையே பிறக்கலங்கிற மாதிரி உன்ன ஆம்பளையான்னு கேள்வி கேக்குற மாதிரி பண்ணிட்டு வந்திருக்கா. 


அவளால உ சித்தப்பா எவ்ளோ பேர்க்கிட்ட பேச்சு வாங்குறாரு தெரியுமா! அவமானமா இருக்கு. வீட்டுக்கு வந்த மருமக வேலைக்கி போய்த்தா குடும்பமா உக்காந்து சாப்பிடுறீங்களான்னு நேரடியாவே கேக்குறாங்க. குடும்ப மானமே போச்சி. 


நல்லவேள அவள நீ தள்ளி வச்ச. இல்லன்னா இந்த வீட்டுக்குன்னு இருக்குற ஒரே வாரிசான உன்ன எங்க கிட்ட இருந்து பிரிச்சி கூட்டீட்டு போயிருப்பா. ' என அழுத்தி அழுத்தி பேசிக் கொண்டே இருப்பார். 


"அவங்க சொல்ற மாதிரிலாம் எதுவும் கிடையாது மாமா. நான் ஏன் டாக்டர பாத்தேன்னு சொல்றேன். ஒரே ஒருக்க பொறுமையா கேளுங்க. நாம பேசிப்போம். " என அவள் பலவாறு கேட்டும் அவளின் பேச்சை கேட்காது விலக்கியே வைத்திருக்கிறான்.


அவனின் பலவீனம் அவள். அவளின் பலவீனம் அவன் எனும் போது நெருங்க அனுமதிக்கவில்லை மது. 


பிரிந்து நிற்கின்றனர். 


பிரிவு அனுபவத்தை தரவல்லது. 


ஆனால் சிலருக்கு.


பெரும் துயரை தந்துவிடுகிறது. 


இது நிரந்தரமல்ல. 


புரிதல் என்ற சூரியன் உதிக்கும் வரை. 



பைரவி மதுவைப் புரிந்து கொண்ட அளவுக்கு பைரவியை மது புரிந்து வைத்திருந்தானா என்றால் அது கேள்வி குறியே! அவளின் சேட்டைகளையும் செயல்களையும் ரசிக்கும் அவனுக்கு ஏன் என்ற புரிதல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்ல. 


"சரி விடு பையூ. உங்க ரெண்டு பேர் மேலயும் சின்ன சின்ன தப்பு இருக்கு. பட் பெரிய தப்பு மது அண்ணா உன்ன பேச அனுமதிச்சிருக்கணும். நீ எதுக்கு டாக்டரா பாக்க போன. எதுக்கு மது அண்ணாவ கூட்டீட்டு வர்றதா சொன்ன. " என்றாள் சாரு. அவளிடம் தான் இவ்வளவு நேரமும் நடந்ததை கூறிக் கொண்டு இருக்கிறாள். 


" குழந்தைங்கிறது வரம் சாரு. அது கிடைக்காதான்னு ஏங்கி ஏங்கி தவிக்கிற எனக்கு அது ஒரு சாபமா மாறிடுச்சி. என்னால குழந்த பெத்துக்க முடியாது சாரு. நாலு மாச கருவ கூட தாங்குற அளவுக்கு என்னோட கர்ப்பப்பைக்கு சக்தி இல்லயாம். 


கரு முட்ட ஆரோக்கியமா இருக்கு. பேபி ஃபார்ம் ஆகுது. நல்லாவே வளருது. ஆனா அத தாங்கி பிடிச்சி வளக்குற யூட்ரஸ் எண்டோமெட்ரியம் வீக்கா இருக்காம். அதுக்கு என்ன பண்ணலாங்கிறப்ப. ரெண்டு வழி தெரிஞ்சது. ஒன்னு ட்ரீட்மெண்ட். அப்பயும் முடியலன்னா வாடக தாய். இதுக்கான முடிவ நான் மட்டுமே எடுக்க முடியாது இல்லயா. அதுனால தான் அவர கூட்டீட்டு வர்றேன்னு டாக்டர்கிட்ட சொன்னேன். 


எங்க ரெண்டு பேருக்குமே குழந்தைக்கான ஆச இருக்கு. அதுல அவருக்கு அதிகமாவே இருக்கு. ஏன்னா அவரோட எதிர்பார்ப்பு எல்லாமே குடும்பம் தான். தனி மரமா நான் இருந்த மாதிரி எம்பிள்ளைங்க இருக்க கூடாது. கொறஞ்சது நாலு குழந்தையாது பெத்துக்கணும் டெடின்னு எங்கிட்ட பல தடவ சொல்லிருக்காரு. அதுனால அவரும் சம்மதிப்பான்னு நினைச்சேன். 


பட், என்னைப் பேச கூட விடல. நான் அவர டெஸ்ட் பண்ணி பாக்க கூப்பிடுறதா அவங்க சொல்லும் போது ரொம்ப வலிச்சது சாரு. வேலைக்கு போக முடியாது, இஷ்டப்படி கண்ட நேரத்துக்கு சுத்த முடியாது, அழகு போய்டும்னு அவங்க டிசைன் டிசைன்னா காரணங்கள அடுக்கும் போது அப்படில்லாம் இருக்காதுன்னு ஒரு புருஷனா ஒரு வார்த்த. ஏன் பார்வையால கூட அவரோட சப்போட் கிடைக்கும்னு எதிர் பாத்தேன் சாரு‌. நாலு வர்ஷம் கூட வாழ்ந்தவனுக்கு என்னோட மனச புரிஞ்சிக்க நேரம் கிடைக்கல. அது தான் எனக்கு வலிச்சது. 


டிவரஸ் ஆனாலும் நான் எதுக்காக டாக்டர பாத்தேன்னு அவெங்கிட்ட சொல்லிட்டா பிரச்சன முடிஞ்சதுன்னு நினைச்சேன். அவங்க என்ன பேசியிருந்தாலும் அப்படியான்னு என்னை ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்னு மனசு கிடைந்து தவிச்சது. இதுக்கு முன்னாடியும் எத்தனையோ சண்ட வந்திருக்கு. மேக்சிஸ் ஒரு வாரம் மினிமம் ரெண்டு நாள்ள அது சால்வ் ஆகிடும். ஏன் நான் வேல ஜாயின் பண்ணப்போறேன்னு சொன்னப்ப டைவர்ஸ்ங்கிற பேச்ச எடுக்கல. சப்போட் பண்ணலன்னாலும் அமைதியா இருந்தாரு. நாங்க மனசு விட்டு பேசுனா போதும். ஆனா அதுக்கான வாய்ப்ப தரவே இல்ல. " எனக் கண்ணீர் சிந்தினாள் பெண். 


அவளை‌ப் பொருத்த வரை தாம்பத்திய என்பது ஒரு உணர்வு. அழுகை சிரிப்பு சோகம் பசி வலி போன்றது. அதைக் கணவனிடம் தன் தேவைகளைச் சாதித்துக் கொள்ளும் கருவியாக உபயோகிக்க நினைத்தது இல்லை. தேவைக்காக என் உடலை காட்ட நான் ஒன்று விபச்சாரி இல்லை என்பாள். கணவனே ஆனாலும் கூடல் காதலாக காமமாக மட்டுமே நடக்க வேண்டும். காரியம் சாதிக்க அல்ல. 


ஆனால் காரியங்கள் சாதிக்கத்தான் அவள் தலையணை மந்திர போடுகிறாள் என்று ஜெயா கூறும் போது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது மதுவிற்கு.  


"இதுவர ரெண்டு வழி தான் இருக்குன்னு நினைச்சேன். ஆனா மூனாவதா ஒன்னு இருக்குன்னு மூன்னாளுக்கு முன்னாடி தான் தெரிஞ்சது. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட அவனுக்கு குழந்த குடும்பம் ரெண்டுமே கிடைக்கும் தான. பண்ணிக்கட்டும். தாராளமா பண்ணிக்கட்டும். எனக்கு என்ன வந்தது. அவனாது சந்தோஷமா வாழட்டும். " என போர்வை மூடிக் கொண்டு சிறு குழந்தை போல் சத்தமாக அழ, தன் தோழியின் கண்ணீரைச் சாருவால் நிறுத்தவே முடியவில்லை. 


"என்னை என்னோட ஃபீலிங்ஸ புரிஞ்சிக்காத ஒருத்தன நான் ஏன் இவ்ளோ விரும்புறேன்னு எனக்கே அது தெரியலயே. ரூபி பக்கத்துல வந்து அவெ நிக்கும் போது உடமெல்லாம் எரிஞ்சது சாரு. நான் ரொம்ப செல்ஃபிஸ்ஸா மாறிட்டேன் சாரு. 


என்னோட மதுவ. என்னோட ஆல்கஹால யாருக்கும் விட்டு குடுக்க கூடாதுன்னு சுயநலமா யோசிக்க சொல்லி ஹார்ட் சொல்லுது. ஆனா புத்தி உன்ன மதிக்காத இடத்துல உன்ன புரிஞ்சிக்க விரும்பதா ஒருத்தனுக்காக உன்னோட சுயமரியாதைய விட்டு குடுத்து இறங்கி போகாதன்னு சொல்லுது. இப்ப நான் என்ன பண்ணுவேன். " எனப் புலம்பிய படியே அழ, சாரு பாண்டிக்கு ஃபோன்  செய்தாள். 


" இது பவரு கம்மியானது தானாம். " என ஒன்றிரண்டு தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து தந்தான் பாண்டி. 


"யாருக்கு இது?" என்றான் ராக்கி பாய்.


" பைரவிக்கு. அழுதிட்டே இருக்காம் அது. " பாண்டி பதில் தர,


"அவா எதுக்கு அழனும்‌‌. நியாயமா பாத்தா சந்தோஷமால்ல இருக்கணும் அவ. அதா எந்நண்பன ஆள் விட்டு அடிச்சிருக்களே. இன்னைக்கி தான் அவளுக்கு நிம்மதியான தூக்கம் வரும். 


எப்படி இருந்தவே அவென்னு தெரியுமா. என் நண்பெ சும்மா கெத்தா மிடுக்கா கம்பீரமா சுத்திட்டு இருந்த அவன, என்ன மாறி மாத்தி வச்சிருக்கா பாரு. ச்ச… அவளால எம்ஃப்ரெண்டோட வாழ்க்கையே திசை மாறி போய்டுச்சி. " என்ற ராக்கியை முறைத்தபடியே படிக்கட்டில் ஏறினாள் சாரு. 


"என்ன மொறப்பு. இந்த பாய் அவ மேல கோபமா இருக்கேன்னு சொல்லு. முடிஞ்சா எழெட்டு பிட்டு சேர்ந்தே போட்டு சொல்லு." எனக் கத்தினான் ராக்கி. 


விடாது அழுது புலம்பியவளுக்கு மாத்திரைகளைக் கொடுத்து உறங்க வைப்பது பெரும் பாடாக இருந்தது. பைரவியுடன் மது மனம் விட்டு பேசியுருந்தாலே போதும். வீணாக சுற்றி இருப்பவரின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து சண்டையிட்டு கொண்டு பிரிந்திருக்கின்றனர். இதில் இருவர் மீது சாருவிற்கு தவறு உள்ளது போல் தோன்றவே அந்தப் பிரச்சனையை, பிரச்சனையைப் பற்றி பிரச்சாரம் செய்யும் பிரச்சனை தம்பதியர்களிடமே விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதே சாலச்சிறந்தது என்ற முடிவெடுத்து தோழிக்கு ஆறுதலாக இருந்தாள் சாரு. 


காலை பத்து மணி. 


முகத்திற்கு நேராக வந்து விழுந்த சூரியக் கதிர் சருமத்திற்கு எரிச்சலை தர, "ம்ச்... சாரு ஸ்க்ரீன இழுத்து விடு மூஞ்சில வெயிலடிக்குது டி. " என்றபடி புரண்டு படுக்க, யாரும் சொன்னதை செய்யவில்லை. சூடு தாங்காது கண் திறந்தாள். அப்போது தான் நேற்று நடந்தது நினைவு வந்தது‌. வேகவேகமாக கீழே வந்தவளுக்கு வெறும் வீடு தான் காட்சி தந்தது. 


"என்ன யாரையும் காணும். " என்றவள் சாருவிற்கு ஃபோன் செய்து எங்கே உள்ளீர்கள் என்று கேட்க,


"கோயில்ல இருக்கோம்.‌ " 


"கோயிலுக்கா. என்னையும் எழுப்பி விட்டிருக்கலாம்ல. " 


"நீ அழுது அழுது டயர்டா இருந்த டி. அதா விட்டுட்டு வந்தோம். இனிமே நீ குளிச்சிட்டு கோயிலுக்கு வர்றதா இருந்து வா. இல்ல வீட்டுலயே ரெஸ்ட் எடு. இங்க புரவி எடுப்பு நடக்க போது. சூப்பரா‌ இருக்கும். முடிஞ்சா வந்து சேரு. வீட்டுல மங்கை மேடம் இருக்காங்க. ம்… மறக்காம சாப்பிட்டுடு." என்க, 


"சாரு... அது… அது... அவரு. எங்க நைட் ஸ்டே பண்ணாரு‌. ஊருக்குள்ள ஹோட்டல் ரூம் போட்டிருக்காரா." எனத் தயங்கிய படி கேட்க, சாருவிற்கு பைரவியின் ஊஞ்சலாடும் மனம் புரிந்தது. 


"ஹோட்டல்லாம் வேண்டாம் உன்னோட ரூம்க்கு எதிர்ல ராக்கி பாய் கூட தங்கிறேன்னே சொல்லிட்டாரு. " 


"சாப்டாரா… காலைல நைட். " 


"நைட் தெரியல. பட் காலைல ஆச்சி. மூணு இட்லி. கொஞ்சம் கார சட்னி, தேங்கா சட்னி, தக்காளி சட்னின்னு கலர்கலரா சட்னிய வச்சி. பக்கத்துலயே ஒரு கப் க்ரீன் டீ. ரெண்டு அவிச்ச முட்டையோட வெள்ள கரு. கொஞ்சம் மூளக்கட்டுன பயறு. மெனு ஓகே தான. லன்ச் மெனு சொல்லவா. " எனக் கேலியாக கேட்க, 


"இல்ல இல்ல வேண்டாம். இப்ப அவரு எங்க?" 


"அடியே அத நீயே தேடி பாத்து தெரிஞ்சுக்க. கோயில்ல இல்ல. " என்றவள் வைத்துவிட, பைரவி உடைகளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள்‌ சென்றாள். 


ஷவர் எல்லாம் கிடையாது.‌ வாளியில் தண்ணீரைப் பிடித்து வைத்து தான் குளிக்க வேண்டும். எப்படி தன்‌ கணவன் குளித்தான் என்ற யோசனையுடனேயே குளித்தவள், மது தங்கியதாக சொன்ன அறையை எட்டு பார்த்து அதன் சௌகரியங்களை ஆராய்ந்தாள். வீடு முழுவதும் தேடிப்பார்த்து காணாது போன கணவனை எண்ணி சோர்ந்து போனது மனம். 


அவளுக்கு எப்படி தெரியும் இரவு முழுவதும் ஆடவனின் கை அணைப்பில் உறங்கியது. எதைச் சுமை என்றானோ அந்தச் சுமையை பஞ்சு பொதியை மார்பில் சுமந்த படி தான் துயில் கொண்டான் மது. 


மதுவின் மனம் ரணமாய் தகித்தது. இன்று பேசிய பைரவியின் குரல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. எந்த அளவுக்கு அவளைக் காயப்படுத்தி உள்ளோம் என்று புரிந்தது. அவளைக் காணும் ஆவல் வர அறைக்கு வந்தவனைத் தடுத்தாள் சாரு. 


" நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு நான் நினைக்கவே இல்ல அண்ணா.‌ கல்யாணங்கிறது நல்லா வளந்த ஒரு செடிய வேரோட பிடுங்கி வேற இடத்துல நட்டு வைக்கிறதுக்கு சமம். அது வேர் விட்டு வளரணும்னா அதுக்கு காத்து, தண்ணி வெளிச்சம் இதெல்லாத்தையும் காட்டிலிலும் தரமான மண்ணு தேவ. 


மாமனாரு மாமியரு சொந்தம் எல்லாமே அந்த இத்தியாதிக தான். அவங்க இல்லன்னாலும் புருஷன் மட்டும் இருந்தா, புரிஞ்சிக்கிட்ட அனுசரிக்கிற நல்லவனா இருந்தா வேர் விட்டு உங்க தலமுறைய தூக்கி செமக்க பலத்த தரும்‌. 


அவ பேச்ச கேக்க வேண்டிய நீங்களே அவளுக்கான இடத்த தராதப்போ, மத்தது எல்லாமே வேஸ்ட்டு தான். இத சொல்ல எனக்கு கஷ்டமாத்தா இருக்கு. பட் பைரவிய டிஸ்டர்ப் பண்ணாதிங்க. ப்ளீஸ். 


ஏன்னா மாமனாரு மாமியாரு நாத்தனாரு செய்ற கொடுமைய கூட தாங்கிக்கலாம் புருஷனுக்காக. ஆனா யார நம்பி கல்யாணம் பண்ணிட்டு வர்றோமோ அவனே எங்களுக்கு ஒதுங்க நிழல் தராதாப்போ, விலகிடுறது தான் சரி. உங்க லைஃப் ரூபி கூட கண்டிப்பா சிறப்பா அமையும்.‌ உங்கள டிஸ்டர்ப் பண்ணாத பெஸ்ட்டான வைஃப்பா அவ இருப்பா. எம்ஃப்ரெண்ட விட்டுடுங்க. " என இருகரம் குவிக்க,


"ஏய் சாறு என்ன நீ இப்படி பேசுற. அவ தான். " என ஆரம்பித்த ராக்கியிடம் ஒரு கரம் உயர்த்தி போதும் என்றவள்,


"உங்களால பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியாது.‌ அட்லீஸ்ட் முயற்சி செஞ்சா கூட ஒத்துக்கலாம். ஆனா ம்ச்… அவ சரியாத்தா சொன்னா. 'யாரும் எங்கள சேத்து வைக்கிறோம்னு அவர்ட்ட போய் பேச வேண்டாம். அவரா புரிஞ்சிட்ட வந்தா மட்டும் தான் நல்லது.'ன்னு. இனி நீங்க புரிஞ்சிக்கிட்ட என்ன! புரியலன்னா என்ன. " என்றபடி உள்ளே சொல்ல,


"மச்சா இந்த பொம்பளைங்க எல்லாம் கூட்டணி போட்டுட்டு உன்ன ஆட்டத்துல இருந்து விலக்கி விட பாக்குறாங்க. கவனமா இரு. " என ராக்கி எச்சரித்தான்.


'நீ யாரு பக்கம் டா. அவகிட்ட போய் உருக்கமா பேசாற. எங்கிட்ட வந்து வார்ணிங்லாம் குடுக்குற. ஏன் இப்படி டபுள் சைடு கேம் விளையாடுற. ' என்பது போல் பார்க்க, மதுவிற்கு உதவ தாமரை இருக்காளே. அவள் போதும். 


"அதா நம்மூர் கோயில்ல பொங்கல வச்சாசில்ல. இனியும் ஏன் அண்ணனையும் மதினியையும் பிரிச்சி வச்சிருக்கிங்க. " எனத் தன் அன்னையிடம் கூறி சாருவிற்கும் பாண்டிக்கும் முதலிரவை ஏற்பாடு செய்து சாருவைத் துரத்தி விட்டவள், மதுவிற்காக பைரவியின் அறைக்கதவை திறந்து வைத்தாள். 


வெகு நாட்களுக்கு பின் கிடைத்த மனைவியுடனான இரவு. காமமற்று காதலாய் அமைந்தது அந்த இரவு. 


 தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...