முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 91

 

அத்தியாயம்: 91


அது ஸ்டோர் ரூம். பழைய பொருட்களை போட்டு வைக்கும் இடம். அங்கு தான் பைரவி தன் தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறாள். வீட்டில் யாரும் இல்லை என்பதால் வந்த வேலையாவது பார்க்கலாம் கண்டதை நினைத்து நேரத்தை விரையமாக்காது செயல் பட தொடங்கி விட்டாள்.


"என்னென்னமோ இருக்கு. ஆனா நாம தேடுறது மட்டும் இருக்க‌ மாட்டேங்கிது. ஏன்?. " எனத் தலையில் படிந்திருந்த ஒட்டடையைத் தட்டிய படி நின்று யோசிக்க,


"என்ன தேடுறன்னு சொன்னா நானும் தேடுவேன்." எனப் புன்னகையுடன் வந்தான் தீஷித். அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், 


" முதல்ல உங்களுக்கு குடுத்த வேலைய முடிங்க ஸாரே. அடுத்து அடுத்தத சொல்றேன். இன்னும் காணமா போன ஃபோன கண்டு பிடிக்கவே இல்ல. ஆமா நீங்க எங்க இருந்து வர்றீங்க. கோயிலுக்கு போகலயா. " 


" இல்ல. நான் எம்ஃப்ரெண்டுக்கு உதவி பண்ண தான் நைட் முழுக்க ஃபோன தேடீட்டு இருந்தேன். ஆனா அந்த ஃப்ரெண்டுக்கு நான் பண்ற உதவியெல்லாம் கண்ணுக்கு தெரியதா மாட்டேங்கிது. " எனக் குறுப்புடன் சொல்ல,


"எதுவும்‌ கிடைச்சதா… ஃபோன்?? கிடைச்சிடுச்சி தான. " என ஆவலாக கேட்க, 


"அக்சலி எனக்கு ஒரு நியூஸ் கிடைச்சது. அத அப்பவே சொல்லிடலாம்னு தான் உன்னோட ரூம் கதவ தட்டுனேன். பட்..." 


"நான் தூங்கிருப்பேன். ஸாரி. ஏன்னு தெரியல நேத்து அப்படி ஒரு தூக்கம். ரொம்ப நேரம் தட்டினீங்களா?" 


"ச்ச ச்ச… ரெண்டு தட்டு தான். மூனவதா தட்ட கைத் தூக்கும் போதே கதவு திறந்திடுச்சி. " 


"தாமரையா? " 


"இல்ல. உன்னோட X husband. அவெந்தா கதவ திறந்தான். என்னைப் பாத்திட்டு கதவ மூடிட்டான். " 


"மதுசூதனனா! என்னோட ரூம்லயா? நீங்க மாத்தி கதவ தட்டீட்டிங்கன்னு நினைக்கிறேன். " 


"முதல்ல அப்படி தான் நானும் நினைச்சேன். பட் ஒரு மணி நேரத்து முன்னாடி அதே ரூம்ல இருந்து நீ வெளில வந்த. சோ… ஒன் ப்ளஸ் ஒன் த்ரி. என்ன! தர்மடி வாங்கி குடுத்ததும் ஹஸ்பெண்ட் மேல கருண வந்திடுச்சி போலயே. " எனக் கேலியாக கூற, பைரவியின் மூச்சு சைக்கிள் பம்பு போல் ஏறி ஏறி இறங்கியது.‌


'அடப் பாவி இத போட்டுக் குடுக்கத்தா கோர்ட்டு சூட்டோட இந்த வேகாத வெயில்லயும் சுத்துறியா. '


சுல் எனக் கோபம் வர பெற்றவள் வேகமாக சாருவிற்கு அழைத்தாள். "அப்படியா!. எனக்கு எதுவும் தெரியாது டி. நேத்து நாள் நல்லாயிருக்குன்னு சம்பிரதாயத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. என்னால மறுக்க முடியல. ஆனா தாமர உங்கூட தான் இருந்தேன்னு சொன்னாளே. பொய் சொன்னாளோ. " 


"கண்டிப்பா இது அந்த லோட்டஸ் வேலை தான். வரட்டும் அவளுக்கு இருக்கு. " எனப் பொறுமியவளுக்கு தீஷித் எதையோ எடுத்து பார்ப்பது தெரிந்தது. 


"அது என்ன தீஷ்? " 


"பொம்ம… மரப்பாச்சி பொம்ம. கேள்வி பட்டிருக்கியா." 


"இல்ல. என்ன பொம்ம தேஞ்சி போய் இருக்கு. "


"சின்ன வயசுல தலவலி காய்ச்சல்லாம் வந்தா இத உரசி தலைல பத்து மாதிரி போடுவாங்க. " என அதை நீட்ட, அதை வாங்கிய பைரவியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். இன்னும் என்னென்ன இது போல் உள்ளன என இருவருமாய் தேட, நிறைய கிடைத்து பைரவி தேடிய பொருள் மட்டும் கிடைக்கவே இல்லை. 


" என்னததுன்னு சொன்னா தேடி எடுக்கலாம். " 


"அது தெரியல. பட் அது அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட் தந்தது. அத வச்சி யாரு அந்த ரகசிய காதலன்னு ஒரு க்ளூக் கிடைக்கும்னு நினைச்சேன். எதுவுமே கிடைக்கல. ஃபோன்… கிஃப்ட்... ஹிம்." எனப் பெருமூச்சு ஒன்றை விட, அவளின் முன் வந்து நின்றவன் நடனமாடும் விழிகளைப் பார்த்தவாறு,


"நீ ஓகேவா. " எனக் கேட்டான்.


"ம்... ஓகே தான். " என்றவள் அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள். 


"பொய் டாம். நேத்து மிஸ்டர் மதுசூதனன பாத்ததுல இருந்து வீக்கனா மாதிரி இருக்க. "


" அப்படில்லாம் இல்ல. அப்படியே சரியில்லாம இருந்தாலும் நான் என்னைச் சரி பண்ணிப்பேன். வாழ்க்க ஒரு வட்டம். இங்க கஷ்டம் சந்தோஷம்  துக்கம் மகிழ்ச்சின்னு எல்லாமே வந்து வந்து போய்க்கிட்டே தான் இருக்கும். அதுக்காக நாம அது கூடவே போய்ட கூடாது.  போனது போட்டும்னு வர்றத வரவேற்க ஆரத்தி தட்டோட ரெடியா இருக்கணும். இது இந்தப் பைரவியோட கொள்க. " என வீர வசனம் பேசினாலும் அவளின் சோர்ந்த முகம் கவலையைத் தந்தது.


"உன்னோட ஃபோன் தா. " என்றவனிடம் அதைத் தர‌, வாங்கியவன், 


"இதுல ஒரு ஆஃப் இறக்கிருக்கேன். இன்கேஸ் அந்த காணமா போன ஃபோன் எப்ப ஸ்விட்ச் ஆன் ஆனாலும் உனக்கு அதோட லோக்கேஷன காட்டிடும். மூமெண்ட் இருந்தாலும் காட்டும். " என்றவன் எதேதையோ இறக்கி தந்தான். 


"அப்ப அது எங்கைக்கு கிடைக்கிற வர கூட இருக்க மாட்டிங்களா. " என்றவளின் ஏக்கமான பேச்சு அவனுள் என்ன மாதிரியான உணர்வை தரும் என்று பாவம் அவளுக்கு எப்படி தெரியும். 


"கூடவே இருக்கணும்னு ஆச தா‌ன். பட், முடியாதே. வேலை இருக்கு. " 


"எப்ப கிளம்ப போறிங்க? " என்றவளின் குரலில் சோகம் இளைந்தோடியது. 


" இப்பவே. " என்றபோது அவள் முகம் சுருங்க, 


"இல்ல. குதிர எடுப்பு முடியவும். நைட்… " 


"அப்ப இப்ப வாங்க நாம அந்த டவர் பக்கம் போய் பாத்திட்டு வருவோம். எதாவது கிடைக்கிதான்னு.‌." என முன்னே நடக்க,


'இதுக்கு தானா. ' என்றிருந்தாலும் உடன் சென்றான்.


வழக்கம் போல் எதுவும் கிடைக்காததால் புலம்பிய படியே வந்தாள் பைரவி. 


"நான் போட்ட சவால்ல ஜெயிக்க நாள் கம்மியாகிட்டே போது. யாரு சுடர கொன்னவங்கன்னு எப்படி கண்டு பிடிக்கிறது. உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா. " 


"நீ சரியான ரூட்ல தான் போய்க்கிட்டு இருக்க. எவிடஸ்ஷே இல்லாம யாராலயும் கொல பண்ண முடியாது. கண்டிப்பா எதையாது விட்டுட்டு போயிருப்பான். கண்டிப்பா கிடைக்கும்." 


"எத விட்டுட்டு போனான்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள என்னைக் கண்டுபிக்கச் சொல்லி பேப்பர்ல நியூஸ் வந்தாலும் வந்திடும். " என்க, தீட்ஷித் சிரித்தான்.


கேள்வியும் அவளே பதிலும் அவளே என்பது போல் அவளே சோர்ந்து கொள்கிறாள். பின் அவளுக்கு அவளே எதையாவது சொல்லி உற்சாகப்படுத்திக் கொள்கிறாள். அவனின் டாம், தோல்வியை ஏற்காது மீண்டும் மீண்டும் சென்று ஜெர்ரியிடம் அடி வாங்கும் கார்ட்டூன் டாம் தான். 


இருவரும் முட்காட்டில் நடந்து கோயிலை நோக்கி செல்ல, அங்கு மதுசூதனனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. கூடவே அதன் அருகில் நின்று கொண்டு ராக்கியும் மதுவும் தீவிரமாக எதையோ ஆலோசிப்பது போல் இருந்தது. 


"நாம வேணும்னா வேற பாத வழியா கோயிலுக்கு போய்டலாமா. " எனத் தீஷித் கேட்க, அவனைத் திரும்பி பார்த்தவள் முன்னே காரை நோக்கி நடந்தாள். 


" அப்ப நீ ஒரு முடிவோட தான் இருக்க. "


"எஸ். "


"ஆரத்தி தட்டோட வரவேற்க. " எனக் குறுஞ்சிரிப்புடன் கேட்க, திரும்பி அவனை நோக்கி வந்தவள்.


"உங்களுக்கு ப்ரேக் வயர் எதுன்னு தெரியுமா. எனக்கு பைக்ல எப்படி இருக்கும்னு தெரியும். பட் கார் பழக்கம் இல்ல. ஹெல்ப் பண்ணிங்களா ப்ளிஸ். " எனக் கணவனின் கார் ப்ரேக்கை கட் செய்ய உதவி கேட்டாள் பைரவி. 


"ப்ரெக் பிடிக்கலன்னா என்னாகும்னு தெரியும் தான. " 


"நல்லாவே தெரியும். நான் ஒன்னும் சின்ன குழந்த கிடையாது. எனக்கு உதவி பண்ண முடியுமா முடியாதா.‌" 


"நீ கேட்டு இல்லன்னு சொல்லுவேனா. இந்தா. " என கோர்ட்டை கலட்டி கொடுத்தவன் காருக்கு அடியில் செல்ல போக, 


"ஒரு நிமிடம். " என்றவளிடம் என்ன எனக் கண்களால் கேட்க,


"நீங்க சொன்ன மாதிரி ப்ரேக்க கட் பண்ணா காருக்கு மட்டுமில்ல ஆளுக்கும் சேத்து தான் டேமேஜ் ஆகும். நேத்து ஆள டேமேஜ் பண்ணியாச்சி. இப்ப கார மட்டும் பண்ணா போதும். டயர்ல காத்த இறக்கி விட்டிடலாமா. " என மனமிறங்கி வர,


"ஈஸியா காத்த ஃபில் பண்ணிட்டு போய்டுவான். பக்கத்துலயே பங்க் இருக்கு. "


"பன்சர் பண்ணி விட்டா. அதுவும் நாலு டயரையும். மெக்கானிக் ஷெட்டுக்கு தான் போகணும். எக்ஸ்போர்ட் கார் வேற. கொறஞ்சது ரெண்டு நாள் ஆகலாம். " எனத் திட்டமிட்டு இருவரும் சேர்ந்து பெரிய மூட்களாய் பார்த்து எடுத்து வந்து டயருக்கு அடியில் நட்டு வைத்தனர். 


"நான் அவங்கள பேசி டைவட் பண்றேன். நீங்க கரெக்டா வச்சிடுங்க. " என்றவள், 


" எந்த நாட்ட பிடிக்க இந்தத் தீவிர யோச கூட்டம் நடக்குது. " என்றபடி இருவருக்கும் முன் வந்து நிற்க, மதுவின் விழிகள் பைரவியை விட்டு நகரவே இல்ல. உறைந்து விட்டான். 


" என்ன நீ மட்டும் வந்திருக்க. உன்னோட அடியாளுங்க எங்க?" என ராக்கி தேடிப் பார்த்தான்.


"பாய் நீங்க யாரு பாய். ஒரு நாள் எனக்கு ஆதரவா பேசுறிங்க. மறுநாள் வந்து கோபமா திட்டுறீங்க.. நக்கலா பேசி கிண்டல் பண்றிங்க. உதவி பண்றிங்க. அப்றம் பண்ண மாட்டேன்னு முறுக்குறீங்க. யாரு தான் நீங்க. " எனப் புன்னையுடன் கேட்டாள்.


" பாய்... ராக்கி பாய். ஞாயத்துப் பக்கம் சாயிர தராசு முள் மாறி தான் நான். யாரு பக்கம் நீதி இருக்கோ, அந்தப் பக்கம் ராக்கியோட சப்போட் இருக்கும். " 


"நல்லா தெரியுமே உங்க நியாயம். " என இதழ் சுழிக்க, 


" ஹாய் ஹைஸ். " என்றபடி தன்‌ டாம் சொன்ன வேலையை முடித்துவிட்டு வந்தான் தீஷ். மதுவின் கையில் இருந்த காகிதங்களைப் பார்த்து,


"என்னதது. " என்க, பாய் பதில் சொல்லும் முன் மது,


" உனக்கு அது தேவையில்லாதது. கெஸ்ட்டா வந்தியா கெஸ்டாவே போய்டு. ஸ்டே அவே." என விலகி இருக்கச் சொன்னான்.


"அவரு ஏன் விலகி இருக்கணும். அத்தோட அவரு ஒன்னும் கெஸ்ட் கிடையாது. அவரு என்னோட ஃப்ரெண்டு. எனக்கு உதவி பண்ண தன்னோட பொன்னான நேரத்த எனக்காக செலவு செஞ்சி வந்திருக்காரு. மத்தவங்க மாதிரி வேலைய காரணம் சொல்லி ஓடி போகல. " எனக் கரம் கோர்த்துக் கொள்ள, மது பைரவியின் கரம் பற்றி தன் பக்கம் இழுக்க பார்த்தான். ஆனால் தீஷித்தின் பிடி வலுவாக இருந்தது.‌


'அவளாக வந்தாள் உனக்கு கிடைப்பாள். வலுக்காட்டாயமாக இழுத்தால் உனக்கு நான்‌ விட்டுத் தர மாட்டேன். ' என்பது போல் இருந்தது அந்த பிடி. இருவரும் முறைத்தபடி நிற்க, அதற்கு காரணமாக பைரவியோ மதுவின் கையில் இருந்த காகிதங்களை எட்டி பார்த்து,


"இது அரசனூர் கேஸ் டீடெய்ல்ஸ்ஸா! அது எதுக்கு உங்களுக்கு? " 


" நாங்க விசாரிக்க போறோம். " என்றான் ராக்கி.


"ஆனா நீங்க சுடர் கேஸ்காகத்தான வந்திங்க. இப்ப இத எதுக்கு விசாரிக்கிறீங்க. " 


"எனக்கும் மனசு கேக்கல பைரவி. நான் நானா இருக்க விரும்புறேன். அந்த ஹாஸ்பிட்டல்ல கைல கட்டு போட்டு எம்மாமனாரு உக்காந்து இருக்குறதும். அதுக்கு பக்கத்துல என்னோட மனைவி தாமரை அழுதிட்டே நிக்கிறதையும் எப்ப பாத்தேனோ! அப்பவே முடிவு பண்ணிட்டேன் அந்தத் துயரத்த துடைக்கணும். 


இதுக்கு முன்னாடி இருந்த கண்ணாயிரத்துக்கு அடி பட்டிருந்தா அது எனக்கு நியூஸ். நல்லது செய்ய நினைக்கிறவங்கள ஆண்டவன் சோதிக்கிறான்னு நினைச்சிட்டு அடுத்த பக்கத்துல இருக்குற நியூஸ்ஸ வாசிக்க போயிருப்பேன். இது தாமரையோட அப்பா கண்ணாயிரங்கிறதுக்காக. எங்கண்ணு முன்னாடி நடந்த ஒன்ன தட்டி கழிச்சிட்டு நமக்கென்னன்னு போனா! என்னை நானே மன்னிக்க முடியாது. அதா இதுல இறங்கிட்டேன். " என இதற்கு முன் அவள் பேசிய வார்த்தைகளைப் பட்டி டிங்கரிங்க பார்த்து சொல்ல,


"அப்ப சுடர் கேஸ்.‌" என்றாள் கோபமாக மூச்சை விட்ட படி. 


"நேரம் இருந்தா பாக்கலாம். " 


"பாய். " என அலற, 


"ஏன் எப்ப பாத்தாலும் உனக்கு நாந்தா ஹெல்ப்‌ பண்ணுமா. "


"அதா புது ஃப்ரெண்ட் பிடிச்சிருக்கியே. ww மேட்ச் விளையாடுற அண்டர்டேக்கர் மாதிரி. தன்னோட பொன்னான நேரத்தை செலவு செஞ்சி உனக்கு உதவி பண்ணுவாரு. " மது தீஷித்தை முறைப்படி சொல்ல,


" கண்டிப்பா என்னால முடியும். பட் நான் இறங்கிட்டா சிலருக்கு வாய்ப்பு கிடைக்காதே. ஃபீல் அவுட் ஆகிடுவாங்க. " எனத் தீஷித் மதுசூதனனை உற்று பார்த்தபடி சொல்ல,


" நேத்து கிரிக்கெட் மேட்ச் பாத்தியா தீஷ்!! ஐபீஎல்.‌ செம்மையா இருந்ததுல. அது ஆபோஷிட் டீம நம்ம பவுலர்ஸ் அடிக்கவே விடாம ஃபீல்ல விட்டு வெளிய அனுப்பிக்கிட்டே…. " என்ற ராக்கியை மதுசூதனன் முறைக்கவும் பேச்சை நிறுத்தியவன்.


"ஸாரி மச்சான். ஃபீல்டு அவுட்டுங்கையும் மைண்டு மேட்ச்க்கு போயிடுச்சி. " 


"ம்ச்… பாய் பெங்களுர் போனிங்களே எதாவது கிடைச்சதா. அந்த அட்ரஸ்ல யாரு இருந்தா? அத பத்தி ஒன்னுமே சொல்லலயே நீங்க. "


" போனது நாயில்ல இவந்தா. " என மதுவைக் கை‌காட்டினான். 


" நோ யூஸ். அந்த அட்ரஸ்ல இப்ப யாருமே இல்ல. யாரு இருந்தாங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்ளோ கஷ்டமானது இல்ல. அத இனி பிரவீன் பாத்துப்பான். சீபிஐ காதுல நியூஸ்ஸ போடச் சொல்லி சொல்லிருக்கேன்.  அந்த லோப் டாப்ல எதாவது கிடைச்சதா. " எனப் பைரவியின் முகம் பார்த்து கேட்க, அவள் நிமிர்வுடன் அவனை ஏறிட்டு, 


"லேப்டாப் எங்கைக்கு இன்னும் வரல. " என்க, அவன் ராக்கியை‌ முறைத்தான். 


"அது… வந்து மச்சான். ஒரு ஆவேசத்துல கிளம்புனேனா. அதா லேப்டாப்ப குடுக்க மறந்திட்டேன். பட் அது என்னோட பைல தான் மச்சி இருக்கு. பத்திரமா வச்சிருக்கேன். " என்றான் ராக்கி வேகமாக.


" சாட் பாக்ஸ்ல ஸ்ட்ரேன்ஜ்ஜா தெரிஞ்சா உடனே ஐடிய நோட் பண்ணி எனக்கு இன்பார்ம் பண்ணு டாம். என்னால ட்ரேஸ் பண்ண முடியும். " எனத் தீஷிதன் சொல்ல,


"தேங்க்ஸ் தீஷ். " என உற்சாகமாக சொல்லியவளுடன் பேசிய படியே ராக்கி நடக்க, 


" தேங்க்ஸ் யார் யாருக்கு சொல்லுவாங்கன்னு மிஸ்டர் தீஷிதனுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். you are a third person. "  இருவரின் பின்னால் செல்ல இருந்த தீஷித்தை மதுவின் குரல் தடுத்தது. 


தன் ஃபேன்ட் பாக்கெட்டுக்குள் கரம் புதைத்தவன் தோள்களை உயர்த்தியவாரே திரும்பி மதுசூதனனைப் பார்த்த தீஷித் அவனின் அருகில் சென்று, 


"எனக்கு அப்படி தோனல. I am a special person of Tom. Forever. " என ரகசியம் போல் காதில் விட்டு திரும்பியவன் மதுவின் முறைப்பை கண்டு கொள்ளவில்லை. 


அப்ப எல்லா ஹீரோஸ்ஸும் சேந்து களத்துல குதிச்சிருக்கானுங்க.. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...