அத்தியாயம்: 92
எங்கும் இருள்... வெளிச்சம் என்பது இரு இடங்களில் மட்டுமே இருந்தது. ஒன்று மடிக்கணினியில் மற்றொன்று பைரவியின் விழிகளில். அந்த விழிகளும் இரவில் தெரியும் நட்சத்திரம் போல் மின்னியது.
இந்தப் பைரவிக்கு காதல் என்றால் மிகவும் பிடிக்கும். ரியாலிட்டியில் காதல் நினைத்ததும் போல் இருக்காது தான். பட் சினிமா ட்ராமா மாதிரியான கற்பனை உலகத்தில், அந்தக் காதல் செம்மையா இருக்கும். அது நம் பைரவிக்கு ரொம்ப பிடிக்கும்.
விண்ணைத்தாண்டி வருவாயா, காதலுக்கு மரியாதை, வாரணம் ஆயிரம், அலைபாயுதே, மின்னலே, சில்லுன்னு ஒரு காதல், ஓ காதல் கண்மணியே, ராஜா ராணி, 96, ரெமோ… இன்னும் இருக்கிறது.
ஆபாசம் இல்லாது இரட்டை அர்த்தங்கள் அல்லாது முகம் சுளிக்கும் காட்சிகளாக இருக்காது டீசன்ட்டான ரொமான்டிக் சீன்ஸ் அவளின் இதழ்களுக்கு குறுஞ்சிரிப்பையும் கண்களில் ஆர்வத்தையும் உடலில் சிலிர்ப்பையும் தரும்.
இப்போதும் சிலிர்த்து கொண்டு தான் அமர்ந்திருக்கிறாள். காரணம் சுடரும் அவளின் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட்டும் செய்த லவ் சாட்டை வாசித்துக் கொண்டிருக்கிறாள்.
அடுத்தவர்களின் லவ் லெட்டரைப் படிக்கும் போது வரும் ஃபீலிங் அது. இதழ்கள் கடித்துக் கொண்டு கன்னம் விரிய கண்ணாடி பளபளக்க லேப்டாப்பில் மூழ்கி இருந்த அவளைக் கரைக்கு இழுத்து வந்து போடுவது போல் திடீரென அறை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.
"ஏய் சாரு எரும… லைட்ட ஆஃப் பண்ணுடி. " என பைரவி கத்த,
"லைட் ஆஃப் பண்ணவா! அத ஆஃப் பண்ணிட்டு என்ன பண்ண போற? ஏய் ஒரு வழியா அண்ணா லேப்டாப்பா ஓப்பன் பண்ணி குடுத்துட்டாரா!" என ஆச்சர்யமாக கேட்டாள்.
" குடுத்து தான ஆகணும். இந்த புருஷனுங்க இருக்கானுங்களே அவனுங்க செஞ்ச தப்ப சரி பண்ண, இந்த மாதிரி நாம கேக்குறத ஆசப்பட்டதன்னு எல்லாத்தையும் நிறைவேத்தி தாஜா பண்ணுவானுங்க. அதுலயும் என்னோட தயிர் சாதம் செம்ம கேடி. எனக்கு அவன சமாதானம் செய்றத விட அவனுக்கு என்னை கூல் பண்ண நல்லாவே தெரியும். நானும் சீக்கிரமாவே சமாதானம் ஆகிடுவேன். சில நேரம் தோணும், நாம தயிர்சாத்துக்கிட்ட எமோஷனலா வீக்கா இருக்கேன்னோன்னு. " என்றவளைச் சாரு ஏற இறங்க பார்த்தாள்.
" என்னடி லுக்கு விடுற?"
" இல்ல நேத்து அழுது புலம்புனத பாக்கும் போது நீ அண்ணாவ முழுசா வெறுத்திட்டன்னு நினைச்சேன். "
"எனக்கு அந்த ஆல்கஹால் போதைல இருந்து விடுபட மனசில்ல."
"நிஜமாவா. "
"ம்… "
"ச்ச... நாங்கூட உன்னோட அழுகைய நம்பி அவர திட்டீட்டேன். ரூபிய கல்யாணம் பண்ணிக்கங்க எம்ஃப்ரெண்ட விட்டுடுங்கன்னுலாம் சொல்லிட்டேன். "
"என்னை கேக்கலாம் உன்ன யாரு பஞ்சாயத்து தலைவியா உக்கார சொன்னா. ச்ச… இதுக்கு தான் நான் யார்கிட்டையும் அந்தத் தயிர்சாதத்த பத்தி பேசுறதே கிடையாது. இதோ பார். எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்சனைய நாங்களே சாட்அவுட் பண்ணிக்கிறோம். இனி அதுல உன்னோட கருத்த சொல்லாத. " என்க.
"உனக்கு போய் ஆதரவா பேசினேன் பாரு என்னை சொல்லணும்." என்றவள் பைரவியின் அருகில் படுக்க,
"ஏய் புதுப்பொண்ணு. போயீ உன்னோட அவரு பக்கத்துல படு. ஓய் எம்பக்கம் வர்ற?"
"நாளைக்கி நீ ஊருக்கு போய்டுவ. அதுனால இன்னைக்கி உங்கூட இருக்கலாம்னு நினைச்சேன். "
" அப்ப பார்ட்டி பண்ணலாமா? " எனப் புருவங்களை ஏற்றி இறக்கினாள் பைரவி.
" ப்ரிட்ஜ்ல பவன்டோ இருக்கு. " என்றாள் சாரு.
"ராக்கி பாய் சரக்குக்கு சைடு டிஷ்ஷா நிறைய சிப்ஸ்ஸ வாங்கி தயிர் சாதம் கார் டிக்கில வச்சிருந்தாரு. என்ன! ஆட்டைய போட்டிடலாமா." என உற்சாகமாக சொல்ல இருவரும் பார்டி மூடிற்கு சென்றனர்.
சாரு, "கைல ஸ்னேக்ஸ் எடுத்தாச்சின்னா எதாவது இன்ட்ரெஸ்டிங்கா பாக்கணுமே. "
"பாக்க வேண்டாம் படிக்கலாம். " என லேப்டாப்பை பைரவி காட்ட,
" பட் இது மேனஸ் கிடையாதே. "
"சுடரக்கா இல்லாத நேரம் தெரியாம ஆட்டைய போட்டுட்டு வந்து படிச்சாத்தா தப்பு. அவங்க கேஸ்க்கு இது யூஸ் ஆகும்னு தான் படிக்குறோம். மத்தபடி I am very decent person. " என்றவளை நம்பாத பார்வை சாரு பார்க்க, அவளை மெத்தையில் அமர வைத்து, தலையணையை மடியில் கிடத்தி, அதில் லேப்டாப்பை வைத்தவள், பக்கத்திலேயே டம்பளரையும், பாட்டிலயும் வைத்து விட்டு, டிஸ்கோ லைட்டுகளை ஒளிறவிட்டு, சிப்ஸ்ஸை ஓப்பன் செய்து, அதில் இருந்து ஒன்றை எடுத்து கொறித்தபடி அமர்ந்தாள்.
"எவ்ளோ தூரம் படிச்சிருக்க. அந்த ரகசிய காதலன கண்டு பிடிச்சாசா?"
"கிட்டத்தட்ட. ஃபர்ஸ்ட் ஃபேஸ் புக் மெஸ்சேஜர ஓப்பன் பண்ணேன். எல்லாமே ஹாய், ஹலோ இல்லன்னா சாப்டியா, என்ன சாப்பாடு, குட் மார்னிங், குட் நைட் இதுமட்டும் தான் இருக்கு. அதுலயும் மிட் நைட் பன்னெண்டு மணிக்கு மேல அதிகமா வந்திருக்கு. "
" அவங்க கலந்துக்கிற ஈவென்ட்டோட ஃபோட்டோஸ் எல்லாத்தையே நைட் தான் அப்லோட் பண்ணுவாங்க போல. "
"எஸ், அப்படி ஆன்லயனுக்கு வந்திட்டா நேரம் காலம் பாக்காம மெஸ்ஏஜ் அனுப்புற யாருக்கும் அவங்க ரிப்ளே பண்றதே இல்ல. "
" ஃபேஸ் புக் ஃப்ரெண்ட்ஸ் எக்கச்சக்கமா இருக்கும் போலயே. "
“ம்… முக்கால்வாசி தெரியாத ஃப்ரெண்ட்ஸ். இதுல ஒன்னும் கிடைக்கல. அப்படியே இன்ஸ்டா பக்கமும் இமெயில் பக்கமும் போனா… அங்க நிறைய கிடைச்சது. பாரேன். " என்றவள் இமெயிலை ஒப்பன் செய்து காட்டி,
"நிறைய இருக்கு. பட் அக்காவோட லவ் ட்ராக்குன்னு பாத்தா. இது தான் கிடைச்சது. " எனச் சுடர் யாருக்கோ அனுப்பியிருந்த மின்னஞ்சலை வாசித்தாள்.
"இதுல அப்படி என்ன இருக்கு. 'உங்க ஆர்ட் ஒர்க் நல்லா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு கிஃப்ட் பண்ண இந்த மாதிரி ஒன்னதான் நான் தேடிட்டு இருக்கேன். எங்க இது கிடைக்கும். காண்டாக் டீடெய்ல்ஸ் வேணும்.'ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு அந்தப் பக்கம் இருந்து ரிப்ளே வந்திருக்கு. இதுல என்ன இருக்குன்னு ரொமாண்டிக் லவ் மெஸ்சேஜ் மாதிரி பில்டப் குடுத்த. "
"ம்ச்… என்ன சாரு நீ! சாரதாம்மா கத சொல்லும் போது இதத் தான் கதையா சொன்னாங்க. பாரு நம்ம ஹோம் அட்ரஸ்ஸ சேர் பண்ணிருக்காங்க. அங்க இருந்து வெப்சைட் அட்ரஸ் சேர் ஆகிருக்கு. டேட் கூட செக் பண்ணிட்டேன். நமக்க கைக்கு கிடைச்ச முதல் பார்சல். அதா ராக்கி பாய் திருடீட்டு வந்த பசில் க்யூப். அந்த தேதில இருந்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த நிகழ்வு இது. "
"அப்படின்னாலும் இது ஜட்ஸ்ட் ஃப்ரென்லி டாக் தான். இது மாதிரி நிறைய பேர்கிட்ட இருந்து கிஃப்ட் வாங்கிருக்காங்க. இதுல லவ் எங்க வந்தது. "
"வந்திருக்கே. "
"ஹா… "
" இந்த சைட்டுக்கு போய் பாத்தேன். இப்ப அது வொர்க் ஆகல. பட் மெயில் வழியா ஃபோன் நம்பர் சேர் பண்ணிருக்காங்க. ஆனா அந்த நம்பர் ஃபோலிஸ்க்கு கிடைச்ச அக்கா ஃபோன்ல இல்ல. "
"சோ. "
"பர்ஷ்னல் எல்லாமே சீக்ரெட். அதுலயும் லவ் வந்திட்டா டாப் சீக்ரெட். "
"பையூ வெட்டியா கண்டத உலறாம வேற எதாவது கிடைக்கிறதான்னு பாரு. "
"பாத்தேன்டி. எதுவுமே லவ் டாக்கா இல்லாம இருக்கேன்னு நான் சோகமா உக்காந்திருக்கும் போது தான் இத பாத்தேன். ஒரு இன்ஸ்டா பேஜ். " என்றவள் எதேதையோ ஓப்பன் செய்து இருவரும் அனுப்பிக் கொண்ட உரையாடல்களைப் படிக்கலானாள்.
"பையூ நான் சுடரக்கா. " சாரு.
"நான் அந்த அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட். " எனச் சிறு வயதில் வகுப்பில் ஆசிரியர் பாடங்களை வாசிக்க சொல்லும் கதாப்பாத்திரங்களைப் பிரித்துக் கொள்வது போல் ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொண்டனர்.
சாரு, அதாவது சுடர். " பார்ஷல் கிடைத்தது. நன்றி."
பையூ, அதாவது ரகசிய காதலன். " வெல்கம். வேற எதுவும் தேவப்பட்டா கால் பண்ணுங்க."
சில தினங்களுக்கு பின்.
சாரு, " ஹாய். "
"என்னடி இது வெறும் ஹாய், நாம மீட் பண்ணலாமான்னு மட்டும் திரும்ப திரும்ப இருக்கு. " சாரு.
" சாரதாம்மா சொன்னாங்க சுடரக்காவோட லவ் ப்ரபோஷல அந்த ஆள் ஏத்துக்கலன்னு. அதுனால அக்காவ ப்ளாக் பண்ணி வச்சிருக்கான் போல. மெயிலயும் அக்கா இது மாதிரி மெஸ்சேஜ் அனுப்பியிருக்கறத பாத்தேன். "
"ச்ச... இவ்ளே சிம்பிளாவா முடியும் கான்வர்ஸேஷன். " எனச் சாரு சலிப்பாக சொல்ல,
"இல்ல முடியல. இதே பேர்ல இன்னொரு ஐடி இருக்கு. அதுல பெரிய பெரிய சாட்லாம் இருக்கு. " என்றவள் அதை ஓப்பன் செய்தாள்.
பையூ, "ஹாய். வாட்ஸ் அப். "
சாரு, " ஹேய். நீயா!!!" ஆச்சர்யக்குறிகள் பல இருந்தன.
பையூ, "எஸ். நானே தான். என்ன! ஆள மறந்திட்டியா. மறுபடியும் என்னை அறிமுகப்படுத்திக்கணும் போலயே. "
சாரு, "அறிமுகம் தேவையில்ல. மறக்க முடியுமா உன்ன. "
பையூ, "அப்றம் ஏ இவ்வளோ ஷாக். "
சாரு, "நீ மெஸ்சேஜ் அனுப்ப மாட்டேன்னு நான் நினைச்சேன்.."
பையூ," ஏன்?"
சாரு," லாஸ்ட் டயம் நாம மீட் பண்ணும் போது எம்மேல கோபமா இருந்த. நீ லண்டன் போனதுக்கு அப்றம் கூட எந்த ஒரு மெஸ்சேஜ்ஜும் இல்ல. ஒரு வர்ஷமா நானும் உன்ன காண்டாக் பண்ண ட்ரெய் பண்ணிட்டு தான் இருக்கேன். முடியல. உனக்கு கால் பண்ணேன். அது போகல. "
பையூ, "நா லண்டன்ல இருக்கேன். அதுனால நம்பர இப்போதைக்கு மாத்திட்டேன்."
சாரு, " நம்பர் தான் நான் இப்பவே கால் பண்றேன். எனக்கு உன்னோட குரல கேக்கணும் போல இருக்கு. "
பையூ, " ஃபோன் வேண்டாம் நாம இன்ஸ்டாலயே சாட் பண்ணலாம்.. "
சாரு, " ஏன். நீ இன்னும் நடந்தத மறக்காம கோபமாத்தா இருக்கியா. "
பையூ, " ப்ளீஸ் நான் அத மறக்க ட்ரெய் பண்றேன். நியாபகப்படுத்தாத. "
சாரு, " நிஜம்மா மறந்துட்டியா. "
பையூ, " புல்லா இல்ல. "
சாரு, " பட் என்னால உன்ன மறக்க முடியல. ஸ்டில் ஐ லவ் யூ. "
பையூ, ".. "
சாரு, " ST. "
பையூ "..."
பல நாட்கள் சுடர் அனுப்பிய மெஸ்ஏஜ்களுக்கு பதில் இல்லை.
சாரு," ஹேய். மறுபடியும் ஓடிட்டியா. ஏன் என்னைப் பாத்து பயப்படுற. நான் ஒன்னும் உன்ன டார்ச்சல் பண்ணல. என்னோட மனசுல பட்டத தான் ஓப்பனா சொன்னேன். உங்கூட பேச ஸ்டாட் பண்ணும் போது எந்த ஃபீலும் இல்ல. பட் பேச பேச பிடிச்சிருந்தது. முத முத உன்ன நேர்ல பாத்ததும் ஐ ஃபிக்ஸ். நீ தான் எனக்கு பர்பெக்ட்டா இருப்பன்னு. "
பையூ, " நாம ஃப்ரெண்ட்ஸ்னு நினைச்சே விழி. "
சாரு, " கண்டிப்பா நாம ஃப்ரெண்ட்ஸ் தான். ஆனா ஃப்ரெண்ட்ஸ் லவ் பண்ண கூடாதா. உனக்கும் எனக்கும் நிறைய விசயங்கள் காமன்னா இருக்கு. நாம பர்பெக்ட் கப்பிளா இருந்திருப்போம் நீ ஓகே சொல்லிருந்தா. ஏன் என்னை ஆக்சப்ட் பண்ணல நீ? "
பையூ, "அது ஏன்னு உனக்கே தெரியுமே. "
சாரு," எஸ். நீ வேற ஒரு பொண்ணு லவ் பண்றதா சொன்ன. அன்னைக்கி சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். நீ அந்த பொண்ணு மேல வச்சிருக்குறது லவ்வே இல்ல. அது ஒரு வகையான அன்பு. அத காதல்ன்னு உன்ன நீயே ஏமாத்திக்கிற. உனக்கு அவள பிடிச்சிருக்கு. பட். "
பையூ, " ஸ்டாப் திஸ். " என கோபமான எமேஜிக் இருக்க. அன்றைய சாட் முடிந்தது.
மறுநாள்.
சுடர், " ஓகே ஸாரி. நான் அப்படி பேசிருக்க கூடாது. நான் முதல்ல உங்கிட்ட இருந்து எதிர்பாக்குறது ஃப்ரெண்ட்ஸ் ஷிப்பத்த். சோ… அன்னைக்கி நடந்தத ஸ்கிப் பண்ணிட்டு பழைய படி பேசலாமே. " எனத் தினமும் அனுப்ப, ஒரு நாள் கட்டை விரலை உயர்த்திய படி ஒரு பிக்சர் வந்தது. அதன் பிறகு எல்லாமே சந்தோஷ உரையாடல்களே.
"ST தான் சுடரக்கவோட ரகசிய காதலன். " என இருவரும் ஒன்று சேர்ந்து கத்த, மீதி இருந்த அத்தனை உரையாடல்களையும் படிக்கத் தொடங்கினர்.
தினமும் தான் செய்யும் அனைத்தையும் சுடர் அவனுடன் பகிர்ந்து கொள்வதைக் கவனித்தாள் பைரவி.
"இன்றைய நாள் இனிய நாளாக்க இருக்கட்டும்." என நட்பாக ஆரம்பமாகி அதில் மெல்ல மெல்ல அக்கறையும் காதலும் பிறந்ததைப் பார்க்க முடிந்தது.
"இன்னைக்கி ஒரு ஆக்ஸிடென்ட். ஏதோ ஆஃப்பராம். அதுக்கு ப்ளக்ஸ் அடிச்சி நடு ரோட்டுல இருக்குற போஸ்ட் கம்பத்துல தொங்க விட்டு, விளம்பர படுத்திருக்கானுங்க அந்த கம்பெனிக்காரனுங்க. அது காத்துக்குக் கழண்டு வந்து ஒரு பைக் காரெ மேல விழுந்திடுச்சி. அவெ சடனா ப்ரேக் போட, அத எதிர்பாக்காத பின்னாடி வந்த பஸ்காரெ அந்தாள அடிச்சி தூக்கிட்டான். ஆள் ஸ்பாட் அவுட். ஹெல்மெட் கூட போடாததானால உயிர் போயிடுச்சி. ஒரு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்த போறோம். "
" நீ எதுலயும் முன்னாடி போய் நிக்காத. கவனமா இரு விழி. எனக்கு நீ முக்கியம். " என சில இதயங்களைப் பறக்க விடும் போது சுடரின் இதயமும் பறந்தது.
" இன்னைக்கி நீ அனுப்புன பிக் பென் நல்லா இருந்தது. " சுடர்.
"அது ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் வித்தியாசமான சத்தம் குடுக்குற மணி கூண்டு. இங்க அது ஃபேமஸ். ஆக்சலி இத உனக்காக நான் ஒன் வீக்குக்கு முன்னாடியே வாங்கிட்டேன். இப்ப தான் அது உங்கைக்கு கிடைச்சிருக்கு. பிடிச்சிருக்கா?"
"எஸ்…" என கன்னங்கள் சிவக்கும் எமோஜியை அனுப்ப, அங்கிருந்து ரொமான்டிக்காக வந்தது.
இப்படி மாத மாதம் ஒவ்வொன்றாக அவனும் அனுப்ப சுடரும் அனுப்பி இருந்தாள். இருவரும் சாட் செய்யாத நாளே இல்லை எனும் அளவுக்கு சாட் பாஸ்க் பூல்லாக இருந்தது. சுடர் மனத்தில் எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் அவனிடம் பகிர்ந்திருந்தாள்.
கடைசி வரை அனைத்தையும் படித்து முடித்த பைரவிக்கு வேகமாக பிரவீனுக்கு ஃபோன் செய்தாள்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..