அத்தியாயம்: 93
" அண்ணா சுடர் கேஸ்ல ஒரு முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு. " என குறுந்தகவலைத் தட்டி விட்டாள் பைரவி. ஏனென்றால் பல முறை பிரவீனுக்கு கால் செய்து பார்த்தாள். அது எடுக்கவே படாததால் செய்தியை ராக்கிக்கும் பிரவீனுக்கும் அனுப்ப, கதவு தட்டப்பட்டது. பைரவி வேகமாக சென்று கதவைத் திறக்க நின்றுகொண்டிருந்தது மதுசூதனன்.
"ம்ச்… கெட்ட கனவு." என்றவள் கதை மூடப்பார்க்க, மதுவின் கரம் கதவைப் பிடித்துக் கொண்டது.
"தூங்குனாத்தா கெட்ட கனவு வரும். "
" ஆனா இங்க தூங்காமலேயே நேர்ல வந்து நிக்கிதே. "
"அப்ப தூங்குனா நல்ல கனவு வரலாம். அதுக்கு... "
"அதுக்கு... அதுக்கு எதுக்கு இங்க வந்திங்க. நேத்து நைட் மாதிரி துக்கத்துல தூக்க மாத்திர கலந்து சாப்பிடிருப்பா… நைஸ்ஸா கூட வந்து ஒட்டிக்கலாம்னா. "
" தூக்க மாத்தர போடலன்னாலும் நீ நைட் எந்திரிக்க மாட்ட. கும்பகர்ணி. அப்றம் ஒட்டிக்கிட்டது நான் இல்ல நீ. எனக்கு நைட் பெட்ல உருண்டு பிரண்டு படுக்குற பழக்கம் கிடையாது. பக்கத்தல இருக்குறவங்க மேல அணுகுண்ட துக்கி போட்ட மாதிரி கால தூக்கி போட்டுற பழக்கமும் கிடையாது." என்றவனுடன் சண்டை போட ஆரம்பிக்கும் போதே,
"எதோ கிடைச்சிருக்குன்னு அனுப்புன மெஸ்சேஜ் பாத்திட்டு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தா… கதவ திறக்காம கலாட்டா பண்ணிட்டு இருக்க. வழி விடு பைரவி. " என்ற ராக்கியின் குரல் மதுவிற்கு பின்னால் இருந்து கேட்க, வேறு வழியில்லாது திறந்தவள் மதுவை முறைத்தபடி நின்றாள். அவன் தோள்களைக் குளுக்கியபடி உள்ளே வந்தான்.
உள்ளே வந்தவர்கள் அறையைப் பார்த்து அதிர்ந்து விட்டனர்.
டிஸ்கோ லைட்டுடன் கண்ணாடி டம்ளரில் இருந்த கருப்பு கலர் திரவம் அறைக்குள் நுழைந்த மூன்று ஆண்களையும் வியக்கச் செய்தது.
"அடிப்பாவிங்களா!! என்ன விட்டுட்டு சரக்கு அடிச்சிருக்கிங்க. என்ன ப்ராண்டு இது?" என டம்ளரில் இருந்ததை தொண்டைக்குள் சரித்தவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
"கூல் ட்ரிங்கா!!"
" கேஸ் இல்லா கூல் ட்ரிங்க் வெறும் சக்கர தண்ணின்னு நான் சொன்னேன் பாய். இவ தான் அப்படி குடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லி டம்ளர்ல ஊத்தி வச்சா. " எனச் சாரு பைரவியைக் காட்டி சொல்ல,
" ஏன் கலரு! சரக்கு கிடைக்கலயா? சொல்லிருந்தா அண்ணனே வரும் போது கைல பிடிச்சிட்டு வந்திருப்பேனே. "
"ஐய்ய அது நல்லாவே இருக்காது. கெட்ட வாட வரும். டேஸ்டே சகிக்காது. " என இருவரும் ஒரு சேர முகம் சுளித்தபடி பேச,
"என்ன டேஸ்ட் இருக்காதா! அப்ப இதுக்கு முன்னாடி சரக்கடிச்சிருக்கிங்களா. " பாவம் பாண்டி தான் கேட்டது. அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
" அது... அது… " எனச் சாரு தயங்க,
" காலேஜ் டேஸ்ல ஒருக்க ட்ரெய் பண்ணோம். குடலே வாய் வழியா வந்திடுற மாதிரி வாந்தி... உவ்வெ… எப்படி தான் அந்த கருமத்த குடிக்கிறீங்களோ. " என்ற பைரவிக்குச் சில மது வகைகளின் வாடையும் புகையிலையின் வாடையும் ஆகாது.
"என்ன குடிச்சிங்க அப்படி?" ராக்கி.
" ஸ்காட்ச், விஸ்கி அப்றம் என்னடி ஆர்டர் பண்ணோம். " என நண்பியைக் கேட்க, அவள் திருதிருவென முழித்தாள்.
"பேரு மறந்திடுச்சி. ரொம்ப நாள் ஆச்சில்ல. ஒரே ஒருக்கத்தா ட்ரெய் பண்ணோம். அப்றம் இல்ல. "
"பட், பியர் குடிப்பாங்க. மன்த்லி ஒன்ஸ் ரெட் வெயின். அப்றம்…" என வாயைத் திறந்த மதுவின் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள் பைரவி.
"ரெட் வெயின்லாம் வாங்கி குடுத்ததே அவரு தான். " எனப் புகார் வச்சித்தாள்.
"அது மட்டுமா வாங்கி குடுத்தேன். இவள கல்யாணம் பண்ண பாவத்துக்கு இவளுக்காக என்னென்னலாம் வாங்கி குடுத்தேன்னு தெரியுமா. "
"அத சொல்லி காட்டிட்டு போகத்தா வந்திங்களா. வெளில போங்க. " எனக் கத்தியவள்,
"ச்ச… கட்டுன பொண்டாட்டிக்கு பண்றத எல்லாம் கணக்கெழுதி வச்சிருப்பான் போல. " என முணுமுணுத்தாள்.
"எழுதி தான ஆகணும். வரமொற இல்லாம ஆன்லயன்ல கண்டத ஆர்டர் பண்ற பொண்டாட்டி செய்ற செலவ நோட் பண்ணித்தா ஆகணும். " என இருவரும் சண்டையிட்டு கொள்ள, அதைத் தாமரை வெகு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
" மச்சான் ஒரு நிமிசம் ப்ரேக் விடேன். "
"ஏன்டா. "
" நான் போய் என்னோட ஒத்த தாமரைய ரூம்ல ட்ராப் பண்ணிட்டு வந்திடுறேன். ஏன்னா நாளைக்கி இதே காட்சி என்னோட வாழ்க்கைல நடந்திட கூடாதுல. " எனத் தாமரையை துரத்த, அவளோ மாட்டேன் என வீம்பாக நின்றாள்.
" என்ன முக்கியமான எவிடன்ஸ். காட்டு." என்றான் மது.
"உங்க கிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல. உங்களுக்கு தான் சுடரக்காவ பிடிக்காதே. அப்றம் எதுக்கு இதுல இன்வால் ஆகுறீங்க. "
" இப்பயும் எனக்கு அவள பிடிக்காது தான். ஆனா எனக்கு பிடிச்சிருக்க ஒருத்திக்கு அவள பிடிச்சிருக்கும் போது பிடிச்சித்தான ஆகணும். " என்க, மீண்டும் ஒரு சண்டை ஆரம்பம் ஆனது.
" என்ன அதுன்னு காட்டீட்டு சண்ட போடுங்களேம்ப்பா. " என்றான் ராக்கி. அவனிடம் லேப்டாப்பைக் காட்டினாள்.
"இது சுடர் அக்காவோட இன்னோரு இஸ்ன்டா அக்கவுன்ட். ST இது தான் அந்த சீக்ரெட் அன்நோன் பாய் ஃப்ரெண்ட். இதுல இருந்து தினமும் கால் பண்ணி பேசிருக்காங்க. மெஸ்சேஜ்லயும் பேசிருக்காங்க. எவிடென்ஸ்னு நான் எத சொன்னேன்னா. இது தான். அது அரசனூர்ல சுடரக்காவோட ஃபோன் காணாம போனதுக்கு முதல் நாள் நடந்த கான்வர்ஷேஷன். " என்றவள் அதில் என்ன உள்ளது என வாசித்து காட்டினாள்.
"ST அரசனூர்ல கேஸ் சொன்னேனே நியாபகம் இருக்கா. தீ விபத்து. அதுக்கு காரணத்த நான் கண்டு பிடிச்சிட்டேன். "
"A1 கம்பெனிக்காரனுங்க தான. "
"எஸ்... என்னோட அப்பா இறந்து போனப்பத்தான் எனக்கு இந்த ஐடியா வந்து. அவரு மூளைல கட்டி வந்ததுனால தான் இறந்து போனாரு… சொல்லாருக்கேன்ல. "
"எஸ் டியூமர். இப்பல்லாம் அது யாருக்கு வேண்ணாலும் வரலாம். "
"ஆனா எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். கடந்த ஆறேழு வர்ஷமாவே அந்த வீட்டு விட்டு எங்கப்பா வெளில எங்கையும் போனது இல்ல. நல்லா ஆரோக்கியமாத்தா இருந்தாரு. அப்பப்ப செக்கப்பும் கரெக்ட்டா பண்ணிடுவாரு. அவருக்கு அப்படி ஒரு கட்டி வளந்ததே எங்களுக்கு பெரிய ஷாக்.
இத பத்தி நான் ஒரு நியூரோ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கேட்டப்போ. மூளைல இருக்குற செல்ஸ்ஸோட அசாதாரண வளர்ச்சி தான் டியூமருக்கு காரணம்னு சொன்னாரு. செல்ஸ் அந்த மாதிரி வளர்ந்துக்கிட்டே போக நிறைய காரணம் இருக்கலாம். பட் என்னோட கெஸ் இந்த ஊர்ல நடந்த ரேடியேஷன் அட்டாக் தான். அந்த தீ விபத்து கூட ரேடியேஷன் அட்டாக்க மறைக்கத் தான் நடந்திருக்கு. "
"ஆனா அதுக்கு எந்த ஆதாரமும் இல்லையே. "
"இதுவர இல்ல. ஆனா இப்ப இருக்கு. "
"என்னதது. "
" அம்மா பிறந்த நாளுக்குன்னு சொல்லி இந்த ஊர்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு மெடிக்கல் கேப் போட்டிருந்தோம். அதுல எதிர்ப்பு சக்தி குறைவா இருக்குற நிறைய பேர செலக்ட் பண்ணி அவங்கள டெஸ்ட் பண்ணி பாத்தோம். அதோட ரிசல்ட்ட கேஸ்க்கு சமிட் பண்ணி எவிடன்ஸ்ஸா காட்டுனா வின் பண்ணிடலாம். "
"வாட். என்ன சொல்ற?"
"என்னோட அப்பாக்கு மட்டுமில்ல இந்த ஊர்ல நிறைய பேருக்கு அந்த மாதிரி டியூமர்ஸ் இருக்கு ப்ரைன்ல. எங்கப்பா இறந்தத கோர்ட்டுல சொல்லும் போது டியூமர பரம்பர வியாதி அது இதுன்னு சொல்லி தப்பிச்சிட்டானுங்க.
இப்ப ஒட்டு மொத்த ஊரையும் பாதிச்சிருக்குன்னா அதுக்கான ரீசன் ஒன்னே ஒன்னு தான்.. ரேடியேஷன் தாக்குதல். அத்தோட இது செல்ஃபோன் டவர்ல இருந்து வந்த ரேடியேஷன் கிடையாது.
டவருக்கு கீழ அவங்க கட்டுன பில்டிங்ல எதோ ரிசர்ச் பண்ணிருக்காங்க. கவர்மென்ட்டுக்கு தெரியாம எதையோ ஆராய்ச்சி பண்ண போய் அதுல இருந்து தான் கதிர்வீச்சு வெளியாகி இருக்கணும். இது ஸ்லோ பாய்ஸன் மாதிரி வேலை செஞ்சிருக்கு. நல்ல வேள நீ குடுத்த ஐடியாவால அந்த டவர சுத்தி கதிர்வீச்ச உள்ளிழுக்குற மரத்த வளக்க ஆரம்பிச்சிட்டோம். இனி அது அடுத்த ஜென்ரேஷன பாதிக்காதுன்னு நம்புறேன். "
" யார் யாருக்கு டெஸ்ட் எடுத்தன்னு லிஸ்ட் வச்சிருக்கியா.. "
"எஸ்…" என்றவள் ஒன்றிரண்டு பெயர்களை மட்டும் அவனுக்கு அனுப்பி இருந்தாள். மீதி தன் செல்ஃபோனில் இருப்பதாகக் கூறியிருந்தாள்.
'இது சுடருக்கும் அவளின் காதலனுக்கும் இடையில் நடந்ததா. இவன் நிஜமாகவே சுடரின் காதலன் தானா. இல்லை அவனைப் போல் வேறு யாரோ?' என்ற சந்தேகத்தை எழுப்பியது மதுவின் உள்மனம்.
ஏனெனில் பார்சலில் உள்ள விலாசத்திற்கு சென்று விசாரித்த போது, அங்கு ஆண் பெண் என சில இளைஞர்கள் இருந்ததாக தெரியவந்தது. அக்கம் பக்கம் விசாரித்த போது அவர்களின் மீது தன்மதிப்பே இருந்ததாக கூறினர்.
'அனுப்பியது சுடராக இருக்கலாம். ஆனால் அனுப்பட்டது அவளின் நம்பிக்கைக்கு உரிய ஆள் தானா? ஏன் இந்தந் பெண், முகம் தெரியாத இணையத்தில் வளர்க்கப்படும் காதலில் விழுந்து, அனைத்தையும் யாரோ ஒருவனுடன் பகிர்கிறாள். ' என மது யோசனையில் இறங்கினான்.
" இந்த சாட் முடிஞ்ச அடுத்த நாளே அவங்க ஃபோன் திருடு போயிருக்கு. " பைரவி.
"அது மட்டும் திருடு போல. இந்த லிஸ்டுல இருக்குற எல்லாரோட உயிரும் திருடு போயிருக்கு. " என்றான் பாண்டி.
"வாட். "
"எஸ். சுடர் டெஸ்ட் எடுத்த எல்லாருமே இறந்து போய்ட்டாங்க. அவங்க யாரையுமே புதைக்க விடாமா எரிக்க வைக்க ஏன் என்னோட பெரியப்பே இத்தன துடிதுடின்னான்னு இப்ப தான் புரியுது.. " எனக் கோபமாக சொல்ல,
"இன்னும் இருக்கு. " என்றவள் தொடர்ந்து வாசித்தாள்.
" என்னோட ஃபோன காணும். " எனக் கண்ணீருடன் அனுப்பி இருந்தாள் சுடர்.
"இதுக்கு எதுக்கு ஃபீல் பண்ற. வேற வாங்கிக்கலாம். நானே ஒரு புது மாடல்ல உன்னோட வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். "
"ம்ச். எனக்கு வேண்டாம். எனக்கு தொலஞ்சி போன அந்த ஃபோன் வேணும். "
"ஏன்?"
"புதுசுல உன்னோட ஃபோட்டோ இருக்காதே. அனுப்புன்னு சொன்னாலும் நீ ஃபோட்டோ அனுப்ப மாட்டேங்கிற. வீடியோ காலும் பண்ண மாட்டேங்கிற. எனக்கு அதுல இருக்குற உன்ன பாக்காம அந்த நாளே ஓடாது. " எனச் சோக எமேஜிக்கள் இருக்க,
"ஆளே நேர்ல வரும் போது எதுக்கு ஃபோட்டோ. "
"வாட். நீ இந்தியா வர்றியா. "
"ம்... சென்னைக்கு. உன்ன பாக்க. " என்க, சுடர் பல இதயங்களை பறக்க விட்டிருந்தாள்.
"எப்ப? "
" சில மன்த் ஆகும். பட் நாம மீட் பண்ணலாம். டச்லயே இரு. "
அத்தோடு அந்த நாள் முடிந்தது. மதுவின் சந்தேகம் இப்போது 50% உறுதியானது. அதற்கு அடுத்து இருந்த சாட் எல்லா வாசிக்க அவர்களின் பர்ஸ்னலாக இருக்க, அதில் தேவையானதை மட்டும் பொறுக்கி எடுத்தனர்.
மது, " சோ, இத தான் ஆதரம்னு சொன்னியா?"
"இல்லையா பின்ன. அக்கா காணாம போன அன்னைக்கி இவெங்கிட்ட பேசிக்கிட்டே தான் வெளில போயிருக்காங்க. கால் ஹிஸ்ரில இருக்கு. அவன் தான் பாக்க வர சொல்லிருக்கான். பைக்ல ஏறி போனது அவெங்கூடயாத் தான் இருக்கும். "
ராக்கி, "பட், சுடரோட இன்ஸ்டா அக்கெண்ட்ட பத்தி பிரவீன் எதுவும் சொல்லலயே. போலிஸ்க்கு கிடைச்ச ஃபோன்ல இந்த மாதிரி எந்த இன்ஸ்டா காலும் போனதா ரிஜிஸ்டர் ஆகலயே. "
" லாக் அவுட் பண்ணிருக்கான் பாய். போலிஸ்க்கு கிடைச்ச ஃபோன்ல இருந்த எல்லா ஆதாரத்தையும் ஐ மீன் இப்படி ஒருத்தே இருக்காங்கிறதே யாருக்கும் தெரிய விடாத படி அழிச்சிட்டு தூக்கி போட்டிருக்கான். "
மது, "சைபர் க்ரைம்மே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு. "
"எஸ். இப்ப நாம அந்த STய கண்டு பிடிச்சா தெரிஞ்சிடும். அவனோட ஐடி நம்ம கிட்ட இருக்கு. அவன கண்டு பிடிக்கிறது கஷ்டம் இல்ல." பைரவி உறுதியாக சொல்ல,
ராக்கி, "பார்சல்ல இருந்த பெங்களூர் அட்ரஸ் என்னாச்சி. "
" ட்ரேஸ் பண்ணிட்டு இருக்குறதா பிரவீன் சொன்னாரு. இந்த ஐடியயும் வெப்சைட்டையும் நான் பிரவீனுக்கு சென்ட் பண்றேன். கேஸ்க்கு யூஸ்ஸாகும். " என்ற மது ஃபோனுடன் அமர,
"நான் இத தீஷித் கிட்ட சொல்றேன். போலிஸ்க்காரங்க கண்டு பிடிக்கிறதுக்குள்ள தீஷ் யாருன்னு சொல்லிடுவாரு. " என்று விட்டு வெளியே சென்றவள் திரும்பி வரும் போது கண்ணீருடன் வந்தாள்.
"என்னாச்சி பைரவி. " என ராக்கி பாய் பதற,
"தீஷித்க்கு ஆக்ஸிடென்ட் பாய். எங்கூட பேசிட்டு இருக்கும் போதே லயன் கட்டாகிடுச்சி. காட்டாகுறதுக்கு முன்னாடி ஹாரன் சத்தமும் தீஷித்தோட குரலும் கேட்டது. எனக்கு பயம்மா இருக்கு பாய். " எனச் சொல்லி அழுதாள்.
மது, "எங்க இருக்கேன்னு சொன்னானா. "
" பெங்களூர் போய்க்கிட்டு இருக்குறதா சொன்னான். அம்மாவ கூட்டீட்டு போய்க்கிட்டு இருக்கேன்னா. "
" எக்ஸாட் லேகேஷன் எதுவும். "
" ஒரு ஹோட்டல் பேரு சொன்னான். " என விடுதியின் பெயரை சொல்ல, மது, பைரவி சொல்வது உண்மை தானா என அறிந்து உடனே அங்க ஆம்புலன்ஸ்ஸை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.
பைரவி, தீஷித்தின் நண்பர்களுக்கு கால் செய்து நடந்ததைச் சொல்லியவள், அவனின் நலன் அறிய பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என அவர்களை தொடர்பு கொண்டாள்.
" அடிபட்டிருக்கு பைரவி. பயப்படுற மாதிரி இல்ல. ஹீ இஸ் ஓகே நௌ. " என அவர்கள் சொல்லும் எந்தச் சமாதானமும் அவளை அமைதி படுத்தவில்லை.
பைரவிக்கு தீஷித்தின் குரல் கேட்டுக் கொண்டே இருக்க, உறங்காது தவித்தவள் முதல் வேலையாக,
"பாய் நான் சென்னைக்கு போறேன். தீஷித்த பாத்தா தான் என்னால ரிலாக்ஸாக முடியும். " என்றாள்.
ராக்கி, "இந்த நேரத்துலயா. மிட் நைட் பைரவி இது. "
"பாய் ப்ளீஸ்." என இறைஞ்ச.
"நான் கூட்டீட்டு போறேன். " என மது முன்வந்தான்.
ராக்கி மது பைரவி என மூவரும் தீஷித்தைக் காணச் சென்றனர்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..