அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 17 நொடியில் நெஞ்சுக் கூட்டை நிரப்பி, உடனே காலி செய்யும் காற்று ஜனித்திருப்பதற்கானப் பிராணவாயுவை உடலெங்கும் தந்து உயிருடன் கலக்கச் செய்வதைப் போல், ஆர்த்தி தர்மாவின் உயிருடன் இணையத் தொடங்கியிருந்தாள். நட்பு என்றவனே அந்த எல்லைக்குள் கட்டுப்பட்டு இருக்க இயலாது, தன் ஆன்மா உணர்ந்த நேசத்தை, உடலும் உணர வேண்டினான். அவளின் மெய் அன்பு வேண்டி அவனின் உள்மனம், கதறும் கதறலை வாய்விட்டுச் சொல்ல முடியாது பார்வையிலேயே வெளிக்காட்டிக் கொண்டிருந்தான் தர்மா. ஆனால் அதை எதையும் உணரும் நிலையில் தான் ஆர்த்தி இல்லை. அவளின் பிள்ளை மனம் அவனின் பார்வையின் பொருளை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியாது கடந்துச் சென்றது. தன்னை அரவணைத்து ஆறுதல் தர ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவன் காட்டிய எதிர்வினைகளை அழகாய் உள்வாங்கிக் கொண்டவளால், அதன் அர்த்தங்களை ஆராயத் தெரியவில்லை. அல்லது ஆராய்ந்தால் அவனை இழந்து விடுவோமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும். "அது... எனக்குத் தனியாத் தூங்க பயமா இருக்கு. நேத்து மாதிரியே இன்னைக்கும் நான்... உங...