முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 88


 

அத்தியாயம்: 88



சாரதா ஹோம். 


திருமணம் முடிந்த இந்த ஏழெட்டு மாதங்களாக பைரவி அந்த பக்கமே சென்றது இல்ல. இப்போது வந்து அமர்ந்திருக்கிறாள். அங்கு அனைவரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க இவள் மட்டும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 


எப்பொழுதும் வாயாடி வம்பு செய்யும் பெண் இன்று அமைதியாக இருக்க, அங்கு இருப்பவர்களுக்கு அது வித்தியாசமாக பட்டது. அவளை உற்சாகப்படுத்த என அவர்களும் ஏதேதோ செய்ய, பைரவி எதையும் கண்டு கொள்ளாது மலை முழுங்கி போல் உம் என முடிவில்லாத வானை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.  


" என்ன! கல்யாண மயக்கம் தீந்து இப்ப தான் இந்த பக்கம் வர்ற வழிய கண்டுபிடிச்சிருக்க போலயே. " என்றபடி வந்து அவளின் அருகில் அமர்ந்தாள் சுடர். 


"ஹலோ… மிஸஸ் பைரவி மதுசூதனன். இந்த உலகத்துலதா இருக்கிங்களா. ஹலோ…" என அவளின் முன் கை அசைக்க, பைரவி அப்போது தான் சுயநினைவிற்கே வந்தாள். 


"ஹாய் க்கா... எப்ப வந்திங்க?. நல்லா இருக்கிங்களா?" என‌ச் சிரிக்க முயன்று தோற்றாள்.


"இதே கேள்விய நான் கேக்குறேன். பதில் சொல்லிட்டா உன்னோடதுக்கு பதில் தர்றேன். என்னாச்சி உனக்கு. " என்றபோது பைரவிக்கு கண்கள் கரிக்கத் தொடங்கியது. அவளின் கலங்கிய விழியைக் கண்டவள். 


" வா… அம்மா வர்ற வர அவங்க ஆஃபிஸ் ரூம்க்குள்ள உக்காந்து பேசுவோம். " எனத் தனியே அழைத்து வந்தவள் நாற்காலியில் பைரவியை அமர வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை அவளின் முன் வைக்க பைரவி கண்ணீர் சிந்த தொடங்கினாள். சுடர், பைரவியின் அழுகை கட்டுப்படும் வரை எதுவும் பேசவில்லை. சில நிமிடங்கள் நீடித்த அவளின் கண்ணீர் நின்று போக,


"என்னாச்சி பையூ. ஏன் அழற. உனக்கு அழறது பிடிக்காதே. "


"பிடிக்கல தான். ஆனா அழணும்னு தோனுதே. நம்ம வாழ்க்கைல நடக்குற ஒரு விசயத்த ஏத்துக்கவோ! இல்ல தடுக்கவோ முடியாத இயலாமையோட வெளிப்பாடு தான் கண்ணீரும் கோபமும். கோபப்பட என்னால முடியாத போது கண்ணீர் தான வந்தாகணும். " 


"ஓ… பைரவிய தத்துவம் பேச வைக்கிற அளவுக்கு ஒருத்தர் கடுப்பேத்திருக்காங்களா என்ன! நீ எப்பயும் பாசிட்டிவ்வான ஆளாச்சே. யாரு உன் கடுப்பேத்துனாலும் எல்லாத்தையும் ஈசியா எடுத்திட்டு கடந்து போறவளாச்சே. " என்க, 


" எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியலயேக்கா. அதுலயும் மேரேஜ் லைஃப். " 


" எதுவும் பிரச்சினையா?" 


"எஸ்… எல்லாமே பிரச்சன தான். காலைல கண்ணு முழிக்கிறதுல இருந்து நைட் தூங்குற வர எல்லாம் பிரச்சினை. " என ஆரம்பித்தவள் புலம்பி தள்ளி விட்டாள். 


'ச்ச... இந்த புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் வேற வேலையே கிடையாது போல. எப்ப பாத்தாலும் பிரச்சனைய பத்தி பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்காங்க. ' 


இதுவரை அவளின் புலம்பல்களுக்கு செவி சாய்க்க யாரும் கிடைக்கவில்லை. மதுவிற்கு கூட கேட்க விருப்பமும் நேரமும் இருப்பதில்லை. இப்போது தானாக ஒரு ஜோடி காது, கேட்கிறேன் என்று முன் வரும் போது நிறுத்த விரும்பாது பேசிக் கொண்டே போனாள் பைரவி. 


"அவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா. " எனச் சிரித்துக்கொண்டே சுடர் கேட்க,


"அக்கா நான் என்னோட வாழ்க்கைல நடந்திட்டு இருக்குற கொடுமய சொல்லி அழுதிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சிரிக்கிறிங்க. " 


" எனக்கு சிரிப்பு தான வருது. " என்க, பைரவி முறைத்தாள் அவளை. 


"ஓகே ஓகே மொறக்காத. கொடுமங்கிறதுலாம் பெரிய வார்த்த. இப்பல்லாம் யாரும் யாரையும் கொடும படுத்துறது இல்ல. அப்படியே படுத்தினாலும் சும்மா விடப்போறதும் இல்ல. எனக்கு என்னமோ நீ சின்ன வியத்த பெருசாக்கி பாக்குறியோன்னு தோணுது. "


"எது சின்ன விசயம். இதுவா! அந்தக் காலத்து மாமியாருங்க மாதிரி கிடையாது இந்தக் காலத்து மாமியாரு. வெண்கல தொண்டைய திறந்து நேருக்கு நேரா நின்னு நடு ரோட்டுல கத்தி ஊரறியா அசிங்கபடுத்துறது இல்ல. இந்த மாதிரி சைலன்ட்டா வாழப்பழத்துல ஊது வந்தி குத்துற மாதிரி, ஏழெட்ட நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக்கிட்டே இருக்காங்க. அந்த குத்தும் நமக்கு விழாது. தாலி கட்டிடுனவனுக்கு விழும்.  என்னைக் கேட்டா அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் குடுத்து பொண்டாட்டி கூட சண்ட போடுறவங்களுக்கு சுய புத்தி கிடையாதுன்னு சொல்வேன். "


'அப்ப இவளுக்கு புத்தி கண்டிப்பா கிடையாது தான்.  ஏன்னா அவளும் ஜெயாவுக்கு தான முக்கியத்துவ குடுக்குறா. அவங்க சொல்றத கேட்டுட்டு மது கூட சண்ட போடுறா.' என நினைத்துக் கொண்ட சுடர், 


"அப்போ மது‌சூதனனுக்கு சுய பத்தி இல்லன்னு சொல்ற. " எனக் கேலியாக கேட்க, 


"நான் எப்ப அப்படி சொன்னேன். "


"இப்ப தான். " 


"நான் சொல்லலப்பா. ஆனா அவெ அவங்களுக்கு ரெஸ்பெக்ட் குடுக்குறேங்கிற பேர்ல அவங்க பேச்ச கேக்குறான். 


ரெண்டு நாளைக்கு முன்னாடியும் அப்படி தான். அம்மாவும் பொண்ணுமா வந்து எத்தன பேச்சி... சப்பா. அத விட அதிகமா என்னைப் பாதிச்சது அவன் தான். ஏதோ பண்ணக்கூடாத தப்ப பண்ணிட்டு திரியுற குற்றவாளி மாதிரி என்ன உணர வைக்கிறான்.  " என்ற போது பைரவியின் கண்ணீர் துளிர்த்தது. 


"மதுசூதனனா. " 


"எஸ்... அவனே தான். என்னை கல்யாணம் பண்ணிக்க கேக்கும் போது முக்கியமான மூணு கண்டிஷன் தான் போட்டான். பட் கல்யாணத்துக்கு அப்றம் எக்கச்சக்கமான கண்டிஷன். அதையும் அவெ போட்டிருந்தா கூட பரவாயில்ல. அவனோட சித்தியும் தங்கச்சிங்கிற பேர்ல வந்து உக்காந்துக்கிற சாத்தானும் போடுது. " 


" என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு பையூ. " 


இரு நாட்களுக்கு முன். 


நிவியின் அழைப்பை ஏற்று பைரவி பார்ட்டி செல்ல, மதுவிற்கு தெரிந்தால் சம்மதிக்க மாட்டான் என்று சொல்லாமல் சென்றாள். திரும்பி வரும் போது அவன் மட்டுமல்ல பைரவி குறிப்பிட்ட சாத்தானும் அதன் அம்மாவும் இருந்தது. 


பார்ட்டிக்கு என்பதால் கொஞ்சம் ஸ்டைலாக, ஸ்லிம் பிட்டாக உடை அணிந்து சென்றிருந்தாள் பைரவி. உள்ளே நுழைந்ததும்,


" ரெண்டு மணி நேரம். நான் வந்தே ரெண்டு மணி நேரமாச்சி. அதுக்கு முன்னாடியே வீட்ட விட்டு போயிருக்கா. பப்ல குடிச்சிட்டு கண்டவெங்கூட டான்ஸ் ஆடிட்டு வந்திருக்கா. " எனச் சைந்தவி குற்றம் சொல்ல, 


"நான் யார் கூடவும் டான்ஸ் ஆடல. டிரிங்க் பண்ணவும் இல்ல. " என்றாள் பைரவி சிறிய குரலில். 


"அப்ப பப்புக்கு போயிருக்க. இந்த வீட்டுக்குன்னு இருந்த கௌரவத்த மரியாதைய அங்க போய் தொலச்சிட்டு வந்திருக்க. குடும்ப பொண்ணா நீ. ச்சீ... " என ஜெயா காரி உமிழ, பைரவி காட்டமாக முறைத்தாள்.‌


"என்னடி மொறக்கிற. " என அதற்கும் சேர்ந்து வாங்கி கட்டிக் கொள்ள, இவை அனைத்தும் மதுவின் முன்னிலையில், வீட்டு வாசலில், அகாடமியில் உள்ள மற்றவர் பார்வையில் படும் படி நடந்தது பைரவிக்கு அவமானமாக இருந்தது.‌ வேகமாக சென்று மதுவிடம் பேச முயல, அவன் இரண்டே இரண்டு கேள்விகளை மட்டுமே கேட்டான். 


"நீ உன்னோட ஃப்ரெண்டு நிவேதா குடுத்த பார்ட்டிக்கா போன?" என்பது முதலாவது.‌ அதற்கு அவள் ஆம் எனத் தலையசைத்தது கோபத்தைத் தந்தது மதுவிற்கு. 


ஏனெனில் காதல் தோல்வியில் ராக்கி படும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். தன் நண்பனைக் கலட்டி விட்டு விட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்ய உள்ள ஒருத்தி தந்த விருந்திற்கு தன் மனைவி சென்று வந்தது கோபத்தைத் தந்தது. 


"நிவி என்னோட ஃப்ரெண்ட்.‌ என்னை விட்டா அவளுக்கு…" என ஆரம்பிக்கும் போது,


"அப்ப இத்தன நாளா ராக்கி கூட பாசமா அண்ணே தங்கச்சி வேசம் போட்டதொல்லாம்.  பொய்யா? " எனக் காட்டமாக கத்த, பைரவி எதுவும் சொல்லவில்லை. 


அடுத்த கேள்வி, " எங்க போறங்கிற உண்மைய எங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இருக்கா? இல்லயா.?" என்றவன் எதுவும் சொல்லாது அவ்விடம் விட்டு சென்றான். மதுவிற்குப் பிடிக்காத ஒன்று பொய் அல்லது உண்மையை மறைப்பது. அதை மனைவியே செய்தது ஏற்புடையதாக இல்லை.


மாமியாரும் நாத்தனாரும் சேர்ந்து வசை பாடிய பேசுக்கள் எதுவும் காதில் விழவில்லை. மதுவின் வெளிநடப்பு அவளை மிகவும் பாதித்தது.‌ 


திருமணம் முடிந்த நாளில் இருந்தே ஒரே கட்டில் தான்.‌ அவனை(ளை) அணைக்காது இரவு நகர்ந்ததே இல்லை. ஆனால் எதற்கும் தொடக்கம் என்பது உண்டல்லவா. அன்றைய இரவு மது பைரவியைத் தவிர்த்தது பெரும் அடியாக இருந்தது அவளுக்கு.‌


வார்த்தைகள் தான் கூர் தீட்டிய கத்தி போல் கூர்மையாக இருக்கும் என்பது இல்லை. நம் மனம் கவர்ந்த ஒருவரின் மௌனமும் புறக்கணிப்பும் கத்தியை விட ஆழமாக குத்தி கிழிக்கும் அளவுக்கு கூர்மையானது. 


ஆனது ஆனது இரண்டு நாட்கள். கணவனின் புறக்கணிப்பு பெரும் கவலையைத் தர, மன ஆதரவு வேண்டி ஹோமிற்கு வந்து அமர்ந்து கொண்டாள்.‌


"அப்ப தப்பு உம்மேல தான். " 


"நோ… " 


" கண்டிப்பா உம்மேல தான். நீ அவன்ட்ட உண்மைய சொல்லலங்கிறப்போ அவனுக்கு நீ ரெஸ்பெக்ட் குடுக்கலன்னு தான அர்த்தம். "


"கேட்டிருந்தாலும் கண்டிப்பா  போகக்கூடாதுன்னு‌ தான் சொல்லி இருப்பான். " 


"அதுக்காக அவனோட முடிவ நீயே எடுத்துப்பியா. "  


"ஓகே… ஓகே… தப்பு தான். அதுக்குன்னு பேசாம எப்படி இருக்கலாம். சண்ட போடட்டும். ஏன் டி போன. ஏன் எனக்கு பிடிக்காத மாதிரி டிரஸ் போட்டுடு எனக்கு பிடிக்காதவ தர்ற பார்ட்டிக்கி போனன்னு கன்னத்துல நாலு அர விட்டு, எங்கிட்ட கேக்குறத விட்டுட்டு. அமைதியா போனா என்ன அர்த்தம். " என்றவள் குரலில் ஆதங்கம் இருந்தது. 


"அவனோட குணம் அது தான்னு அர்த்தம். " என்றவளை முறைக்க,


"சாந்திம்மாக்கு இந்த பிரச்சன தெரியுமா. " சுடர்.


"நான் எதுவும் சொல்லல. ஆனா அந்த சாத்தான் எங்க அம்மாவ தேடி போய் காதுல ஓதிட்டு வந்திட்டா. ' என்ன மாதிரி பொண்ண வளத்து வச்சிருக்க.'ன்னு ரொம்ப பேசிருப்பா போல. ரொம்ப கவலப்பட்டாங்க. " 


"சரி விடு. பேசணும்னு காரணம் தேடுறவங்கிட்ட, எது கிடைச்சாலும் பேசிட்டே தான் இருப்பாங்க. உம்புருஷன காம் டவுன் பண்ண ட்ரெய் பண்ணியா. " 


"இல்ல. "


" ஏன்?. "


"எனக்கு பயம்மா இருக்கு. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அசிங்கமா திட்டீட்டான்னா. அடிச்சிட்டான்னா. " என்றவளின் கண்களுக்கு மது ஆணாத்திக்கவாதியாத் தான் தெரிந்தான். 


(அது ஆரம்பங்க. அவளும் ஆறு மாசம் அடக்க ஒடுக்கமா எதிர்த்து பேசாத அமைதியான மனைவியாத்தான் இருந்து பாத்தா. சுடரோட போதனைக்கு அப்றம் சத்தியமா அப்படி இருக்க முடியல அவளால. அதுனால தான் மதுக்கு சுடர பிடிக்கல போல. ) 


"திட்டட்டும்… வாங்கிக்க… உங்கம்மா திட்டுனா வாங்கிக்குவேல்ல. புருஷெ திட்டுனா மட்டும் ரோஷம் வருதே. ஏன்?" என்க, அவள் அமைதியாகிப் போனாள். 


"உனக்கு மதுசூதனன பிடிச்சிருக்கு தான. லவ் பண்றேன்னு சொன்ன. " 


"பண்றே தான். அதுக்காக என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட்ட விட்டு குடுத்து மானம் ரோசம் இதெல்லாம் பாக்காம அவெங்கிட்ட கெஞ்ச எனக்கு பிடிக்கல. "


"அப்ப நீ அவன லவ் பண்ணவே இல்ல. லவ்ல ஈகோ இருக்க கூடாது பையூ. லவ்வரா இருந்தா கூட லைட்டா ஓகே. நீ மானம் ரோசம் பாக்குறது லைட்டா சரி தான். பட் கல்யாணம் ஆனதுக்கு அப்றம் புருஷெங்கிட்ட உனக்கு எதுக்கு வெட்டி ஈகோ. அதுல இருந்தே தெரியுது நீ அவன லவ்வே பண்ணலன்னு.. " 


"இல்ல பண்றேன். அதிகமாவே லவ் பண்றேன். " என்ற போது அவளின் காதல் கண்களில் பிரதிபலித்தது. 


" கல்யாணத்துக்கு முன்னாடி எங்கிட்ட அவெ பேசுன பேச்ச கேட்டு என்னோட உடம்பு மேல ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறான்னு நினைச்சேன். லைஃப் லவ்ல ஸ்டாட் ஆகாம லஸ்ட்ல ஆரம்பிக்கப் போதோன்னு கவலையாக் கூட இருந்தது. பட், மது அப்படி இல்ல. 


அவெ ஒரு பையில்வான். காலை எழுந்து ஏஜென்சில நிறைய பேருக்கு ட்ரெயினிங் குடுக்கும் போது பெரிய பெரிய கல்லு நாலஞ்ச அடுக்கி ஒரே அடில உடச்சிலாம் காட்டி பாத்திருக்கேன். ஆனா இதுவர என்னை விளையாட்டுக்குக் கூட காயப்படுத்துனது இல்ல. ஒரு பாட்டு கூட வருமே. 


பெண் ஒன்று புதுமை…

கண்ணாடி பதுமை…

கையால தொிந்தால்…

கவலை இல்லை…


என்னை அவெ நெருங்கும் போது எல்லாம் அந்தப் பாட்டு தான் நியாபகம் வரும். பர்பெக்ட் ஜென்டில் மேன். கேர்ள்ஸ் விசயத்துல. என் விசயத்துல.


என்னோட அப்பாக்கு நைட் அட்டாக் மாதிரி வந்திருக்கு. எங்க வீட்டுக்கு நாந்தா ஒரே பொண்ணு. அந்த நேரத்தில என்னைக் கூப்பிட முடியாததுனால யார்க்கிட்டயும் சொல்லாம ஆம்புலென்ஸ்ல ஏத்திட்டு கிளம்பிருக்காங்க. அது ஹாஸ்பிடல்ல சேருரதுக்கு முன்னாடியே அவெ அங்க இருந்திருக்கான். டிஸ்சார்ஜ் ஆகுற வர கூடயே இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டான். என்னோட ஃபேமிலய பிரிச்சி பார்த்ததே இல்ல. அத அவனோடது மாதிரி அக்கறையா கவனிச்சுப்பான். என்னோட மகன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு.


என்னோட அம்மா காட்டாத அக்கற அவனுக்கு எம்மேல உண்டு. எனக்கு பிரியட்ஸ் ப்ராப்ளம் இருக்கு. கொஞ்சம் கெவியா இருக்கும். அம்மா தனியா பாய் தந்திடுவாங்க. உடம்பு ரொம்ப வலிக்கும். சொன்னா, 'எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படி தான் இருக்கும். நீ மட்டும் என்ன ஓவியமா'ன்னு கேப்பாங்க. 


பட், என்னோட ஆல்கஹால் அப்படி இல்ல. எனக்கு உளுந்தங்களிய அவனே செஞ்சி தருவான். சில டாக்டர்ஸ்ட்ட பேசி என்ன  சாப்பிட்டா வலி குறையுமோ அந்த மாதிரி பழம் காய்னு அவனே வாங்கி அந்த ஒரு வாரமும் அவனே சமைப்பான். 


அம்மா, அந்த மாதிரி நேரத்துல என்னோட ட்ரெஸ்ஸ தொடக்கூட மாட்டாங்க. பட் எல்லா வேலையும் அவெந்தா செய்வான். எந்த வேலையும் செய்ய விட மாட்டான். " என்ற போது சைந்தவியின் குரல் தேவையில்லாமல் காதில் ஒலித்தது. 


"ப்பா என்னமா நடிச்சி வேல வாங்குறா எங்கண்ணன. இந்த மாதிரி திறம எனக்கு இல்லாம போச்சே. " என உச்சுக்கொட்டி பைரவியின் கஷ்டத்தை நடிப்பு எனக் கேலி செய்யும் அன்னையும் மகளும் நினைவு வர,


" பையூ ஏன் சைலண்ட் ஆகிட்ட. " 


"நத்திங். " 


"அவ்ளோ தான் ரீசனா அவெ மேல காதல் வர. "


"இல்ல இல்ல... நிறைய இருக்கு. " என்றவள் பேச்சில் அவள் மதுவினுள் புதைந்து கிடக்கிறாள் என்பதை உணர முடிந்தது சுடரால். 


"பையூ, நீ சொல்றத எல்லாம் வச்சி பாக்கும் போது. உன்னோட ஹஸ்பெண்டு உனக்கு வெறும் ஹஸ்பெண்டா மட்டும் இல்ல. அம்மாவா அப்பாவா எல்லாமுமா இருக்க விரும்புறான். ஆனா நீ அவனுக்கு என்னவா இருந்திருக்க. 


எப்ப பாத்தாலும் அவனோட குடும்பத்த கம்ப்ளைண்ட் பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி பையூ. நீ அவங்க பேச்சுக்கு குடுக்குற இம்பாட்டெண்ட கொஞ்சம் மது மேலயும் காட்டுனா பெட்டர். 


அத்தோட அவெங்கிட்ட இருந்து லவ்வ எதிர் பாக்காம உன்னோட லவ்வ அவனுக்கு காட்டு. லைஃப் இன்னும் சூப்பரா இருக்கும். " என்க, பைரவிக்கு திருமணத்தின் போது தாய் கூறிய வார்த்தை நினைவு வந்தது. 


அதாங்க நாம விரும்புற வாழ்க்க அமையலன்னா விரும்புற மாதிரி அத அமைச்சிக்கணும்னு சாந்தி சொன்னது. உன் காதல அவனுக்கு காட்டு என்று சுடர் சொன்னது எல்லாம் சேர்ந்து பைரவிய சாமியட வச்சிடுச்சி.


பாவம் மது.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...