அத்தியாயம்: 3
பச்சை வண்ணப் போர்வை போர்த்தியது போல் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் என இயற்கை அன்னையின் கொடையால் எங்கும் செழுமையான இருந்தது அந்த கிராமம்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அந்த கிராமம் சேனையம்மனின் அருளால் விவசாயத்தால் செழித்திருக்கிறது.. அக்கிராமத்தில் தண்டபாணி குடும்பம் முக்கிய தலக்கட்டு உள்ள குடும்பம்..
தண்டபாணி - நாச்சியம்மாள் தம்பதியர்களுக்கு நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் ஆறு பிள்ளைகள்.. ஊரின் பாதி நிலத்திற்கு சொந்தக்கார்களான அவர்கள் குடும்பம் இந்தியாவின் முக்கியத் தொழிலான விவசாயத்தையே பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்..
சிவநாதன் - மலர்மங்கை
அதிகம் படித்திடாத சிவநாதன் தனது ஐயனுடன் சேர்ந்து விவசாயம் பார்க்கிறார்.. தன் குடும்பம் வறுமையில் இருந்த போதும் ஐயனை இழந்து நின்ற போதும் தூணா இருந்து குடும்பத்தைக் காத்தவர்.. இப்போது வரை அக்குடும்பத்தினர் அவர் சொல்லை மீறியது இல்லை.. தான் படிக்காவிடினும் தம்பி தங்கைகளை நன்கு படிக்க வைத்தார்.. பொறாமை என்பது துளியும் கிடையாத வெள்ளை மனம் கொண்டவர்..
ஐயனுக்குப் பின் தான் விவசாயத்தை விரும்பிச் செய்தது போல் தன் வாரிசுகள் அதையே செய்ய ஆசைப்பட்டார்.. ஆனால் ஒரு மகன் வேல்ராஜ்(30) தான் ஆசைப்பட்ட பெண் அபிநயா(27)வை மணந்து கொண்டு வெளியூரில் ஸ்செட்டில் ஆகிவிட்டான்.. திருவிழா சமயங்களில் மட்டுமே ஊர் பக்கம் எட்டிப் பார்ப்பது..
மற்றொரு மகன் பிரகாஷ்(24) சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு வழக்கறிஞர் என கூறிக்கொண்டு ஊருக்குள் சிறு சிறு பஞ்சாயத்து செய்து வருகின்றான்.. மனைவி மலர்மங்கை வாய்த்துடுக்கு அதிகமானாலும் அவரின் பேச்சில் நியாயம் இருக்கும்.. பாசத்தில் அவரை மிஞ்ச யாரும் இல்லை.
இரண்டாவது கயன்னங்கை..
அதிகம் பேசாத அமைதியான முதிர்கன்னி.. திருமணம் ஆகாததற்கு காரணம் உள்ளது.. அதை அடுத்தடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
மூன்றாவது மற்றும் நான்காவது சத்தியமூர்த்தி கலியபெருமாள்.. இருவரும் இரட்டையர்கள்.. (இவர்களின் பிள்ளைகள் தான் கதையின் நாயகன்கள்).. ஐயனை எதிர்த்ததால் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள்.. அவர்களால் தான் கயன்னங்கைக்கு திருமணம் ஆகவில்லை என தண்டபாணி ஐயா ஒதுக்கி வைத்துவிட்டார்..
" நா உயிரோட இருக்குற வர இவனுங்க இந்த வீட்டுக்கும் வரக்கூடாது.. ஊருப் பக்கமும் வரக்கூடாது.. " என தள்ளி வைத்து விட்டார்..
ஐந்தாவது கிருஷ்ணம்மாள்.. கணவன் மடாதிபதி.. இராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டார்.. திருமணமான சில ஆண்டுகளில் எதிரி நாட்டவரால் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.. தன் இரு பிள்ளைகளுடன் விதவையான அவர் தந்தையின் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.. அசோக் குமார்(28) மற்றும் இந்துமதி(22) இவரின் பிள்ளைகள்.. மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்..
கடைசியாக கவியரசன் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என்றாலும் வியாபாரம் செய்து வருகின்றார்.. அரிசி ஆலை மற்றும் சர்க்கரை ஆலை அவரின் பொறுப்பில் உள்ளது.. மனைவி கிருபாவதி.. இருமகள்கள் சுதா(16) , லதா (14).
இதுவே தண்டபாணி ஐயாவின் குடும்பம்.. இந்த குடும்பத்தில் விடு பட்ட கலியபெருமாள் சத்தியமூர்த்தி கயன்னங்கையின் கதை தான் இது..
சிலபல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை இவை.. அதாவது குடும்பம் சிதைந்த கதை..
இரட்டையர்கள் இருவரும் உருவத்திலும் குணத்திலும் வேறுபட்டவர்கள்.. கலியபெருமாள் சற்று சுயநலவாதி.. தனக்குத் தேவையானதை அமைதியாக இருந்து சாதித்துக் கொள்வார்.. ஆனால் யாரையும் எதிர்த்து சண்டையிட்டதில்லை.. குறிப்பாக தண்டபாணி ஐயாவை நிமிர்ந்து பார்த்துப் பேசுவதற்கு கூட அவர் பயப்படுவார்.
அவர் உடன்பிறந்த சத்தியமூர்த்தி அப்படி அல்ல.. ஒரு கொள்கைவாதி.. ஒருவரது விருப்பத்தை பிறரிடம் திணிக்கக் கூடாது என தத்துவம் பேசுபவர்.. அனைவருக்கும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தவும் நிறைவேற்றவும் உரிமையுண்டு என்று வாழ்வியல் பேசுபவர்.. இதன் காரணமாக தண்டபாணி ஐயாவுடன் இவருக்கு எப்பொழுதும் விவாதங்களும் சண்டைகளும் ஏற்படும்..
எனினும் ஐயாவுக்கு ' சரி ஐயா.. ' ' நீங்க சொன்னா சரி.. ' என தலையை தலையை ஆட்டும் மற்ற மகன்களைக் காட்டிலும் சத்தியமூர்த்தி மீது மதிப்பும் மரியாதையும் மனதிற்குள் உண்டு.. அவரது சில செயல்களால் பெருமை கொள்வதும் உண்டு..
தான் கற்ற கல்வியின் மூலம் தன் அண்ணன் செய்யும் விவசாயத்திற்கு நிறைய உதவி செய்தார்.. மண்ணின் தரத்தை அறிந்து பயிரிட வேண்டிய முறையை அண்ணனுக்கு மட்டுமல்லாது மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துக் கூறுவார்..
விவசாயத்தில் ஆர்வம் இல்லையென்றாலும் செடி , கொடி , மரம் மீது காதல் கொண்டவர்.. எனவே forest officer ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. தன் விருப்பத்தை ஐயனிடம் கூறினார்..
" என்னப்பு இதெல்லாம்.. படிச்சவனெல்லாம் வெளில வேலைக்குப் போய்ட்டா அப்புறம் யாரு இந்த ஊரக் காப்பாத்துறது.. இதுக்குத்தேன் படிக்கக் கூடாதுன்னு சொல்லுறது.. பாத்தியா இப்ப.. " என்றவர் மூத்தவரிடம் சென்று..
" எல்லாத்துக்கும் நீ தா காரணம்.. இவனுங்கல பத்தோட நிறுத்திருக்கனும்.. நீ தா படிச்சா நல்லது.. நம்மல மாறி விவசாயிக்கு நல்லது பண்ணுவானுங்க ஊருக்கு நல்லது அப்படி இப்படின்னு சொன்ன.. பாத்தியா... இவன் போய் கவர்மெண்ட்டுக்கு ஊழியம் தட்ட போறானாம்.. சொல்லு எடுத்துச் சொல்லி புரியவை அவனுக்கு.. " என கோபமாக தன் தோலில் இருந்த துண்டை உதறிவிட்டு அங்கிருந்த பெரிய மர ஊஞ்சலில் அமர்ந்தார்..
கூடத்தில் இருந்த மற்றவர்கள் என்ன சொல்வதென்று புரியாமல் நின்றனர்.. நாச்சியம்மாள் மனதுக்குள் ' இத்தன வர்ஷம் விவசாயம் பாத்து என்னத்த பெருச கண்டுட்டோம்.. மகனுங்களாவது நல்லா இருக்கட்டும்ன்னு பாத்தா இந்தாளு இப்படி பேசுராரே.. என்னத்த பண்ணலாம்.. ' என முணுங்கினார் அவர்..
" ஐயா நீங்க இந்த ஊருக்கு மட்டும் தான் உதவியா இருக்கச் சொல்றீங்க ஆனா நா இந்த பரிச்ச எழுதி பாஸ் ஆனா, இந்த நாட்டுக்கே நல்லது பண்ணுவேன்யா.. மழை தாய்யா நம்ம விவசாயம் நல்லா இருக்குறதுக்கும் விளைச்சல் வராததுக்கும் காரணம்.. இத சரி பண்ண நாம காடு, மரம் , மலை இத தாய்யா நாம முதல்ல கவனிக்கனும்..
நா சின்னப் பிள்ளையா இருக்குறப்ப நம்ம ஜில்லால அம்பூட்டு மரம் இருக்கும்யா.. ஆனா இப்ப இல்லைங்கைய்யா.. எல்லா மரத்தையும் வெட்டிட்டு காட்ட நாடா மாத்தினா எப்படிய்யா மழை வரும்.. விவசாயம் எவ்வளவு முக்கியமே அதே மாறி இயற்கையும் முக்கியம் ய்யா.. அத பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குறப்ப எதுக்குய்யா அதவிடனும்.." என வாதம் செய்ய.. மகன்களுக்கு ஏற்றார் போலும் கணவனின் மனம் நோகாத வாரும் ஒரு ஐடியாவை யோசித்தார் நாச்சியம்மாள்..
" இதோ பாருங்கப்பு நீங்க போய் வேல பாத்து சம்பாரிக்குறது சந்தோசமான விசயந்தேன்.. எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்குடுத்தா நா இதுக்கு சம்மதம் தர்றேன்.. என்னப்பு செல்லுறீங்க.. "
" சரிமா.. " என என்னை விட்டால் போதும் என்பது போல் எதையும் சிந்திக்காது கலியபெருமாள் கூற..
" சொல்லுங்கம்மா என்னன்னு.. " சத்தியமூர்த்தி சிந்தனையோடு..
" பெருசா ஒன்னுமில்லப்பு.. உங்க ஐயா எதுக்குப் பயப்புடுறாறுன்னா எங்க நீங்க இந்த ஊரும் பக்கமே வராம இருந்துடுவீகலோன்னு தா.. அந்த பயத்த போக்கத் தா நா ஒரு வழி சொல்றேன்.. அத கேட்டுட்டு சம்மதமா இல்லையான்னு சொல்லுங்க.. "
இம்முறை சரி என்று வேகமாக தலையசைத்தார் சத்தியமூர்த்தி.. என்னவாக இருக்கும் என சிந்திக்கலானார் கலியபெருமாள்..
" அதாவது நீங்க எங்க வேண்ணாலும் போங்க.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாரிங்க.. ஆனா அம்பது வயசுக்கு அப்புறம் ஒரேயடியா இந்த ஊருக்கு வந்துடனும்.. இங்க இருக்குற விவசாயத்தையும் வியாபாரத்தையும் பாக்கனும்.. நீங்க இந்த ஊருல சம்பாரிக்குற காசத்தா உன்னோட அப்பே , ஆத்தா , தம்பி ,தங்கச்சி இப்படி எல்லாத்துக்கும் செலவு செய்யனும்.. வெளில வேல பாத்தா அந்த காசு எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.. இங்க நடக்குற நல்லது கெட்டதுக்கு நீங்க வரலாம் ஆனா ஒரு பைசா கூட ஏத்துக்க மாட்டேன்.. எங்க மேல பாசமிருந்த செய்ங்க.. " என பதிலுக்கு சத்தியமூர்த்திக்கு செக் வைத்தார்..
ஐயாவுக்கோ மிகவும் பெருமையாக இருந்தது.. மனைவி தன் பயத்தை சரியாக புரிந்து கொண்டு நிபந்தனையிட்டது.. தன் முறுக்கு மீசையை முறுக்கி விட்ட படியே தன் மகன்களை பார்த்தார்.. அது 'இத்தனை வருடம் தாம்பத்திய வாழ்வில் என் மனைவி என்னை எத்தனை அழகாய் புரிந்து வைத்திருக்கிறாள் பார்..’ என்பது போல் இருந்தது..
பின் மனைவியையும் பார்த்தார் அவர் முகத்தில் மகன்களின் ஆசையை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியும் , கணவர் என்ன சொல்ல போகிறார் என்ற கவலையும் , மகன்கள் தன்னை விட்டு சில காலம் பிரிந்து சென்று விடுவார்களே என்ற வருத்தமும், ஒருங்கே இருந்தது.. ஆனால் சத்தியம் செய்து தருவார்களா மாட்டார்களா என்று பயம் மட்டும் அவரிடத்தில் இல்லை.. அவர்கள் எங்கு சென்றாலும் தான் கொண்ட பாசம் அவர்களை காந்தமென இழுத்து வந்துவிடும் என உறுதியாக நம்பினார்.
அன்னையின் நம்பிக்கையை பொய்யாக்காது 'நாங்கள் சில காலம் மட்டுமே வெளியில் வேலை செய்வோம் என்றும் பின் இங்கு வந்து விவசாயமோ அல்லது வியாபாரமோ பார்போம்..' என்று சத்தியம் செய்து விட்டு பரிச்சைக்கு தங்களை தயார் செய்ய ஆரம்பித்தனர்.
இருவரின் கடின முயற்சியால் யாருடைய சிபாரிசும் இன்றி அரசு வேலை கிடைத்தது.. சத்தியமூர்த்திக்கு காட்டு இலக்காவிலும், கலியபெருமாளுக்கு வருவாய் துறையிலும் என பணி நியமன ஆணை கிடைத்தது.. மிகுந்த மகிழ்ச்சியுடன் வேலைக்குச் சேர்ந்தார்கள்..
ஒருநாள் அன்னைக்கு உடல்நலம் சரியில்லை என்று கடிதம் கிடைத்தது இருவருக்கும்.. ஊருக்கு அடித்துப் பிடித்து கிளம்பினர்.. ஆனால் அங்கு நடந்து கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..