அத்தியாயம்: 4
தண்டபாணி ஐயா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.. ஏனெனில் கயன்னங்கைக்கு வரன் கூடிவந்து விட்டது என்பதால்.. அவர்கள் கிராமத்தில் இருபது வயதுக்கு மேல் பெண்களை வீட்டில் வைத்திருப்பதில்லை.. ஆனால் நங்கைக்கோ 25 வயது ஆகி விட்டது.. டீச்சர் டிரெய்னிங் முடித்துவிட்டு அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.. படிப்பை காரணம் காட்டி முதலில் திருமணம் பேச்சை ஒத்திவைத்தவர் வேலை கிடைத்ததும் திருமணத்திற்கு சம்மதித்தார்.. தீவர மாப்பிள்ளை வேட்டை நடைபெற்றது.. ஆனால் வரன் தான் கூடவில்லை.. அவரின் ஜாதகத்தில் தோஷம் பரிகாரம் பூஜை என மேலும் இரு ஆண்டுகள் ஆனது… ம்ஹிம் வரன் அமையவில்லை..
வரும் சில வரன்களும் படிப்பைக் காரணம் காட்டி.. " எம்புள்ளைய விட அதிகமால்ல படிச்சுருக்கு.. இதெல்லாம் சரிப்படாது.. வேலைக்கு போகாம இருந்தாலாவது சரிங்கலாம்.. என்னமா வேலைக்குப் போவாம இருப்பியா ?.." என்க..
ஆசை ஆசையாய் சேர்ந்த வேலையை விட மனமில்லாமலும் ஐயனை எதிர்த்து பேசமுடியாமலும் சரி என்றார்.. ஆனது ஆனது ஆறு மாதங்களுக்கு மேல், வேலையை விட்டு.. எதுவும் சரிப்படவில்லை.. இதோ இந்த இரண்டு மாதமாகத் தான் ஒரு வரன் கூடிவருவது போல் உள்ளது.. ஆனாலும் சில சிக்கல்கள் அதில் இருந்தது.. என்ன ஆனாலும் இதை முடித்து விட வேண்டும் என்று ஐயா முடிவு செய்துள்ளார்.. ஏனென்றால் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை தன் மகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதால்..
செல்லதுரை கயன்னங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை.. நங்கையை பள்ளியில் வேலை செய்யும் போதே பார்த்திருக்கிறார்.. அவளது குணமும் பண்பும் துரைக்கு பிடித்து தான் போனது... அன்னையிடம் நங்கையை தான் விரும்புவதாக சொன்னார்.. ஆனால் அவன் அன்னை முதலில் மறுத்து விட்டார்.. பின் தன் மகளை கரைசேர்க்க வேண்டுமே என சம்மதித்தார்.. தன் மகள் கனகவள்ளியை நங்கையின் தம்பிகளில் ஒருவருக்கு மனைவியாக்க வேண்டும் இல்லையெனில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.. முதலில் யோசித்த துரைக்கு பின் அன்னையின் இந்த முடிவே சரி என்று பட்டது..
நங்கையை கோயிலில் பார்ப்பது, பின்னாலேயே சுற்றுவது என துரை தன் பார்வையாலே காதலை வளர்த்தார்.. நங்கை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் வீட்டில் இவனுடன் தான் திருமணப் பேச்சு நடைபெறுகிறது என அறிந்தபோது துரையின் பார்வை நங்கையின் மனதில் காதலை விதைத்து மரமென வளர வைத்தது..
தண்டபாணி ஐயா, சத்தியமூர்த்தி இந்த ஏற்பாட்டிற்கு சம்மதிக்க மாட்டான் எனவே கலியபெருமாளுக்கு கனகவள்ளியை பேசி முடித்து விட்டார்.. இன்னும் மூன்றே நாளில் திருமணம் என்ற நிலையில் மகன்களிடம் எதுவும் சொல்லாது.. நாச்சியம்மாளுக்கு உடம்பு சரியில்லை என தந்தி கொடுத்து வர வைத்தார்..
வாசலில் வந்து இறங்கிய போது தங்கள் வீட்டு வாசலில் பூத்தோரணம் , பந்தல் , வாழை மரங்கள் எல்லாம் கட்டப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் இரட்டையர்கள்..
" ஏய் வாப்பு ஏன் இம்புட்டு நேரம்.. கொஞ்சம் வெல்லன வரக்கூடாதா.. போய் கைய கால கழுவீட்டு சாப்புட்டுட்டு உ அக்கால பாரு.. இன்னைக்கு தா அவ சந்தோஷமாக இருக்கா.. " நாச்சியம்மாள்.
அக்காவுக்கு கல்யாணம் என்பதை மட்டும் அறிந்த அவர்கள் நங்கையை பார்க்கச் சென்றனர்..
" டேய் எப்படா வந்திங்க.."
" நல்லா இருக்கீங்களா.. "
"சாப்டீங்களா.." என சொந்தங்களின் நல விசாரிப்புக்கு பதிலளித்தவாறே சென்றனர்.. சத்தியமூர்த்திக்கு நங்கையின் முகத்தில் தெரிந்த வெட்கமே சொல்லியது கல்யாணத்தைப் பற்றிய அவள் எண்ணத்தை..
இரவில் ஐயனிடம் " ஏதாவது செய்யனுமாங்கையா.. சொல்லுங்க செஞ்சுடலாம்.." சத்தியமூர்த்தி..
" ஆமாய்யா சொல்லுங்க.. " கலியபெருமாளும் உதவி செய்ய முன்வர.. அவனை பார்த்தவர்..
" நீ எதுக்குடா செய்யனும்.. நீ போய் தயாரா இரு.. மாப்பிள்ளையா லட்சணமா நடந்துக்க.. உனக்கு உடுப்பு எல்லாம் எடுத்தாச்சு மாததிபாரு.. சரியா இல்லைன்னா மாத்திக்கலாம்னு அந்த கடக்காரன் சொன்னான்.. அப்புறம்.." என பேசிக் கொண்டே இருந்தார்.. ஒரே நேரத்தில் இரு பிள்ளைகளின் திருமணம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அவருக்கு..
ஆனால் மகிழ வேண்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. " என்னங்கையா இதெல்லாம்.. நங்கைக்கு பாத்ததையே எங்ககிட்ட சொல்லல இதுல இவனுக்கும் சேத்தா.. அவங்கிட்ட ஒரு வார்த்தையாவது கேட்டீங்களா சம்மதமா இல்லையான்னு.. யாருக்கோ கல்யாணம் பண்ர மாதிரி பேசுறீங்க.. தப்புங்கையா இதெல்லாம்.." சத்தியமூர்த்தி..
" டேய் என்னடா புதுசா பேசுற.. நம்ம ஐயா பேச்ச மீறி நாம நடந்துக்க மாட்டோம்கிற நம்பிக்கைல தான் வாக்கு குடுத்திருக்காரு.. இப்ப என்ன அவன்ட கேக்கனும் அவ்வளவு தான.. டேய் சொல்லுடா உனக்கு இஷ்டந்தான.. என்னடா முழிக்குற பதில் சொல்லு.." மூத்தவர் சிவநாதன்..
"......"
கலியபெருமாள் அருகில் சென்ற மூர்த்தி.. " இப்பையும் நீ சொல்லலைனா உன்னோட வாழ்க்க மட்டுமில்ல நம்ம நங்கையோட வாழ்க்கையும் சேந்தே கெட்டுடும்.. " என்க..
" என்னடா சொல்ற.." சிவநாதன் அதிர்ச்சியாக..
" ஐயா இவன் ஜோதிங்கிற பொண்ண விரும்புறானுங்கைய்யா.. சொல்லுடா.. " என பெருமாளை உசுப்ப..
இதற்கு மேல் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்று " ஆமாங்கையாஆஆஆஆஆ.."
கன்னத்தில் கை வைத்தவாறு தரையில் விழுந்து கிடந்தான் கலியபெருமாள்..
"மீச மெளைச்சதுமே உனக்கு ஆம்பளன்னு நினப்பு வந்திடுச்சா.. ***.. " என தகாத சொற்களால் வசைபாடியவர்..
" இன்னும் ரெண்டு நாள்ள கல்யாணம்.. எதாவது ஏடாகூடமா பண்ணுன.. கொன்னுடுவேன் உன்ன.. " என்றார் மிரட்டலாக..
" ஐயா..."
" இதுல என்னோட பொண்ணு வாழ்க்கையும் இருக்கு எவனாவது எதாவது பேசுனீங்க.. நா மனுசனாவே இருக்க மாட்டேன்.. பாத்துக்கோங்க.. " என துண்டை உதறிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றார்..
இங்கு நடந்த எதையும் நங்கைக்கு தெரியவிடாமல் பார்த்துக் கொண்டனர் வீட்டில் இருந்த அனைவரும்.. நாளை காலை கல்யாணம் என்ற நிலையில் ஏதாவது செய்து இதை நிப்பாட்டி விடவேண்டும் என்று கலியபெருமாள் திட்டமிட்டார்.. அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு மொட்டையாக ஒரு கடிதம் எழுதி தன் விருப்பமின்மையை தெரிவித்தார்..
அவர் நினைத்தது போலவே செல்லதுரையும் அவரின் குடும்பத்தினரும் வந்து சண்டையிட்டனர்.. அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற இயலாது தலைகுனிந்து நின்றார் தண்டபாணி ஐயா.. மகள் திருமணம் நடக்க வேண்டும் என்று பொறுத்துப் போகும் ஐயனின் நிலை கண்டு பொறுக்க முடியாமல்..
" இப்ப என்ன உங்க தங்கச்சி கல்யாணம் நடக்கனும் அதான.. அவங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லுங்க நா அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்.. " சத்தியமூர்த்தி..
உடனடியாக கனகவள்ளியின் சம்மதம் பெறப்பட்டு அந்த மாலை வேளையிலேயே திருமணத்தையும் நடத்திவிட்டுத்தான் நிம்மதி அடைந்தனர் செல்லதுரை குடும்பத்தினர்.. ஐயா முகத்தில் இப்போது சிறு புன்னகை உண்டானது, மகள் திருமணம் நடந்துவிடும் என்று.. ஆனால் அதற்கு ஆயுசு ரொம்ப கம்மி..
விடியல் மிக அழகாக இருந்தது.. சிலரின் வாழ்வில் அது அஸ்தமனமாக மாறியது விதியின் சதியால்..
மணமேடை அலங்கரிக்கபட்டு மண்டபம் முழுவதும் சொந்தங்கள் கூடியிருந்தனர்.. ஆனால் மணப்பெண் மட்டும் அலங்காரம் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..
" அடியே இப்படியே உக்காந்திருந்தா என்னடி அர்த்தம்.. போய் கிளம்புடி வெல்லன முகூர்த்தத்த வைச்சுட்டு இப்படி இருக்க.. ரெடியாவு.. நிறைய வேல கடக்கு.. நா போய் வந்தவங்கள பாக்குறேன்.. " நாச்சியம்மாள் புடவை நகைகளை நங்கையின் முன் வைத்துவிட்டு செல்ல.. நங்கை அதை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
வெளியே கேட்ட மேளதாளச் சத்தம் மணமகனின் வருகையை பறைசாற்ற.. அனைவரும் மாப்பிளை வீட்டாரை வரவேற்க மகிழ்ச்சியுடன் வாசலிலேயே நின்றனர்..
" ஏன்டி இங்கன இருக்க.. அக்கா கூடவே இருக்கனும்னு சொன்னேன்ல.. போ.. " நாச்சியம்மாள்.. விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனம்மாளை கடிந்து கொள்ள..
" போமா அவா இடிச்ச புளியாட்டம் உக்காந்திட்டே இருக்கா.. என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம அந்த புளியமரத்தையே பாத்துட்டு இருக்கா.. அலங்காரம் கூட பண்ணீக்கல.. நா போகமாட்டேன்.. அவளுக்கு பேயி புடுச்சுருச்சு போல.." என அங்கிருந்து சென்றாள் கிருஷ்ணம்மாள்..
சின்னவளின் பேச்சில் அதிர்ந்து போனார் நாச்சியம்மாள்.. உடனே அறைக்குச் சென்று மகளைப் பார்க்க.. எப்படி விட்டுச் சென்றாரோ அதே போல் அமர்ந்திருந்தாள் நங்கை.. ஏன் என்று கேட்டுப் பார்த்து அலுத்துவிட்டது அவருக்கு.. மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட.. பதில் பேசாது அமர்ந்திருந்த அவளை கடுப்புடன் உலுக்கினான் செல்லதுரை.. அவனை விழி உருட்டி பார்வை பார்த்தாரே தவிர வாயை திறக்கவில்லை..
" இப்படியே இருக்கப்போறியா.. இல்ல எழுந்து வரப்போறியா ?.. உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு எம் மவன் என்னபாடு படப்போறானோ." துரையின் தாயார்..
" யாரு கட்டிக்கப்போறா உங்க மகன? " நங்கை.
" என்னடி வாய் நீளுது.. உன்னைய கட்டிக்க வேறயாரு வருவா.. எம்மகன விட்டா ஊருக்குள்ள எவன்டி இருக்கான்.. முத்துன மூஞ்சிய வச்சுட்டு உனக்கு இந்த வாய் ஆவாதுடி.. ஊருக்குள்ள யாரும் கிடக்கலைன்னு தான எம்மகன புடிச்சுருக்கீங்க அப்பனும் மகளுமா சேந்து.. திட்டம் போட்டு எம்மகெ மனசுல ஆசைய வளத்திட்டு இப்ப யாரு கட்டிக்கப்போறான்னா கேக்குற.. ஏத்தம் தான்டி உனக்கு.. " என பேசிக்கொண்டே இருக்க..
துரை, அன்னையை அடக்கியவன் நங்கையிடம் என்னவென்க.. அவள் " எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. எல்லாத்தையும் நிறுத்துங்க.." என்றாள் உணர்ச்சியற்ற குரலில்..
" என்ன நிறுத்தனுமா.. இப்ப இந்த கல்யாணத்த நிறுத்துற அளவுக்கு என்ன நடந்திடுச்சி.. " என்பது அங்கிருந்த அனைவரின் கேள்வியாக இருந்தது..
செல்லதுரையிடம் " என்னையா விரும்பித்தான கட்டிக்கிறேன்னு சொன்னிங்க.."
" இப்ப இது தேவையா.. முதல்ல ரெடியாகு.. முகூர்த்தத்துக்கு நேரமாது.. "
" சொல்லுங்க.. என்ன விரும்பித் தான் கல்யாணம் பண்ணப்போறீங்க.. "
"ஆமான்டி உன்ன விரும்பித்தா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடே பண்ணேன்.. இப்ப என்ன அதுக்கு.." என்றான் கடுப்புடன்..
" அப்புறம் எதுக்கு நம்ம காதல பணயமா வச்சு உங்க தங்கச்சிக்கு கல்யாணத்த நடந்துனீங்க.." என்க அதிர்ந்து போனவன்..
" நங்கை நா என்ன சொல்றேன்னா..."
" போதும்.. நேத்து நீங்க பேசுனது எல்லாத்தையும் நா கேட்டுட்டு தா இருந்தேன்.. உங்க தங்கச்சிக்காக தான என்ன விரும்புன மாதிரி நடிச்சீங்க.. அவள என் தம்பி ராணி மாதிரி பாத்துப்பான்.. கவலைப்படாம போங்க.." என சத்தியமூர்த்தியைப் பார்த்தாள்.. அதில் நான் சொன்னதை நீ காப்பாற்ற வேண்டும் என்ற செய்தி இருந்தது.. தன் மனையாளின் கையை அழுத்தி பிடித்தி ' நா பாத்துப்பேன்.. ' என நம்பிக்கை கொடுத்தான் சத்தியமூர்த்தி..
" என்னம்மா இது.." தண்டபாணி..
" வேண்டாம்யா.. " என ஒற்றை வரியில் பேச்சை முடித்தவர்.. சுற்றி இருந்தவர் கூறிய எதையும் கவனிக்காது அங்கிருந்து சென்றாள் நங்கை..
செல்லதுரை மீது காதல் இருந்தபோதும் அவர் கூறிய " ஏன் தங்கச்சி தா உங்க வீட்டு மருமகள்னு நீங்க சொன்ன ஒரே வார்த்தைக்காகத் தா உங்க மகள கண்ணாலம் கட்டிக்குறதுக்கு சம்மதிச்சேன்.. ஏ தங்கச்சி கல்யாணம் நடக்கலைனா கடைசி வரைக்கு உங்க மக இப்படியே தா இருப்பா.. நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. ஊர்ல எவெங்கூடையும் நடக்க விட மாட்டேன்.. " என்ற வார்த்தை அவள் வளர்த்த காதல் மரத்தில் இடியென இறங்கி பட்டுப்போக வைத்தது..
பின்னாலேயே சென்ற செல்லதுரை எவ்வளவு சமாதானம் சொன்னபோதும் அதை நங்கை ஏற்க வில்லை..
" கனகாவ பத்தி உனக்கே நல்லாத் தெரியும் தான.. அவள யாரு கட்டிப்பா.. நா அவளுக்கு தேடாத வரன் இல்ல.. எல்லாம் தெரியும் தான.. இருந்தும் நீ இப்படி பண்ணலாமா.. வாடி.. நீ இல்லைன்னா நா சொத்துடுவேன்டி.."
அவரைத் திரும்பிப் பார்த்தவள்.. " உனக்கு என்னப் பாத்தா விளாட்டு பொம்ம மாதிரி தெரியுதா.. உங்கள நடிப்பு காதல்னு நம்பி ஏமாந்து போனது நா.. உறவுல முக்கியமானது நம்பிக்கை.. அத நீங்க இழந்திட்டிங்க.. திரும்ப உங்கள நம்ப நா தயாரா இல்ல.. போய் உங்க வாழ்க்கையாவது நல்லா வாழுங்க.." என திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்..
அவள் கூறிய வார்த்தைகளில் அவள் மனவலியை உணர்ந்தான்.. தன் தவறை அறிந்து நொந்து போனான்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..