அத்தியாயம்: 5
வீட்டிற்கு வந்த நங்கை கண்களில் நீர் வற்றும் வரை அழுதாள்.. ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி மாறியதே என தன்னிறக்கம் கொண்டாள்..
மகளிடம் வந்த தண்டபாணி ஐயா.. " ஏம்மா இந்த முடிவு.. பிடிவாதம் பிடிக்காம ஐயா சொல்றத கேளுமா.. " என நயந்து பேசினார்..
" இல்லைங்கைய்யா நா உறுதியா இருக்கேன்.. எனக்கு இந்த கண்ணாலமே வேண்டாங்கைய்யா.. " .
" அவன் வேண்டாம்னா விடு நா உனக்கு வேற மாப்பிள்ளை பாக்குறேன் நங்கை.. அவன் முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டு.. " சிவநாதன்..
" இல்லண்ணா.. மறுபுடியும் எல்லாரோட ஏளனப் பேச்சைக் கேக்க நா தயாரா இல்ல.. என்னைய விட்டுடுங்க.."
" அதுக்காக இப்படியே எப்படி இருக்க முடியும்.. உனக்கு அப்புறமும் பிள்ளைங்க இருக்கு.. கொஞ்சமாச்சும் பொறுப்போட நடந்துக்க.. கூறு கெட்ட தனமா நடந்துக்காத.. மதிப்பா பாத்து இவளுக்கு அடுத்த முகூர்த்துல முடிச்சு வைங்க, இன்னமும் இவள கொஞ்சிகிட்டே இருக்காதீங்க கல்யாணமே நடக்காது.. படிக்க வக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டாதான.. இந்த வீட்டுல யாரு கேக்குறா எம் போச்ச.." நாச்சியம்மாள்..
" அம்மா சும்மா இருங்க.. க்கா உன்னோட நிலம புரியுது.. கொஞ்சம் பொறுமையா இரு.. நல்ல பையனா பாத்து முடிக்கலாம்.. உனக்கு நிச்சயம் புடிக்கும்கா.." கலியபெருமாள்..
அவனை அனைவரும் சேர்ந்து முறைத்தனர்.. உன்னால் தான் எல்லாம் என்பது போல் இருக்க அவன் நழுவிச் சென்றான்.. மெட்ட கடுதாசிய யாரு போட்டான்னு தெரிஞ்சிச்சி போல..
" அண்ணா என்னோட ஃப்ரண்டோட அண்ணா ஒருதவங்க இருக்காங்க.. நா பேசிப் பாக்குறேன் " மூர்த்தி..
" ஆமாண்டா நானும் மலர் வீட்டு பக்கம் ஏதாவது சம்பந்தம் வருதான்னு பாக்குறேன்.." நாதன்
" டேய் முதல்ல அந்த மாரியப்பன் ஒரு இடம் சொன்னான்.. என்னனு விசாரிடா.. எனக்கு அந்த இடம் அமையும்னு தோனுது..." ஐயா..
நங்கையின் மனநிலை அறியாது திருமணம் ஒன்றே குறி என அனைவரும் பேச.. இதை நங்கையால் ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அலங்கார பொம்மை போல் அலங்கரித்து இது தான் மாப்பிள்ளை அது தான் மாப்பிள்ளை என இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களை பார்த்துவிட்டாள்.. யாருக்கும் அவளது மனமும் உணர்வும் புரியவில்லை.
மனங்கள் இணைந்து ஒன்று போல் ஒருமித்து வாழ்வதே திருமணம்.. இன்று அப்படி நடப்பது இல்லை. பார்த்ததும் காதல்.. அதை நம்பி மனங்கள் இணையும் முன்னே உடலால் இணைந்து விடுகின்றனர்.. அது அலுத்து விட்டால் உடனே விவாகரத்து.. பின் மீண்டும் காதல்.. இங்கு புரிதல் என்பதே இல்லை..
பெண் பார்க்க என வந்தவர்கள் சிரித்து பேசி பழகி பின் அவளின் ஜாதகத்தையும் வேலையையும் பற்றி அறிந்து பெண்ணிடம் தான் குறை உள்ளது போன்று பேசிச் சென்றனர்.. இனி தன்னால் காட்சிப் பொருளாக இருக்க முடியாது என தீர்க்கமாக முடிவெடுத்து விட்டாள்..
" ஐயா நா என்ன சொல்றேன்னா..." நங்கை..
" சும்மா இருமா.. உனக்கு நாங்க நல்லது தான் செய்வோம்.. நீ அமைதியா நா சொல்றத மட்டும் கேளு.. " என ஐயா சற்று காட்டமாக பேசினார்.. அவருக்கு மகள் அனைவர்க்கும் முன்னே தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உணர்வு.. தன் பேச்சிற்கு எதிராக செய்து விட்டாளே தன் கௌரவம் என்ன ஆவது ஊருக்குள் அவரின் செல்வாக்கு சரிந்து போகும் இல்லையா.. இனி தான் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் அது மகளின் திருமணத்தில் தான் உள்ளது என நம்பினார்..
" போதும் நிறுத்துங்க.. " என எவ்வளவு முடியுமே அவ்வளவும் தன் குரலை உயர்த்தி கத்தினாள் நங்கை..
அங்கு அமைதி நிலவியது.. பின் " ஏன் தா சொல்றது உங்களுக்கு புரிய மாட்டேங்குது.. எனக்கு கல்யாணமே வேண்டாம்.. " என்றாள் குரலை மாற்றாமலேயே..
பின் ஐயனிடம் சென்று " ஐயா நா உங்க மகளா மட்டுமே இருக்க விரும்புறேன்.. இல்ல இருக்க கூடாதுன்னா.. நா ஏதாவது ஆஸ்ரமத்துல சேந்துருறேன்.. இல்லைன்னா ஏதாவது கிணத்துலயோ குளத்துலையோ விழுந்து சாகுறேன்.. நா என்ன செய்யனும்னு நீங்களே சொல்லுங்க ஐயா.. " கண்ணீருடன்..
அவள் மனதை மாற்ற முயன்று தோற்றுத்தான் போயினர் அனைவரும்.. சரி சிறிது காலம் ஆகட்டும் என விட்டு விட்டனர்..
வீடே நிசப்தமாக இருந்தது.. முதலில் ஆரம்பித்து கிருஷ்ணம்மாள் தான்..
" முதல இவள வெளில போ சொல்லுங்க.. இந்த ஊமையால வந்தது தான் இதெல்லாம்.. அக்கா இப்படி இருக்க காரணமும் இவ தான்.. இவால்லாம் பூமிக்குப் பாரமா ஏன் தா இருக்காளோ.. " என வாய்க்கு வந்தபடி வசைபாடிக் கொண்டு இருந்தாள் கனகவள்ளியை..
ஆம் கனகவள்ளி வாய் பேச முடியாதவர்.. பிறந்த முதலே " ராசி இல்லாதவ " "அபசகுணம் பிடிச்சுவ" என்ற சொல்லையே அதிகம் கேட்டு வளந்தவர்.. தாய் தந்தை அண்ணன் என அனைவரும் இருந்தும் அனாதையாக இருப்பவர்.. பாசத்திற்கு ஏங்கும் அவளை புரிந்து கொண்டவர் யாரும் இல்லை..
திருமணம் முடிந்த அன்று இரவு தயங்கியபடியே அறைக்குச் சென்றாள்.. அங்கு சத்தியமூர்த்தி இவளைப் பார்த்ததும் அவளிடம் 'திருமணத்திற்கு யாராவது உன்னை நிர்பந்தித்தார்களா ' என கேட்க பதில் கூறவில்லை அவள்.. பயம் என நினைத்து அவளின் பயத்தைப்போக்க சிறிது நேரம் தன்னைப் பற்றி கூறினான். பின்
" ஏ எதுவும் பேச மாட்டிக்கிற.. " என்க
அவள் சைகையிலேயே தனக்கு பேச வராது என்பதை கூறி ஆழ ஆரம்பித்தாள்.. அதுவரை மூர்த்திக்கு தெரியாது.. அதிர்ந்து தான் போனான்.. பின் அவளிடம், " நீ எப்படி இருந்தாலும் இப்ப நீ என்னோட மனைவி தான்.. அழாத.." என ஆறுதல் கூறினான்..
இதுவரை அன்பாய் ஒரு சொல் கூட கேட்டறியாதவளுக்கு அதை பொழிந்த அவன் கணவனாக அல்லாது கடவுளாகவே தெரிந்தான்.. இன்றிலிருந்து தன் உயிர் போகும் வரை அவன் மட்டுமே உலகம் என வாழ்பவர். மற்றவர்கள் அவளுக்கு இரண்டாம் பட்சமே..
எனவே கிருஷ்ணம்மாள் கூறிய எதையுமே அவள் காதில் வாங்காது நின்றாள்.. அது கிருஷ்ணம்மாளை இன்னும் கோபமேற்றியது..
" ஊமைக்கி அவ்வளவு திமிரா.. " என அவளது கூந்தலை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ள முயன்றாள்.. இதற்குள் மற்றவர்கள் அவளைத் தடுத்தனர்.. வார்த்தைகள் தடித்துக் கொண்டே சென்றது.. சண்டை மட்டும் முடியவே இல்லை..
அனைத்திற்கும் காரணமான கலியபெருமாள் தன் காதலி ஜோதியைப் பற்றி கூறி மேலும் எண்ணெய் ஊற்றினார்.. அவ்வளவு தான் ஐயாவிற்கு கோபம் தலைக்கு மேல் வந்து விட்டது..
" இனி இவன் இந்த வீட்டுல இருக்கக் கூடாது.. வெளிய போடா.. இன்னைக்கு நம்ம குடும்பத்துக்கு நீ வாங்கித் தந்த அவமானமே போதும்.. நீ ஏன் பிள்ளையும் கிடையாது நா உனக்கு அப்பனும் கிடையாது.. உனக்கு சொத்துல பங்கு கிடையாது.. போடா வெளில.." என முதலில் கலியபெருமாளை வீட்டை விட்டு துரத்தினார்..
" அப்பா அவன் மேல மட்டும் தப்பில்ல நீங்க அவன்ட்ட சம்மதம் கேட்டுருக்கனும்.. " என மூர்த்தி கலியபெருமாளுக்கு ஆதரவு தர..
" அவனுக்கு சப்போட்டா பேசின உன்னையும் துரத்தி விட்டுடுவேன்.. பாத்துக்க.."
" ஐயா...."
" முதல்ல அந்த தரித்திரத்தை அனுப்புங்க.. என்னைக்கு இவா பேச்ச இந்த வீட்டுல பேச ஆரம்பிச்சோமோ அன்னைக்கு பிடிச்சது சனி.. " கிருஷ்ணம்மாள்..
" மூடு வாய.. வயசுக்கு தக்குன மாறியா பேசுற.. இனி ஒரு வார்த்தை பேசின அவ்வளவுதான்.." நாதன் எச்சரித்தார்.
ஆனாலும் அவளை அடக்கத்தான் முடியவில்லை.. இறுதியில் சத்தியமூர்த்தியும் கலியபெருமாளும் வீட்டை விட்டே சென்றுவிட்டனர்..
கிளம்பும் முன் தன் தமக்கையிடம் சென்று " அக்கா இது உன்னோட வாழ்க்க சம்பந்தப்பட்டது.. யோசிச்சு முடிவெடுக்கா ." என கூறிச் சென்றனர்..
தந்தையிடமும் தாயிடமும் 'நங்கையை விட்டுவிடாதீர்கள்.. பேசி புரிய வைத்து மாப்பிள்ளை பார்த்து பேசி முடியுங்கள்..' என்று கூறிச் சென்றனர்..
நாச்சியம்மாள் இடிந்து போய் அமர்ந்து விட்டாள்.. ஒரே சமயத்தில் தன் மூன்று பிள்ளைகளின் வாழ்க்கை மாறியதை எண்ணி கவலை கொண்டார்..
ஆனாலும் கலியபெருமாளை சத்தியமூர்த்தி விட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை.. அதனால் கயன்னங்கை பற்றிய கவலை அதிகமாகவே இருந்தது..
நாளும் கிழமையும் வேகமாக சென்றது.. கலியபெருமாள் ஜோதியை மணந்து கொண்டார்.. அரசு வேலையை விட்டு விட்டு சத்தியமூர்த்தியுடன் ஊட்டியில் வசிக்கிறார்.. அங்கிருந்த எஸ்டேட் ஒன்றில் மேனேஜராக பணிபுரிகிறார்..
வருடங்கள் சென்ற நிலையிலும் கயன்னங்கையை மாற்றத்தான் முடியவில்லை. இது தண்டபாணி ஐயாவின் உடல் நலத்தைப் பாதித்தது.. உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் கவலையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விரைவாக இறந்து போனார்..
இறுதி சடங்கில் பங்கேற்க என பிள்ளைகள் கூடினர்.. அதன் பின் வெவ்வேறு திசை என பறந்து சென்றனர்.. நாட்களும் வருடங்களும் யாருக்கும் காத்திராமல் அது சென்று கொண்டே இருந்தது ..
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் காலம் வந்தது..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..