அத்தியாயம்: 20
" I didn't expect to see you here!!. It's really Surprising me!!. " எனச் சொல்லி எழுந்து வேகமாக அணைத்துக் கொண்டான் ரிஷி, அதுவும் இறுக்கமாக. ஒரு நொடி அந்த அணைப்பின் இறுக்கத்தில் அவனின் ஏக்கம் புரிந்தாலும் அவனை விட்டு விலகி,
"Surprise!. யாருக்கு உனக்கா? இல்ல எனக்கா!. " என்றாள், கண்களை விரித்துக் கோபமாக குரல் ஏற்றாமல் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
அதைக் கேட்டவன் ஏன் என்று புரியாமல் முழித்தான். அவன் எதிர்பார்க்க வில்லை. ஹரிணியை ஊட்டியில் சந்திப்பான் என்றா!. இல்லை பார்பி டாலுடன் இருக்கும் இந்த நேரத்தில் சந்திப்பான் என்றா!. அது அவனுக்குத் தான் தெரியும். அவளை திடீரெனக் கண்டதால் முழிக்கிறானோ!. மொத்தத்தில் அவன் ஹரிணியை இன்று பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை.
"கிட், என்னாச்சி உனக்கு?. "
"இன்னும் என்ன ஆகனும். ம்... இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அதுவும் இந்த வெள்ளக்காரி கூட."
"டின்னருக்கு வந்தோம். இதுல என்ன இருக்கு!. " என்றான் சாதாரணமாக.
"ம்ச்… நீ எதுக்கு முதல்ல ஊட்டிக்கி வந்த?. "
"ஏ! வரக்கூடாதா என்ன?. "
'கேள்வி கேட்டா பதில் சொல்லனும்யா. திருப்பியாய்யா கேள்வி கேப்ப. ' என நொந்து கொண்டவள்,
"இங்க வர்றேங்கிறத நீ ஏ எங்கிட்ட சொல்ல?." என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு.
"நீயும் தா ஊட்டில இருக்கேங்கிறத சொல்லல. நா எதாவது கேட்டேனா?. " என்றான் அசால்ட்டாக.
இப்படி இருவருமே தாழ்ந்த குரலில் சண்டை போட்டுக்கொள்ள,
" ஸாரி, நா உங்கள டிஸ்டர்ப் பண்ண விரும்பல. பட்… ரிஷி உங்களுக்கு இந்தப் பொண்ண தெரியுமா?" என அந்தப் பார்பி டால் ஆங்கிலத்தில் கேட்டாள்.
" எஸ்… She is my wife." என்றான் ஹரிணியின் இடையில் கை வைத்துத் தன்னோடு சேந்தணைத்தபடி. அதைப் பார்த்த பார்பி டாலின் முகம் விழுந்து விட்டது.
" கை எடு. " எனப் புன்னகையுடன் அதை எடுக்க முயற்சி செய்ய, ம்ஹீம்... அவன் அழுத்தத்தைக் கூட்டினானே தவிர சிறிதளவும் விரல் அசைக்கவில்லை. ஹரிணி, அவனை ஒரு பார்வை பார்த்தபின் அந்த பெண்ணைப் பார்த்தாள். பாவமாக இருந்தது.
"பாஸ் ஹீரோ என்ரியா.? " மனோ ரகசியமாகக் கேட்டான்.
"யாரு டா ஹீரோ? " கௌதம்.
"அதோ அவரு தா. மாஸ்ஸா நம்ம யாஷ் மாறியே இருக்காப்லல்ல. என்ன யாஷ்க்கு தாடி இருக்கும். இவருக்கு இல்ல. அது மட்டும் மிஸ்ஸிங். வச்சிருந்தாப்ல. எங்கையோ!! போயிருப்பாரு. ஸ்... ஆ.. " வலியில் தொடையை தடவினான் மனோ.
பின்னே கௌதம் இருக்கும்போது ரிஷியை ஹீரோ என்றால் கோபம் வரத்தான செய்யும்.
" ஏ பாஸ்.? "
" ஏன்டா ஆடிக்கி ஒருக்க அமாவாசைக்கி ஒருக்கன்னு வந்து தலைய காட்டுறவே உனக்கு ஹீரோன்னா, முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இருக்குற நா யாரு?. பத்து எப்பிசோடுக்கு மேல ஆச்சி அவன வீட்டுலையே விட்டுட்டு வந்து. இப்ப திடீர்னு வருவாராம், அவன நீ ஹீரோன்னு தூக்கி வச்சிக்கிவியாம். என்ன டா இதெல்லாம்.? "
"அப்ப அவரு ஹீரோ கிடையாதா.? "
" இல்ல. ஹீரோயினோட புருஷன் அவ்வளவு தா." எனக் கடுப்புடன் சொன்னான் கௌதம். அவனை ஏற இறங்க பார்த்தவனிடம் 'என்னடா. ' எனக் கேட்க,
"நா எதுக்கும் மத்தவங்க கிட்ட கேட்டுச் சொல்றேன். இந்தக் கதைக்கி ஹீரோ யாருன்னு?. " என்றவனை அடிக்கப் போக,
"அண்ணா என்னண்ணா நடக்குது அங்க?. யாரு அது.? " பவதா.
பாவம் அவள் இன்னும் ரிஷியின் முகத்தைச் சரியாக பார்க்கவில்லை. அதான் கேட்கிறாள்.
"இத பத்தி தா நா உங்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்னேம்மா. என்னோட ஃப்ரெண்டு காதலிக்கிறேங்கிற பேர்ல ஒரு கொடுமக்காரன கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு மிருகத்தனமான கணவன்கூட வாழ்ந்துட்டு இருக்கான்னு. அது இவெந்தாம்மா. அது இவந்தா. பாத்தியா பொண்டாட்டிக்கி துரோகம் பண்ணிட்டு எப்படி கல்லு மாறி நிக்கிறான்னு. " கௌதம் சோகமாக ஸீன் போட,
"கல்லு எப்படி பாஸ் நிக்கும். " மனோ. முக்கியமான சந்தேகம் இல்லையா கேட்டுத்தான ஆகனும்.
" நிக்காம! பெட்டு போட்டுப் படுக்கவா செய்யும். அங்க பாரு கோர்ட்டு சூட்டு போட்டு என்னோட டார்லிங் பக்கத்துல நிக்கிறானே பழனி மல மாறிப் பயங்கறமா வளந்து கொட்ட ஒருத்தேன். அவெந்தா கல்லு. சாதா கல்லு இல்ல பாறாங்கல்லு. பூ மாறி இருக்குற என்னோட டார்லிங்க அவெ எப்படி கசக்குறானு நீங்களே பாருங்க.
வக்கிலம்மா, நீங்க தா காப்பாத்தனும். கல்யாணங்கிற பேர்ல அவளுக்கு நடந்த கொடுமைல இருந்து விடுதல வாங்கித்தரனும். " என்றவன், மனோவிடம் திரும்பி.
" டேய் போலிஸ்ஸு, இந்தா இதுல ஹை பிக்சல் கேமரா இருக்கு. இங்க நடக்குற எல்லாத்தையும் வீடியோ எடுத்து வை. வக்கிலம்மா கேஸுக்கு உதவியா இருக்கும்." சண்டையிடும் ஹரிணியையும் ரிஷியையும் வீடியோ எடுக்கச் சொல்லி விட்டு அவர்களின் அருகில் சென்றான்.
"ச்ச... போலிஸ் காரனான என்ன வீடியோக்காரனாக்கி என்னோட தொழிலையே மாத்தி விட்டுட்டாரு. ஏ மச்சான் இந்தப் போலிஸ் வேலய விட்டுட்டு ஃபுல் டயம் ஃபோட்டோகிராப்பரா ஆனா வருமானம் கல்லா பெட்டிய நிறைய கிடைக்கும் போலவே. நீ என்ன சொல்ற?. உனக்கு நா ட்ரோன் கேமரா குடுத்துடுறேன். நீ உக்காந்த இடத்துல இருந்து நடக்குற எல்லாத்தையும் வீடியோ சூட் பண்ணு. ஓகேவா. " என்க, விக்னேஷிடம் இருந்து பதில் இல்லை. ஏனெனில் அவன் ரிஷியை உத்து உத்து பாத்துட்டு இருந்தான். ஏனென்று தான் தெரியவில்லை.
"என்னோட பேரு ஹரிணி. நீங்க?. " என ஹரிணி புன்னகையுடன் அந்தப் பார்பி டாலிடம் கரம் குளுக்கி கேட்க, அவள் ரிஷியைப் பார்த்தாள். ஒருவேளை அறிமுகம் செய்து வைப்பான் என்று நினைத்தாளோ! ஆனால் அவன் 'நீ யார்னே எனக்குத் தெரியாது. நீயே உம்பேர சொல்லி அட்னென்ஸ் போட்டுக்க. ' என்பது போல் நின்றான்.
" மடோனா. மடோனா செபாஸ்டியன். நைஸ் டூ மீட் யூ. " என உதட்டில் போலிப் புன்னகையை வரவைத்துக் கொண்டு சிரிக்க, ஹரிணி அவளிடம் நார்மலாகப் பேசினாள். ஆனால் மடோனா இவர்களைப் பேசும்படி கூறி விட்டு எழுந்து சென்றாள், கண்ணீல் நீருடன்.
" நீ அந்தப் பொண்ண ஏமாத்திட்ட. " என்றாள் செல்லும் அந்தப் பார்பியை பார்த்து.
" ஆமால்ல. ஏமாத்திட்டேன்ல. எதுக்கு ஏமாத்துவானேன். நா போய்க் கட்டி பிடிச்சி ஆறுதலா நல்ல வார்த்த சொல்லி என்னோட ப்ரப்போஸ்ல்லயும் சொல்லிட்டு வரவா. " என்க, ஹரிணி கோபமாகத் திரும்பி அவனை முறைத்தாள்.
"என்ன ப்ரப்போஸ் பண்ணப்போற? ம். என்னடா ப்ரப்போஸ் பண்ணப்போற அவாகிட்ட. சொல்லு… சொல்லு… "என மிரட்ட,
"அது எங்களுக்குள்ள இருக்குற சீக்ரெட் கிட். அத ஈசியா வெளில சொல்லிட முடியாது. " என்றான் குறுஞ்சிரிப்புடன், தன் மனைவியின் கோபத்தை ரசித்தபடி.
"சீக்ரெட்டா!. அதுவும் உனக்குத் தெரியாம!. ஒரு புருஷெங்கிறவே பொண்டாட்டிட்ட இருந்து ஒரு விசயத்த மறைக்கிறான்னா அவெ எப்படி பட்ட புருஷனா இருப்பான்னு பாத்துக்க. இந்த ஏமாத்துக்காரன நம்பி உன்னோட வாழ்க்கைய தொலச்சிடாத டார்லிங். ஒரு நண்பன என்னால முடிஞ்ச அட்வைஸ். " என்றபடியே கௌதம் வந்தான் இருவருக்கும் அருகில். அவனை முடிந்த வரை முறைத்தான் தரன்.
"என்னடா மொறைக்கிற?. கண்ண நோண்டி உங்கைலயே குடுத்துடுவேன் பாத்துக்க. என்னோட டார்லிங்கையா ஏமாத்த பாக்குற. உன்ன இங்கருக்குற புளிய மரத்துல ராத்திரி நேரமா பாத்து கட்டி போட்டு அடிக்கனும். எங்க கிட்ட போலிஸ் படையே இருக்கு. இனி உன்னோட மொறப்பெல்லாம் செல்லாது." எனறான் அவன். ரிஷியை மிரட்டுகிறானாம். அதைக் கேட்ட ரிஷி கௌதமின் மீது பாய்ந்தான். இருவருக்கும் நடுவே வந்து நின்ற ஹரிணி,
"நீ எப்ப ஊட்டிக்கி வந்த? " என ரிஷியிடம் கேட்க,
"வந்து ரெண்டு நாள் ஆச்சி. இந்த ஹோட்டல்ல தா தங்கிருக்கான். ரூம் நம்பர் 506. இவனுக்கு அடுத்த ரூம்லையே அந்தப் பார்பி டால். தேவபடுறப்ப பாத்து பேசிக்க தோதா இருக்கும்னு பக்கதுலையே வச்சிருக்கான். " கௌதம்.
‘ரிஷிக்கிட்ட கேட்டா இவெ ஏ பதில் சொல்றான்.’
"உனக்கு என்ன வேல இங்க?. எதுக்காக வந்திருக்க?. " ஹரிணி.
"ஊட்டிய தூக்கிட்டு போய்ச் சென்னைல வைக்கவா வந்திருப்பான். என்ன டார்லிங் நீ?. அந்தப் பார்பி டால் கூடக் கடல வறுக்க வந்திருப்பான். “
"நா உங்கூட இல்லங்கையும், சிங்கில்ன்னு சொல்லி வெள்ளக்காரி கூட ஊர் சுத்திட்டு இருக்கியா என்ன! "
"டார்லிங் பார்பி கூட டேட்டிங்க்கி வந்திருப்பான்னு தோனுது. யாருக்கு தெரியும் தனி தனியாத்தா தங்கிருக்காங்களோ இல்ல. " என்றவனை ரிஷி முறைக்க,
"அவன ஏ பாக்குற?. இங்க பாரு. என்ன பாரு!. நா உங்கூட இல்லயேன்னு கொஞ்சங்கூட கவலையே இல்லயா உனக்கு. "
"அவெ எதுக்கு டார்லிங் கவலப்படனும். மகிழ்ச்சியா இருந்திருப்பான். போனவ ஒரேடியா போய்ட்டான்னு சந்தோஷமா இடுப்புல துண்ட கட்டீக்கிட்டு குத்து பாட்டுக்குக் குத்து டான்ஸ் ஆடுன படி. ‘எம்பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா’ன்னு. ஃபுல் என்ஜாய்மெண்டு தான்னு நினைக்கிறேன்" எனக் கௌதம் கேலி செய்ய,
இவன பேச விட்டுட்டு இந்த ரிஷி வேடிக்கை பாக்குறானா என்ன?. என நீங்கள் நினைத்தால் தவறு. டேபிலில் இருந்த ஒரு க்ளாஸ் தண்ணீரை கௌதமின் முகத்தில் ஊற்றினான் ரிஷி.
" ஏய்... இடியட்… ஃபூல்... " எனத் தன் நண்பனுக்காகக் கணவனை திட்ட, இருவரையும் முறைத்தபடி அங்கிருந்து சென்றான் ரிஷி.
"ஆர் யூ ஓகே கௌதம். " என்றாள் ஹரிணி கவலையுடன்.
"ஒன்னுமில்லைலண்ணா?. " பவதா பயந்து விட்டாள் போலும், உண்மையாவே சண்டை போட்டுக் கொள்கின்றனர் என்று பதறிப் போய் கௌதமை நாற்காலியில் அமரச்செய்து டிஸ்யூ பேப்பரால் மனோவும் பவதாவும் துடைத்து விட,
" நீ எப்பம்மா படிச்சி முடிப்ப? " எனப் பவதாவை பார்த்துக் கேட்டான்.
"கௌதம் சும்மா இருறேன்." ஹரிணி
" அதெப்படி முடியும். பாத்திய்யாமா நீ. உங்கண்ணு முன்னாடியே மூஞ்சில தண்ணீ ஊத்துனவே. நாளைக்கி கோபமா இருக்கேன்னு சொல்லி என்னோட ஃப்ரண்டு முகத்துல ஆசிட் ஊத்த மாட்டிங்கிறதுக்கு என்ன நிச்சயம்."
"பாஸ் ஹரிணி மேல எதையும் ஊத்தல. ஊத்துனது உங்க மேல. அதுவும் தண்ணீ தா பாஸ்." மனோ
" எதுவா இருந்தா என்ன, அவனோட அடாவடி ரவுடித்தனத்த பாத்திங்கள்ள. இன்னைக்கி எனக்கு நடந்தது நாளைக்கி என்னோட ஃப்ரண்டுக்கு நடக்காதுன்னு சொல்ல முடியுமா. அதுனால உனக்குத் தெரிஞ்ச நல்ல வக்கீலா பாத்து உடனேயே ஃபோன் பண்ணு பவதாம்மா. இன்னைக்கே டைவர்ஸ் அப்ளை பண்ணணும். யோவ் ACP நீ என்னாய்யா ஃபேஷன் ஷோவ பாக்குறா மாறி ஆர்வமா பாத்துட்டு இருக்க. போய் அவன என்னணு கேளுயா.?" கௌதம் விக்னேஷை விரட்டினான்.
இன்னும் இவன் அடங்கவில்லை போலயே,
கௌதம் ‘இப்பவே நீ அவனுக்கு டைவர்ஸ் கொடுக்கணும்’ என்பது போன்று பேச, நாற்காலியில் இருந்தவன் திடீரெனத் தரையில் கிடந்தான். கூடவே சூடான தேனீர் அபிஷேகமும் நடந்தது.
வேற ஒன்னுமில்ல ரிஷி தன் மனைவியை அழைத்துச் செல்லலாமென திரும்பி வர, இவன் டைவர்ஸ் பத்தி பேச, அதுனால ரிஷியோட காலு தெரிஞ்சே கௌதம் உக்காந்திருந்த நாற்காலியின் காலை எத்தி விட்ட, யார்கிட்ட இருந்தோ சுட சுட எடுத்து வந்த டீய தலைல கொட்டிடுச்சி. இல்ல கொட்டிட்டான். அதா தீ குளிக்கிற மாறி டீ ல குளிச்சிட்டு உக்காந்தாருக்கான்.
" ண்ணா."
"கௌதம். "
"பாஸ். " என மற்றவர்கள் அவனுக்கு உதவ,
" அறிவில்லயா உனக்கு.? ஏ இப்படி இன்டீசென்ட்டா பிகேவ் பண்ற. " என ஹரிணி கத்தினாள்.
" நா… இன்டீசென்ட்டா… சரி வந்து உக்காரு. டீசென்ட்டா பிகேவ் பண்ணிடுவோம்." என நாற்காலியைக் காட்ட, அவள் விறைப்பாய் நின்றாள். 'நீ சொன்னா நா கேக்கணுமா. ‘
ஆனா ரிஷியிடம் அது நடக்காதே, 'நான் சொல்வதை செய்தே ஆக வேண்டும்.’ என்பது போல் அவளின் கரம்பற்றி இழுக்க, ஹரிணி உட்பட அனைவரும் அமர்ந்தனர்.
ரிஷி அமைதியாய் தன் ஃபோனை எடுத்துக் கால் செய்தான்.
ரிங் போனது.
"என்ன மச்சான் டீன்னர் அப்பப் பேசி முடிச்சிட்டியா?. நல்ல டீல் டா. இது மட்டும் நமக்குக் கிடைச்சதுன்னா, நம்ம பிஸ்னஸ்ஸ அடுத்த லெவலுக்கு கொண்டு போயிடலாம். என்ன சொன்னாங்க மடோனா மேடம். ஓகே தான. " சம்பத்தின் குரல்.
"எங்க மாப்ள!. மடோனா கூடப் பேச விட்டாத்தான பேச முடியும். அதுக்குள்ள தா தொரத்தி விட்டுட்டா. “
"யாரு மச்சான் அது? "
"உன்னோட தங்கச்சி. ராணிம்...மா தான். " என்றவன் பேசு என்பது போல் ஹரிணியை கண் சாடை செய்ய,
"ராகவ் அண்ணா என்ன டீல்?. எதுக்கு அவரு மட்டும் வந்திருக்காரு. பிஸ்னஸ் பேச உங்க கம்பேனில வேற யாருமே கிடைக்கலையா?. " என வேகவேகமாகப் பேச,
"ராணிம்மா அமைதி. நாந்தாம்மா மடோனா கிட்டையும் முகேஷ் கிட்டையும் பேசிருக்க வேண்டியது. ஆனா பவிய டாக்டர் கிட்ட கூட்டீட்டு போக வேண்டி இருந்தது. அதா அவன அனுப்சேன். நாளைக்கி அங்க நடக்க போற மீட்டிங்கல எங்களோட ப்ளானிங்க விரிவா சொன்னா போதும், கண்டிப்பா எங்களுக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைக்கும். " என்றான் அவன். நிறைய பேசி ஹரிணியை சமாதானம் செய்து விட்டுத் தான் ஃபோனை வைத்தான்.
"அப்படி என்ன டீலிங்கு. இவரு மட்டும் வந்து பேசுற அளவுக்கு. " எனக் கௌதம் யோசித்து கேட்க,
"ஹாங்… கட்டடம் கட்டுறதுக்கு தா வேற எதுக்கு!. " என்றான் ரிஷி நக்கலாக,
இப்போது அவர்கள் இருக்கும் அந்த நட்சத்திர விடுதியின் சொந்தக்காரர்களுள் மடோனாவும் ஒருத்தி. இதே போன்றொரு விடுதி இதன் அருகிலேயே கட்ட தீர்மானித்து உள்ளதால், அதற்குச் சம்பத்தின் கண்ஸ்ட்டெக்ஷன் கம்பேனி உட்பட பலர் அந்தக் கான்ட்ராக்டுக்காக முயற்சி செய்துள்ளனர். அதில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து தனித் தனியாக அவர்களை இன்டர்வியூ வைத்து, கொட்டேஷன், டிசைன், அதுவரை செய்து முடிந்துள்ள பிராஜெக்ட், அதன் தரம் என்பது போன்றவற்றை பார்த்து ஒப்பிட்டு இறுதியாக ஒருவரை முடிவு செய்வர்.
அந்தப் பத்தில் ரிஷியுடைய கம்பேனியும் ஒன்று. பெரிய பெரிய கண்ஸ்ட்டெக்ஷன் கம்பேனிகளுக்கு நடுவே வளத்து வரும் இவர்களுடையது தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அவர்களின் தொழில் வளர்ச்சிக்கி உதவும். அதற்குத் தான் இன்று மடோனாவிடம் பேச இருந்தான், மடோனா அழைத்ததன் பேரில் ஒரு டின்னரில். மற்றபடி ஒன்னுமில்லை. அப்படி தா ரிஷி சொல்றான்.
"அப்ப உனக்கு மடோனாவ இதுக்கு முன்னாடி தெரியாது. இந்தக் கான்ட்ராக்டுல தா நீ மொத மொத மடோனாவா பாத்த. இந்த மீட்டிங்காகத் தா நீ அவ கூடப் பழக ஆரம்பிச்ச. இங்க தங்கியும் இருக்க. சரியா. " என்றாள் ஹரிணி அவனின் விழிகளைப் பார்த்தபடி,
இது பெரிய ப்ராஜெக்ட். உலகில் பல இடங்களில் நட்சத்திரம் விடுதி வைத்திருப்பவர்களை அத்தனை எளிதாக நெருங்க முடியாது. இவர்களை அழைத்திருக்கிறார்கள் என்றால் ஒன்று இவர்கள் கட்டுமான துறையில் பல ஆண்டுகள் இருந்து சாதித்தவர்களா இருக்க வேண்டும். இல்லையேல் சிபாரிசின் பெயரில் வந்திருக்க வேண்டும். முதலாவது சாத்தியம் இல்லை. ஏனெனில் கம்பேனி ஆரம்பித்து மூன்று வருடம் தான் ஆகிறது. அதற்குள்ள எப்படி சாதிக்க முடியும். அப்பச் சிபாரிசு தான்.
"உனக்கு என்ன தெரியனும் கிட்? " ரிஷி.
“மடோனா கூட உனக்கு எத்தன வர்ஷமா பழக்கம்.?" என்றாள் அவள். இது தான் முதல் சந்திப்பு என்றால் அந்தப் பார்பி இவனை காதலாகப் பாத்திருக்காதே.
"டூ இயர்ஸ். " என்றபோது அவனின் செல் ஃபோன் சிணுங்கிறது. அழைத்தது மடோனா.
அட்டன் செய்து நாளைக் காலை சந்திப்பதாகச் சொல்லி வைத்தான் ஃபோனை. பேசும் அவனையே குறுகுறுவெனப் பார்த்த ஹரிணியிடம், தன் ஒற்றை புருவம் உயர்த்தி ரிஷி என்ன எனக் கேட்க,
"ஃபோன் நம்பர் மாத்திட்டியா இல்ல என்னோட நம்பர ப்ளாக் பண்ணிட்டியா.? ஏன்னா நா உனக்கு ஒரு வாரமா டிரைய் பண்றேன். ஆனா உன்னோட லன் கிடையவே மாட்டேங்கிது. வீட்டுல கேட்டதுக்கு நீ எங்க இருக்கன்னே தெரியலன்னு சொன்னாங்க. "
"ப்ளாக். நானா. ம்… டேக் மை ஃபோன். அண்டு கால் நௌ. " எனத் தன் மொபைலை கொடுக்க, அவள் அதை வாங்கி நோண்டிப் பார்த்தாள். ப்ளாக் செய்யவில்லை.
"அப்ப ஏ நா கூப்பிடும்போது ரிங் கே போகல உனக்கு. என்ன பண்ண?. " எனக் கேட்க,
"உன்னோட நம்பருக்கு டயல் பண்ணு. " என்க, அதுவும் செல்லவில்லை.
"சரி. நீங்கப் பேசிட்டு இருங்க. நா போய்ப் பில்லுக்கு பணம் கட்டீட்டு காரல உக்காந்திருக்கேன். எழுந்து வாம்மா. அவனுங்க ரெண்டு பேரும் விசித்தர வினோத ஜோடிகள் இப்படி தா கண்டதையும் பேசிச் சண்ட போட்டுக்குவாங்க. அவங்க ஓட்டுற மெகா சீரியல நாம ஏ பாக்கணும். வா. " எனக் கௌதம் எழ,
ரிஷி தன் ஒரு காலால் கௌதமின் ஒரு காலின் முட்டியை மடக்கி, ஒரு கையால் அவனின் காதோடு அழுத்தி டேபிளில் முகம் புதைக்கச் செய்தான். அவனுக்கு வலிக்காமல் தான் செய்தான். ஆனால் பார்ப்பவர்கள் பயந்து விட்டனர்.
அப்ப இவெந்தா எதுவோ செஞ்சிருக்கான்

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..