முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 19

அத்தியாயம்: 19


நள்ளிரவு நேரம் அது. இல்லை அதிகாலை. ரெண்டுமே தான். ஏனெனில் ஒருத்தர் இந்தியால இருக்கும் நேரத்தைவிட ஆறு மணி நேரத்தைக் கூட்டினால் லண்டனில் எத்தன மணி என்பதை கண்டு பிடித்திடலாம். இந்தியாவில் பத்து மணி என்றால் லண்டனில் அது அதிகாலை நான்கு தானே. அதான் குழப்பம் ஆகிடுச்சி. ஸாரி.


ஒரு மொபைல் ஃபோன் இசைக்கிறது.


யாரோ இந்தியாவிலிருந்து லண்டனுக்கு இன்டர்நேஷனல் கால் பேசுகின்றனர் போலும். வெகுநேரமாக இசைக்கிறது. ஆனால் எடுக்கப்படவில்லை. இருமுறை முழுமையாக ஒலித்து ஓய்ந்த பின்னர் மூன்றவதாக இசைக்கும்போது எடுக்கப்படுகிறது.


"ஹலோ."


"குட் மார்னிங் ஸார். ஒரு பிரச்சன." என எதிர் தரப்பினர் பேசும்போது தடுத்தது அந்தக் குரல்.


" ம்ச்… எதுக்குய்யா இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ற. இடியட். அப்றம் கூப்பிடு." என்ற சிடுசிடுத்த குரல் ஃபோனை வைத்துவிட, மீண்டும் இசைத்தது.


" ஸார், எமர்ஜென்சி. கதிரேசன போலிஸ் அரஸ்ட் பண்ணுச்சில்ல."


"ஆமா... இப்ப என்ன அதுக்கு?. "


"ஸார், அந்தக் கேஸ்ஸ போலிஸ் தீவிரமா விசாரிக்கப் போறாங்க போல‌. ரெண்டு ACP கதிரேசன்ட்ட இன்னைக்கி விசாரிக்க வந்திருந்தாங்க. ஆனா கதிர் வாய திறக்கல. இப்ப என்ன பண்ண?. "


"அந்த **** பயல முதல்ல வேலய விட்டு ஃபயர் பண்ணிருக்கனும். விஸ்வாசமான நாயின்னு கூடவே வச்சிருந்ததுக்கு நல்லா காட்டுறான். இட் ஓகே நா டீல் பண்ணிக்கிறேன். நீ அங்க என்ன நடந்தாலும் உடனே எங்கிட்ட சொல்லு. ஓகே வா. "


"ம். ஓகே‌ ஸார். இந்தப் பிரச்சினை முடியுற வரைக்கும் நாம போட்டு வச்ச ப்ளான தள்ளிப் போட்டிடலாமா ஸார்?."


" ஏய் ஃபூல். உனக்கு என்ன வேலயோ அத மட்டும் பாரு. உன்னோட வேல எதுன்னா அங்க நடக்குறத சொல்றது மட்டும் தா. எனக்கு ஐடியா குடுக்குற இல்ல. முட்டாள்... இத நம்பி எத்தன கோடிக்குப் பிஸ்னஸ் பேசிருக்கேன். அசால்ட்டா தள்ளிப் போடச் சொல்ற. பிளடி வேலக்கார நாயே. **** " என்க,


" ஸார் போலிஸ் கெடுபாடி அதிகமா இருக்கும்னு தோனுது ஸார். கொஞ்ச ஆற விட்டு அடுத்த மாசம் பண்ணலாமேன்னு." இழுக்க,


" என்ன பயம் விட்டுப் போச்சா?. கொஞ்சம் இடங்குடுத்தா வேலக்காரெங்கிறதையே மறந்துட்ட. ம்… நா முடிவு பண்ண அந்தத் தேதிலயே நா சொன்னது நடந்தே ஆகனும்.‌ எந்த மாற்றமும் இல்ல. நா த்ரீ டேஸ்ல அங்க இருப்பேன். எல்லா ஏற்பாட்டையும் செஞ்சி வை. அப்றம். அந்தக் கதிரேசன போட்டுடுங்க." என்க,


"ஸா…ர்…"


"சொன்னது கேக்கலயா!. கதிரேசன் உயிரோட இருக்குறது நமக்கு ஆபத்து. முடிச்சிடுங்க."


"ஸார் அவரு உங்களுக்காகப் பல வர்ஷமா வேல பாத்தவரு ஸார்.‌ என்ன நடந்தாலும் உங்க பேர அவரு சொல்லமாட்டாரு. வாயயே திறக்கமாட்டாரு ஸார். அவர போய்."


" நீ இத பண்ணலன்னா எனக்கு இத பண்ண கூடிய வேற ஆள்ல தெரியும். என்ன அவரு கூட அவரோட மகனையும் பொதைக்க இடம் தேட வேண்டி இருக்கும். இப்ப கதிரேசன மட்டும் நீ முடிக்கிறியா இல்ல நானே பாத்துக்கட்டுமா?." என்க,


"நானே பாத்துக்கிறேன் ஸார்."


" குட்... ரெண்டு நாள்ல அவங்கதைய முடிச்சிட்டு ஃபோன் பண்ணு." என ஒருவரின் இறப்புக்கு நாள் குறித்துவிட்டு வைத்தனர் இருவரும். யார் இவர்கள் என்று பின்னால் தெரிந்து கொள்ளலாம்.


இப்ப நாம எட்டு மணிக்கி கிளம்புன ஒரு கும்பல் என்ன பண்ணுதுன்னு பாக்கலாம்.


பிரம்மாண்டமான வரவேற்பை கொண்டிருந்தது அந்த நட்சத்திர விடுதி. இரவைப் பகலாக்கும் முயற்சியில் சிறிது வெற்றியும் கண்டிருந்தது அது. எங்கும் விளக்குகளின் வண்ண வண்ண ஒளி. பூக்களின் அலங்காரம் செயற்கை நீரூற்றுகள் எனப் பார்பதற்கு அழகாய் இருந்தது.


ஒருபுறம் தங்கும் தனி நபருக்கான அறைகள். அடுத்து குடும்பமாக வருவோர்க்கு சிறிய ரக வீடுகள். ஹினி மூன் கப்பில்ஸ்க்கு தனி. அங்கிருப்பவர்கள் எதற்கும் வெளியே செல்ல அவசியமேயின்றி அனைத்தும் அந்த ஹோட்டலில் இருந்தன. 


ஷாப்பிங் செய்யக் கடைகள், சிறுவர்கள் பெரியவர்களுக்கான கேளிக்கை பூங்காக்கள், அனைத்து வகையான உணவும் கிடைக்கும் உணவகங்கள். ஊட்டிய சுத்தி பாக்க வர்றவங்களுக்கு ஊட்டிக்குள்ளையே இன்னோரு ஊட்டிய கட்டி வச்சிருக்காங்க.‌


இதற்கு முன் இது போன்றொரு இடத்திற்கு வந்தது இல்லையா! அதனால் கண்களில் சிறு மிரட்சியுடன் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் பவதா. வேடிக்கை பாத்தால் பாதையில் எப்படி கவனம் இருக்கும். அதான் கீழே விழுந்து விடாமல் இருக்க விக்னேஷின் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். ஐவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு என்பார்களே அதுபோல் கிடைத்தது வரவேற்பு.


கண்ணாடி குடுவை போல் இருந்தது அந்த உணவகம். மேலே வானத்தைப் பார்க்கலாம். நட்சத்திரங்களின் அழகை ரசித்துக் கொண்டே உணவுன்னலாம். கீழே புல் வெளியில் சேர் போட்டுப் பூக்களுக்கு நடுவே உண்ணுவது போன்ற ஒரு உணர்வைப் பெறலாம். கூடவே மேஜிக் ஷோவுடன் இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாகக் கேட்டு மகிழலாம். மொத்தத்தில் ஐம்புலன்களுக்கும் விருந்து அங்குக் கிடைக்கும்.


ஒரு கருப்பு கோர்ட்டும் தொப்பியும் போட்ட மனிதர், மந்திரம் செய்கிறேன் என்று தொப்பிக்குள் இருந்து புறாவை எடுப்பது, பூ வை எடுப்பது போன்ற வித்தைகளைச் செய்து காட்ட, நால்வரும் ஆவலுடன் கண்டனர். கௌதமுக்கு மட்டும் அந்தக் கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோவை பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லை போலும். யாரையோ எதிர்பார்த்து வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தான்.


" இன்னும் யாரையாது இன்வைட் பண்ணிருங்கியா என்ன?. வாசல் பக்கமே தல வச்சி படுத்திருக்க!. ம்… யாரு அது?." ஹரிணி.


"அதெல்லாம் இப்பதைக்கி சொல்றதுக்கு இல்ல. நீ எவ்வாய பாக்காம வாய்க்குள்ள எதையாது எடுத்து வை. அப்பத்தா பேசாம இருப்ப." என்றவனின் பார்வை மட்டும் சுழன்ற கொண்டே இருந்தது.


வட்டமாக அமர்ந்திருந்தனர் ஐவரும். ஹரிணி. அடுத்து கௌதம். மனோ, விக்னேஷ், பவதா ஷோவை பார்த்தபடி ஹரிணியும் பவதாவும் அமர்ந்திருந்தனர் வாயில் பக்கம் முதுகைக் காட்டிக்கொண்டு.


"பாஸ்... பாஸ்..." எனக் கௌதமின் தோலை மனோ சுரண்ட,


" என்னடா.?"


"அது... இந்தக் கொழம்புக்கு பேரு என்ன பாஸ்?. சூப்பரா இருக்கு. போறப்ப கப்புல கொஞ்சம் எடுத்துட்டு போலாமா.?" என்க.‌


"மச்சான் கப்பென்ன அண்டாவுலயே வாங்கிட்டு போனாலும் பாஸ் உன்ன ஒன்னும் சொல்லமாட்டாரு. ஏன்னா இன்னைக்கி அவரு ஹப்பியா இருக்காரு!. நம்ம சந்தோஷம் தா அவருக்கும் சந்தோஷம். என்ன கௌதம்!." என்ற விக்னேஷை அவன் கண்டு கொள்ளவில்லை.


"அப்பச் சரக்கு கிடைக்குமா பாஸ். இங்க வந்ததுல இருந்து அடிக்கவே இல்ல. நீங்கத் தயவு பண்ணா ஒரு க்வாட்டர் வாங்கிக்கிவேன்." மனோ.


" என்னடா நீ கௌதமோ‌ட‌ ரேன்ஜ் தெரியாம பேசுற. க்வாட்டர் என்ன க்வாட்டரு. நமக்குக் கௌதம் இன்னைக்கி கடையையே எழுதி வச்சிருவாரு. அதுவும் ஃபுல்லா ஹை குவாலிட்டி சரக்கோட." என இருவரும் கௌதமை கேலி செய்து கொண்டிருந்தனர்.


மனோ மீண்டும் கௌதமின் தோளைச் சுரண்டி. "பாஸ் நீங்க இன்னும் கொழம்புக்கு பேரு சொல்லல‌."


" ம்ச்... அதுக்கு பேரு கோல்டு‌ ஃபிஷ் கிரேவி." என்க,


"கோல்டு ஃபிஷ்ஷா!!. இந்தக் கலர்கலரா, தண்ணில போட்டு அழகுக்காக வளப்பாங்களே அதுவா?." என வித்தியாசமான குரலில் கேட்டான். ஏனெனில் கோல்டு ஃபிஷ் என்று தெரியாமல் பாதியை உண்டு விட்டான் அல்லவா.


"ம்… அதே தா. இத சாப்டா உன்னோட லைஃப்ல எல்லாமே கோல்டாத்தா இருக்குமாம். இங்க்ளுடிங் காலைக் கடன் உட்பட. சைனிஸ் ஜோசியாகரேன் வாட் ஆப் பார்வேடு மெஜ்ஏஜ்ல சொன்னான். உனக்காக ஸ்பெஷல்லா செய்யச் சென்னனேன். நல்லா இருக்கா.?" என்க, மனோவின் முகம் அஷ்டகோணத்திற்கு மாறியது. அதைப் பார்த்து விக்னேஷ் சிரிக்க, கௌதம் திடீரெனத் திரும்பி அமர்ந்தான். தட்டில் உள்ள உணவை உண்ண தொடங்கினான். சிறிது நேரத்திற்கு பின்,


" If you don't mind நாம இடத்த சேன்ஜ் பண்ணிக்கலாமா?. கொஞ்சம் அன்கம்பட்டபுல்லா இருக்கு. " என மாற்றச் சொன்னவன். ஹரிணியை என்டர்டென்ஸ் பக்கம் பார்த்தபடி அமரச் செய்து தானும் அவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.


"டார்லிங்… டார்லிங்..." என அவளை நெருங்கி அமர்ந்து தோளை இடிக்க,


" என்னடா உன்னோட தட்டுல ரசகுல்லா காலியா?. இந்தா எடுத்துக்க." எனக் கின்னத்தை அவனிடம் நகர்த்த,


"ம்ச்... இது இல்ல டார்லிங். கொஞ்சம் அங்க பாரேன். ‌அந்தச் சில்வர் கலர் வெஸ்டன் மாடல் பக்ஷி எப்படி இருக்கு?." என்க, அனைவரின் கவனமும் அங்குச் சென்றது.


அங்கு ஒரு பெண்ணும் ஆணும் எதிர் எதிரே அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்தனர். ஆடவனின் முகம் தெரியாத போதும், பெண்ணின் முகம் நன்கு தெரிந்தது. குளிர் பிரதேசங்களில் பிறந்து வளர்ந்தவள் போலும்.‌.. நிறம் வெள்ளை வெளேர் என்று சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே அதுபோல் இருந்தது. ஏற்கனவே அது வெள்ளையாத்தா இருக்கு. அது பத்தாதுன்னு மூஞ்சில எல்லா க்ரீமையும் அப்பிட்டு. ஐ லயனர். ஐ ஷேடோ. ஐ லாஸ். எனக் கையில் கிடைத்த அத்தனையையும் அப்ளே செய்திருந்தாள். அதீத ஒப்பனை தான். ஆனால் லட்சணமான முகம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு கொண்ட அந்தப் பெண், வெளிநாட்டை சேர்ந்தவர்.


" ஏ பட்டிக்காட்டான் மாறி மிட்டாய் கடைய விசித்திரமா பாத்த மாறி ஒரே நேரத்துல திரும்பிப் பாக்குறிங்க?. ஒரு ஒருத்தர பாருங்க." கௌதம்.


" பாஸ்… செம்ம சூப்பரா இருக்கு. யாரு பாஸ் இந்த வெளி நாட்டு வெல்லக்கட்டி. ஃபோன் நம்பர் வாங்கித்தாரிங்களா."


"எதுக்கு அந்தப் பொண்ணு மேல கம்ளைண்ட் குடுக்கவா?." பவதா.


"எஸ்... என்னோட மனச திருடிட்டான்னு சொல்லி." மனோ சொல்ல, விக்னேஷ் நம்பர் குடுத்தான். அதை டைப் செய்தவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு அவனை முறைத்தான், விக்னேஷ் குடுத்தது யாரின் எண் என்று தெரிந்து போனதால்.


அது வேற யாரும் இல்லங்க பவதா ஃப்ரண்டு, சங்கீதான்னு ஒருத்தி இருக்கா. அவளுக்கு இவெ மேல ஒரு கண்ணு. இவெந்தா நல்லதா நால பாத்துட்டுட்டு எதுவும் கிடைக்கலன்னா ஓகே சொல்லலாம்னு வெயிட்டிங் லிஸ்டுல வச்சிருக்கான்.


" ஹேய்...‌ உனக்கு ஆள் இருக்கா!. சொல்லவே இல்ல.‌" ஹரிணி.


" ஆள் இருந்தும் ஏன்டா அழையிற?." கௌதம்.


"ஆள் எல்லாம் கிடையாது.‌ சும்மா பாத்துப்போம்.‌ அவ்ளவு தா. இந்த லவ்வு கிவ்வுன்னு‌ ஒன்னும் கிடையாது.‌ நா சிங்கில் தா. நாலு பேர பாத்து நல்லா பழகி அதுக்கப்றம் தா கல்யாணம் பண்ணனும்னு கொள்கையோட இருக்கேன். எனக்குப் பிடிச்ச பொண்ணு கிடைக்கிற வர என்னோட தேடல் நிக்கவே நிக்காது." என்றவனின் தலையில் தட்டினர் இருவரும். பவதா முறைத்தாள் அவனை.


" நா இத இப்பவே அவ கிட்ட சொல்றேன்." பவதா ஃபோனை எடுக்க, தடுத்தான் மனோ.


" பவதா நா பாவம் ம்மா." என்றபடி.


" உன்னையெல்லாம் ஒரு பொண்ணு நிமிந்து பாக்குதுன்னா அதுவே பெரிய விசயம்.‌ இதுல நல்லதா நாலு பொண்ணு பாத்து அதுல ஒன்ன செலக்ட் பண்ணுவானாம்." கௌதம்.


"நா இத நோட் பண்ணி வச்சிக்கிறேன். நாளப்பின்னா யாரும் கிடைக்காம நீ சங்கீதாக்கு ஓகே சொல்லும்போது காட்டுறேன் நா யாருன்னு." என மிரட்டுவது போல் விக்னேஷ் சொல்ல, மனோ பயந்து விட்டான்.‌ அதைப் பெண்கள் இருவரும் பார்த்துச் சிரித்தனர் மனோவின் பரிதாப நிலையைப் பார்த்து.


"டார்லிங் நீ இன்னமும் பதில் சொல்லல." என்க, எட்டி ஒரு முறை அந்த பெண்ணைப் பார்த்தாள். பின்...


" ம்.‌.. ஓகே தா. பட் ஓவரா வழியுற மாறித் தெரியுது. நானும் பொண்ணு தான்னு காட்டிக்க ரொம்ப கஷ்டப்படுறா போல. பாவம்."


"அது கஷ்டம் இல்ல‌ டார்லிங் வெட்கம்."


" எது?. இதுவா!. பாக்கவே அது வேற மாறி இருக்குடா. வீசிங்‌ வந்த மாறி முகத்த வச்சிக்கிறா. அதுக்கு பேரு வெட்கமா!. முதல்ல உன்னோட கண்ண செக் பண்ணு. முப்பது வயசுக்கு மேல பாடிப் பார்ட்ஸ் டேமேஜ் ஆக ஆரம்பிச்சிடுமாம். டீவில ஒரு விளம்பரத்துல பாத்தேன். போய் டாக்டர பாரு."


" இலவச ஆலோசனைக்கி நன்றி. ஒரு பொண்ணு தனக்கு வராத ஒன்ன ட்ரைய் பண்றான்னா என்ன அர்த்தம்?."


"என்ன அர்த்தம்?."


"என்னடா அர்த்தம்?" என மற்ற இருவரை பார்த்துக் கேட்க,


'நீ தா பதில் என்ன வரும்னு ‌முடிவு பண்ணிட்டு தான கேள்வியே கேக்குற. நீயே சொல்லிடு. ' என்பது போல் பார்த்தனர்.‌


" அதுக்கு அர்த்தம் என்னன்னா, அந்தப் பொண்ணு ஒரு ஆணோட மனச கவர்ரதுக்கு முயற்சி பண்றான்னு அர்த்தம்."


" ஓ!!." மனோ.


"ஆமா இது எந்த டிஸ்னரில இருக்கு. யாரு மீனிங் எழுதுன்னான்னு சொன்னா நல்லாருக்கும்.‌" விக்னேஷ்.


" முன்ன பின்ன லைப்ரரி பக்கம் போயிருந்தா தெரிஞ்சிருக்கும். உங்களுக்குத் தா போலிஸ் ஸ்டேஷன விட்டா வேற எதுவும் தெரியாதே." எனக் கௌதம் சொல்ல,


ஹரிணி மீண்டும் எட்டி பார்த்தாள். வெள்ளைக்காரியின் எதிரில் இருந்த ஆண் க்ளாஸை அவள் கரத்தில் தர, அதை வாங்கிய பெண்ணின் கன்னங்கள் லேசா சிவந்தன. ஆடவனின் கரம் பட்டதால் இருக்குமோ!


" ஹேய்… நிஜமாவே அந்தப் பொண்ணு வெக்கப்படுப்பா!. அதோட கன்னம் ரெண்டும் சிவந்து போகுது." ஹரிணி.


"அப்ப ரொமாண்டிக்கா பேசிக்கிறாங்க போல. அதா பொண்ணு வெக்கபடுது. ஆனாலும் இதுவும் நல்லாத்தா இருக்கு‌. எந்த நாட்டு பொண்ணா இருந்தாலும் சரி, வெட்கம் வந்ததுட்டா அது அந்தப் பொண்ணுக்கு தனி அழக குடுக்குய்யா. நல்ல வசதியான பொண்ணு போல. ஒரு க்ளாஸ் ஓயின இவ்ளோ நேரம் வச்சி வச்சி குடிக்கிது. மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமா அத தொண்டைக்குள்ள இறக்கும்போது, ஒரு பார்பி டால்லே உக்காந்து வெயின் குடிக்கிதே அடடான்னு கவித எழுதத் தோனுது." கௌதம் அந்தப் பெண்ணை ரசிக்க.,


"என்னடா ஒரு மார்க்கமாகப் பேசுற?. நீ இப்படி கிடையாதே. இரு இந்துக்கு ஃபோன் போடுறேன். ம்…" என்றாள் அவள். 


ஏன்னா கௌதம் ரசிப்பான் தான். ஆனால் வெளிப்படையாகக் கிடையாது. ஒரு பார்வை மட்டுமே பார்ப்பான். பின் அவனின் சிந்தனையில் இருக்க மாட்டார்கள். இன்று கொஞ்சம் அதிகமாகவே அந்தப் பார்பி டாலை வர்ணிக்க சந்தேகமாகப் பார்த்தாள் அவள்.


" எதுக்கு தேவையில்லாம மை வைஃப்ப இதுக்குள்ள இழுக்குற. பொண்ணு அழகாயிருக்குன்னு சொன்னேன். அதுக்கு போய்க் கோயிச்சிட்டு பொண்டாட்டிட போட்டுக் குடுக்குறது நல்ல ஃப்ரெண்டுக்கு அழகில்ல. பாத்துக்க."


"ரொம்ப சுத்தாம என்ன சொல்ல வர்றன்னு சொல்லு."


"அந்தப் பார்பி டால் அழகா இருக்கா?." கௌதம்


"ம்ச்... உனக்கு அந்தப் பொண்ணு அழகா இருக்குறது தா மேட்டரா?."


" மேட்டர் அது இல்ல. ஒரு வெள்ளக்கார பொண்ணு லவ் பண்ணுது. அதுவும் நம்மூர் பையன அது தா மேட்டரு. அதுவும் கடல் கடந்த காதல் அந்த ப்ரவுன் கலர் கண்ணுல தெரியுது பாரு. அந்த லவ்வு தா விசயமே." என்க, ஹரிணி அப்போது தா அந்தப் பெண்ணின் எதிரில் அமர்ந்திருந்த ஆடவனை கவனிக்கலானாள். முகம் தெரியவில்லை. முதுகு தான் தெரிந்தது. அதை உற்று பார்க்கக் கௌதம் அவளின் காதில் வந்து.


" மேக் ஃபார் ஈச் அதர் ன்னா நா இந்த ஜோடியத்தா சொல்லுவேன். ப்பா என்னா ஃபீலிங்கு. சும்மா வெயினோட சேத்து அந்தப் பையனையும் ஸ்டா போட்டுக் குடிக்குது. நாம லவ் பண்ற பொண்ண விட நம்மல லவ் பண்ற பொண்ணு கிடைச்சா அந்தப் பையன் அதிர்ஷ்டசாலி. எனக்கு ஒரு மதி மாறி அந்தப் பையனுக்கு ஒரு பார்பி. குடுத்து வச்சவென்.


நல்ல ஹோட்டல். பக்கத்துல அழகான பொண்ணு. நல்ல குளிரான ஊட்டி. இத விடக் காதலிக்க ஏத்த இடம் இருக்கான்னு சொல்லு?. பெஸ்ட் கப்பில். இவங்க மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா!." என்பதற்குள் ஹரிணி எழுந்து விட்டாள்.


கௌதம் பற்ற வைத்த சிவகாசி ராக்கெட் புஷ்... என்ற சத்தத்துடன் அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றது.


'அப்பாட நம்ம செய்ய நினைச்ச வேல சரியா நடக்குது. பதனி. பதனி.' கௌதமின் மைண்ட் வாய்ஸ்.


திடீரென ஒரு பெண் தன் முன் கோபமாக வந்து நிற்கவும் அந்தப் பார்பி டால்." Excuse me. Any problem." என ஆங்கிலத்தில் கேட்டாள்.


" ப்ராப்ளம சொன்னா உன்னால சால்வ் பண்ண முடியுமா என்ன?." எனக் கேட்டுக்கொண்டே, இத்தனை நேரம் பார்பி டால் காதல் செய்து கொண்டிருத்த ஆடவனின் முன் வந்து நின்றாள்.


" Kid.? What a pleasant surprise!!." என்ற குரல் கேட்டது.


அது அவளின் கணவன் ரிஷி தரன்...


இவெ என்ன பண்றான் இங்க?. அதுவும் பார்பி டால் கூட... டின்னரு கூட்டீடு வந்திருக்கான் போல. சும்மாவே ஹரிணிக்கு ரிஷியின் மீது உரிமையுணர்வானது அதிகம். இந்தப் பார்பி வேற கண்ணால காதல் பேசவும் சும்மா இருக்க முடியவில்லை.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 18


விழி 20


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...