அத்தியாயம்: 18
நண்பகல் நேரம்.
அந்த ஸ்டேஷனே காலியாக இருந்தது, ஒரு சிலரை தவிர.
"என்ன வெங்கட்ராமன்! சாப்பிட போலையா?." எனக் கேட்டபடி உள்ளே வந்தான் விக்னேஷ்.
" இனிமே தா ஸார். என்ன விசயம் ஸார்?. இன்ஸ்பெக்டர் வெளில போயிருக்காரு. எதுவும் தேவையா?." என வேலை நிமித்தமாகப் படபடத்து பேசினார். அவரிடம் யாரோ விக்னேஷை உள்ளே விடாதீர்கள் என்று சொல்லி விட்டார்கள் போலும். திடீரென வந்த விக்னேஷைப் பார்த்துத் திருதிருவென முழித்தபடி நின்றார் அவர்.
" எனக்குக் கதிரேசன் கிட்ட பேசனும். இப்பவே."
" ஸார் வந்துடட்டுமே. அவரு முன்னாடி பேசுனா..." என இழுக்க, விக்னேஷ் அவரை முறைத்துக் கொண்டே உள்ளே சென்று சிறையில் இருந்த கதிரேசனைப் பார்க்கச் சென்றான்.
" என்ன கதிரேசன் வசதி எல்லாம் நல்லா இருக்கா?." எனக் கேட்டபடி செல்லிற்குள் வர, உடன் மனோவும் வந்தான்.
" நல்லாத்தா இருப்பாரு. காதுல கொசு பாட்டுற இனிமையான கானாப் பாட்ட கேட்டுட்டு, இங்க தர்ற கோழிக்கால் பிரியாணிய சாப்டுட்டு, கால் நீட்டிப் படுத்து தூங்குனா! மனுசே நல்லாதாப்பா இருப்பாரு." மனோ, நக்கலாக.
" எதுக்கு வந்திருக்கிங்க?. அதா நாந்தா கொல பண்ணேன்னு ஒத்துக்கிட்டேன்ல. அப்றம் எதுக்கு வந்திருக்கிங்க?." கதிரேசன்.
அவர் குரலில் சோகம் நிறைந்திருந்தது. மகனைப் பிரிந்திருப்பதால் இருக்குமோ.!
"கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கே." விக்னேஷ் தரையில் அமர்ந்திருந்த கதிரேசனின் அருகில் சென்று அமர்ந்தான்.
"என்ன எதுக்கு விசாரிக்கனும்?." கதிரேசன்.
" கொல பண்ண உங்கிட்ட விசாரிக்காம, வேற யாட்ட கேட்க முடியும்?. சொல்லு." என மனோ சொல்ல, அவனையும் மறுபுறம் அமரச் சொல்லி விக்னேஷ் சைகை செய்தான். கதிரேசனின் இருபுறமும் இருவரும் அமர்ந்திருந்தனர்.
'என்னடா பந்திக்கா டா வந்திருக்கோம். வட பாயாசத்தோட இல போட்டுச் சாப்றதுக்கு சம்மணமிட்டு உக்கார... ச்ச... போலிஸுகு உண்டா மரியாத போச்சி இவனால.' மனோகரின் மைண்ட் வாய்ஸ்.
" என்ன விசாரிக்கப் போறிங்க?. அதா எல்லாத்தையும் சொல்லிட்டேனே. இன்னும் என்ன இருக்கு!." கதிரேசன்.
" இருக்கு. அத நீ தா சொல்லனும். நீ யாருக்கு கீழ வேல பாக்குற?. யார் சொல்லிக் கொல பண்ண?." விக்னேஷ்.
" நா யாருக்கும் வேலலாம் பாக்கல. நா தனியா தா எல்லா கொலையையும் செஞ்சேன். "
"ம்ச்... கதிரேசன் உண்மைய சொல்லிடு. எங்களுக்கு நல்லா தெரியும் நீ மட்டும் தனியா இத பண்ணலன்னு. நீ யாரோ சொல்லித்தா அந்த ரெண்டு பேரையும் கொல பண்ணிருக்க." மனோ.
"இல்ல கொல்லப் போறாங்கன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கனும். அதா வான் பண்ணிருக்க. காப்பாத்தவும் நினைச்சி பின்னாடியே போயிருக்க. அதனால நீ தா கொல பண்ணனனு முடிவாகிடுச்சி. இப்ப நீ கொலையே பண்ணாம ஜெயில்ல உக்காந்திருக்க." விக்னேஷ்.
"எதுக்கு ஜெயில்ல இருக்கனும்.? யாருனு சொல்லிட்டா ஜெயில விட்டு வெளில வந்துடப் போறாரு. அவருக்கும் மகெ இருக்கு. அதுவும் உடம்பு சரியில்லாத பையன் வேற. அவனுக்கு அப்பா எவ்ளோ முக்கியம்!. கதிரேசன் நீங்க யாருக்காக இந்தக் கொலய பண்ணிங்கன்னு டக்குனு சொல்லிருங்க பாப்போம். ஸாரி கேப்போம்." என இருவரும் அவரின் மூளையைச் சலவை செய்வது போல் பேச,
" ஆ... அதா இன்சூரன்ஸ் காசுக்காக தா கொன்னேன்னு நீங்க தா கண்டு பிடிச்சிட்டிங்கள்ள!. நானும் ஒத்துக்கிட்டேன்ல. அப்றம் எதுக்கு வெட்டியா வந்து கேக்குறிங்க?. போங்க இங்கருந்து." கத்திக் கொண்டே எழுந்தார் கதிரேசன்.
" நாங்க கண்டுபிடிச்சத தா நீ ஒத்துக்கிட்ட. ஆனா உண்மையான காரணம் என்னன்னு உனக்கு மட்டும் தா தெரியும். காச முழுசா ஆட்டைய போட்டிருந்தேன்னா எங்களுக்குச் சந்தேகம் வந்திருக்காது. பாதி பணம் தா உன்னோட அக்கவுண்ட்டுக்கு போயிருக்கு. மீதி யார் கிட்ட இருக்கு. உன்னோட கூட்டாளி யாரு?." விக்னேஷ். அவனை திரும்பிப் பார்த்தார் கதிரேசன்.
" இன்ஸ்பெக்டர்... இன்ஸ்பெக்டர் ஸார்... ஸார்." எனக் கத்திக் கொண்டே கம்பியை உளுக்க, இன்ஸ்பெக்டர் வந்தார்.
" ஸார், இந்தக் கேஸ்ஸ நாங்க பாத்துக்கிறோம். நீங்க ஒதுங்கி இருங்கன்னு நேத்தே சென்னேன்ல ஸார். ஏ ஸார் வந்திங்க?." என்றார் இன்ஸ்பெக்டர்.
"அதெப்படி ஸார் விட முடியும். இவன அரஸ்ட் பண்ணதே எங்களால தா. இந்தக் கேஸ் கோர்ட்டுக்கு போய் இவனுக்குத் தண்ட கிடைக்கிற வர எங்களால ஒதுங்கி இருக்க முடியாது ஸார். நீங்க எவிடெண்ஸ்ஸ மறச்சி அந்தாள காப்பாத்த பாக்குறிங்க போலயே." மனோ ஆவேசமாகப் பேச, அந்த இன்ஸ்பெக்டரும் பேச, இறுதியில் விக்னேஷ் மனோவை இழுத்துக் கொண்டு வந்தான்.
" என்ன மச்சான் இப்படி தொரத்துறான் அந்தா!. இவனுங்க எல்லாரும் சேந்து கதிரேசன வெளில கொண்டு வரப் பாக்குறானுங்க போல." மனோ.
" ம்... கண்டிப்பா கதிரேசன் வெளில வருவான். நீ என்ன பண்ணு ஹெட் ஆஃபிஸ் போ. அங்க தயானந்தன் மேல ஏதாவது புகார் பதிவாகி இருந்தா அதப்பத்தின முழு டிடெய்ல்ஸ்ஸையும் வாங்கிட்டு வா. கூடவே சுருதி ஆரோக்கியம் தவிர இறந்து போன அதே ஆஸ்ரமத்த சேந்தவங்களோட ஃபேமிலி கிட்ட விசாரிக்க ஆரம்பிக்கனும். இந்தக் காப்பகம் எப்ப ரிஜிஸ்டர் ஆகிருக்கு யார் பேர்ல ஆரம்பிச்சாங்கனு விசாரி. தயானந்தனோட இந்த அதி வேக வளர்ச்சிக்கான காரணத்த நாம தெரிஞ்சிக்கனும்." விக்னேஷ்.
"நேத்து ஹரிணியும் கௌதமும் சொன்னத வச்சி இதெல்லாம் செய்யச் சொல்றியா மச்சான்?." என்க,
"ம்... ஹரிணி சொன்னது சரியா கூட இருக்கலாம். நம்மோட பார்வ கதிரேசனையும் தாண்டி இருக்கனும். இவெந்தா குற்றவாளின்னு முடிவு பண்ணிட்டு தேடுனா, தப்பாத்தா இருக்கும். அதுனால நாம தயானந்ததையும் சந்தேகப்படனும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நீ போய் வாங்கிட்டு வா. "
"ம்… சரி மச்சான். நா நாளைக்கி காலைல போறேன் மச்சா." என்றவனை விக்னேஷ் முறைக்க,
" ஏ?. இன்னைக்கே போனா என்னவாம்!."
" அது கௌதம் இன்னைக்கி நைட் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல விருந்துக்குப் போறோம், நீயும் வான்னு சொன்னாரு. அதான் வயித்துக்கு வஞ்சம் இல்லாம சாப்பிட்டுடு அடுத்த நாள் போலாம்னு இருக்கேன்." என்க, விக்னேஷின் ஃபோன் இசைத்தது.
" சொல்லு நண்பா. எப்படி போயிட்டு இருக்கு.?" விக்னேஷ். அந்தப் பக்கம் ஜீவா,
"எல்லாம் ஓகே. நீ உன்னோட விசாரனைய முடிச்சிட்டியா?. எப்ப ஊருக்கு வர்ற. இந்த ப்ரியா வேற பவதா பாக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்க. பவதா நேத்து சந்தோஷமா பேசுனாளாம். அதான்." ஜீவா.
" நா இப்பதைக்கி வரல. நீ வேணும்னா கார எடுத்துட்டு வா. பவதாவ மட்டும் கூட்டீட்டு போ. ரெண்டு நாள் கழிச்சி வா. வரும்போது நா ஒருத்தரோட ஃபோட்டோ, பேரு, அட்ரஸ்ஸையும் அனுப்புறேன். எனக்கு அவர பத்தி ஃபுல் டீடெயில்ஸ்ஸும் வேணும்." என்க,
"ஓகே நண்பா. ரெண்டு நாளைக்கி அப்றம் பாக்கலாம்." என வைத்து விட்டான்.
" யார பத்தி தெரிஞ்சிக்கப் போற?."
" ரிஷி தரன். ஹரிணியோட ஹஸ்பெண்ட்."
" என்னடா சொல்ற!. எதுக்குடா நமக்கு இந்த டிரெக்டிவ் வேல?."
" தோனுது."
" ம்... அதுவும் சரி தா. உனக்கும் தோனுச்சில்ல, எங்கையோ பாத்திருக்கோம்னு. எங்கன்னு தா தெரியல!. எங்க மச்சா நாம பாத்திருப்போம்." மனோ யோசனையாக,
" மே பீ நம்ம ட்ரெயினிங் டயத்துல பாத்திருப்போம்னு தோனுது. பாக்கலாம். ஜீவா விசாரிச்சிட்டு வருவான். வா." என இருவரும் வீடு திரும்பினர்.
___________________
" நீ எனக்குச் சரியான காரணத்த சொல்லு வர்றேன். இல்லன்னா! இங்கருந்து என்னால ஒரு இன்ச் கூட நகர முடியாது. சொல்டேன்." ஹரிணி, சட்டமாக சோஃபாவில் அமர்ந்து கொண்டு.
கௌதம் இன்று ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்துள்ளான். இரவு எட்டு மணிக்கு மேல் வருவோம் என டேபில் புக் செய்து உணவையும் ஆர்டர் குடுத்து விட்டான். மணி இப்போதே ஏழு முப்பதாகிவிட்டது. ஆனால் அவள் ஏன் எதற்கென்று காரணம் கேட்கிறாள்.
"காரணத்தோட யாராது ட்ரீட் வப்பாங்களா?. நா இன்னைக்கி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுனால என்ன சுத்தி இருக்குறவங்களும் என்ன மாறியே ஹப்பியா இருக்கனும்னு ட்ரீட் வைக்கிறேன். இதுல என்ன காரணத்த சொல்லச் சொல்ற. வான்னா வாயேன். அது விட்டுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுக் கிழவி மாறிக் கொல்லுற." என்றவனை உற்று பார்த்தாள் ஹரிணி.
" நீ எதோ திட்டம் போட்டுப் பண்றன்னு தெரியுது. வாறேன். வந்து பாக்குறேன். உன்னோட ப்ளான் என்னன்னு." என சொல்லி விட்டு உடன் பவதாவையும் இழுத்து சென்றாள், செல்லும் இடத்திற்கு ஏற்றார் போல் பவதாவை அலங்கரிக்க.
"என்ன கௌதம் ஹரிணி வந்தே ஆகனும்னு நீ பிடிவாதமா நிக்கிறத பாத்தா பெருசா எதையோ வச்சிருக்க போலயே. ம். என்னது?." என விக்னேஷ் குறுகுறுப்பாகக் கேட்டான்.
"இந்தப் போலிஸ்காரனுங்க எல்லாருமே இப்படி தா!. எதுக்கெடுத்தாலும் சந்தேகமா தா கேள்வி கேட்பானுங்க. ஏ நீ ரீசன் சொல்லன்னா வர மாட்டியா என்ன?. "
" நா வருவேன் பாஸ். அவெ வரலன்னா என்ன. நா இருக்கேன். நீங்கக் கவலையே படாதிங்க. நீங்க எங்க கூப்டாலும் சாப்பிடனும்னா அதுக்கு முதல ஆளா வந்து நிக்கிறேன்." மனோகர்.
"பாத்துக்க. இவன மாறி இருக்க கத்துக்க. அப்பதா சீக்கிரம் கமிஷ்னர் ஆவ. இல்லன்னா கான்ஸ்டபிள் தா கடைசி வரைக்கும். ப்ரமோஷனே கிடைக்காது.." என்றவனும் உடைமாற்றி தயாரானான்.
பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும் ஹரிணியின் அறைக் கதவு திறக்க. வெளியே வந்தது பவதா.
அவளின் மாநிறத்திற்கு அந்த எலுமிச்சை மஞ்சளும் அடர் நீல நிறமும் சேர்ந்து இருந்த முழு நீள டிசைனர் சல்வார் மிகவும் பொருத்தமாக இருந்தது. அதீத அலங்காரம் ஏதுமின்றி மிதமான ஒப்பனையில் தேவதைபோல் இருந்தாள் பவதா.
" யாரு நீங்க?. உங்களுக்கு என்ன வேணும். இங்கவாங்க. வந்து இப்படி உக்காருங்க. இப்ப நீங்களே உங்க வாயலா சொல்லுவிங்களாம், யார மாறி வேசம் போட்டுட்டு வந்திருக்கேன்னு. சொல்லுங்க கேப்போம்." எனக் கௌதம் டீவியில் வரும் சிறுவர்களுக்கான மாறு வேட நிகழ்ச்சியில் பேசுபவர்களைப் போல் பவதாவை கேலி செய்ய,
" பாப்பா யாரு பாப்பா நீ?." என மனோகரும் சேர்ந்து கொள்ள, அவள் கோபமாகத் தன் அறைக்குச் சென்றாள். போகும்போது கையில் சிக்கியதை எடுத்து அவர்களின் மீது வீசத் தவறவில்லை.
" ச்ச... இவங்க எல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு அவ்வளவு மோசமாவா இருக்கு. நா வேண்டாம்னு சொன்னேன். ஹரிணி தா கேக்காம." எனப் புலம்பிய படியே கண்ணாடியின் முன் நிற்க, அதில் தெரிந்த உருவம் அவளுடையது தானா என்ற சந்தேகமே வந்து விட்டது அவளுக்கு.
பவதாவிற்கு மேக் அப்பிடிக்காது. லேசாகப் பவுடர் போடுவாள். அவ்வளவே. இப்போது ஹரிணி செய்துள்ள ஒப்பனை அதிகமாகத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் பவதாவை அது வேறு மாதிரி அழகாய் காட்டியது. அடர்த்தியாகப் போடப்பட்டுள்ள கண்ணின் மை, அவளின் விழிகளின் நடனத்தை அரங்கேற்றியது. மெல்லியதாய் ஒரு பொட்டு. பிறை நெற்றியில் மெல்லிய கீற்றாய் சந்தனம். உயர்த்தி கொண்டை போல் கட்டப்பட்ட சிகை. ஒன்றிரண்டு முடிக் கற்றைகளை சுருட்டி முன்னும் பின்னும் விட்டிருந்தாள். அது தோளில் பிரண்டு முதுகிலும் படர்ந்திருந்தது. உச்சி வகிட்டில் குங்குமமும் அழகாய் இருக்க, வேகவேகமாகக் கை குட்டையை எடுத்தாள்.
" எல்லாம் ஓகே தா. பட் லிஃப்ட் ஸ்டிக் அதிகமான மாறித் தெரியுது. லைட்டா கம்மி பண்ணிக்கிவோம்." என உதட்டு சாயத்தைத் துடைக்கப் போக,
"எதுக்கு ஒரு கர்சீப்ப அழுக்காக்குற பாப்பா. நாந்தா இருக்கேனே. ம்... துடச்சிடலாமா?." எனக் கண் சிமிட்டி கேட்டபடி வந்த விக்னேஷை பார்த்தவள் மௌனமாய் நின்றாள்.
திருமணத்திற்கு பின் அவனை இப்போது தான் கோர்ட் சூட்டில் பார்க்கிறாள். அழகானவன்… கம்பீரமானவன்... காவலன் அவளின் காதலுனும் கூட… சொல்லவா வேண்டும். அதுவும் அடர் நீல நிற கோர்ட் பொருத்தமாய் இருந்தது. இருவரும் ஒரு நிறத்தில் ஆடை.
பவதா வெட்க பார்வை ஒன்றை தன் கணவன்மீது வீச, அது அப்படியே காந்த புயலாய் தாக்கியது அவனை. அதன் ஈர்ப்பு பவதாவை நோக்கி அவனை இழுக்க, நெருங்கி வந்தவன் அணைக்காது விலகியே நின்றான். நொடிகள் நிமிடங்களாகிப் போனது. ஆனாலும் அவன் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.
அவன் தன்னை அணைத்து சில்மிஷங்கள் செய்வான் என்று எதிர்பார்த்திருந்த பவதாவிற்கு அது ஏமாற்றத்தைத் தர, அவள் புருவம் உயர்த்தி என்ன என்றாள்.
" இல்ல, கொஞ்சம் பயமா இருக்கு. அதான். நா பக்கத்துல வந்து உனக்கு ஏதேதோ நியாபகம் வந்து, அழ ஆரம்பிச்சிட்டேன்னா. கண்ணுல போட்டுருக்குற மை எல்லாம் கலஞ்சி பூதம் மாறி ஆகிடுவ. அதான் எட்ட நின்னே பாத்துக்கிறேன்." என வருத்தமாகப் பேசி ஓரக்கண்ணால் பவதாவை கள்ளச் சிரிப்புடன் பார்த்தான்.
அவள் சீரும் பாம்புபோல் படம் எடுத்து நின்று, " உன்ன மாறித் தத்திய கட்டிக்கிட்டதுக்கு என்ன எத கொண்டு அடிக்கன்னு தா தெரியல. ச்ச… நீ போலிஸ் தான. நா உன்ன பிடிக்கலன்னு சொல்லியும் வீம்பா வந்து எங்கப்பாட்ட பேசி என்ன கல்யாணம் பண்ணது நீ தான. இப்ப மட்டும் எங்க போச்சாம் அந்த வீம்பு. ஹாங்... நாந்தா எதோ புத்திக் கெட்டு போய்க் கண்டதையும் நினைச்சிட்டு உங்கிட்ட இருந்து விலகி இருந்தா! அப்படியேவா விட்டுடுறது. ச்ச... நா என்னமோ எம்புருஷெ ரவுடி போலிஸ்ஸின்னு நினைச்சேன். இப்ப தா தெரியுது அவெ ஒரு டம்மி போலீஸ்ன்னு. ஹீம்..." எனத் திரும்பி நடக்க, விக்னேஷ் எதுவும் சொல்லாது புன்னகையுடன் அவளின் பாவனைகளை உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
' ஏப்பா உம்பொண்டாட்டி உன்ன ஒன்னத்துக்கும் உதவாதவென்னு சொல்லி அவமானப்படுத்திட்டு போறா. நீ என்னப்பா அவார்ட் வாங்குனா மாறி அசால்ட்டா நிக்கிற. உனக்குச் சூடு சொரணன்னு எதுவும் கிடையாதா. எனக் கேட்டோம்மானால் அவன் உடனே கிடையாது என்று விடுவான் போலயே'.
கோபமாகச் சொல்லும் அவளின் நடைக்கு ஏற்றார் போல் தோளில் அசைந்தாடிய கற்றைக் கூந்தலை சுவரில் சாய்ந்து நின்று ரசிக்க, சென்ற அவள் திரும்பி அவனின் முன் வந்து நின்றாள்.
'இப்ப என்னவாம் இவளுக்கு.' என்ன அவன் யோசிக்கும் முன்னே எம்பி அவனின் இதழில் தன் இதழ் பதித்தாள் பவதா.
தன் கணவனான விக்னேஷிற்கு அவள் தரும் முதல் இதழ் முத்தம். ஏதோ ஒரு வேகத்தில் முடிவு செய்து வந்துவிட்டாள். ஆனால் கொஞ்சம் தயக்கமாகவும் தடுமாற்றமாகவும் தான் ஆரம்பித்தாள். பாவம் அவள் ஆரம்பித்த ஒன்றை அவன் விடுவதாகத் தெரியவில்லை. நிமிடங்களைத் தாண்டியும் அது தொடர்ந்தது.
அப்றம்…
அப்றம்... அப்றம்ன்னு சென்று கொண்டே இருந்த முத்தக்காட்சி மெத்தைக் காட்சியாய் மாறும் முன் வெளியே நின்றிருந்த கடுப்பான காண்டா மிருகங்கள் இரண்டு, கதவைத் தட்டி விட்டுக் காட்சியைக் கலைத்து விட்டனர்.
'சரி விடு விக்னேஷா. ஈவினிங் சோ இல்லன்னா நைட் சோ. அதுவும் இல்லன்னு மார்னிங் சோ. டிக்கெட் வாங்க அவசியமே இல்ல. எப்பன்னாலும் ஓகே தா உனக்கு. '
காரின் சாவியை எடுத்துக் கொண்டு விக்னேஷ் டிரைவர் சீட்டில் ஏறி அமரக் கௌதம் வந்து சாவியை பறித்தான்.
"என்ன பாஸ் இதெல்லாம்?." என மனோவை போலவே பேசிய விக்னேஷிடம்.
"உனக்கு ஊட்டில என்னென்ன ஏரியா இருக்குன்னு தெரியுமா?. இருட்டுக்குள்ள மொத வண்டி ஓட்டத் தெரியுமா உனக்கு?. போ. போய்ப் பின்னாடி உக்காரு." என விரட்ட,
"கூகுள் கிட்ட கேட்டா அது சொல்லிடப்போது. வலது பக்கம் திரும்பனுமா! இல்ல இடது பக்கம் திரும்பனுமா! இல்ல திரும்பவே வேண்டாமா! அப்படின்னு. இதுக்கு எதுக்கு அவெ.?" என முணுமுணுக்க,
" இப்ப எதுவோ சொன்ன மாறிக் கேட்டுச்சே. என்ன அது?." கௌதம்.
"அது அண்ணே ஊட்டி வரைபடத்த தண்ணீல கரைச்சி கூல் மாறிக் குடிச்சி வந்திருப்பாரு. அவரு ஓட்டுவாருன்னு சொல்றான். என்ன மச்சான் சரியா." மனோ. அவனுக்கும் ஒரு கோர்ட்டை போட்டு விட்டிருந்தான் கௌதம்.
"ஐ ஆம் ரெடி." என்றபடி ஹரிணி வர, அனைவரின் கவனமும் அவள்மேல் இருந்தது.
கரும்பச்சை நிற டிசைனர் சேரி. சின்னச் சின்னக் கற்கள் பதித்து அந்த இருளில் மின்னியது அது. முழு நீளக் கை வைத்துத் தைக்கப்பட்ட அதன் ரவிக்கை அவளுக்கு வெகுவாய் பொருந்தி இருந்தது. ஹரிணி சேலை கட்டி இருப்பது சிரமமாக இருக்கும் என்பாள். ஆனால் இன்று அவளின் பாவாவின் நினைவு அதிகம் வருவதால் அணிந்திருக்கிறாள்.
கௌதம் செடியில் மலர்ந்திருந்த அடர் சிவப்பு நிற பூவைப் பறித்து தர. அவனை முறைத்துக் கொண்டே தலையில் சூடி விட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.
" பாஸ். எனக்கு இந்த ஸீன பாக்கும்போது ஒன்னு தோனுது சொல்லாமா." மனோ. கௌதமின் தோளில் இருவரும் கைப்போட்டுக் கொண்டு,
" என்ன?."
" இது ஒன்னுமில்ல கௌதம். இந்தக் கோயில்லலாம் பலி குடுக்க போற ஆட்டக் குளிக்க ஊத்தி டெக்கரேட் பண்ணி கூட்டீட்டு போற மாறி நீ ஹரிணிய கூட்டிட்டு போய்." என ஒரு நொடி நிறுத்திய விக்னேஷ்,
" பலி குடுக்க போறன்னு தோனுது." கோரஸ்ஸாக இரு போலிஸும் சொல்ல, அவர்களைத் துரத்தி விட்டவன்,
" நம்ம ப்ளான் அதுக்குள்ளையா லீக் ஆகிடுச்சி. தப்பா ச்சே இது. மூஞ்சில எந்த ஒரு எக்ஸ்பிரஸனையும் காட்டாம இரு கௌதமா. இன்னைக்கி ஒரு பலி கண்டிப்பா நடந்தே தீரனும்." என நினைத்தபடி காரை ஓட்டிச் சென்றான்.
யாரு, யாரு கையால பலியாகப் போறாங்கன்னு கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..