முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 17

அத்தியாயம்: 17


பூ வைக்க


பூங்காற்று சீர் செய்ததே


புது வானம் பூத்தூவுதே



கொஞ்சல் மொழி பேசிடும்


ஊமை கிளி நானடா


நெஞ்சை வலி தீர்க்கும்


மருந்தாளன் நீதானடா


வாழ்வின் வேர் நீங்கிடும்


காலம் இதுதானடா


அன்பின் நீர் வார்க்கும்


முகிலாளன் நீதானடா


உன் கைகள்


தீண்டும் தருணம்


நான் தணிந்தேன்


தணிந்தேன் சலனம்


இனி வாழ்க்கையில்


ஏது மரணம்


நான் எடுத்தேன்


புது ஜனனம்



பாடியது ஹரிணி ரிஷி தரன். கண்ணின் கரு விழிகள், பூவைச் சுற்றும் வண்டுபோல் ஓரிடத்தில் நில்லாது திரிந்து கெண்டே இருந்தன அவளுக்கு. கைகள் ஒன்றில் வண்ணத் தூரிகை. மற்றொரு கரத்தில் வண்ணக்கலவைகள் கலக்கவெனச் சின்னச் சின்னக் குழிகள் வைத்த ஒரு ஃப்ளாஷ்டிக் ப்ளேட். அது நீள்வட்டமாக இருந்தது. தன் முன்னே இருந்த டிராயிங் போர்டில் வரைந்து கொண்டிருக்கிறாள், பாடிக் கொண்டே.


ஹரிணியின் குரலில் நிச்சயம் ஏதோ ஒரு மேஜிக் உள்ளது. அவள் பாடும்போது அதன் ஒவ்வொரு வரிகளையும் நன்கு அனுபவித்து பாடுபவளின் பாட்டைக் கேட்பவர்களுக்கும் அந்த ஃபீல்லை உணரும் அளவுக்குப் பாடுவாள்.‌



மெஹபூபா


மே தேரி மெஹபூபா


மெஹபூபா


மே தேரி மெஹபூபா



மெஹபூபா


மே தேரி மெஹபூபா


மெஹபூபா


மே தேரி மெஹபூபா



"ஆஹா.!! ஆஹா!!. என்ன ஒரு காதல் கீதம். கேட்கும் ‌போதே காதுல தேன் வந்து பாயிது. ஆனா எறும்பு கடிக்க கூடாதுங்கிறதுக்காக அப்பப்ப தொடைக்க வேண்டி இருக்கு. நீ என்ன மச்சான் சொல்ற." என மனோகர் விக்னேஷைக் கேட்டுத் திரும்பி பார்க்க,


அவனுமே ஹரிணியின் குரலில் இருந்த இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தான். வீடு நிசப்தமாக இருந்ததால் அதில் ஹரிணியின் குரல் தான் எங்கும் ஒலித்தது.


" இவெ என்ன மெழுகுல செஞ்சி வச்ச செல மாறி உக்காந்திருக்கான். பவதாம்மா என்னனு வந்து பாரேன்." எனப் பவதாவை அழைக்க, அவள் தன் கணவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அந்தப் பார்வையில் சிறு வெட்கமும் இருந்தது.


" ஊட்டிக் குளிர்ல ரெண்டும் உறஞ்சி போயிடுச்சிங்க. எப்படி தா பார்வையாலையே காதல் செய்யுதுகளோ. டேய்... டேய்... நீங்கச் சண்டயே போடுங்க டா. அதா கூடப் பாக்க எங்களுக்குத் தெம்பு இருக்கு. ஆனா காதல் செய்றேன்னு நீங்கப் பண்ற கண்ராவிய பாக்கத்தா முடியல. ச்ச…


இத்தன அருமையா பாடுன பொண்ண பாராட்டனும்னு தோனாம உக்காந்திருக்கானுங்க. அதுனால என்னோட கவரிங் செயின கலட்டி குடுத்து ஹரிணிய பாராட்டிட்டு வாரேன். ஹரிணி... ஹரிணிம்மா. சூப்பரா பாடுனம்மா நீ. எக்ஸ்ட்ராடினரி வாய்ஸ் உனக்கு. செம்..." பேசிக் கொண்டே எழுந்து ஹரிணியின் அறைக்கு வந்த மனோ வாயடைத்துப் போய் நின்றான்.


ஏனெனில் அச்சு அசலாக ஒரு மனிதனின் முகத்தைத் தத்துரூபமாக வரைந்து வைத்திருந்தாள் ஹரிணி. அது அவளின் பாவா... ரிஷி தரனுடையது.


அவன் அருகினிலே.


கணல் மேல் பனிதுளி ஆனேன்.


அவன் அணுகயிலே.


நீர் தொடும் தாமரை ஆனேன்.



'போச்சி அடுத்த பாட்டுக்குப் போய்ட்டா. ஏய்யா இப்ப நீ செல மாறி நிக்காம போய்ப் பேசு. இல்லன்னா வந்த வழியே திரும்பிப் போய்டு. ' என நாம் திட்டும் அளவுக்குத் தான் நின்றுகொண்டிருந்தான் மனோகர்.


" ஹேய்... ஹரிணி யாரு இது.? நீ வரைவியா!. சூப்பரா டிரா பண்ணிருக்க.‌." என்றவனின் பார்வை அந்த வரைபடத்திலேயே இருந்தது.


‘எத பாராட்ட வந்துட்டு எதையோ பாராட்டிட்டு இருக்கான். ‘


" நா ஒரு ஃபேஷன் டிசைனர். வரைய தெரியாம எப்படி இருக்கும். ம்... நல்லா இருக்கா‌.? இது தா என்னோட பாவா. ரிஷி தரன். சென்னைல ஒரு கண்ஸ்ட்டெக்ஷன் கம்பேனி வச்சிருக்கான். சென்னைக்கி போனதும் உனக்கு இன்ரோ தாரேன்." ஹரிணி, ஆசையாய் அந்தப் படத்தை ரசித்தபடி.


" என்ன திடீர்னு காதல் பெயிண்ட் ஃப்ரெஷ்ஷா வழியா வழியுது. என்ன காரணம்.?" கௌதம், பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.


" ம்ச்... என்னன்னு தெரியல நேத்து காலைல இருந்தே எனக்கு அவன பாக்கனும்னு தோனுது. அவெ பக்கத்துல இருக்குற மாறி ஃபீல் ஆகுது. ஐ மிஸ் ஹிம்." என்றவளின் குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.


" ஐ மிஸ் ஹிம். இத நீ ஆறு நாளைக்கி முன்னாடி அவன ஊர்ல விட்டுட்டு வரும்போது ஃபீல் பண்ணிருக்கனும். இப்பையும் ஒன்னுமில்ல. வா போலாம். முட்டகோஸ் லாரி வெளில வெய்டிங்." என்க,


" போய் விக்கிக் கிட்ட பார்கவி கேஸ் என்னாச்சின்னு கேளு. அவெ அத குடுத்துட்டான்னா இப்பவே போலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நானும் குடும்பஸ்தி தா. எனக்கும் என்னோட பாவாவ பாக்க ஆசையாத்தா இருக்கு."


"அப்பக் கூட நீ உன்னோட மகன பத்தி பேச மாட்டேங்கிற பாரேன்." கௌதம்.


"அதுக்கு தா இந்து இருக்காளே. என்னவிட நல்லாவே பாத்துப்பா. வா அந்த விக்கிட்ட போய் என்ன நிலவரம்னு கேப்போம்." எனப் பேசிக் கொண்டே ஹாலிற்கு சென்றாள். மனோகர் இமை மூடாது ரிஷியின் ஓவியத்தைப் பார்க்க,


" என்ன! டா நீ ஒரு அம்பள படத்த இவ்ளோ நேரமா உத்து பாத்துட்டு இருக்க. அவனாடா நீ?." கௌதம் மனோகரை கேட்க,


"ஐயோ இல்ல பாஸ், நாங்க இவர எங்கையோ பாத்திருக்கோம். பேரு என்ன? ஹாங் ரிஷி தரன். எங்க பாத்திருப்போம்?.‍" என யோசிக்க,


" திருடர்கள் ஜாக்கிரதை அப்படின்னு உங்க ஸ்டேஷன்ல நோட்டிஸ் போர்டு இருக்குமே அதுல பாத்திருப்ப. இல்லன்னா இந்தப் பேர உன்னோட அக்யூஸ்ட் லிட்ஸ்டுல பாத்திருப்ப. கொடுமக்கார பாவி இவெ. சீக்கிரம் பிடிச்சி ஜெயிலுக்குள்ள போட்டுங்க." எனக் கேலி செய்து இழுத்துச் சென்றான். மனோகர் அந்த வரைபடத்தையும் எடுத்துச் சென்றான், ஹாலிற்கு.


ஹாலில் ஹரிணி விக்கியுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.


" நா விசாரிக்க வந்த கேஸ் முடிஞ்சிடுச்சி. சோ நாங்க ஊருக்குப் போலாம்னு இருக்கோம். எங்களுக்கு இனி இங்க வேல இல்ல. டாட்டா பை. ஆமா நீ எப்ப கிளம்பப் போற." என விளையாட்டாக விக்னேஷ் கேட்க,


"வீட்டுக்குள்ள வந்து உக்காந்துட்டு என்ன பேச்சி பேசுன. உனக்கு ஒன்னும் கிடையாது போப்போ." எனப் பவதாவும் சேர்ந்து கொள்ள, ஹரிணி இருவருடனும் மல்லுக்கு நின்றாள்.


"இந்தக் காக்கி சட்ட போட்ட போலிஸ்ஸ நம்பக்கூடாதுன்னு நா அப்பவே சொன்னே கேட்டியா.‌ இப்ப நம்மல ஏமாத்திட்டான். வா நாம சென்னைக்கி போய் இவெ பேர்ல கம்ப்ளைண்ட் குடுப்போம்." என ஊருக்குச் செல்லலாம் என்று கௌதம் அழைக்க,


" விக்கி!! இப்ப முடிவா என்ன தா சொல்ல வர்ற." எனக் கத்தினாள் அவள்.


"கூல் கூல். இன்னைக்கும் நாளைக்கும் பொறுத்துக்க. அப்றம் அது உங்கைல இருக்கும். ம்... ஓகேவா." என்க,


"டேய் மச்சான் இத பாரேன். ஹரிணி ஒரு ஆள கச்சிதமா வரஞ்சிருக்கா. பாறேன்." என படத்தைக் காட்ட விக்னேஷிற்கும்,


'இந்தத் திரு முகத்த எங்கையோ பாத்திருக்கோமே. எங்க?. ' என்ற எண்ணம் வந்தது. ஹரிணியிடம் ரிஷியைப் பற்றி கேட்க, சொல்லவா வேண்டும் ஹரிணிக்கு அவளின் பாவாவின் புகழ் பாட. கேட்க ஒரு காது இருந்தாலே பல மணி நேரம் நான்ஸ் ஸாப்பாகப் பேசுவாள்.‌ இப்போது மூன்று ஜோடி காதுகள் கிடைக்கும்போது எப்படி விடுவது. காது ஜவ்வு கிழிந்து தொங்கும் வரை அவளின் பாவாவின் பெருமைகளைத் தான் பேசப் போகிறாள்.


" டார்லிங்… பாவம்... விட்டுடும்மா… காலங்காத்தாலயே ஆரம்பிச்சா என்ன பண்றது!." எனக் கேலி செய்ய அவளின் முகம் வாடியது.‌


" லவ் மேரேஜ்ஜா ஹரிணி உன்னோடது." என விக்னேஷ் கேட்க,


'இப்ப நாம எந்தப் பக்கம் தலைய ஆட்டுறது.' எனப் புரியாமல் எல்லா பக்கமும் அசைத்தாள் ஹரிணி.


"ஏம்மா! சீக்கு வந்த கோழி மாறித் தலய ஆட்டுற. இல்லன்னா இல்லன்னு சொல்லு‌. அரேஜ்டு மேரேஜ் ஜா." மனோகர்.


அதற்கும் அதே ரியாஷன் தான் கொடுத்தாள் ஹரிணி.


" நா கிச்சன் போய்க் கத்தி எடுத்துட்டு வாரேன். தலைய வெட்டிட்டா ஆட்ட மாட்டா." எனப் பவதா போலி கோபம் கொண்டாள்.


" ஆக்ஸலி எங்களோடது லவ் அண்டு அரேஜ்ஜுடு. எப்படி சொல்றதுன்னு தெரியலயே."


"வாயால தா." என்ற மனோகரை மற்றவர்கள் முறைக்க,


"ம்‌‌... ரெண்டையுமே வச்சிக்கங்க." என்க மூவரும் புரியாமல் முழித்தனர்.


"அவனுக்கு லவ் மேரேஜ். அப்படி தா சொன்னான். பத்து வர்ஷமா லவ் பண்றேன்னு படம்லாம் காட்டுனான். ஆனா அத கல்யாணம் பண்ணும்போது அவெ சொல்லல்ல. ஒரு அவரச அரேஜ்டு மேரேஜ் மாறி நடந்தது எங்க கல்யாணம்." என்க. மற்றவர்கள் அவளை முறைத்தனர், 'ஒழுங்க தெளிவா சொல்லப்போறியா இல்லையா. ' என்பது போல்.


அவளின் திருமணம் நடந்த சூழ்நிலையைக் கூறினாள். அவர்கள் ஊரில் ஒரு டேம் பிரச்சினை. அது அவளின் தாத்தாவிற்கு சொந்தமான இடம். ஊருக்கு டேம் வேணும். அவனுக்கு அவள் வேணும். சோ ஒரே கல்லுல ரெண்டு மாங்காங்கிற மாறி ஏதேதோ காரணம் சொல்லி நடந்தது அவளின் திருமணம் என்று.


" எனக்கு அப்பப்ப சந்தேகமா இருக்கும். நிஜமாவே ரிஷி என்ன லவ் பண்ணானா இல்லையான்னு. ஏன்னா அவெ எந்த ஒரு ஃபீலிக்கையும் அதிகமா வெளிப்படையா காமிச்சிக்க மாட்டான். அவங்க அப்பத்தா சொன்னதுக்காகத் தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டானோ இல்ல என்னோட அண்ணே ஓம்கார்ர பலிவாங்க பண்ணானோ. லவ் அது கல்யாணம் ஆனாதுனால தா வந்ததோன்னு ஒருதேரம் தோனும்.


ஏன்னு எனக்குத் தெளிவா தெரியாது. ஆனா என்ன லவ் பண்றான். அத என்னால உணர முடிஞ்சது. அது தான் என்ன திருப்பி லவ் பண்ணவும் வச்சது கல்யாணத்துக்கு அப்பறம்.


சரி லவ் பண்ணான் ஓகே. ஆனா நீ மட்டும் பண்ணா போதுமா. நா பண்ண வேண்டாமா. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச எனக்கு லவ் பண்ண டயமே குடுக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஏ?. பல வர்ஷமா லவ் பண்றேன்னு சொன்னவெ. அத்தன வர்ஷம் பொறுமையா இருந்துட்டு ஏ திடீர்னு என்ன கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும். அது தெரியல!. என்னோட லைஃப்ப ஒரு சைனீஸ் நூடுல்ஸ் மாறி மாத்திட்டான்."


"பட் நீ நினைச்சிருந்தா ரிஷிய வேண்டாம்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க முடியுமே. அத ஒரு கல்யாணமா ஏ ஏத்துக்கனும்?." விக்னேஷ்.


" அப்பவே உனக்கு உன்னோட பாவாவ பாத்ததும் லவ் வந்துடுச்சி போல… ம்... ம்..." மனோ.


" இல்ல. பாத்ததுமெல்லாம் லவ் வரல. நா நல்லா சைட் அடிப்பேன். அழகான பையன் பொண்ணு பாட்டி தாத்தா சின்னப் பசங்கன்னு எனக்கு எந்த வயசு வித்தியாசமும் கிடையாது. அப்படி தா அவனையும் சைட் அடிச்சேன். நீ கூட அழகாத்தா இருக்க மனோ. நீயும் தா விக்கி. உன்ன பாத்ததும் சாக்லேட் பாய் அப்படின்னு சைட் அடிச்சேன்." என்றவளை பவதா முறைக்க,


" ரிஷி பாத்தும் அழகா இருக்கான்னு தோனுச்சி. ஆனா லவ்... வந்தது இல்ல… ஏன்னு தெரியல. லவ்வுன்னு சொல்லி எங்கிட்ட பசங்க ப்ரப்போஸ் பண்ணிருக்காங்க. நானும் அவங்க கூடப் பழகிருக்கேன். பட் என்னால ஃப்ரண்டா தா பாக்க முடிஞ்சது. யாரையும் என்னோட ஹஸ்பெண்டா பாக்க தோணல.


என்ன பொண்ணு பாக்க வந்த நிறைய பசங்க கூட நா இப்பையும் கான்டாக்ல தா இருக்கேன். பட் அவங்கள பிடிச்சத விட அவங்க ஃபேமிலிய ரொம்ப பிடிக்கும்."


"அப்ப அந்தக் கல்யாணத்த அக்சப்ட் பண்ணதுக்கு அவரோட ஃபேமிலியும் ஒரு காரணம். சரியா." பவதா.


" ம்... அதுவும் தா." ஹரிணி.


"அதுக்கு நீ அவன கல்யாணம் பண்ணிக்கனும் அவசியம் இல்லையே. என்னோட ஃப்ரண்டா இருந்தாலே உனக்கு அந்த வீட்டுல எல்லா உரிமையும் குடுத்திருப்பாங்க. உன்ன மாறி அரவேக்காடுங்க தா இந்த மாறிக் காரணம் சொல்லும். குடும்பத்த பிடிச்சிருந்ததாம் அதுனால அவெங்கூட வாழலாம்னு முடிவு பண்ணாளாமா. குடும்பத்துக்கும், ஒருத்தங்கூட குடும்பம் நடத்துறதுக்கும் என்ன சம்மந்தம்?.‌" கௌதம்.


" ஹிம்... என்னோட தாத்தா நா சின்ன வயசா இருக்கும் போதே தன்னோட சொந்த பிரிச்சி குடுத்துட்டாரு. ஏன்னா அவரோட மகா மருமகெ அதாவது என்னோட அப்பா அம்மா, தம்பி அண்ணான்னு எல்லாரும் சொத்துக்காகக் கொல்லப்பட்டாங்க. மீதி இருக்குற என்ன காப்பாத்த அப்படி பண்ணாரு. ஆனா அவருக்கு ஒன்னு தெரியல. சொத்து இருக்குற வர தா சொந்தமும் இருக்கும்னு. சொத்து இல்ல. இப்ப சொந்தமும் இல்ல.


இளமைல வீராப்பா இருந்த அவருக்கு முதுமைல, அதுவும் படுக்கைல ஒருத்தரோட உதவி இல்லாம இருக்க முடியாதுங்கிறப்ப தா தெரிஞ்சது சொந்தங்களோட அரும. பேச ஆறுதல் சொல்லன்னு என்ன தவிர யாரும் அவரு பக்கத்துல வரல. ஆனாலும் அவரு அதுக்காகத் தன்னோடு கெத்த விட்டுக் குடுத்தது இல்ல. ரொம்ப வேகமாகவே என்ன விட்டுடு போய்டாரு.‌ அவரோட குடும்பத்த தேடி சாமி கிட்ட. 


சாப்டியா. என்ன வேணும் உனக்குன்னு, கேக்க கூட எனக்குப் பக்கத்துல யாரும் இருந்ததில்ல. சம்பத் அண்ணா வர்ற வரைக்கும் தான்.‌ ஆனா அவரும் பக்கத்துலையே இருக்க முடியாதுல்ல. ஹாஸ்டல்ல லைஃப்." என்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் நீர் வர, கௌதம் சென்று அணைத்தான் அவளை. வேண்டாம் என்ற போதும் பேசினாள்.


" நா எப்படி தனியா இந்த உலகத்துல சர்வே பண்ணுவேன்னு யோசிக்கவே இல்ல அவரு. எனக்கு இப்பையும் நியாயம் இருக்கு கௌதம். நா பத்து வயசு குழந்த என்னோட கைய பிடிச்சிடு, லைஃப் ஒரு கடல் மாறி. அத கடந்து போக உனக்கு நீச்சல் தெரிஞ்சிருந்தாலும் உனக்கு ஒரு படகோட துணை வேணும். ஓட்டையா இருந்தாலும் பரவாயில்லை. நீ சோர்ந்து தயங்கி நிக்கும்போது இளைப்பாற அது உனக்கு உதவும். எவ்வளவுதா தைரியமான ஆளா இருந்தாலும் இருட்டுல உனக்கு ஒரு வெளிச்சம் தேவ. மின்மினி பூச்சி மாறி வெளிச்சம் கம்மியா இருந்தாலும் பரவாயில்ல. அது உனக்கு வாழனும்னு தன்னம்பிக்கைய தரும்.


அதுமாறி தா வாழ்க்கைல உனக்கு நம்பிக்கையானவங்கள முதல்ல தேடு. கண்டு பிடிச்சிட்டா எந்தச் சூழ்நிலைலையும் விட்டுக் குடுத்து போய்டாத. உன்ன வெறுப்பேத்தி கஷ்டங்குடுத்து கோபப்படுத்துனாலும். அவங்கள விட்டுடுட்டு போய்டாத. ஏன்னா உன்ன தாங்கிப் பிடிக்க அவங்க சின்னத் தூணா இருப்பாங்க. எல்லா உறவுமே என்னைக்கானாலும் நமக்குத் தேவையானது தான்னு சொன்னாரு.


அப்படி பல நல்ல உறவு கிடைச்சது ரிஷியால. அவெ குடும்பத்தால. கோபமா பாசத்த காட்டுற பூவத்த. கன்னம் தொட்டு ஆசி குடுக்குற க்ராணி. இதெல்லாம் கல்யாணம் பண்ணதுனால கிடைச்சது. எனக்கே எனக்குன்னு கிடைச்சது.


ரிஷி... அவங்க குடும்பத்து மேல வச்சிருக்குற அக்கற. அவங்கள பாதுகாக்க அவெ பண்ற எல்லாமே எனக்குப் பிடிச்சிருந்தது. உலகத்துல எங்க இருந்தாலும் சரி அவனோட பார்வ அவெ குடும்பத்துல இருக்குறவங்க மேலயே தா இருக்கும். திருவிழால பாத்தேன் எல்லாத்தையும் முன் கூட்டியே கணிச்சி வச்சி கரெக்ட்டா செய்வான். பொறுப்பானவெ. இது முதல் ரிஷன். அவெங்கூட நடந்த கல்யாணத்த நா ஏத்துக்க.


ரெண்டாவது காரணம். கௌதம். இவனோட அண்ணே தா ரிஷி. அது போதுமானதா இருந்தது. பலர் எங்க ரெண்டு பேரோட உறவ தப்பாத்தா பார்த்தாங்க. எனக்குப் பிடிச்சிருந்த பசங்க எல்லாருமே கல்யாணம் பண்ணிக்கனும்னா போட்ட ஒரே கண்டிஷன் கௌதம் கூடப் பழகக் கூடாதுங்கிறது தா. அதுக்காகவே நா அவனுங்கள ரிஜக்ட் பண்ணிருக்கேன். ஏ ஒரு பொண்ணும் பையனும் நண்பா பழகுனா அது தப்பா?. ஏ அத விலகல்பமா பாக்குறீங்க‌.?


மூணு வர்ஷம் முடிஞ்சி போச்சி. எனக்கும் ரிஷிக்கும் கல்யாணம் ஆகி.‌ ஆனா ஒரு நாள் கூடக் கௌதமையும் என்னையும் தப்பா நினச்சி பாத்தது இல்ல. கிண்டல் பண்ணுவான்.‌ அதுலையும் சந்தேகம் இருக்காது.


தன்னோட மனைவிக்கி முழு சுதந்திரம் குடுத்து, அவளோட வருமானத்த எதிர்பாக்காம, அவளோட சொத்து வேண்டாம்னு சொல்லி அவளோட சொந்தங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு குடுத்து, வீட்டுல மனைவிக்கி உதவி பண்ணி, குழந்தைய பார்த்துக்கிட்டு, இந்தச் சமூகத்துல அவள முன்னேத்த நினைக்கிற ஒரு கணவன் அமைறது கஷ்டம்.


எனக்குக் கிடைச்சான். நா தேடிப் போகாமையே.


ரிஷி தரன்.


He is a gem of person. சந்தேகப்படாத புருஷன் கிடைக்கிறது பெரிய வரம்." என்றபோது ரிஷியின் மீது அவள் வைத்திருக்கும் காதலை உணரமுடிந்தது மற்றவர்களால். அப்போது பவதாவும் தன் கணவனை தா பார்த்துக்கொண்டிருந்தாள்.


தனக்காகத் தன் விருப்பத்திற்காகத் தன்னை படிக்க வைக்க நினைத்த தன் கணவனும் gem person என்று தோன்றியது அவளுக்கு.


"யாருக்கும் 100 சதவீதம் ஃபர்பெக்ட் பார்ட்னர் கிடைக்கிறது இல்ல தா. என்னோட பாவாவும் அப்படி தா. கொறன்னு பாத்தா நிறையாவே இருக்கு. சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா அத விட அதிகமா அவனோட காதல் தா எனக்குத் தெரியுது. அது அவனோட எல்லா தப்பையும் மறக்கவும் மன்னிக்கவும் வைக்கிது. நம்ம நாட்டுல முக்காவாசி பேர் இப்படித்தா இருக்காங்க. தனக்கு கிடைச்ச திருமண உறவையும் குழந்தையையும் விட்டுக் குடுக்க விரும்பாம. அந்த வரிச நானும் ஒருத்தி." என்றாள் ஹரிணி.


' இந்தக் காதலுக்கு கண்ணு மட்டும் இல்லங்க. காது, மூக்கு, மூள, குடலு குந்தாணினு எதுவும் கிடையாது. பின்ன ஹீரோயிசம் ங்கிற பேர்ல வில்லத்தனம் பண்றவன எல்லாம் லவ் பண்ணா எப்படி இருக்கும். சொல்லுங்க. தயவு செய்து யாரும் இவள மாறிக் கண்மூடித்தனமா லவ் பண்ணாதிங்க. அது ஆபத்து. ச்ச. ' கௌதம நமக்குத் தரும் அட்வைஸ்.


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 16


விழி 18


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...